இலங்கைக்கான கொரிய
தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான கொரிய தூதுவர் சோய் கி
சுல் (Choi, ki chul) ஈபிடிபியின்
செயலாளர் நாயகமும் சமூக சேவைகள்
மற்றும் சமூகநலத்துறை அமைச்சரும்,
வடமாகாண விசேட செயலணியின் தலைவருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும்
இடையேயான சந்திப்பு ஒன்று இன்று
இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு இன்று
கொழும்பிலுள்ள கொரிய தூதுவரின்
வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது தற்போதைய அரசியல்
நிலவரங்கள் தொடர்பாகவும் தற்பொழுது வட
பகுதியின் அபிவிருத்தி தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது. இதன்போது
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கொரியத் தூதுவரிடம் வட பகுதியில்
மேற்கொள்ளப்பட வேண்டியப பல அபிவிருத்தி
திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கிக்
கூறினார்.
இச்சந்திப்பை அடுத்து கொரியத்
தூதுவரினால் அமைச்சர் அவர்கட்கு மதிய
போசன விருந்து அளித்து
கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி சந்திப்பில் கொரியக்
குடியரசின் கொய்கா நிறுவனத்தின்
இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சோங்
மின் கியேனும் (Song Ming Hyeon)
கலந்து கொண்டார்.
இலங்கையில் எல்லா
மாவட்டங்களிலும் பெண்கள்; செய்யும்
பணிகளை ''டீம் 1325'' மூலம்
அறிமுகப்படுத்தி பாராட்டுதல்.
இலங்கையின் சகல மாவட்டங்களிலும் பல
வருடங்களாக ஐக்கிய நாடுகள் சபையின்
பெண்களுக்கான 1325 என்ற
தீர்மானத்துக்கு அமைய பெண்கள் சமாதானம் பாதுகாப்பு என்பவற்றுக்காக எல்லா
மாவட்டங்களிலும் பணியாற்றி வந்த 25
மாதர் தலைவிகள் ஒன்று சேர்ந்து ''டீம்
1325'' என்ற கூட்டொன்றை ஒருங்கமைத்து
செயற்பட்டு வருகின்றார்கள்.
மேற்படி அமைப்பை உத்தியோகபூர்வமாக
அறிமுகப்படுத்தும் வைபவம் இன்று
கொழும்பில் இடம்பெற்றது.
இந்த 1325 தீர்மானம் 8 வருடங்களுக்கு
முன்பே 31-10-2000ம் ஆண்டிலிருந்து
உருவாக்கப்பட்ட போதும் ஒரு சில
ஸ்கன்டிநேவிய நாடுகளும் மேற்கத்திய
நாடுகளுமே தேசிய ரீதியிலான திட்டங்களை
உருவாக்கியுள்ளன. தற்போது லைபீரியா
மாத்திரமே போர் முடிவடைந்த நிலையில்
1325 தீர்மானத்தின் கீழ் ஒரு தேசிய
திட்டத்தை தயாரித்து வருகிறது.
இலங்கையில் மகளிர் விவகார அமைச்சானது
இவ் 1325 தீர்மானத்தை கருத்திற்கொண்டு
பெண்களுக்கான தேசிய நலத்திட்டத்தை தனது
அமைச்சின் கீழ்; உள்ளடக்கியுள்ளது.
எனவே நாம் எமது சிபார்சுகளையும்
அவ்வமைச்சிடம் கையளித்துள்ளோம் இந்த
சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள பெண்கள்
1325 யின் கீழ் மேற்கொண்டு வரும்
வேலைகளையும் மான்புமிகு அமைச்சரினதும்
மகளிர் விவகார அமைச்சினதும்;
ஈடுபாடுட்டினையும் பாராட்ட
விரும்புகிறோம் என மேற்படி அமைப்பானது
தனது அறிமுக விழா தொடர்பாக
விடுத்துள்ள செய்தியில்
தெரிவித்துள்ளது.
மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு
விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க சமூக
சேவைகள் மற்றும் சமூகநலத்துறை
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கலந்து கொண்டார்.
யாழ். பட்டதாரிகள்
மற்றும் மல்லாகம் மாதர் சங்க
பிரதிநிதிகள் இன்று செயலாளர் நாயகம்
டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.
பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக
மீள்பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட
பட்டதாரிகளில் 117 பேர் இன்றைய தினம்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்
யாழ்.மாவட்டக் காரியாலயத்திற்குச்
சென்று மீள்பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட
பட்டதாரிகளின் நியமனம் தொடர்பாக
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன்
கலந்துரையாடியுள்ளனர்.
இக்கலந்துரையாடலின் போது பட்டதாரிகளின்
கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா உரிய தரப்பினருடன்
தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத்
தெரிவித்துள்ளதுடன், பட்டதாரிகள்
வேலையின்மை காரணமாக எதிர்நோக்கும்
பிரச்சினைகளைத் தான் நன்கு அறிவதாகவும்,
அவர்களது நியமனம் குறித்த சகல
நடவடிக்கைகளையும் துரிதமாக
மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று யாழ்.மாவட்ட ஈ.பி.டி.பி.
காரியாலயத்திற்குச் சென்ற மல்லாகம்
மாதர் சங்கப் பிரதிநிதிகளும் தாங்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன்
கலந்துரையாடியுள்ளனர். மாதர் சங்கப்
பிரதிநிதிகள் தமது சங்கத்திற்கான
கட்டிடம் தொடர்பாகவும், வறுமைக்
கோட்டிற்குக் கீழுள்ள மாதர் சங்க
உறுப்பினர்களின் வீட்டுத் திட்டம்
குறித்தும் கோரிக்கைகளை முன்வைத்த
சமயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
அவர்களது கோரிக்கைகளை
நிறைவேற்றுவதற்;கான நடவடிக்கைகளை
மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியிலுள்ள
பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள்
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன்
பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் வடமராட்சியிலுள்ள குடத்தனை
வடக்குக் கடற்தொழிலாளர்கள் சங்கம்
குடத்தனை வடக்குக் கோவில் கமிட்டி
உறுப்பினர்கள் குடத்தனை அகதி முகாம்
நிர்வாகிகள் செல்வா விளையாட்டுக் கழகம்
மற்றும் பொற்பதி கடற்தொழிலாளர் சங்கம்
ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய
குழுவினர் இன்று முற்பகல் ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்டக்
காரியாலயத்திற்குச் சென்று
வடமாகாணத்திற்கான விஷேட செயலணித்
தலைவரும், சமூக சேவைகள் மற்றும் சமூக
நலத்துறை அமைச்சருமான டக்ளஸ்
தேவானந்தாவுடன் குடத்தனைப் பிரதேச
மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு
பிரச்சினைகள், தேவைகள் குறித்து
விரிவாகக் கலந்துரையாடியுள்ளனர்.
கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகள் அங்குள்ள கோவிலுக்கான
தேவைகள், அகதிமுகாமில் நிலவும்
குறைபாடுகள் மற்றும் தேவைகள்
விளையாட்டுக் கழகத்தினரின் கோரிக்கைகள்
குறித்து அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவிற்கு அங்கு வருகை
தந்திருந்த பிரதிநிதிகள் விரிவாக
எடுத்துக் கூறியதுடன், தம்மால்
முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை
நிறைவேற்றித் தருமாறும் கேட்டுக்
கொண்டனர்.
குடத்தனைப் பிரதேச மக்களின் தேவைகள்
கோரிக்கைகள் குறித்து வருகை
தந்திருந்த பல்வேறு அமைப்புகளின்
பிரதிநிதிகளிடம் விரிவாகக் கேட்டறிந்து
கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்களது கோரிக்கைகளைக் கூடிய விரைவில்
நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை
மேற்கொள்வதாகத் தெரிவித்ததுடன்
குடத்தனைப் பகுதிப் பொது அமைப்புகள்
அப்பகுதி மக்களின் தேவைகளில் கூடிய
அக்கறை செலுத்துவதினையிட்டுத் தமது
மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடல்களின் போது
ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட
அமைப்பாளர் சில்வேஸ்திரி அலன்டின் ஜுட்
உதயனும் கலந்து கொண்டார்.