|
நேற்று காலை
கிளிநொச்சியில் புலிகளின் முக்கிய
ஐந்து இடங்கள்மீது விமானத்
தாக்குதல்கள்!
கிளிநொச்சியில்; இனங்காணப்பட்ட
புலிகளின் ஐந்து இலக்குகள்மீது
விமானப்படையினர் நேற்று கடும்
வான்தாக்குதல்களை மேற்கொண்டதாக
விமானப்படைப் பேச்சாளர் விங்கமாண்டர்
ஜனக்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பிரமன்னாங்குளம் பிரதேசத்திலிருந்து
மூன்று கிலோமீற்றர் வட கிழக்காக
அமைந்துள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள்
ஒன்றுகூடும் நிலையம்மீது நேற்று
அதிகாலை 5.30அளவில் விமானப்படையினர்
தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி மருத்துவமனைக்கு
வடக்காக அமைந்துள்ள புலிகளின் சார்ள்ஸ்
அன்ரனி பிரதான மத்திய நிலையம்மீதும்
நேற்று முற்பகல் 10.25மணியளவில்
விமானத் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி நகருக்கு மூன்று
கிலோமீற்றர் தெற்கில் உள்ள
இனங்காணப்பட்ட மேலும் மூன்று நிர்வாக
மற்றும் விநியோக மத்திய நிலையங்கள்
மீதும் நேற்று பிற்பகல் 2.30அளவில்
விமானத் தாக்குதல்கள்
மேற்கொள்ளப்பட்டதாகவும்
இத்தாக்குதல்கள் அனைத்தும்
வெற்றியளித்துள்ளன என்றும்
விங்கமாண்டர் ஜனக்க நாணயக்கார
தெரிவித்துள்ளார். |
|
|
வன்னிக்கு 51 லொறிகளில்
உணவூப் பொருட்கள் இன்று காலை
அனுப்பிவைப்பு! அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் தகவல்.
வன்னியில் இடம்பெயர்ந்தோருக்கு
விநியோகிப்பதற்காக இன்று காலை 51
லொறிகளில் உணவுப் பொருட்கள்
வவுனியாவில் இருந்து
அனுப்பிவைக்கப்பட்டதாக மீள்குடியேற்ற
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
தெரிவித்தார்.
உலக உணவுத் திட்டத்திற்குச் சொந்தமான
30 பெரிய லொறிகளிலும் தனியாருக்குச்
சொந்தமான 21 லொறிகளிலும் இந்த உணவுப்
பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன
இந்த வாகனத் தொடரணியோடுلل உலக உணவுத்
திட்ட அதிகாரிகளும் உடன்
சென்றுள்ளார்கள் எனவும் அமைச்சர்
கூறினார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய
மாவட்டங்களில் ஏற்கனவே
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள 6 இடங்களில்
இந்தப் பொருட்கள் கொண்டு
சேர்க்கப்படும் என்றும்لل அவற்றை
அங்குள்ள அரச அதிகாரிகள்
பொறுப்பெடுத்துلل இடம்பெயர்ந்த
மக்களுக்கு விநியோகம் செய்வார்கள்
என்றும் உலக உணவுத் திட்ட அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
வன்னிப்பகுதியிலிருந்து ஐநா
அமைப்புக்களும்لل சர்வதேச தொண்டு
நிறுவனங்களும் அரசாங்கத்தின்
வேண்டுகோளை ஏற்று அங்கிருந்து
வெளியேறியதன்பின்னர் முதல் தடவையாக
இன்று வியாழக்கிழமை 51 லொறிகளில்
அந்தப் பகுதிக்கு உணவுப் பொருட்களைக்
கொண்டு செல்கின்றார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும்
இந்த வாகனத் தொடரணியை வழியனுப்பி
வைப்பதற்காக மீள்குடியேற்ற அமைச்சர்
ரிஷாட் பதியுதீன் இன்று காலை
வவுனியாவுக்குச் சென்றிருந்தார்
அரிசிلل மாلل பருப்புلل மரக்கறி
எண்ணெய் முதலான உணவுப் பொருட்கள்
இந்தத் தொடரணியில் அனுப்பி
வைக்கப்படுவதாக அமைச்சர் ரிசாட்
பதியுதீன் கூறினார்.
60 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி
வைக்கப்பட இருந்த போதிலும் கடந்த
இரண்டு தினங்களில் இந்த பொருட்களை
ஏற்றிச் செல்வதற்காக வந்த தனியார்
லொறிகள் இரண்டில் சி-4 வெடிப்பொருள்لل
வன்னிப்பகுதிக்குத்
தடைசெய்யப்பட்டுள்ள பற்றறி வகைகள்لل
ஜிபிஎஸ் எனப்படும் தொலைதொடர்புடன்
சம்பந்தப்பட்ட கருவி என்பன மிகவும்
இரகசியமான முறையில் ஒளித்து
வைக்கப்பட்டிருந்தமை
கண்டுபிடிக்கப்பட்டதையடுத்துلل 51
லொறிகளிலேயே பொருட்கள் அனுப்பி
வைக்கப்படுவதாக செய்தியாளர்களிடம்
அமைச்சர் ரிசாட் பதியுதீன்
தெரிவித்தார்.
இந்த வைபவத்தில் வவுனியா அரசாங்க
அதிபர் .திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ{ம்
கலந்து கொண்டார். |
|
|
உலக உணவுத் திட்டத்தின்
வன்னிக்குச் செல்லும் உணவூ லொறிக்குள்
ஜீ.பி.எஸ் கருவிகள்!நேற்று மீட்டனர்.
உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில்
விடுவிக்கப்படாத பிரதேசங்களுக்கு
உணவுப்பொருட்களை அனுப்பும்
லொறியொன்றுக்குள் மறைத்து
வைக்கப்பட்டிருந்த தரிப்பிடம் காட்டும்
22 ஜீ.பீ.எஸ் கருவிகளை பாதுகாப்புப்
படையினர் நேற்று மீட்டனர்.
வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில்
நிறுத்திவைக்கப்பட்டிருந்த
லொறியொன்றினுள் இருந்த சர்க்கரை
மூடையொன்றுக்குள்ளிருந்தே இவை
மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு
அறிவித்துள்ளது.
விடுவிக்கப்படாத வன்னிப்
பிரதேசத்துக்கு உணவுப் பொருட்களை
எடுத்துச் சென்ற லொறிக்குள்ளிருந்து
நேற்று முன்தினம் அதிசக்தி வாய்ந்த
வெடிமருந்துகள் மற்றும் பெற்றரிகள்
என்பவற்றை படையினர் கைப்பறிறியமை
குறிப்பிடத்தக்கது |
|
|
வன்னிக்குச் செல்லும்
உணவூ லொரிக்குள் இருந்து அதிசக்தி
வாய்ந்த வெடி மருந்துகள் பற்றரிகள்
மீட்பு!
வன்னிக்கு
உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற
லொறிக்குள்ளிருந்து அதிசக்தி வாய்ந்த
வெடிமருந்துகள் மற்றும் பெற்றரிகள்
நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட
பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர
தெரிவித்துள்ளார்.
வவுனியா மூன்றுமுறிப்பு சோதனைச்
சாவடியில் வைத்து உணவுப்பொருட்கள்
எடுத்துச் செல்லப்பட்ட லொறி சோதனைக்கு
உள்ளாக்கப்பட்ட போது சாரதியின்
ஆசனத்துக்கு கீழ் மறைத்து
வைக்கப்பட்டிருந்த 2.5 கிலோ கிறாம்
வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் லொறியின் வேறு ஒரு இடத்தில்
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28880
பெற்றரிகளையும் படையினர் கைப்பற்றினர்.
லொறிச்சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பொலிஸார் இவரிடம் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
லொறியில் பயணித்த இன்னுமொரு சந்தேக
நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்
சென்றிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர்
மேலும் தெரிவித்துள்ளார். |
|
|
|