சுயநலவாதிகள்கண்களுக்கு நாங்கள் துரோகிகள் பொதுநலவாதிகள்கண்களுக்கு நாங்கள் தியாகிகள்
சொன்னவர் யதார்த்தவாதி

      ***************************************************************************************************   

  

எங்கள் கவிதைக்களம்பொது நலநோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது வீரம்...வீவேகம்...காதல் அறிந்தவர்கள் நாங்கள்.!

   
  பால் மணம் மாறாத பிஞ்சுகள் பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்............... புதைப்பதேன்? புதைகுழிக்குள்



புத்திமான்கள் தழைத்தெழுந்த
புண்ணிய பூமியில்
புகழாரம்தேடி வந்த நீ
புதைப்பதேன்? மறைப்பதேன்? குஞ்சுகளை
புதைகுழிக்குள்
கண்ணியம் மிக்க பெண்ணினத்தை
கயவனே உன்சுயநலத்தால்
கசக்கி எறிகின்றாய் ஏனோ?
காய்ந்த சருகு என நினைத்து
கர்வத்துடன் பலிகொடுக்கின்றாய்

 

[மேலும்]

 

கவிதைக்கு ஓர் கவிதை வரைகிறேன்...  திருமதி.பத்மலோகினிக்கு அக்காவுக்கு

  நிலவரம் எனும் புலிவரம் பெற்ற பத்திரிகையில் நடந்த 'காலத்தை
வென்ற காவிய வென்ற காவிய நாயகர்கள்"என்னும் கவிதை போட்டியில் கலந்து கொண்டு காவியம் படைத்து முதலிடத்தை பெற்ருக்;கொண்ட திருமதி.பத்மலோகினிக்கு அக்காவுக்கு இக்கவிதையை சமர்பிக்கிறேன்.இந்த கவிதையை அவர்;

இரத்தத்தை மையாக்கி எழுதியதால் அவரின் கவிதையை சிவப்பு எழுத்தில் குறிக்கின்றேன்.

மாகாவீரர் துயில்கின்ற மஞ்சம் எம் நெஞ்சங்கள் என
என்கின்றாள் பத்மலோகினி……

மனமுருகி கண்ணீருடன் கவிதை வடிகின்றாள்
மாடமாளிகையில் எங்கோ ஓர் வெளிநாட்டில்
மஞ்சத்தில் மல்லாக்க படுத்துண்டுääகிடந்து
மணிக்கணக்கில் புரண்டு மனதையுருட்டி-தன்
மைந்தர்களுக்கும் தன் மணாளனுக்கும்
மரணத்துக்காகன பாதுகாப்பை உறுதிப்டுத்தி கொண்டு
வடிகின்றாள் கவிதையொன்று வஞ்சியிவள்  கேளீர்!; கேளீர்!

மற்றவன் பிள்ளைகளுக்கு மரணத்தை வரவழைத்து
மயானத்தில் மஞ்சம் தனையமைத்து துயில் கொள்ளவைத்து
மணல் மேடையமைத்து மஞ்சல் விளக்கேற்றிவிட்டு
மற்றவர்களின் மனதை கவர்வதற்காய் வெறும்ää
காட்சிக்காய் கட்டிவைத்த கல்லறைகள்
கல்நெஞ்சத்தார் மனதில் மஞ்சங்களாய் மிளிர்கின்றனவாம்

மடைமையிவள் என்ன நினைத்த எழுதுகிறாள்
மரணித்த உங்கள் உயிர்களை இவள் மடியில் சுமந்தவளா!
இல்லைää இவள் மார்பில் சுரந்த பாலையூட்டி
மரணமாகிபோன உங்களை வழமாக்கி வளர்தவளா!

உடலுயிர் கருகித் தேச உணர்வது மேவி அஞ்சலிக்கின்றேன் ஆருயிர்களே அமைதியாய் துயில்வீர்
என்கின்றாள் பத்மலோகினி……

ஆகா!ஆகா! உடலுருகி தேசவுணர்வு - இவள்
உடம்பு முழவதும் மேவி பரவி கலைகொண்டுடிவள்
களமிறங்க புறப்படபோகிறாளோ என நினைத்தேன்!
ஆனால்ääயாரே பெத்து வளர்திட்டவள் துடிக்க
அன்னையாகி ஆராரோ ஆராரோ எனச்சொல்லி
அழிந்திட்ட இவ்வுயிர்களுக்காக அஞ்சலிசெலுத்தி
அமைதியாய் தூங்கசொல்லுகிறாள்!

யாரிவள்ää யாரிவள் என பிணமாகி - பின்
கல்லறையில் புதைந்து கிடக்கன்ற
பிள்ளைதனின் உரித்துடையவள் கேக்கின்றாள்!
பள்ளி சென்ற தன் பச்சிளம் பிள்ளையை
பாதிவழியில் காணவில்லையென்று பதறியழுதாளாம்
பின் பாவிகள் பறிதெடுத்து பலிகொடுத்ததையறிந்து
படுபாவிகள்ää படுபாவிகள் என சொல்லியழுகிறாள்
படுத்த பாயில் பட்டினியாய் கிடந்து துவள்கின்றாள்
பாரதி கண்ணம்மா பத்மலோகினி பதிலுரைபாளோ?

உம் விதைகுழி எங்ககனும் வாசனைப் பூக்கள்
உம் நடுகல் வரையெங்கும் நல்லொழி தீபங்கள்
தென்றல் வந்துமக்குத் தூழிகட்டும்-தேசத்தாய் உங்கள்
தலைகோத அவள்மடியுறங்கும்ääஆனந்தமாயறங்கும்

உலகத்தின் உயர்ந்த மனிதப்பிறவிகளே! - உம்மை
உலகத்தில் வாழவிடாமல் உயிர்தனை நீக்கி
உடதனை புதைகுழியில் தள்ளி - வாசைன பூச்செடிகள்தனை
வாங்கி வந்து நீர் வஞ்கர்களால் வாழ்வுதனை இழந்ததை
காட்டிநிற்கும் நடுகல் வரையெங்கும் நாட்டி வைத்து
வண்னொழி தீபங்கள்தனை உன்னுயிர்மேல் ஏற்றிவைத்து
தென்றல் வந்து தாலாட்டுமாம் தேசத்தாய் வந்துமை தலைகோத
அவள் மடியுறங்குமாம்ää ஆனந்தமாய் நீயுறங்கும் என


உங்கள் முகமறியா தெருநாய்யொன்ற ஊளையிடுலதை பார்தீரோ!
உiமைபிரிந்த உறவுகள்ää உயிரிலும் மேலான தலைவன்
பெற்றுநின்ற துயரெழுத என்புலiமைக்குச் சக்தியிவல்லை
என்கின்றாள் பத்மலோகினி……

உன்னதமான உங்கள் உயிர்தனை யறுத்தவன்
உகவைகொண்டு தன் அகவை கொண்டாடி மகிழ்கிறான்
உண்மை யிதுவென்றிருக்க! உடல் பெருத்த உயர்சாத்தான்
உங்களை நினைத்துருகி உயிர் விடுவதுபோலும்
உயிர்சாத்தானின் உடன்பிறவா சகோதிரி பத்மலோகினி
உள்ளம் உருகி கண்ணீர் வடித்து கவிதைவடிக்கின்றாள்

மனிதநாடி பிடித்து மன உணர்வுகளை அளக்க
கணிக்கக் கண்டுபிடிக்க எந்தமானுடனும் பிறக்கவில்லை
இரத்மோடு என் நாளம் முறித்து எழுதலாமோ உணர்வு தூற
இல்லைää என் உயிரை மையாக்கி உயிர் மெய் எழுத்துக்களில்
சொல்லி விடலாமோ இவர்சோகங்களை
என்றழுகிறாள் பத்மலோகினி..

உள்ளும் உருகி உயிரும் உருகி உணர்சிபொங்கி
உயிர் நாடியை முறித்து பேனாவாக்கி உண்மையை பொய்யாக்கி
உயிர் நாளத்தில் கொட்டும் பொய் இரத்ததை மையாக்கி
கவிதைவடித்து காவிய நாயகியாகிவிட்டாள் இவள் பத்மலோகினி

உலகத்தில் வாழப்பிறந்த நீங்கள் உயிர் நீர்த்ததேனோ!
உயிர் தரித்ததன் உங்கள் காலத்தை வெல்லாமல்
உயிர் குடிக்கும் உயிர் சாத்தானின் (பிரபாகரன்) உணவுக்கு
உங்கள் உயிர்தனை வீணாய் உரையாக்கினதேனோ!

உலகத்தில் நான் கடவுளானால் உங்களை கொன்றவனையும்
உயிருடன் கொழுத்தி உள்ளம் உவகைகொள்வேன்
உத்தமான உயிர்களே நீங்கள் காவிய நாயகர்; அல்ல
கள்ளம் உள்ளம் கொண்ட கடைந்தெடுதிட்ட கயவர்களால்
கடத்திகொண்டுபோய் உயிர் எடுக்கப்பட்டவர்கள் என்பதை யாமமறிவோம்

நன்றி. கி.பாஸ்கரன்
சுவிஸ்.

 

 

ஆகா.... ஆகா.... உன்.... வீரமே...வீரம்....

உற்றம் சுற்றம் பார்க்கையிலே
ஊரார் விந்தையுடன் நோக்கையிலே
ஊர்ந்து போகும் ஆமைதனை
உல்லாசமாய் சுடும் தேசிக்காய் தலைவனே..?

உன் திறன் கொண்ட வீரம் கண்டு
உருகுது ஐயா நெஞ்சமெல்லாம்
உவகை பொங்குதையா....
உலகத்தில் நீயல்லவோ?? வீரன்

உண்மையான வீரன் என நினைத்து
உள்ளன்புடன் வாரிஅணைத்து
உவர்ப்பு கொடுத்த மக்களுக்கு
உன்னிடமிருந்து என்ன?? கொடுத்தாய்

உப்பு அதிகம் கலந்து கண்ணிரீh வர
உள்ளங்கையால் அள்ளி கொடுகின்றாய்
உலகம் வியக்கும் தீங்கு தனை
ஊனம் கொண்டு மக்களெல்லாம்
உறைகின்றனர் பணிபோன்று

உனக்கென்ன உன் புலிவாலுக்கென்ன
ஊரும் ஆமைகள் அதிகம்
ஊர்ரெடுக்கும் நீருக்குள்ளும்
உலர்ந்த நிலத்திலும்
உறுண்டு உருண்டு சுட்டு தின்பாய்
ஊரோடு பகிர்ந்து உண்ண மாட்டாய்
உல்லாசமான வாழ்கை
உனக்கு மட்டும் தான் சொந்தம்


அன்புடன் என்னென்றும்
வன்னி வவிதரன்

 

 

 

புலிகளின் தேசிய தலைவியே மக்களின் தலைவலியே.....

  சேலை கட்டியிருந்தும் உன் இடது கரத்தால் மானத்தை முடுகின்றாய் உனக்காக எம் பெண்கள் மானத்தை இழக்கின்றனர் உண்மைகள் உண்மையாக கண்முன்னே..... நம்முன்னே..........


தலைவன் என உனை நினைத்து
தற்கொலை அங்கிகட்டி
தந்தனர் மங்கைகள் விலை மிக்க உயிர்களை
தத்தழிக்கும் மக்களுக்கு
தந்துவிட்டாய்
தரம் கெட்ட வாழ்க்கை தனை

வாழதுடிக்கும் பெண்களை எல்லாம்
வாரிவழங்குகின்றாய் போர் களத்திற்கு
வாகைசு10டி வலம் வரும் பிஞ்சுகள் எல்லாம்
வழிதவறி உன் கட்டளைக்கு பயந்து
வழங்கினர் தன் உயிர்களை

வண்ண வண்ண கனவுகள்
வட்டமிடும் வண்ணாத்திபூச்சிக்குள்
வாழ்க்கை எனும் வட்டத்திற்குள்
வலக்காலை வைக்குமுன்னே
வலை விரித்து கொண்டு போனார் ஓர்
வஞ்சக வேட்டைக்காரன்

சுகபோகமாய் நீவாழ்ந்திட
சுயலம் கொண்ட உன்உயிரை
சுயநலமாய் காத்திடவே
சுதந்திமாய் உலாவிடும் கன்னிகளை
சு10த்திரம் (தந்திரம்) வைத்து
சுட்டெரிக்கின்றாய்

சுயநலம் உனை ஆட்சி செய்ய
சுமைகளை மாற்றானிடம் ஏற்றிவிட்டு
சுதந்திரமாய் உன்பிள்ளைகளை மட்டும்
சுதந்திமாக Àக்கம் கொள்ள
சீமைக்கு அனுப்பிவிட்டாய்

தேசிய தலைவன் என்றும்
தேசிய தலைவிஎன்றும்
தெருவில் பொறுக்கி எடுத்த
எருபோட்ட சாணங்களை உன்
தேசிய பெயர் அருகே வைத்துவிட்டாய்

பிணி கொண்டு வாடும் மக்களுக்கு
பணிகள் என்ன நீசெய்தாய்
துணிகிழிந்து வாழ்வழிந்த அப்பாவி செல்வங்களுக்கு
துணிவு என்ன நீ கொடுத்தாய்???
தலைவி என்ற பெயர் எடுத்து
தந்து விட்டாய் மக்களுக்கு
தலைவலிகள் ஏராளம்
தலைவணங்குகிறோம்
தலை அற்ற சேவைகளுக்கு


என்றென்றும் வேதனையுடன்
வன்னி வவிதரன்

 

 

  வேலையில்லாப்பிள்ளை பெற்றெடுத்த மலேசியாப் பிள்ளையே..? முடியாது உன்னால் விடியல் எனும் கிரீடம் பெறுவதற்கு......

விடுதலை என்ற பெயரில்
வித்துக்களை அழிப்பவனே
விழிபிதுங்கிய பிணங்களை
வியப்பு இல்லாமல் ரசிப்பவனே
விம்மிடும் மக்கள் முகத்தில்
விடியல் என்று வருமோ....

விவசாய மண்ணில்
விழைந்த முத்துக்களை எல்லாம்
விரையமாய் அழிக்கின்றாய்
வீம்பு கொண்டவனே
விலக்கிடுவாய் உன் கழிப்பறை எண்ணத்தை


விடுகதை பலபோட
விடைகணமுடியாத உனக்கு
விராப்பு உனக்கெதற்கு
விணாய் போனவனே
விதை ஒன்றை உருவாக்கிப் பார்
வியர்த்திடும் உன் உருண்டை உருவம்

வீதியோரம் விதைத்த பிணத்தை பார்த்து
விதம் விதமாய் சமையல் செய்து
விக்கல் இல்லாமல் உண்பவனே உனை
வீமன் என நினைத்த எமை
வியக்கவல்லவோ வைத்து விட்டாய் கும்பகர்ணா????

வீரர்கள் விழைந்த éமிதனில்
விசனம் கொண்டு திரயும்
வீம்பனே உனக்கென ..... என்
விரல்கள் கூட உனை பணியாது
வீச்சருவாள் உன்கழுத்துக்கு
விடை காணும் பொறுத்திரு.......


அன்புடன்
வன்னிவவிதரன்

 

 
 

மக்களை நேசிப்பவன் நீயென்றால்.

 அகிம்சை தனை போதிப்பவன் நீயென்றால்
அரண்மணை கட்டில் தேவை இல்லை உனக்கு
அடர்ந்த காட்டுக்குள்ளே நீ ஏன்
அடைக்கலம் தேடிவந்தாய்
அப்பாவி மக்களை நீ
அடிமை படுத்தினாய்
அழிந்தமண்ணை விட்டு
அன்புவிழையும் மண்ணை ஆயுதம் கொண்டு
அதிகாரமாய் ஆழுபவன் நிதான்
அகங்காரம் கொள்ளாதே நீ
அழிந்து விடுவாய்
அண்டவனாக உனைநினைத்து
ஆராதனை செய்ய வேண்டும் என்று
ஆணவம் கொண்டு மக்கள் முன் கட்டளை இட்டாய்

அடைக்கலம் தந்து உனக்கு அமுது படைத்தவர்கள் நாங்கள்
அன்பு கொண்டு எம்மவரை பார்க்கவில்லை நீ
ஆதிக்க வெறி உன்னை ஆழுகிறது
அரக்ககுணம் உனை ஆட்டிபடைக்கிறது
அலறும் மக்களை நீ திணறும் படி செய்கிறாய்
ஆமை இறைச்சி நீ புசிப்பவன் நீ
ஆமையிடம் இருக்கும் அசைவு உன்னிடம் இல்லை


ஆழுமைக்காக நீ கொலை செய்யவில்லை உன்
அன்புக்குடும்பத்தை காப்பதற்காக கொலை செய்பவன் நீ
ஆயிரம்வீரன் பிறந்தமண்ணை அச்சத்தினால் நீ

அவதரித்த மண்ணை விட்டு வந்தவன்
ஆவேசவிடுதலை என்ற பெயரில்
அழித்த உயிர்கள் எண்ணில் அடங்காதவை

அறியவில்லை சுயமாய் பாமரனும் கமக்காரனும்???
அசுத்தக்காற்றை அறியாதவர்கள் நாங்கள்
அருமையான பதார்த்தம் சமைப்பரும் நாங்கள் மக்களின்
அறுசுவை அறிந்து சுத்தமான இலையில்
அமுதுபடைப்போம் நாங்கள்.... வீணாக நீ
அளிந்து விடாதே ..........

அறிந்தோம் பல விடையங்களை
ஆதாயம் தேடி நீ அளிக்கின்றாய்
அப்பாவிகளின் உயிர்களை
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றார்
அறுத்து விடுவான் நாவுதனை


என்றேன்றும் அன்புடன்
வன்னி வவிதரன்

 

 

விடுதலை என்ற பெயரில் நீ எடுத்த...

தலைகள் தான் எத்தனை விடிவெள்ளி
வரும்மென்று எத்தனை காலம் தான்
உடலில் வெடிவைத்து தற்கொலை படைக்கு
அனுப்புவாய் கடிவாளம் இல்லாத குதிரை நீ
தமிழ் கொடி எப்படி நாட்டுவாய்?
ஆ(வேசத்) தலைவா கொலைகளை உடனே நிறுத்து.?
அவசர உலகம்
ஆவேசத்தில்அல்லவா
இடர்பட்டு நிற்கிறது
அகிம்சைத் தலைவர்களை எல்லாம்
அகிம்சையாக சிந்திக்க தெரியாமல்
சகோதர படுகொலை நடாத்தி
அவசரமாக மேல்லோகம் தனில்
அனுப்பியது ஏனோ? ஏனோ?
ஐக்கியம் என்று சொன்னவரை
அடக்கி ஒடுக்கி
அவசரமாக ஓர் கூண்டுக்குள்ளே
அடைத்து வைத்து
விண்ணுலகம் தேடி
அனுப்பியது ஏனோ? ஏனோ?
அன்பு சொரிந்த தோழனையும்
அண்ணா என்று சொன்ன தோழியையும்
மாற்று கருத்து வைத்த
மண்ணின் மைந்தனையும்
மயக்கமருந்து கொடுத்து
அவசரமாக அனுப்பியது ஏனோ? ஏனோ?-
தனித்தன்மை என்று கூறிக்கொண்டு
தரணியில் தலை வாழை
தழைத்து வரமுன்
தடுத்து நிறுத்தி
அவசரமாக ஓர் உலகிற்கு
அனுப்பியது ஏனோ? ஏனோ?
அவசரமாக சிந்தித்தோம்
அறிந்து கொண்டோம் ஓர் உண்மையை
உன் புகழ்பரவிட உலகை விட்டு
பல்லாயிரம் இளைஞர்களை
புதைகுழிக்குள்ளே அனுப்பிவிட்டாய்
பலன் என்ன??? பெற்றாய்
பலன் என்ன??? பெற்றாய் இந்த
அவசர உலகம் தனில்
சிந்திப்பாயா??? சிந்திப்பாயா.???

 
மக்கள் மனம் அறியாமல்மரங்களுக்குள்ளே மறைந்து வாழும்
மதிகுண்றிய அராஐhக மன்னா?? உனக்கு
மரணம் உன்பக்கத்தில் வரும்போது
மக்கள் மனவேதனை புரியும் உனக்கு அப்போது நீ
மனவேதனை அடைவாய் மறந்து விடாதே.....
அராஐhகமன்னா?? உன் உறைக்குள்ளே
Àங்கும் வாள் உன் மக்களை அளிக்கவா??? இல்லை
எதிரி என்று நீ சொல்லும் மாற்றானை அளிக்கவா?? சொல்லு
மன்னா?? என்அராஐhகமன்னா???
உன் ஆட்சியில் கொடுங்கோல் தன்மை
எங்கள் ஆட்சியில் செங்கோல் தன்மை
பொறுத்திருந்து பார் பொங்கிவரும் மக்கள் ஆட்சி...
புரிந்துகொள் புரிந்துகொள் புரிந்து கொள்
மக்களை மட்டும் புரிந்து கொள்

______________________________________________

ஐநனாயகம் என்றால்
....................................
தெளிவான கருத்துக்கள்
நெஞ்சில் இருந்து
உதிக்கும் போது
விரிவாக பரிமாறிக்கொள்வது தான்

தேசியம் என்றால்
-------------------------------
ஓர் இனமக்களின்
உரிமைதனை
இதயசுத்தியோடு
மக்கள் மத்தியில்நின்று
வென்றெடுத்து ஆட்சி புரிவது....தான்


பாசிசம் என்றால்
----------------------------
புத்திஐPவீகளின் புனிதமான
கருத்துக்களை
புரிந்து கொள்ளாமல்
éமிக்குள்ளே
புதைகுழி தோண்டி
புதைத்து விடுவது....தான்

அராஐகம் என்றால்
------------------------------
நானே தலைவன் என்று
நயவஞ்சக நோக்குடன்
நண்பர்களின் நடுமுதுகில்
குத்துவது....தான்

அகிம்சை என்றல்
-----------------------------
உள்ளத்தில் இருந்து எழும்
புரட்சிதனை
உதிரக்கறை இல்லாமல்
வென்றெடுப்பது...தான்

சோலீசம் என்றால்
------------------------------
ஓரு மனிதன்
தான் பெற்ற நிறைவுதனை
தரணியில் தடையின்றி கிடைக்க
தளர்ச்சி இன்றி போராடுவது

 

______________________________________________________________________