| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008
|
|
இந்தியா
ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின்
கரையோரத்தில் பயன்படுத்த
நாட்டில் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு
விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம்
தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது:
தமிழ் நாட்டின் தென்கிழக்குக்
கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு ஆளில்லாத உளவு
விமானங்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய அரசு
தீர்மானித்துள்ளது. உச்சிப்புள்ளியில் உள்ள
கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான
ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில்
ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.
தென்குடா நாட்டின் கரையோர மற்றும்
கடற்பகுதிகளில் கடற்படையினரின் கண்காணிப்பு
நடவடிக்கைகளை அதிகரிப்பதே இதன் நோக்கம்.
இரண்டரை வருடங்களுக்கு முன்னர் இந்திய
கடற்படையினர் தமது முதலாவது ஆளில்லாத உளவு
விமான "ஸ்குவாட்ற'னை கொச்சின் பகுதிக்கு
நகர்த்தியிருந்தது.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்
புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து
வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள்
முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கடற்படை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கடற்படை உயர் அதிகாரிகள் மேற்கொண்ட
பயணத்தினைத் தொடர்ந்து உச்சிப்புள்ளி பகுதியில்
கடற்படையினரின் வான் கண்காணிப்பு நிலையத்தை
அமைப்பது தொடர்பான முடிவுகள்
எடுக்கப்பட்டிருந்தன.
கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு
இஸ்ரேலியத் தயாரிப்பான ஆளில்லாத உளவு
விமானங்களை உச்சிப்புள்ளியில் நடவடிக்கையில்
ஈடுபடுத்தத் தீர்மானித்திருப்பதாக கடற்படை
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008
|
|
ஒரு வாரத்தின் பின்னர்
திறக்கப்பட்ட ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக 50 பேர்
மாத்திரமே வன்னிக்குச் செல்ல அனுமதி
அங்கிருந்து எவரும் வரவில்லை
கடந்த
ஒருவார காலமாக மூடப்பட்டிருந்த ஓமந்தை
சோதனைச்சாவடி இன்று பிற்பகல் மீண்டும் ஒரு
மணித்தியாலத்திற்கு மாத்திரமே
திறக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதை திறக்கப்பட்டதையடுத்து, தமது பிரயாணத்தைத்
தொடர முடியாமல் வவுனியா நகரில்
தங்கியிருந்தவர்கள் அவசர அவசரமாக ஓமந்தைக்குச்
சென்ற போதிலும், 50 பேருக்கு மாத்திரமே
சோதனைச்சாவடியைக் கடந்து செல்ல
அனுமதிக்கப்பட்டதாகவும், ஏனையோர் திரும்பி வர
நேர்ந்ததாகவும் அவ்வாறு திரும்பி வந்தவர்கள்
தெரிவித்தனர்.
சில அரச ஊழியர்களும், பொதுமக்களுமே இவ்வாறு
பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகக்
கூறப்படுகின்றது. இன்று பிற்பகல் 3 மணிதொடக்கம்
மாலை 5 மணிவரையில் தமது பிரதிநிதிகள் ஓமந்தை
சோதனைச்சாவடியில் கடமையில் இருப்பார்கள்
என்றும் நாளை முதல் வழமைபோல அவர்கள் முழு
நாளும் கடமையில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும்
சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் இன்று பிற்பகல்
வவுனியா மற்றும் கிளிநொச்சி அரசாங்க
அதிபர்களுக்குத் தகவல் தெரிவித்திருந்தனர்.
ஓமநதை சோதனைச்சாவடி பிரதேசத்தில்
பொதுமக்களினதும், தமது பிரதிநிதிகளினதும்
பாதுகாப்பு உரியவர்களினால்
உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே தமது பிரதிநிதிகள்
ஓமநதை சோதனைச்சாவடிக்குக் கடமைக்குத்
திரும்பியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்
குழுவினர் தெரிவித்துள்ளனர். நாளை பொதுமக்கள்
போக்குவரத்துடன் வாகனப் போக்குவரத்துக்களும்
வழமைக்குத் திரும்பும் என
எதிர்பார்க்கப்படுகின்றது. |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008
|
|
சர்வகட்சி
குழுவின் தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
கட்சியின் பிரதிநிதியாக சிவகீதா பிரபாகரன்
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில்
மட்டக்களப்பு மாநகரசபையின் மேயர் சிவகீதா
பிரபாகரன் சர்வகட்சிப் பேரவையை
பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்
மக்கள் விடுதலைப் புலிகளின் சார்பில் சிவகீதா
பிரபாகரனின் பெயரை கட்சி அனுப்பி வைத்துள்ளதாக
சர்வகட்சிப் பேரவையின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ
விதாரண தெரிவித்துள்ளார்.எனவே தற்காலிகமாக
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வகட்சிப்
பேரவையின் நடவடிக்கைகள் மீண்டும் வெகுவிரைவில்
ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் |
|
செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:
07 ஜுலை, 2008 |
|
பூரண அரச
மரியாதையூடன் அமைச்சார் ரிச்சாட் பத்திரனவின்
இறுதிக் கிரியைகள் இன்று
முன்னாள்
கல்வியமைச்சர் ரிச்சாட் பத்திரணவின்
இறுதிக்கிரியைகள் இன்று பூரண அரச மரியாதையுடன்
காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
காலி கிதுலம்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரின்
வீட்டில் இருந்து பூதவுடல் காலி சமனல
விளையாட்டரங்கிற்கு எடுத்துச் செல்லப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகளையடுத்து
தென்மாகணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் இன்று
முற்பகல் 10 மணிக்கு மூடப்பட்டன.
கடந்த 3 ஆம் திகதி மாலை கொழும்பிலுள்ள
அன்னாரது தனது இல்லத்தில் வைத்து காலமானார்.
இவர் இறக்கும் போது வயது 71 ஆகும். |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008
|
|
குளிர்
சாதனம் திருத்தும் நிலையமொன்றில் வெடிப்புச்
சம்பவம் இருவர்உயிரிழந்ததுடன் நால்வர்
காயமடைந்துள்ள
குளிர் சாதனம் திருத்தும் நிலையமொன்றில் இடம்
பெற்ற வெடிப்புச்சம்பவமொன்றில் இருவர்
உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என
இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நரணயக்கார
தெரிவித்தார்.
இச்சம்பவம்
நண்பகல் நிட்டம்புவ பஸ்யல என்ற இடத்தில் இடம்
பெற்றுள்ளது.
காஸ்
தாங்கியோன்றில் ஏற்பட்ட வெடிப்பே இந்த
சம்பவத்திற்கு காரணம் என ஆரம்ப விசாரணைகள்
மூலம் தெரியவந்துள்ளது |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008 |
|
திருகோணமலை வைத்தியசாலை அபிவிருத்திக்கு
அமெரிக்க அரசு 500 மில்லியன் ரூபாவை வழங்க
இணக்கம்
திருகோணமலை பொது வைத்தியசாலை அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில்
அமெரிக்க அரசு 500 மில்லியன் ரூபாவை இலங்கைகு
வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார போசாக்கு நலன்புரி அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா அமெரிக்காவுக்கு விஜயம்
செய்த போது விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த
நிதி உதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் பல பாரிய அபிவிருத்தி
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம்
முன்னொடுப்புக்களை எடுத்துவருவதாகவும் இதற்கு
அமெரிக்க அரசாங்கம் உதவி வழங்க வேண்டும் எனஅவர்
கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்படி இந்த நிதி வழங்குவதற்கான ஒப்பந்தம்
கடந்த வாரம் சுகாதார அமைச்சில் வைத்து
கைச்சாத்திடப்பட்டது. இதில் இலங்கை அரசின்
சார்பில் சுகாதார போசாக்கு நலன்புரி அமைச்சர்
நிமல் சிரிபாலடி சில்வா அமெரிக்க அரசின்
சார்பில் ரீஸா ஹில்மி ஆகியோர் கைச்சாத்திட்டனர்
|
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008 |
|
உலக வங்கி
இலங்கையின் சுற்றுலா த்துறையினை விருத்தி
செய்வதற்கு தனது ஆர்வத்தினை காட்டிவருகின்றது
என சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட
தெரிவித்தார்.
உலக வங்கி இலங்கையின் சுற்றுலா த்துறையினை
விருத்தி செய்வதற்கு தனது ஆர்வத்தினை
காட்டிவருகின்றது என சுற்றுலாத்துறை அமைச்சர்
மிலிந்த மொரகொட தெரிவித்தார்.
எமது சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்
நிறுவனங்களின் நடவடிக்கை தரமானதாக
காணப்படுகின்றதாகவும், சுற்றுலாப்பயணிகள்
திறமான அனுபவங்களையும் பெறக்கூடியதாக துறைதாக
எமது சுற்றுலாத்துறை அமைந்துள்ளது என அமைச்சர்
மேலும் தெரிவித்தார்.
சிறிய மற்றும் நடுத்தர திட்டங்கள் மற்றும்
கிராம சமூக முயற்சியாளர்களுக்கும் ஏனைய
சுற்றுலாத்துறை திட்டங்களுக்கு உலக
வங்கி உதவ முடியும் என அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.தான் சுற்றுலாத்துறை சம்பந்தமான
பல கூட்டங்களில் கலந்து கொண்டு இலங்கையின்
சுற்றுலாத்துறையின் நோக்கத்தினை முன்வைத்தாக
அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க உலக வங்கி
சுற்றுலாத்துறை திட்டங்களுக்கு நிதி உதவி
வழங்க ஏற்றுக்கொண்டுள்ளது.இந்த நிதி
சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும்
அபிவிருத்தி செய்வதற்கும் உபயோகிக்கப்படுவதுடன்
தனியார் துறை மற்றும் பொதுத்துறை, சிறிய
மற்றும் நடுத்தர கைத்தொழில் ஆகியவற்றிற்கும்
இந்நிதி உபயோகிக்கப்படும். எதிர்வரும் சில
வருடங்களில் இலங்கை சுற்றுலாத்துறை பில்லியன்
டொலர் துறையாக எட்டிப்பிடிக்கப்படும் என
அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
|
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008 |
|
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்தியாவுக்கான சேவைகளை
மேம்படுத்தியுள்ளதுள்ளதுடன் சலுகைகைகளையும்
வழங்க முன்வந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயா்லைன்ஸ் இந்தியாவுக்கான சேவைகளை
மேம்படுத்தியுள்ளதுள்ளதுடன் சலுகைகைகளையும்
வழங்க முன்வந்துள்ளது.
பெங்களூர், சென்னை, ஹைதராபாத் மற்றும் டில்லி
என்பன இலங்கையரின் விடுமுறை நகரங்களாகும்.
நீங்கள் எத்தனை முறை இந்தியா சென்றாலும்
பரவாயில்லை ஆனாலும் உங்களுக்கு ஏதே ஒரு
விதத்தில் புதிய அனுபவங்கள் எந்த நேரமும்
கிடைக்கும் அளவிற்கு இந்த 4 நகரங்களும்
உள்ளன என ஸ்ரீலங்கன் எயா்லைன்ஸ் விடுமுறை
முகாமையாளர் சமித் சுமனபால தெரிவித்தார்.
|
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008 |
|
மல்டி மீடியா வர்த்தக’ கண்காட்சி இன்று (04)
பண்டார நாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில்
வர்த்தக’ கண்காட்சி 2008
மல்டி மீடியா வர்த்தக’ கண்காட்சி இன்று பண்டார
நாயக்க சர்வதேச ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில்
ஆரம்பமானது என அதன் அமைப்பாளரும் நிகழ்ச்சி தலைவருமான
ரோஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.
இக்கண்காட்சி இன்றும் நாளையும் முன்று கருத்தரங்குகளுடன்
நடைபெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
உலக ரீதியாக‘மல்டி மீடியா வர்த்தக’ உற்பத்திகளின்
பிரசித்தி பெற்ற 7 நிறுவனங்கள் தமது உற்பத்திகளை
இக்கண்காட்சியில் காட்சிக்கு வைக்கும்.
இக்கண்காட்சி ஊடாக மல்டி மீடியா தொடர்பாக பொது
மக்களை அறிவூட்டுவதற்காக பல நிகழ்ச்சிகள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளது. |
|
<<முன்னைய
பதிவுகள்>> |