<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா அம்மான் - ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.

 
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:29 செப்டம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா அம்மான் - ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.

ஈபிடியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் ரி.எம்.வி.பியின் தலைவரான கருணா அம்மானுக்கும் இடையே பரஸ்பர நட்பு ரீதியான சந்திப்பொன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் பொதுவான வேலைத்திட்டங்களில் இணைந்து செயற்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது அத்துடன் இத்தகைய வேலைத்திட்டங்களில் ஏனைய ஜனநாயக சக்திகளை இனங்கண்டு இதில் இணைத்துக் கொள்வது குறித்தும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் ஈபிடிபியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வி.சிவா ஈபிடிபியின் முக்கியஸ்தரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான க.அருமைலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா -  கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துரையாடல்.

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் கடந்த 5.9.2008 அன்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தில் கலந்து கொண்ட ஈபிடிபியின் செயலாளர் நாயகமும், சமூக சேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) அவர்களும் இங்கு கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலின்போது,

ஈபிடிபி உறுப்பினர்களுக்கு பிள்ளையான் தரப்பினருக்கும் இடையே நிலவிவரும் முரண்பாடுகளை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வது குறித்தும் கிழக்கு மாகாண சபையின் அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை இச்சந்திப்பு குறித்து டெயிலி மிரர் ஆங்கிலப் பத்திரிகை நட்பா? பகையா என தலைப்பிட்டு படத்துடன் செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது. அதிலே அடிமட்ட உறுப்பினர்கள் கிழக்கில் அடிக்கடி மோதிக்கொள்கிறார்கள் ஆனால் தலைவர்கள் இருவரும் எவ்வித தாக்கமுமின்றி இயல்பாக கலந்துரையாடுகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தது.

<<முன்னைய பதிவுகள்>>

Last update: 20-06-2008. Desigin and Copyright