|
|
|
|
|
நேற்றுவரை நீ ஒரு ஏமாளி
சுய சிந்தனை அற்ற முட்டாள்
மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த
ஓரு ஞானி! |
| |
 |
|
தத்தித்திரிந்த
பருவம் போதுமினி
உனக்காக படைக்கப்பட்ட பிரபஞ்சத்தில்
கால் தடம் பதித்து மெதுவாய் நடைபழகு
நேற்றுவரை நீ ஒரு ஏமாளி
சுய சிந்தனை அற்ற முட்டாள்
மனித வாழ்க்கையை அலட்சியம் செய்த
ஓரு ஞானி
எதுவாக நீ இருந்திருந்தாலும்
பறவாயில்லை
வேகமாய் விடிந்து கொண்டிருக்கும் இந்த
விஞ்ஞான உலகத்திற்கு ஒப்பாய் நீயும்
ஒரு வெளிச்சத்தைக் கொண்டுவா!
பிறந்தோம்
வாழ்க்கையை நன்றாய் ருசித்து
வாலிபப் பருவத்தை ஓட்டி முடித்தோம்
துணையொன்று தேடி இனிதாய்
இல்லறம் நடத்தினோம்
குடும்பத்தை விஸ்தரித்தோம்
குறையேதும் இல்லாத நிறைவான வாழ்வு
என மிகவும் பெருமையாய்ப் பேசி
மரணித்தவர்களைப் பார்..
கடைசியில் என்ன?
மண்ணோடு மண்ணாய்
உளுத்துப் போய்விட்டார்கள்
பறவாயில்லை
மாண்டபின்னாவது இவர்கள் மண்ணேடு நல்ல
உரமாய்ப் போனார்கள் - ஆனால் நீ
மாண்ட பின்பும் பிரயோஐனமற்றுப் போவாய்
நவீன முறையில் மின்சாரம்
பாய்ச்சியல்லோ
உன் வெற்றுடலை அழித்துவிடுவார்கள்
ஒரு பிடி சாம்பலாய்
பின்பு நீ..
மண்ணுக்கும் உதவாய்
அதனால் தான் சொல்கிறேன்
குறுகிய வட்டத்தில் தத்தி நடந்தது
போதும்
விடிந்துகொண்டிருக்கும்
இவ்வுலகிற்குள்
உன் பங்கு தொடர மெல்ல நடந்து வா
உன்னால் முடிந்ததொன்றை அழகாய்
இந்த பூமிக்காய் சித்தரித்துவிடு
அது போதும். |
|
எதிக்கா |
|
 |
ஓர் அழகிய வண்ணத்துப்
பூச்சியை
நான் வரைகிறேன்-
தாளிலிருந்து அது பறந்துபோகும்வரை.
அதுவரை என்னை நான்
ஓர் ஓவியனாக பிரகடனப்படுத்துவதாயில்லை.
முகம்தொலைந்து
சதையிறுகிப்போய்விட்ட
மனிதக்கூடொன்றின் கையில்
துப்பாக்கி மட்டும்
பளபளக்கிறது.
எனது தேசத்து மலையுச்சியில்
தேங்கிப்போனதெல்லாம் இந்த மனிதனும்
எரிந்துபோன முகில்களும் மட்டுமே.
வெடிகுண்டில் பூவிரித்து
சமாதானச் சிரிப்பொழுக
முகத்தை சிரமப்படுத்தும்
மனிதர்களே!
வரையுங்கள் உங்கள் சமாதானத்தை,
இந்த மனிதன் எழுந்து நடக்கட்டும்-
விரல்நழுவி விழும் துப்பாக்கியுடன்.
குழந்தை தன் முகத்தில் நிலாவை
வரையட்டும்.
நாயொன்று தன் வித்தியாசமான குரைப்பை
நிறுத்தட்டும்.
எமது வீதிகளைவிட்டு அகன்றுகொள்ள
வேண்டியது
அந்நியர்கள் மட்டுமல்ல,
எனது இனத்து
சமாதானப் பொதியின்
பூச்சாண்டிக்காரர்களும்தான்.
ஓர் அழகிய காலை
எனது விழிவழியே துள்ளியோட
முகம்கொள்ளா மகிழ்வுடன்
எனது பொழுதை நான் தொடங்க வேண்டும்.
பாடசாலைகள்
வேலைவெட்டிகள்
சனசந்தடிகள்
தாங்கியபடி...
மெல்லியதாய் மௌனப்படட்டும் எம்
மாலைப்பொழுது.
என் உடலின் பிடிநழுவி
இருளில் மிதந்துசென்று,
சேதிகண்டு ஓடிவந்து
மீண்டும் வந்தமரும் விழிகளோடு
எப்போ நான் நடப்பேன்?
பொதிசொல்லும் குடுகுடுப்பைக்காரர்களே
போய்வாருங்கள்!
எனது மலையுச்சி மனிதன்
தன் உயிர்ப்புக்காய்க்
காத்திருக்கிறான். |
|
ரவி (சுவிஸ்) |
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |
|
|
|