|
ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
மீண்டும் எம்.பி.யாக
ஹக்கீம் சபையில் சத்தியப்பிரமாணம்
ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்
ஹக்கீம் மீண்டும் பாராளுமன்ற
உறுப்பினராக நேற்று வியாழக்கிழமை
சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்
லொக்குபண்டார முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
6ஆம் பக்கம் பார்க்க... பாராளுமன்றம்
நேற்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு
சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.
லொக்குபண்டார தலைமையில் கூடிய போதே
ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினராக
சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைச்
சேர்ந்த ரவூப் ஹக்கீம், ஹசன் அலி,
பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தமது எம்.பி.
பதவிகளை இராஜிநாமா செய்திருந்தனர்.
இந்நிலையில், ரவூப் ஹக்கீமின்
இடத்துக்காக முஹம்மட் நௌஷாட்
எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். தற்போது
பஷீர் சேகுதாவூத்தின் இடத்துக்கு ரவூப்
ஹக்கீம் மீண்டும் எம்.பி.யாக
நியமிக்கப்பட்டுள்ளார். |
|
|
வேலை நிறுத்தப்போராட்டத்தை
தோல்வியடையச் செய்த தொழிலாளர்களுக்கு
ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
வேலைநிறுத்த
போராட்டத்தை தோல்வியடையச் செய்த
தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
வடமத்திய, சப்ரகமுவ மாகாணங்களைச்
சேர்ந்த வர்த்தகர்களை அலரிமாளிகையில்
நேற்று சந்தித்த போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜே.வி.பி., ஐ.தே.க., தமிழ் தேசியக்
கூட்டமைப்பு இணைந்து மேற்கொண்ட
வேலைநிறுத்த போராட்டத்திற்கு புலிகளும்
ஆதரவளிப்பதாக பல இணையத்தளங்களில்
செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றுக்கு
மத்தியில் வேலைநிறுத்தத்தின்
சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொண்டனர்.
தாய் நாடு முன்னேற்ற காலகட்டத்தினை
நோக்கிய நிலையில் வேலை நிறுத்த
போராட்டத்தை தொழிலாளர்கள் தோல்வியடைய
செய்துள்ளனர். அந்த தொழிலாளர்களுக்கு
தேசிய ஆசீர்வாதம் கிடைக்கும்.
பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்க
வேண்டும் என்று மக்கள் கோரிக்கை
விடுத்திருந்தனர். அதனடிப்படையில்
கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது என்றும் ஜனாதிபதி
தெரிவித்தார். |
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |