<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

 

   

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 13 ஜுலை, 2008

தேசத்தின் தியாக ஜோதி மகேஸ்வரி!

 

தியாக ஜோதி மகேஸ்வரி அவர்களின் வாழ்வையும் சேவையையும்
நினைவு கூரும் நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாத சூழலில்,

ஈ.பி.டி.பி யின் செயலாளர் நாயகமும் அமைச்சரும், மற்றும்
வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகத்தின் தலைவருமான
தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அனுப்பி வைத்திருக்கும்
நினைவுச்செய்தி இது!
 

 


புலம் பெயர்ந்து வாழும் எம்
தாயக தேசத்து உறவுகளுக்கு வணக்கம்!

மறுபடி, மறுபடி எம் சிறகுகள் வெட்டி வீழ்த்தப்பட்டாலும் எப்போதுமே எம்மிடம் இருக்கும் நம்பிக்கையின் சிறகடித்து பறப்பதற்கு பழங்கப்பட்டவர்கள் நாங்கள்!

தொடரும் எமது இலட்சியப்பயணத்தில் பல நூறு தோழர்களையும் பலநூறு சகோதர அமைப்பு தோழர்களையும் பறி கொடுத்திருக்கும் நாம் இன்று தியாக ஜோதி மகேஸ்வரி என்ற மகத்தான மனித உரிமை வாதியை இழந்து நிற்கிறோம்.


இந்த இழப்பு ஈ.பி.டி.பியினராகிய எமக்கு மட்டுமல்ல, மனித உரிமைகளை நேசிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு. மனித கௌரவத்தை விரும்பி நிற்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு. எமது மக்களின் உரிமைகளை நேசிக்கும் அனைத்து ஐனநாயக சத்திகளுக்கும் ஏற்பட்டிருக்கும் இழப்பு. மொத்தத்தில் தமிழ் பேசும் மக்களுக்கே ஏற்பட்டிருக்கும் இழப்பு!


எமது தாயக தேசம் மகேஸ்வரி என்ற தன் தவப்புதல்வியை இன்று இழந்து நிற்கிறது. அவரது நினைவுகளும், சேவைகளும், மக்களுக்காக உழைத்து வந்த அவரது அர்ப்பண உணர்வுகளும் எமது நீள வரலாற்றில் என்றும் மீள நினைத்துப்பார்க்க வேண்டியவை.

1977 ஆம் ஆண்டு மகேஸ்வரி அவர்கள் தமிழரசு கட்சியின் --- தமிழர் விடுதலைக்கூட்டணியின் மகளிர் பேரவையின் கொழும்பு கிளையோடு இணைந்து செயற்பட்டு கொண்டிருந்த போது அவரை நான் சந்தித்திருந்தேன்.

அப்போது 77 ஆம் ஆண்டின் இனக்கலவரம் நடந்த காலம். எனது பெரிய தந்தையாரும், வளர்ப்பு தந்ததையாரும், பிரபல தொழிற்சங்கவாதியுமான திரு. கே.சி நித்தியானந்தா அவர்கள் ரி, ஆர், ஆர், ஓ என்ற தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தை ஆரம்பித்து அந்த கலவரத்தின்போது அகதிகளாக்கப்பட்டு அவலங்களை சந்தித்து நின்ற எம் மக்களுக்கான மனிதாபிமானப்பணிகளில் ஈடுபட்டு வந்திருந்தார்.

அந்த அமைப்பில் நானும் ஒரு முன்னணி உறுப்பினராக இணைந்து பணியாற்றியிருந்தேன்.
தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக்கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இணைந்து செயலாற்றியிருந்த மகேஸ்வரி அவர்கள் கிழக்கு மாகாண மக்கள் சூறாவளியில் சிக்குண்டு தவித்த போது எம்முடன் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருந்தவர்.

அந்த நாட்களில் அவருக்குள் புதைந்து கிடந்த சமூக அக்கறையினையும், மனித நேயப்பண்புகளையும், எடுத்த இலக்கை எட்டிவிட வேண்டும் என்ற திடமான மன உறுதியையும் கண்டு அக்கினிக்குஞ்சொன்று கண்டோம் என்ற ஆனந்தக்களிப்பில்
அவருடன் இணைந்து நாம் எமது மக்களுக்காக உழைத்திருந்தோம்.

அன்றிலிருந்து இறுதி வரை காலமும் 30 ஆண்டு கால அரசியல் வரலாறு மகேஸ்வரி அவர்களுக்கு இருந்திருக்கின்றது. எமது வரலாற்று வாழ்விடமான வடக்கு கிழக்கு, தென்னிலங்கை சூழல், எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவின் புது டில்லி, மற்றும் தமிழ் நாடு என்று தொடங்கி சர்வதேசமெங்கும் அவரது உழைப்பும் வியர்வையும் சிந்தப்பட்டிருக்கின்றது.


மனித உரிமை வாதியாக...சட்டத்தரணியாக....பெண்ணுரிமை வாதியாக....
சமூக அக்கறையாளராக....சிறந்த சேவகியாக....மனித நேய போராளியாக....
மதியுரைஞராக....ஆன்மீக சிந்தனையாளராக....அற நெறிச்செயற்பாட்டாளராக...

தனது உண்மை முகத்தை காட்டி நின்றவர் தியாக ஜோதி மகேஸ்வரி அவர்கள்.

நாம் மக்களை தேடிச்செல்கின்ற வேளைகளிலும், மக்கள் எம்மை தேடி வருகின்ற வேளைகளிலும் அவர்களை தாயன்போடும், தயவன்போடும் அணுகி அவர்களது அவலங்களுக்கு தீர்வு காணும் எமது மக்கள் பணிக்கு பக்க பலமாக இருந்த ஒருவரையே நாம் இழந்து நிற்கிறோம்.


சர்வதேசமெங்கும் சென்று எமது அமைச்சு சார்ந்த மாநாடுகளில் கலந்து கொண்டு, அமைச்சு சார்ந்த விடயங்களை மட்டுமன்றி, எமது மக்களின் அரசியலுரிமை சுதந்திரம் குறித்தும் உலகத்தின் செவிகளில் உரத்துச்சொன்ன ஒருவரையே நாம் இழந்து நிற்கின்றோம்.


தான் கற்றறிந்த சட்டக்கல்வியை தனது சட்டைப்பையை நிரப்புவதற்காக அன்றி, சமூக அந்தஸ்தாக எண்ணி மேதாவித்தனம் கொள்வதற்காக அன்றி.. சமூக அக்கறையோடு தனது சட்டத்துறையை பயன்படுத்தியிருந்த சிறந்த ஒரு சட்ட வல்லுனரையே எமது தாயக தேசம் இழந்து நிற்கிறது.


காணமாமல் போனவர்களை கண்டு பிடிக்கவும், அதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தவும், சிறைகளில் வாடிய எம் உறவுகளை சிறை மீட்டு அவர்களது பெற்றோரகள், உறவினர்கள் முகங்களில் மகிழ்ச்சியை காண்பதற்கு உழைத்து வந்த சிறந்த ஒரு மனிதநேயவாதியையே எமது மக்கள் இழந்து நிற்கிறார்கள்.

வறுமையின் எல்லையில் வாழும் எம் மக்களும், கணவனை இழந்து தனித்து விடப்பட்ட பெண்களும், அங்கங்களை இழந்து வலுவிழந்து வாழ்வோரும் வாழும் சமூகத்தில் சரி நிகர் சமனான வாழ்வியல் உரிமைகளை அனுபவித்தே ஆகவேண்டும் என்று கருதி உழைத்து வந்த
ஒரு சமூக அக்கறையாளரையே எம் தேசம் இழந்து நிற்கிறது.

இறுதிக்காலத்தில், தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும், ஈ.பி.டி.பி யின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் திஸ்ஸ விதாரண அவர்களின் தலைமையில் ஐனாதிபதி அவர்களால் உருவாக்கப்பட்ட சர்வ கட்சி மாநாட்டில் நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் எழுந்து நின்ற உரிமைக்குரலையே எமது மக்கள் இழந்திருக்கிறார்கள்.

குடும்பம், உறவு, என்ற கோடுகளை கிழித்து தாம் வாழும் சமகால கொடுமைகளை எதிர்த்து,
தேசத்திற்காக தியாகங்களை ஏற்று, இழப்புகளை சந்தித்து வந்திருக்கும் இவரது குடும்ப உறவுகள் தீராத்துயரத்தை தந்திருக்கும் இன்னொரு இழப்பையும் சந்தித்து நிற்கின்றனர்.


எமது தேசத்திற்காகவும் எமது மக்களுக்காகவும் சுடர் விட்டு பிரகாசித்துக்கொண்டிருந்த மகேஸ்வரி என்ற மாபெரும் தியாகஜோதி எமது மண்ணில் நிரந்தர சமாதானத்திற்கான ஒளிக்கீற்றை உருவாக்கி விட்டுத்தான் அணைந்திருக்கின்றது.


எமது மக்களின் அரசியலுரிமை சுதந்திரந்திற்கான பாதையை திறந்து விட்டு, அந்த பாதையின் வழியே எமது இலக்கு நோக்கிய எமது பயணத்தை தொடக்கி வைத்துவிட்டு
சாதித்துக்காட்டி விட்ட சரித்திர வெற்றியோடுதான் அவர் ஆகுதி ஆகியிருக்கின்றார்.


ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அதிகாரப்போட்டிகளே அரசியலாகிவிட்ட நீண்ட கால வரலாற்றுச்சூழலுக்குள் எமது அரசியலுரிமை சுதந்திரத்திற்கான
முயற்சிகள் யாவும் முடக்கப்பட்டிருக்கும் சூழலில்.....


நடை முறை யதார்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல், தமிழ் தேசியம், தன்னாட்சி, சமஷ்டி
என்று தொடரும் வெற்றுக்கோசங்களுக்குள் சுயலாப அரசியல் தலைமைகள் மூழ்கிப்போயிருக்கும் ஒரு சூழலில்.....

உரிமை என்பது அடைவதற்காக அன்றி, அரசியல் நடத்துவதற்கே என்ற வெறும் சலசலப்புகளுக்கு மத்தியில்....


அன்று சுதந்திரத்திற்காக போராட எழுந்த எமது மக்கள் இன்று சோறும் இல்லை, சுதந்திரமும் இல்லை என்ற நிலையில் தங்களது உயிர் வாழும் சுதந்திரத்தையும் இழந்து நிற்கும் துயரங்களுக்கு மத்தியில்,....


இலக்கு நோக்கி நகர முடியாமல் சகதிக்குள் புதைந்திருந்த எமது மக்களுக்கான அரசியலுரிமை சுதந்திரம் நோக்கிய பயணத்தை முன்னோக்கி இழுத்து நகரத்தி...
எங்கிருந்து தொடங்க முடியுமோ... அங்கிருந்து தொடங்கி....எமது கரங்களுக்கு பலம் கொடுத்து.... உரம் கொடுத்து... அதற்காக வியர்வை சிந்திய மகேஸ்வரி என்ற தியாக ஜோதிஇறுதியாக அந்த புனித இலட்சியத்திற்காகவே குருதி சிந்தியிருக்கிறது.


மக்களை நேசித்து, மக்களின் மகிழ்ச்சிக்காகவும், மானுட நீதிக்காகவும், மனித கௌரவத்திற்காகவும், அமைதி, சமாதானம், இன ஐக்கியம், இன சமத்துவம் என்பவற்றிற்காகவும் தன் உயிரையே அர்ப்பணித்தவர் தியாக ஜோதி மகேஸ்வரி அவர்கள்.


இவரை கொன்றொழித்த புலித்தலைமையினர் மக்களின் எதிரிகளே!
மானுட சமூகத்தின் கருவறுப்பாளர்களே!


தியாகஜோதி மகேஸ்வரி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது அவர் எம்முடன் இணைந்து தொடக்கி வைத்த பயணத்தை எமது இலக்கு எட்டப்படும் வரை நடத்தி முடிப்பதே ஆகும். இதுவே அனைத்து ஐனநாயக, மனிதநேய, அரசியல் சக்திகளுக்கும், மற்றும் சமூக அக்கறையாளர்களுக்கும் முன்பாக விரிந்து கிடக்கும் பாரிய வரலாற்று கடமையாகும்.


 


என்றும் நாம் மக்களுக்காக!
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!!
மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!!!

 


 

தோழர் டக்ளஸ் தேவானந்தா
செயலாளர் நாயகம்,
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி
அமைச்சர், மற்றும் வடக்கு மக்களுக்கான
சிறப்பு நிர்வாகத்தின் தலைவர்!
                                                               13.07.2008
 

   

 

 

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright