<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

கொழும்பில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்?-இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. படையினர் உஷாராக இருக்க வேண்டும! :: அவசரகாலச் சட்டம் 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! :: முல்லைத்தீவூ காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு! :: இந்தியா ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

  T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 10 ஜுலை, 2008

தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கத்தில் எஞ்சியிருப்போர் சுமார் 5 ஆயிரம் பேர்

தற்போது அரசபடையினருக்கும் புலிகள் இயக்கத்திற்குமிடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் புலிகள் இயக்கத்தின் தரப்பில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பற்றி அண்மையில் பாதுகாப்புத்துறை தரப்பில் இராணுவத் தளபதி தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப வடக்கில் தற்போது எடுக்கப்பட்டுவரும் யுத்த நடவடிக்கைகளினால் புலிகள் தரப்பில் மாதாந்தம் 400 முதல் 450 வரையிலான புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுவருவாகக் கூறியுள்ளார். மேலும், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 9,000 புலிகள் இயக்கத்தினர் உயிரிழந்துள்ளதாகவும் இந்நிலையில் புலிகள் இயக்கத்தில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வகையில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பிரதேச மட்டங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மொத்தம் சுமார் 5,000 உறுப்பினர்களே புலிகள் இயக்கத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதன்படி யாழ்ப்பாணம் தீபகற்பப் பிரதேசங்களில் சுமார் 1,500 புலிகள் இயக்கத்தினரும் மன்னார், வவுனியா ஆகிய இரண்டு பிரதேசங்களிலும் மொத்தம் சுமார் 1,500 புலிகளும் கிளிநொச்சியில் 2,000 புலிகளும் மட்டுமே தற்போது செயற்படுகின்றனர்.

இதேவேளை, புலிகள் இயகத்தினரால் மேற்கொள்ளப்படும் புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் சேர்க்கும் நடவடிக்கைகளும் தற்போது குழப்ப நிலையிலுள்ளது. இதற்குக் காரணம் புலிகள் இயக்கத்தினர் அனைத்து இராணுவ நடவடிக்கைகளின்போது படையினரின் தீவிர தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தமது உயிரைக் காப்பாற்றும் நோக்கில் பின்வாங்கி வருவதும் மற்றும் அவர்களின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பியோடிவருவதுமேயாகும். ஆனால், அதேவேளை, இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பதற்கான பாதுகாப்புத்துறை நடவடிக்கைகள் சுமுகமாக நடந்துவருவதுடன் கடந்த ஒரு வருட காலத்தில் சுமார் 16,000 பேர் அரச படைகளில் புதிதாகச் சேர்ந்தும் உள்ளனர்.

காற்று மண்டலத்தைப் பாதிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்துவது குறித்து,புஷ் யோசனையை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்தார்

டொயகோ காற்று மண்டலத்தைப் பாதிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்துவது குறித்து, வளரும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்த யோசனையை பிரதமர் மன்மோகன்சிங் நிராகரித்துள்ளார்.

இந்தியா போன்ற வளரும் நாடுகள், காற்று மண்டலத்தைப் பாதிக்கும் வாயுக்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.8 நாடுகள் பங்கேற்ற பொருளாதார ஆய்வு கூட்டத்தில் புஷ் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட பிரதமர் மன்மோகன்சிங், தொழில்வளர்ச்சி பெற்று வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்தை காரணம் காட்டி நிபந்தனை விதிக்கும்போது, அவற்றின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார். வளர்ச்சியடைந்த நாடுகள் காற்று மண்டலத்தை பாதிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால், வளரும் நாடுகள் அதைப் பின்பற்றுவதற்கு சாதகமாக இருக்கும் என்றும் மன்மோகன்சிங் தெரிவித்தார். இதனிடையே, பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், பிரதமர் இந்தோ-அமெரிக்கா என்று பயன்படுத்திய வார்த்தையை, இந்து-அமெரிக்கா என்று தவறுதலாக குறிப்பிட்டிருந்தது. பின்னர், அந்தத் தவறு திருத்தப்பட்டு புதிய அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வவுனியா, மன்னார் மற்றும் வெலிஓய பகுதிகளில் நேற்று படையினரின் தாக்குதலில் 31 விடுதலைப்புலிகள் பலி

Imageவவுனியா மன்னார் மற்றும் வெலிஓய பகுதிகளில் நேற்றுபாதுகாப்புடையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளது.இம் மோதலில் விடுதலைப்புலிகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இம் மோதல்களின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு படைத்தரப்பில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி இம் மோதல்கள் வவுனியா- அம்படான்குளம் நடக்கண்டால்,பாலன்காமம், பாலமோடை மற்றும் நவவீ, மன்னார்- திருகோடீஸ்வரம், மரதிமடு மற்றும் வெலிஓய - ஜனகபுர வடக்கு கிரிஇப்பன்வெவ வடக்கு கொக்குதுடுவாய் ஆகிய பகுதிகளிலேயே மோதல்கள் இடம்பெற்றுள்ளது.

ஜே.வி.பி-ஐ.தே.க யின் போராட்டம் பொதுமக்களினால் புறக்கணிக்கப்பட்டுள்ளது

தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தமைக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகள் எதுவும் பாதிப்படைவில்லை சகல நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறுவதாக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

இத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பின்றி வழமை போல் இடம்பெற்று வருவதாக இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ரி. தயாரட்னவும், புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் லலிதசிறி குணரூவானும் அதனை உறுதிபடுத்தியுள்ளனர்.

சுகாதாரம், கல்வி ,போக்குவரத்து, மின்சாரம், நீர் ஆகிய அமைச்சுக்கள் திணைக்களங்கள் என்பன இத் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

14 தொழிற் சங்கங்கள் உட்பட பல சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் இணைந்து கொள்ளாமல் இருப்பதற்கு பாதுகாக்கப்பட்டனர்.நாட்டு மக்கள் இந்த வேளை நிறுத்தில் ஈடுபடாமல் பயங்கரவாதத்தை தேற்கடித்துள்ளனர் என மல்வத்த செப்டரின் வணக்கத்துக்குரிய நியங்கெட விஜித சிறி அணுநாயக்க தேரர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும் இணைந்து மேற்கொண்ட பொது வேலை பாரிய தோல்வியை கண்டுள்ளது.

பொது வேலைநிறுத்திற்கு தேசிய தமிழ் கூட்டணியும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

Image ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும் இணைந்து மேற்கொண்ட பொது வேலை நிறுத்தத்திற்கு தேசிய தமிழ் கூட்டணியும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.

சுகாதாரம், கல்வி ,போக்குவரத்து, மின்சாரம், நீர் ஆகிய அமைச்சுக்கள் திணைக்களங்கள் என்பன வழமையான சேவையில் ஈடுபட்டுவருவதாக தகவல் திணைக்களத்தின் வட்டரங்கள் லங்காபுவத் செய்திச் சேவைவக்கு தெரிவித்தன.

ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த இந்த பொது வேலை நிறுத்தம் வெற்றி அடையாவிட்டால் தான் பதவியில் இருந்து ராஷினாமா செய்வார் என கூறினார் தற்போது இந்த பதவி செயலிழந்துள்ளது எனவும் இவ் வட்டரங்கள் தெரிவித்தன.

விடுதலைப்புலிகளுக்கு சார்பானதாக என நம்பப்படும் இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் இந்த வேலை பொது நிறுத்திற்கு ஒத்துழைப்புவழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த வேளை நிறுத்தம் விடுதலைப்பிகளுக்கு சாதகமாகவே இருக்குமென அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை தற்போது விடுதலைப்புலிகள் சுவாசிப்பதற்கு இயலாமல் உள்ளனர், இந்த வேலை நிறுத்தம் இவர்களுக்கு ஒக்சிஜனை வழங்குவது போல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்களே இந்தவேலை நிறுத்த்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜே.வி.பி யினர் விடுதலைப்புலிகளின் ஆசாபாசங்களுக்கு இணங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பபடுகின்றது.

மேற்படி இந்த வேலை பொது நிறுத்தம் அரசியல் நோக்கமுடையதாகும். ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் தமது உட்கட்சி பிரச்சினைகளை மூடி மறைத்து தமது கட்சிகளை பலப்படுத்தும் குறுகிய அரசியல் நோக்கத்துடனேயே இந்த பொது வேலை நிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளன.

ஏற்றுமதி வருமானமானது பூக்கள் மற்றும் செடிகள் ஏற்றுமதிகளில் தங்கியுள்ளது

நாட்டின் ஏற்றுமதி வருமானமானது பூக்கள் மற்றும் செடிகள் ஏற்றுமதிகளில் தங்கியுள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி்.எல் .பீரிஸ் தெரிவித்தார்.

இந்த வருமானமானது பூக்கள் முலம் 30 வீதம் அதிகரிப்பினையும் செடிகள் முலம் 20 வீதம் அதிகரிப்பினையும் பெற்றுள்ளது.

மாத்தளையில் இடம்பெற்ற செடிகள் ஏற்றுமதி நிகழ்ச்சி திட்டம் ஒன்றில் ஆரம்ப வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இதனை அமைச்சர் ஜி்.எல் .பீரிஸ் தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் விவசாயிகள் அமைப்புக்கள்,கீழேயத்திய ஏற்றுமதி ஆகியன கலந்துக்கொண்டன.

ஏற்றுமதி வருமானமானது அண்மை காலங்களில் 15% அதிகரிப்பினை காட்டியதுடன் வெளிநாட்டு நாணய மாற்று வீதத்தினையும் அதிகரித்துள்ளது எனவும் அமைச்சர் ஜி்.எல் .பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

எதிர்கட்சியின் பிரதான ஏற்பாட்டாளருக்கு அமைசைசர் கெஹெலிய வேண்டுகோள்

பாதுகாப்பு குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுதல் , காணாமல் போதல் போன்றவற்றை வழி நடத்தவது இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின்தலைமையில் இயங்கும் குழுவினரே என எதிர்கட்சியின் பிரதான ஏற்பாடாளர் ஜோசப் மைக்கள் பெரேரா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

இராணுவத் தளபதியின் தலைமையில் செயற்பட்டுவரும் இக் குழுவைப் பற்றி ஏதேனும் சாட்சியங்கள் இருந்தால் அது பற்றிய தகவல்களை திரட்டித்தருமாறு ஜோசப் மைக்கல் பெரேராவிடம் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றிய தகவல்களை திரட்டித்தந்தால் அதற்குறிய விசாரனைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

இயற்கை அழிவுகளில் இருந்து தெற்காசிய நாடுகள் தம்மைதக்க வைத்துக் உணவு வங்கி ஒன்றை நிறுவுவதற்கு தெற்காசிய நாடுகள் இணக்கம்

இயற்கை அழிவுகளில் இருந்து தெற்காசிய நாடுகள் தம்மைதக்க வைத்துக் கொள்வதற்காக உணவு வங்கி ஒன்றை நிறுவுவதற்கு இணங்கியுள்ளதாக பங்களாதேஷின் நிதி திட்டமிடல் ஆலோசகர் மிரூஸ அசிசூல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம்  நேபாளம்  கட்மன்டூரில் நடைபெறவுள்ள இரண்டு நாள் கூட்டத்தில் இதற்கான திட்டங்களை  அந் நாடுகளின் அமைச்சர்கள் மற்றம் சிரேஷ்ட அதிகாரிகள்  முன்வைக்கவுள்ளனர்.

பலதரப்பட்ட பிரிவுகளின் தொழில் நுட்ப பொருளாதார கூட்டிணைப்பு இந்த உணவு வங்கியை விரைவில் அமைப்பதற்கு முன்வந்துள்ளனர். பங்களாதேஷ, பூட்டான், இந்தியா ,மியன்மார் நேபாளம் ,இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் இந்த பலதரப்பட்ட பிரிவுகளின் தொழில் நுட்ப பொருளாதார கூட்டிணைப்பில் அங்கத்தவர்களாக இருப்பதாகவும் அசிசூல் தெரிவித்தார்.

மேற் குறிப்பிடப்பட்ட இந்த நாடுகள் இந்த உணவு வங்கியினை பலப்படுத்துவதற்கு  நிதி ரீதியாகவோ அல்லது சிநேக பூர்வமாகவே தமது ஒத்துழைப்பை வழங்குவர் என அசிசூல் மேலும் குறிப்பிட்டார்.

  <<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright