Raeythjpfs;fz;fSf;F ehq;fs; JNuhfpfs;

   nghJeythjpfs;fz;fSf;F ehq;fs; jpahfpfs;  

 nrhd;dtu; ajhu;j;jthjp

   ***************************************************************************************************   

24.06. 2007   Download Baamni  Tamil Font   Sithiram Font

__________________________________________________________________________

 

khNkij ftpQu; fz;zjhrdpd; 80 gpwe;j ehs; epidTfs;

கவிஞர் கண்ணதாசனின் 80 ஆவது பிறந்ததினம் நாளையாகும். 23 வருடங்களாக இவரது பிறந்த தினம், இறந்ததினத்தை அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் நினைவுகூர்ந்து வருகிறது. ஆனால், இவ்வருடம் நாட்டு நிலைமை காரணமாக வழமையாக இந்நிகழ்வை நடாத்தும் கொழும்பு தமிழ்ச் சங்கம் இம்முறை நடத்தவில்லை. கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அன்னாரது உருவச் சிலை 1995 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்டு அங்கு பாதுகாத்து வரப்படுவதற்கு அகில இலங்கை கண்ணதாசன் மன்றம் பணிவுடன் நன்றி கூறுகிறது. தமிழகத்தில் கவியரசர் வாழ்ந்த தியாகராஜ நகரிலே 09.12.1994 ஆம் ஆண்டு தமிழக அரசு சிலை அமைத்து திறப்பு விழாச் செய்தது. பழைமை வாய்ந்த கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இன்றும் கவிஞரின் உருவச் சிலையைப் பாதுகாத்து வருவது பெருமைக்கும் போற்றுதற்கும் உரியதாகும். இவர்கள் தம் பின்னால் தோன்றிய ஆயிரக்கணக்கான கவிஞர்கள் நட்சத்திரக் கூட்டத்தில் பிரகாசித்து பூரண சந்திரனாக மிளிர்ந்து பலராலும் போற்றப் படுபவர் கவியரசன்

மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான் ஈற்றில் இறந்து மடிகிறான். அதனைக் கவியரசன் அழகு தமிழில் இவ்வாறு பாடினார்;

 பிறக்கும் போதும் மனிதன் அழுகின்றான், இறக்கும் போதும் அழுகின்றான்"

ஆடை இன்றி பிறந்தொமே - ஆசை இன்றி பிறந்தொமா?
ஆடி முடிக்கையிலே அள்ளி சென்ரோர் யாருமுண்டொ

 பிறப்பு - 24.6.1927, சிறுகூடல்பட்டி
பெற்றோர் - சாத்தப்பன், விசாலாட்சி
மரபு - தன வணிகர்
இயற்பெயர் - முத்தையா
உடன்பிறந்தோர் - எண்மர்
கல்வி - ஆரம்பக் கல்வி சிறுகூடல்பட்டியில்
உயர்நிலைப் பள்ளி - அமராவதி புதூர், எட்டாவது வரை
1943 - முதற் பணி - திருவொற்றியூர், அஜாக்ஸ கம்பெனி
1944 - இலக்கியப் பணி - திருமகள் ஆசிரியர்
1944 - முதற் கவிதை - முதற் கவிதை
1945/46 திரை ஒலி, மேதாவி ஆசிரியர்
1949 சண்டமாருதம் ஆசிரியர்
1949 திரைப்படத் துறை பயிற்சி
1949 -முதற் பாடல் - படம் கன்னியின் காதலி,

பாடல் கலங்காதேதிருமனமே
1949 - அரசியல் - தி.மு.கழகம், ஆரம்ப கால உறுப்பினர்
1950 - திருமணங்கள் - பொன்னழகி, பார்வதி
1952-53 - முதற்காவியம் - மாங்கனி, டால்மியாபுரம் பெயர் மாற்றப் போராட்டத்தில் ஈடுபட்டுத் தண்டனைக் குள்ளாகிச் சிறையில் இருந்தபோது எழுதப்பட்டது
1952-53 - கதை வசனம் - இல்லற ஜோதி, சிறையில் இருந்தபோது
1954, - முதற் பத்திரிகை - தென்றல் கிழமை இதழ், தொடர்ந்து தென்றல் திரை சண்டமாருதம், மாதம் இருமுறை,
1956 முல்லை இலக்கிய மாத இதழ்
1957 - தேர்தல் - இரண்டாவது பொதுத் தேர்தலில் திருக்கோஷடியூர் தொகுதியில் தி.மு.கழகத்தின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி
1957 - திரைப்படத் தயாரிப்பு - - மாலையிட்ட மங்கை
1958-59 - சிவகங்கைச்சீமை, கவலை இல்லாத மனிதன்
1960 - 61 - அரசியல் மாற்றம் - - தி.மு.கழகத்திலிருந்து விலகல், தென்றல் நாளிதழ்
துவக்கம்
புதிய கட்சி -தமிழ்த் தேசியக் கட்சி - சம்பத் தலைமையில் துவக்கம்,
தென்றல் திரை நாளிதழ் துவக்கம்,
1962-63இல் காங்கிரஸில் இணைப்பு
மீண்டும் திரைப்படம் - வானம்பாடி, இரத்தத் திலகம், கறுப்புப் பணம் 1964 - 66 - அகில

இந்திய காங்கிரஸ செயற்குழு உறுப்பினர்
1968-1969 - கண்ணதாசன் மாத இதழ், கடிதம் நாளிதழ்
1970 - ரஷயப் பயணம், சிறந்த பாடலாசிரியர் விருது -மத்திய, மாநில அரசுகள்
1971, 1975 - மலேஷியா பயணம்
1978 - அரசவைக் கவிஞர்
1979 - சாகித்ய அகாடமி பரிசு - சேரமான் காதலி
1979 - அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு (சிறந்த கவிஞர்)
1981 - அமெரிக்கா பயணம் (டெட்ராய்ட் நகர் தமிழ் சங்க விழா
இறுதி நாட்கள் - உடல்நிலை காரணமாக 24.7.81 சிகாகோ நகர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு 17.10.81 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு அமரநிலை எய்தினார். 20.10.81 அமெரிக்காவிலிருந்து பொன்னுடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் 22.10.81இல் எரியூட்டப்பட்டது.
புனைபெயர்கள் - காரை முத்துப் புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன்
, ஆரோக்கியசாமி
குடும்பம் - இருமனைவியரும் ஒன்பது ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் உள்ளனர்.

__________________________________________________________________________