***************************************************************************************************   

   Download Baamni  Tamil Font  

முகமாலை இழப்பை மறைக்க களமுனையிலிருந்து இறந்த உடல்களை அகற்றிய புலிகள்!

glj;jpy; fhz;gJ ,we;j Gypfspd; rlyq;fs;

அரசபடையினருக்கும் புலிகளுக்குமிடையே முகமாலையில் தீவிர யுத்தம் ஆரம்பித்தவேளையிலிருந்தே களமுனை நிலைவரம் பற்றி நேரத்துக்கு நேரம் பல்வேறு தகவல்களை சுயாதீன ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகைகள் தொலைக்காட்சிகள், ஒளிபரப்பு சேவைகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன.இவைகளின் தகவல்களுக்கேற்பவும் அரசதரப்பு தகவல்களுக்கேற்பவும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் உயிரிழந்த புலிகள் மற்றும் படையினரின் எண்ணிக்கை மற்றும் காயத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கைகளைப் பொறுத்தவரை தொடர்ந்து வேறுபாடுகள் இருந்தே வந்துள்ளன.

எவ்வாறாயின் அரசதரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்புத் தகவல்களுக்கேற்ப உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேலாகும்.அவ்வாறே 200 க்கும் மேற்பட்ட புலிகள் படுகாயங்களுக்குள்ளாகினர்.ஆயினும் பாதுகாப்புத்துறையின் புலனாய்வுப் பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கேற்ப களமுனையிலிருந்து இறந்த புலிகளின் உடல்கள் சக புலிகளால் உடனுக்குடன் அகற்றப்பட்டு முல்லைத்தீவு கனகராயன்குளம் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வாறு 55 இறந்த புலிகளின் உடல்கள் முல்லைத்தீவுக்கு சகபுலிகளால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்20 புலிகளின் உடல்கள் சனகராயன்குளத்துக்கும் 30 முதல் 35 வரையிலான புலிகளின் உடல்கள் கிளிநொச்சிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

ஆயினும் புலிகள் இயக்கம் சார்ந்த தமிழ் நெற்'இணையத்தளம் முகமாலை கிளாலி யுத்தத்ததின் போது உயிரிழந்த புலிகளின் எண்ணிக்கைபற்றித் தெரிவித்த தகவல்கள் நம்பமுடியாதவகையில் குறைவாகவே கூறப்பட்டன.இவ்வாறு தமிழ் நெற்'முதலில் தெரிவித்த தகவல்களில் முகமாலைப் போரில் 16புலிகள் மட்டுமே உயிரிழந்ததாகக் கூறியுள்ளது.ஆயினும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மற்றும் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் ஆகியவை படையினர் தரப்பில் உயிரிழந்தவர்கள் பற்றிய உண்மையான தகவல்களையே வெளியிட்டுள்ளன.இதற்கேற்ப முகமாலை கிளாலிப் போரில் மொத்தம் 43 படையினர் உயிரிழந்ததாகவும் 33 படையினர் காணாமல்போயுள்ளதாகவும் மற்றும் 169 படையினர் காயங்களுக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________________________________

முகமாலை செய்தியை பெரிதுபடுத்தி பிரசாரம் செய்த புலிகள் சார்பு ஊடகங்கள்!

முகமாலை கிளாலிப் பகுதிகளில் படையினருக்கும் புலிகளுக்குமிடையே தீவிரமான யுத்தம் நடந்து முடிந்திருக்கும் நிலையில் புலிகள் இயக்கம் தெரிவித்த அறிக்கையில் முகமாலையில் அவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் படையினர் தரப்புக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் இந்த யுத்தம் அரசுக்கும் படையினருக்கும் மிகப்பெரிய தோல்வியெனவும் கூறியுள்ளது.அவ்வாறே இவ்வாறான அறிக்கைகளை புலிகள் இயக்கம் அதன் சர்வதேச ஊடகங்கள் மூலமும் ஆதரவு ஊடகங்கள் மூலமும் உலகம் முழுவதும் அவர்களின் முகமாலை வெற்றி பற்றி பெரிதுபடுத்தி பிரசாரங்களை மேற்கொண்டது.

இந்நிலையில் அரச பாதுகாப்புத்துறை தரப்பிலும் அரச ஊடகங்கள் தரப்பிலும் முகமாலைப் போர் பற்றியும் படையினர் மற்றும் புலிகள் தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் களமுனை நிலைவரம் பற்றி வெளியிடப்பட்ட தகவல் அறிவிப்புகள்"நினைத்து நினைத்து விட்டு விட்டு"தெரிவித்த அறிக்கைகள் போல் பெரும்பாலும் அமைந்திருந்ததால் புலிகள் இயக்கம் முகமாலைப் போரில் புலிகள் தரப்பில் இழப்புகள் மிகக் குறைவு எனவும் படையினர் தரப்பில் பெரும் இழப்பு எனவும் முகமாலையில் புலிகள் இயக்கத்துக்கு மாபெரும் வெற்றி எனவும் கூறிய தகவல்களை உண்மையென நம்பிய மக்களும் அதிகமாகும்.

அதேவேளை முகமாலை கிளாலியில் தீவிர யுத்தம் நிகழ்ந்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவும் நாட்டிலிருந்து வெளியே சென்ற செயல் முகமாலை களமுனை பற்றி உண்மையான தகவல்களை வெளியிடுவதில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன் புலிகள் இயக்கம் தரப்பில் வெளியிடப்பட்ட பொய்யான தகவல்களையும் உண்மையென நம்பக்கூடிய ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது.

__________________________________________________________________________

முகமாலை கிளாலி பகுதிகளில் அரச படையினருக்கும் புலிகள் இயக்கத்தின

ருக்கும் இடையே மூண்ட பெரும் போர் புலிகளுக்கு பெரும் இழப்பு!

முகமாலை கிளாலி பகுதிகளில் அரச படையினருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே மூண்ட பெரும் போர் நடவடிக்கைகள் ஓய்ந்திருந்த வேளையில் கடந்த 26 ஆம் திகதி வெலிஓயா பிரதேசத்தில் புலிகள் மீது அரசபடையினர் பெரும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.வெலிஓயாப் பிரதேசத்தில் ஜானகபுர பகுதியிலுள்ள கிரிப்பண் வெவ மற்றும் அந்தணன் குளத்தை அண்டியுள்ள பிரதேசத்தில் வைத்து அரசபடையினர் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் மீது மேற் கொண்ட தீவிர தாக்குதலின் போது புலிகள் தரப்பில் 27 பேர் உயிரிழந்ததுடன் பெருந் தொகையினர் காயத்துக்கும் உள்ளாகினர்.

முகமாலைக்கு அடுத்து வடக்கில் வெலிஓயா பிரதேசத்தில் நிகழ்ந்த இந்த தீவிர மோதலில் படையினர் தரப்பில் 7 பேர் உயிரிழந்ததுடன்13 படையினர் காயப்பட்டுமுள்ளனர்.இவ்வாறு புலிகள் தரப்பில் 25 பேர் கொல்லப்பட்டிருப்பது முகமாலையில் புலிகளுக்கு ஏற்பட்ட பெரும் எண்ணிக்கையிலான இழப்பைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் ஏற்பட்ட கூடுதல் உயிரிழப்பாகும்.முகமாலை கிளாலியில் நிகழ்ந்த முன்னைய போரில் நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

__________________________________________________________________________