<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

கிழக்கு மாகாணத்திலுள்ள புத்தி ஜீவிகன்ளயும் கல்விமான்களையும் ரி.எம்..வி.பி.யின் முக்கிய தளபதிகளையும் ரி.எம்.வி.பி.யின் தலைவர் கருனா அம்மான் கொழும்பில் சந்திப்பு.  கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் வளர்ப்பதற்கு செயன்முறை கொள்கைகள் தொடர்பானகிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் கலந்துரையாடல்.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:02 அக்டோபர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

கிழக்கு மாகாணத்திலுள்ள புத்தி ஜீவிகளையும் கல்விமான்களையும் ரி.எம்..வி.பி.யின் முக்கிய தளபதிகளையும் ரி.எம்.வி.பி.யின் தலைவர் கருனா அம்மான் கொழும்பில் சந்திப்பு.

30.09.2008. நேற்றுக் காலை 10. மணியளவில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள புத்தி ஜீவிகளையும் கல்வி மான்களையும் ரி.எம்.வி.பி.யின் முக்கிய பொறுப்பாளர்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான் சந்தித்து கலந்துரையாடினார்.

 இக் கலந்துரையாடலி;ன் போது கிழக்கு மாகானத்தின் அபிவிருத்தி பற்றியும் எதிர்காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி; மக்களுக்காக செய்யப்படும் செயற்ப் பாடுகள் பற்றியும் கிழக்கின் தற்போதைய நிலைமை பற்றியும் புத்தி  ஜீவிகளையும்  கல்விமான்கலுக்கும் விளக்கமளித்தார் அத்தோடு இக் கலந்துரையாடலில் இச் சந்திப்புக்கு வந்தவர்கள் அவர்களது மாவட்டங்களிலுள்ள குறைபாடுகள் பற்றியும் பிரச்சினைகள் பற்றியும் கருணா அம்மான் அவர்களிடம் கூறினார் இப் பிரச்சினைகளுக்கு தீர்வு கானும் முகமாக இலங்கையின் பாதுகாப்பு துறை செயளாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து கலந்துரையாட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானால் திட்டமிடப்பட்டது இக் கலந்துரையாடல் முடிவடைந்ததும் கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மூன்றுமாவட்டங்களிலுள்ள குறைபாடுகள் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் யுத்தத்தால் இடம் பெயர்ந்து மீண்டும் குடியமர்த்தப்பட்ட மக்களின் பிரட்சனைகள் பற்றியும் புத்திஜீவிகளும் கல்வி மான்களும் பாதுகாப்பு அமைச்சர் கோத்த பாய ராஜபக்ஷ அவர்களிடம் கூறினா.; இப் பிரட்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வு காணும் ஆலோசனை வழங்கியது மட்டுமன்றி சில பிரட்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தரப்படும் என்றும் உறுதி மொழி வழங்கியுள்ளார். இக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான பாரதி, ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, ஜீவேந்திரன், மங்களமாஸ்ரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


 

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் வளர்ப்பதற்கு செயன்முறை கொள்கைகள் தொடர்பானகிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் கலந்துரையாடல்.

மார்க்கா நிறுவனத்தின் உயர் பிரதிநிதிகள் அடங்கிய குழுவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் புத்திஜீவிகள் பலரும் இணைந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களை தனது மட்டக்களப்பு வாசஸ்தலத்தில் (28.09.2008) சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.

மேற்படி சந்திப்பில் முக்கியமாக கிழக்கின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு ஜனநாயகம் சமாதானம் போன்ற எண்ணக்கருக்கள் ஆழமாக ஆராயப்பட்டன. கிழக்கு மாகாணம் தற்போது புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜனநாயகச் சூழல் உருவெடுத்துக் கொண்டு வருகின்ற பட்சத்தில் கிழக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தியின் நிலைப்பாடு என்ன என ஆராய்ந்து அவ் அபிவிருத்தியினை மேற்கொள்கின்ற பட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது இதற்கு மார்க்கா நிறுவனம் எவ்வாறான உதவிகளை புரிய வேண்டும் எனவும், மார்க்கா நிறுவனம் சார்பாக பேசிய உயர் அதிகாரி ஒருவர்; தெரிவித்தார்.

இதில் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் சந்திரகாந்தன் இக் கலந்துரையாடலானது உண்மையில் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் வளர்ப்பதற்கு செயன்முறை கொள்கைகள் தொடர்பான ஓர் கலந்தரையாடலாகவே நான் பார்க்கின்றேன். கிழக்கு மாகாணம் தற்போது ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவின் வழிகாட்டலின் கீழ் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இவ் அபிவிருத்தி திட்டங்களை கிழக்கு மாகாண சபை திறம்பட அமுல்படுத்தி அவ் அபிவிருத்தி திட்டங்களை வேகமாக செயற்படுத்தி செல்கின்றது.

குறிப்பாக இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற பட்ச்சத்தில் சில இடர்பாடுகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது. அது உண்மையிலேயே ஜனநாயகத்தை சீர்குலைக்கின்ற செயற்பாடாக சிலர் அதனை பெரிதுபடுத்துகின்றனர். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை ஜனநாயகம், சமாதானம், அபிவிருத்தி என்பன தற்போது துளிர்விட்டுக்கொண்டு வருகின்றது. இதனை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு உங்களைப் போன்ற சமாதானம் விரும்புகின்ற நிறுவன அமைப்புக்கள் துணை நிற்க வேண்டும் எனக் கேட்டுகொண்டார்.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright