|
முழங்காவில் பிரதேசத்தைக் கைப்பற்றிய
படையினர் தற்போது கிளிநொச்சி
நகரிலிருந்து 15கிலோமீற்றருக்கு
அப்பால் படைநடவடிக்கை.
படையினர் தற்போது கிளிநொச்சி
நகரிலிருந்து 15கிலோமீற்றருக்கு
அப்பால் படைநடவடிக்கையினை
முன்னெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர்
பிரிகேடியர் உதய நாணயக்கார
தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினர் நேற்று கிளிநொச்சி
மாவட்டத்திலுள்ள புலிகளின் பாரிய
இரண்டாவது நிர்வாக மத்திய நிலையமாகக்
கருதப்பட்ட முழங்காவில் பிரதேசத்தைக்
கைப்பற்றியுள்ளனர். புலிகளின்
தலைவர்கள் அவசரக் கூட்டங்களை
நடத்துவற்கும் தாக்குதல்களுக்காக
உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கும்
இந்த நிலையத்தை புலிகள் பயன்படுத்தி
வந்தனர். கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள
நாச்சிக்குடா முகாமைக் கைப்பற்றுவதே
படையினரின் அடுத்த இலக்காகுமென்றும்
பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். |