|
|
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 07 ஜுலை, 2008
|
|
இலங்கை
மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஒன்பதாவது
ஆசியக் கிண்ணப் போட்டி நேற்று.
சுழல் பந்து வீச்சாளர் அஜன்த
மென்டிஸ் மற்றும் அதிரடி துடப்பாட்ட வீரர் சனத்
ஜயசூர்ய ஆகியோர் இலங்கை அணியின்
வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தனர்.பந்து வீச்சில்
திறமையை காட்டிய அஜன்த மென்டிஸ் 8 ஓவர்கள்
பந்து வீசி 13 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை
கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
அதிரடி துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூர்ய 114
பந்துகளுக்கு முகம் கொடுத்து 09 பவுன்ரிகள் 05
சிக்சர்கள் அடங்களாக 125 ஓட்டங்களை பெற்று
இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி
சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273
ஓட்டங்களைப்பெற்றது.பதிலுக்கு
துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 39.3 பந்து
ஓவர்கள் மட்டும் விளையாடி 173 ஓட்டங்களை
மட்டுமே பெறமுடிந்தது.விரேந்திர சேவாக் 60
ஓட்டங்களையும் அணித்தலைவர் தோனி 49
ஓட்டங்களையும் பெற்றனர்.பந்து வீச்சில் இலங்கை
அணி சார்பில் சமிந்த வாஸ் 9 ஓவர்கள் பந்து வீசி
55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் நுவன்
குலசேகர மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர்
தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அஜன்த மென்டிஸ் ஆசியக் கிண்ண வரலாற்றில்
சிறந்த பந்து வீச்சாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை அஜன்த மென்டிஸ் ஆட்ட நாயகனாகவும் தொடர்
நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார். |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜுலை, 2008
|
|
ஜேர்மனிய
பெர்லின் நகரில் ஹிட்லரின் மெழுகு உருவச்சிலையின்
தலையை துண்டித்த நபர் கைது
ஜேர்மனிய பெர்லின் நகரில்
புதிதாக திறந்து வைக்கப்பட்ட "மேடம்
துஸ்ஸாயுத்' அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த
சர்வாதிகாரி ஹிட்லரின் மெழுகு உருவச் சிலையின்
தலையை துண்டித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி ஹிட்லரின் உருவச்சிலையானது சனிக்கிழமை
பொதுமக்கள் பார்வைக்காக முதன் முதலாக திறந்து
வைக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களில் அச்சிலையின்
தலை துண்டிக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தில் சர்வாதிகாரி ஹிட்லரின்
மெழுகு உருவச்சிலை காட்சிப்படுத்தப்பட்டமையானது
பெரும் சர்ச்சையை எழுப்பியிருந்த நிலையில், 41
வயதான நபரொருவர் அவ் உருவச் சிலையின் தலையை
துண்டித்துள்ளார். அந்த அருங்காட்சியகத்தின்
இரண்டாவது பார்வையாளராக பதிவு செய்யப்பட்ட அந்நபர்,
நேரடியாக ஹிட்லரின் உருவச்சிலையை அணுகி கண்ணிமைக்கும்
நேரத்தில் தாக்குதலை நடத்தியதாக
கூறப்படுகிறது. |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜுலை, 2008 |
|
விமானப்
படையினரின் சோதனைச்சாவடியினை வாகனத்தால் மோதி
சேதப்படுத்திய நால்வர் கைது நீதிமன்றில் ஆஜர்
செய்ய பொலிஸார் நடவடிக்கை
கொழும்பு, கொம்பனி வீதியில் அமைந்துள்ள விமானப்
படையினருக்குச் சொந்தமான வீதிச் சோதனைச் சாவடியொன்றை
வாகனத்தால் மோதிச் சேதப்படுத்திய பெண் ஒருவர்
உட்பட நால்வர் விமானப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது கைது செய்யப்பட்ட
நால்வரும் கொம்பனிவீதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமாகிய
ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும்
கூறியதாவது
கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள விமானப் படையினரின்
சோதனைச் சாவடியில் கடமையாற்றி வந்த விமானப் படையினர்
அப்பகுதியினூடாக அதிவேகமாகப் பயணித்துக்
கொண்டிருந்த வான் ஒன்றை சோதனையிட முற்பட்டுள்ளனர்.
அதற்காக அச்சோதனைச் சாவடியில் உள்ள விமானப் படையினரால்
அவ்வாகனத்தை நிறுத்துமாறு சைகை காட்டப்பட்டுள்ளது.
படையினரின் கைசையைக் கவனத்திற் கொள்ளாத
குறித்த வான் அச்சோதனைச் சாவடியினையும்
மோதிவிட்டு சென்றுள்ளது.
இதனை அடுத்து அங்கிருந்த விமானப் படையினர் வானத்தை
நோக்கி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னரே குறித்த வான் நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் அந்த வானை சோதனையிட்ட படையினர் அதில்
பயணித்த பெண்ணொருவர் உட்பட நால்வரை கைது செய்தனர்.
இவர்கள் கைதுசெய்யப்பட்ட போது குடிபோதையில் இருந்ததாக
படையினர் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள்
நால்வரும் கொம்பனி வீதி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட
விசாரணைகளின் போது அவர்கள் நால்வரும்
கொழும்பில் அமைந்துள்ள பிரபல சூதாட்டக் கழகம்
ஒன்றிலிருந்தே வீடு திரும்பிக் கொண்டிருந்தமை
தெரியவந்துள்ளது. சம்பவத்தை அடுத்து கைதான
நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த கொம்பனி
வீதி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜுலை, 2008 |
|
அடுத்த
மாதத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற
வேண்டும்; அமெரிக்கா நெருக்கடி
அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்த
மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என இந்தியாவுக்கு
அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.புஷ்ஷின்
பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாத காலமே
உள்ள நிலையிலேயே இப்புதிய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தின் மூத்த எம்.பி.க்கள்
குழு ஒன்று நேற்று முன்தினம் டில்லியில் அணுசக்தி
ஒப்பந்தம் குறித்த பிரதமர் மன்மோகன்சிங்கின்
சிறப்பு தூதர் ஷியாம் சரணையும், வெளியுறவுச்
செயலாளர் சிவசங்கர் மேனனையும் சந்தித்து பேசியது.
அப்போது அடுத்த மாதத்திற்குள் அமெரிக்க பாராளுமன்றத்தின்
இறுதி வாக்கெடுப்புக்கு அணுசக்தி ஒப்பந்தம் வர
வேண்டும். இல்லாவிட்டால் ஜனாதிபதி புஷ்ஷின்
பதவி காலத்திற்குள், இந்த ஒப்பந்தத்தை
நிறைவேற்ற முடியாமல் போய் விடும் என்று அமெரிக்க
எம்.பி.க்கள் கூறினார்கள்.
அதற்கு, அணுசக்தி ஒப்பந்தத்தை கூடிய சீக்கிரத்தில்
அமுல்படுத்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள்
பற்றி ஷியாம் சரணும், சிவ்சங்கர் மேனனும் விளக்கினார்கள்.
இச்சந்திப்பு குறித்து அமெரிக்க குழுவின் தலைவர்
கேரி அக்கர்மேன் கூறியதாவது:
சர்வதேச அணுசக்தி கழகம் மற்றும் அணு எரிபொருளை
விநியோகிக்கும் நாடுகள் குழு ஆகியவற்றுடன் அடுத்த
மாதத்திற்குள் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ள
தவறினால், அமெரிக்காவில் அடுத்து புதிதாக பதவியேற்கும்
அரசுதான் இந்த ஒப்பந்தம் பற்றி முடிவு எடுக்க
முடியும் |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜுலை, 2008 |
|
இலங்கை
இனப்பிரச்சினைக்கு காரணம் சமநிலையற்ற அரசியல்
அதிகாரங்களே பிரான்சிஸ் ஸ்டுவர்ட்
தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு காரணம்
இலங்கையில் அரசியல் அதிகாரங்கள் சம நிலையற்றுக்
காணப்படுவதே என ஒக்ஸ் போர்ட்டை மையமாகக்
கொண்டியங்கும் இன நெருக்கடி மற்றும் மனித விவகாரங்களுக்கான
மத்திய ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர்
பிரான்சிஸ் ஸ்டுவர்ட் கடந்த வியாழக்கிழமை ஹியூமன்
ரைற்ஸ் ரிபியூன் என்ற இணைத்தளத் திற்கு
தெரிவித்துள்ளார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியான அதிகாரங்கள்
தமிழ், சிங்கள மக்களி டையே மநிலையற்ற.... சமநிலையற்றுக்
காணப்படுவதே பிரதான காரணமாக அமைகின்றது. என்று
தெரிவித்துள்ள அவர் இதுகுறித்து மேலும்
தெரிவித்துள்ளதாவது: இலங்கை அரசியல், பொருளாதாரம்,
சமூகவியல், கலாச்சாரம் உட்பட ஏனைய விடயங்களிலும்
சமநிலையற்றுக் காணப்படுகின்றது. இங்கே அரசியல்
அதிகாரங்கள் ஒரு பிரிவான சிங்களவர்களிடமம்
குவிந்து காணப்படுகின்றன. மற்றொரு பிரிவான தமிழர்களிடம்
அதிகாரங்கள் குறைவாகவே காணப்படுகின்றது. அரசியல்
அதிகாரங்களில் சமநிலை என்பது மிக முக்கியமான
விடயம்.
இதனைச் சரிவரப் புரிந்துகொள்ளாது அனைத்துலக சமூகம்
புறக்கணித்துள்ளது. பல்லின மக்கள் வாழும் ஓர்
நாட்டில், அனைத்து இன மக்களுக்கும் சரியான
முறையில் உரிமைகள் பகிரப்பட வேண்டும். அது சரிவரக்
பகிரப்படாவிட்டால் அந்த நிலைமை ஜனநாயகத்தின்
மீதான முதல் எதிரியாக மாறிவிடும்.
பல்லின மக்கள் வாழும் சமூகத்தில் அதிகாரப் பகிர்வு
மிகவும் இன்றியமையாத ஒன்று. அதிகாரப் பகிர்வு
இல்லாவிடத்து அங்கு முரண்பாட்டுக்கு வித்திடுவது
இன்றியமையாதது. இனத்துவ அடையாளங்களில் சமநிலையில்
பேணுவதில் ஏற்படும் குறைபாடுகள் இலங்கை இனப்பிரச்சினைக்கு
மூலகாரணகளாக உள்ளன. தமிழ் மக்களின் கலாச்சாரத்
தனித்துவங்களைப் பேணுவதற்கு இலங்கை அரசாங்கங்கள்
எவ்வித முனைப்பும் காட்டவில்லை. கல்வி,
தொழில்துறை, பொருளாதார நிலைமை போன்றவற்றில் தமிழர்களுக்கு
உரிய சமத்துவ அந்தஸ்து வழங்கப்படுவதன் ஊடாக பிரச்சினைக்கான
தீர்வை இலகுவாக அணுக முடியும். |
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 ஜுலை, 2008 |
|
மூடப்பட்டுள்ள
ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக வன்னிப்பகுதியைச்
சேர்ந்த 18 அவசர நோயாளிகள் வவுனியாவுக்குள் வர
அனுமதி
ஐந்தாவது நாளாக தொடர்ந்து மூடப்பட்டுள்ள ஓமந்தை
சோதனைச்சாவடி ஊடாக வன்னி;ப்பிரதேச வைத்தியசாலைகளில்
இருந்து அவசர மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும்
நோயாளிகள் மாத்திரம் வவுனியாவுக்குள் வருவதற்கு
அனுமதிக்கப்படுவதாக இராணுவம் தெரிவித்துள்ளது,
மனிதாபிமான அடிப்படையிலான இந்த நடவடிக்கையின்
மூலம் 18 நோயாளிகள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில்
ஓமந்தை சோதனை;சசாவடி ஊடாக வவுனியா மற்றும் அனுராதபுரம்
வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக
ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், ஏற்கனவே
வவுனியா வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக
வந்து சிகிச்சை பெற்றதன் பின்னர் வன்னிப்பிரதேசத்தில்
உள்ள தமது வீடுகளுக்குத் திரும்புவதற்காகக்
காத்திருக்கும் நோயாளிகள் ஓமந்தை ஊடாகப் பிரயாணம்
செய்வதற்கு இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இதனிடையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து
வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்படும்
நோயாளிகளுடன், வன்னிப்பிரதேச அம்புலன்;ஸ் வண்டிகள்
ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து வவுனியாவுககுள்
வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இவ்வாறு வரும்
நோயாளிகளை ஓம்நதை சோதனைச்சாவடியில் வை;த்து வவுனியா
வைத்தியசாலையில் இருந்து செல்லும் வேறு அம்புலன்ஸ்
வண்டிகளே வவுனியா வைத்தியசாலைக்கு ஏற்றி வருகின்றன.
சில சமயங்களில் வவுனியா வைத்திசாலை அம்புலன்ஸ்
வண்டிகளுக்கும் வன்னிப்பிரதேச நோயாளிகளை ஓமந்தையில்
இருந்து வவுனியாவுக்கு ஏற்றி வருவதற்குப் படையினர்
அனுமதியளிப்பதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில்
இராணுவத்திற்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே
வன்னியிலிருந்து வரும் நோயாளிகளை வவுனியா
வைத்தியசாலைக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் இருந்து
ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன
என்பதும் குறிப்பிடத்தக்கது. |
|
பின்னைய பதிவுகள்
|
|
|
|