<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

கொழும்பில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்?-இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. படையினர் உஷாராக இருக்க வேண்டும! :: அவசரகாலச் சட்டம் 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்! :: முல்லைத்தீவூ காட்டுக்குள் புலிகளின் முக்கிய தளம் படையினரால் மீட்பு! :: இந்தியா ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

  T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 09 ஜுலை, 2008

மன்மோகன் சிங், இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய ஆலோசனை

செய்தி் நாள்:09ஜுலை,2008,டொயோகோ:இந்தியாவில் பெரும் அரசியல் தடுமாற்றம் நிலவி வரும் சூழ்நிலையின் பின்னணியில், பிரதமர் மன்மோகன் சிங், இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சந்தித்து அணு சக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தம் முக்கியமானு என்று அப்போது பிரதமரிடம் புஷ் தெரிவித்தார்.டோயோகோ நகருக்கு உள்ள மெளன்ட் போரோமாய் என்ற இடத்தில் உள்ள ஹோட்டல் வின்ட்சரில் இந்த சந்திப்பு நடந்தது. இரு நாடுகளும் மேலும் உறவை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும், பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அப்போது இரு தலைவர்களும் தெரிவித்தனர்..(மேலும்)

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கடந்த ஒரு மாத காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில்
112 படையினர் உயிரிழப்பு 793 பேர் படுகாயம் சபையில் பிரதமர் தெரிவிப்பு.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் கடந்த ஒரு மாத காலத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் படைத் தரப்பைச் சேர்ந்த 112 பேர் பலியானதோடு 793 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இன்று சபையில் தெரிவித்தார்.

இக்காலப் பகுதியில் 43சிவிலியன்கள் கொல்லப்பட்டதாகவும் 61பேர் படுகாயமடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார் அவசரகால நீடிப்பு பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:


படையினர் வடக்கில் குறிப்பாக மன்னாரில் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். படையினரின் நடவடிக்கைக்கு வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.

வΓΌன் மாதம் இரண்டாம் திகதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற மோதல்களில் பொலிஸார் மற்றும் முப்படையினரைச் சேர்ந்த 112 பேர் உயிரிழந்துள்ளனர்; 793 பேர் படுகாயமடைந்துள்ளனர். இக்காலப் பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 43 பொதுமக்கள் பலியாகியதோடு 61 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்தியத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த தாக்குதலை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதென ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 5 தூதரக உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, இச் சம்பவத்திற்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை.

இதுவொரு கண்டிக்கத்தக்க பயங்கரவாத நடவடிக்கையென ஐ.நா.பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, இச் சம்பவத்தில் பலியான 4 இந்தியர்களினது உடல்களும் நேற்று முன்தினம் மாலையே இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானின் மிக நெருங்கிய நட்பு நாடான இந்தியா ஆப்கானுக்கு கூடுதலான நிதியுதவி வழங்கி வருவதுடன் அந்நாட்டின் மீள் கட்டுமான நடவடிக்கைகளுக்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள், கொலைகள் சகஜம் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

யுத்தம் தீவிரமாக நடைபெறும் நாடொன்றில் கடத்தல்கள் கொலைகள் இடம்பெறுவது வழமையானதெனத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரட்ன ஐ.தே.க ஆட்சிக் காலத்தில் நடந்ததைவிட பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லையெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இன்று ஐ.தே.க.விற்குள் அதன் தலைமைத்துவத்திற்கெதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது அந்தப் போராட்டம் வெற்றிபெற வேண்டுமென நான் ஆசீர்வதிக்கின்றேன்.


அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தாது யுத்தத்தை நாடுவதாக ஐ.தே.க.கூறுகின்றது விடுதலைப்புலிகள் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தைக்கு வருவார்களென ஐ.தே.க.உறுதியளித்தால் பேச்சுக்கு செல்லுமாறு அரசிலிருந்தவாறு நானே அழுத்தம் கொடுப்பேன்.

ஐ.தே.க.ஆட்சிக்காலத்தில் இராணுவத்துக்கு பழைய கால ஆயுதங்களே வாங்கப்பட்டன. டச்சுக்கால பீரங்கிகளையே கொள்வனவு செய்ய முயன்றனர். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தற்போது இராணுவத்திற்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுக்கின்றார்.

முன்னர் ஐ.தே.க.வின் வெற்றிக் கோட்டைகளாகவிருந்த பலபகுதிகள் இன்று தோல்வியடைகின்றன. ரணில் எங்கு போய் பிரசாரக்கூட்டம் வைத்தாலும் அந்தப் பகுதி தோல்வியடைவது வழமையாகிவிட்டது.

அரசு மீது கடத்தல், காணாமல்போதல், கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்படுகிறது. யுத்தம் நடைபெறும் நாடொன்றில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது வழமையானது. ஆனாலும் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கையெடுத்து வருகிறது.

அஜந்த மென்டிசுக்கு இராணுவப்படையில் பதவி உயர்வு மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளது.

  ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த இலங்கை அணியின் இளம் பந்து வீச்சாளர் அஜந்த மென்டிசுக்கு இராணுவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் நேற்று (08) மாலை இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் இவர் இலங்கை இராணுவப் படையின் இரண்டாவது லெப்டினன்டாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரின் இறுதிப்போட்டியில் 8 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

நாளை நாடாத்தவுள்ள வேலை நிறுத்தில் தாம் கலந்து கொள்ளவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் தெரிவிப்பு

நாளை நாடாத்தவுள்ள வேலை நிறுத்தில் அரச வைத்திய அதிகாரிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என அச் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பீமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நேற்று (08) அலரிமாளிகையில் வைத்து விஷேட பேச்சுவார்த்தை ஒன்றை நாடாத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


சில தொழிற் சங்கங்கள் நாட்டின் நிலமையை கருத்திற் கொள்ளாமல் நடாத்தும் இவ் வேலைநிறுத்தத்திற்கு 14000ற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் உதவி வழங்க மாட்டாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகளின் வீடமைப்பு வேலைத்திட்டத்தையும் விரைவில் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கினார்.

கிழக்குமாகாண சபையில் இருந்து ரவூப் ஹகீம் ராஜினாமம் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி தெரிவித்தார்.

கிழக்குமாகாண சபை  எதிர்கடசித்தலைவரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான    ரவூப் ஹகீம்    கிழக்கு மாகாண சபையில் இருந்து  ராஜினாமம் செய்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன்  அலி லங்காபுவத் சேவைக்கு தெரிவித்தார்.

முன்னர் திட்டமிட்டிருந்த படியே இந்த ராஜினாமம் செய்யப்பட்டுள்தாகவும் கிழக்கு மாகாண சபை எதிர் கட்சித்தலைவர் பதவிற்கு பசீர் சேகுதாவூந் நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்குமாகாண சபையில் இருந்து ராஜினாமம்  செய்த ரவூப் ஹகீம் பாராளுமன்ற அமர்வுக்கு செல்லவுள்ளதாகவும் அமீர்  அலி மேலும் தெரிவித்தார்.

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைகள
உதயன்

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright