<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.10.மார்ச்,2010

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

அதி அற்புதமான தந்திரங்களால் நேர்ந்திருக்கிற வேதனைகளையும் அழிவையும் பற்றி.........- சதா. ஜீ.

யானை இருந்தாலும் ஆயிரம் செத்தாலும் ஆயிரம்.ஆனால் தற்போதைய புலிகள் இருந்தாலும் ஒன்றுதான் செத்தாலும் ஒன்றுதான்!

நல்லவன் வாழ்வான் என்பதல்ல வாழ்பனே நல்லவன்!வாய்மை வெல்லும் அல்ல வெல்லுவதே வாய்மை!மென்மேலும் தன்னலத்தில் தனிநிறைவில் கூடிச்செல்வதும் மிகுந்து செல்வதும் அலட்டிக்கொள்ளாமலே அனைத்தையும் தனக்குச் சாதகம் ஆக்குதலுமே பெரும்பாலான அரசியல்வாதிகளின் நிலைப்பாடு.செலவிடாமல் சேமித்தும் அதிகரித்தும்செல்வதே அவர்களின் பெருவாழ்வு. மகா திறமை!

‘தமிழ் தேசியம்’நம்மைச் சுற்றியும் நமக்குள்ளும்-நாம் அறிந்தும் அறியாமலும் ஆதிக்க நிலைக்கு வளர்ந்துள்ளது.இதனை ஆரம்பமுதலே நட்டு வளர்த்தவர்கள் தமிழ் மிதவாதக் கட்சிகள்.இதற்கு இளைஞர்களின் யுவதிகளின் சிறவர் சிறுமிகளின் தமிழ் மக்களின் என்பையும் சதையும் உரமாக இட்டு இரத்தத்தை தாரைவார்த்து‘தமிழ் இனவாத’மாக தமிழ் பாசிச’மாக மாற்றிய பெருமை புலிகளையும் புலிகளின் நேரடி மற்றும் மறைமுக பினாமிகளையே சாரும்.

இன்றும் தமிழ் இனவாத பிணத்தையே கூத்தமைப்பு காவிக்கொண்டு திரிகிறது.புண்ணைக்காட்டி வாக்கு எடுப்பதிலும் பிணத்தைக் காட்டி எடுப்பது செலவிடாமல் சேமிப்பதற்கும் அதிகரித்துச் செல்வதற்குமான ஒரேயொரு வழி.

மீண்டும் மீண்டும் சம்பந்தற்ர கொல்லைக்குள்ளே என்பதாக கூத்தமைப்பின் இனப்பிரச்சினைக்கான தீர்வு.2002ம் ஆண்டு முன்னாள் ரணில் அரசாங்கத்துக்கும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்ட விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட‘ஒஸ்லோ’பிரகடனத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரித்துள்ளதாகவும் பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இத்திட்டம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுக்கலாம் என்ற கூறியுள்ள சம்பந்தர்(இங்கே நாடுகடத்தப்பட்ட தமிழீழ அரசை அமைக்கப்போவதாக புல்டாவிட்டுக்கொண்டு திரிபவர்களின் இணைப்பாளரான உருத்திரகுமார் மக்களின் ஆணையைப் பெற்றவர்கள் தமிழீழத்துக்கான யாப்பை வரைவார்கள் என்று கூறியிருப்பதை கவனிக்கவேண்டும். இருவரும் சமகாலப்பகுதியிலேயே இதனை அறிவித்துள்ளனர்)உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் சரித்திர ரீதியாக தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்துள்ள தாயகத்தில் ஒருமித்த நாட்டிற்குள் சம்ஷ்டி அரசமைப்பிலான ஆட்சி முறை அமைய வேண்டும் என்று ஒஸ்லோ பிரகடனம் கூறுகிறது.

ஓஸ்லோ பிரகடனம் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்ட போது அதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்‘இருநாடுகள் ஒரு தேசம்’என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வுத் திட்டம் அமைய வேண்டும் என்று கோரினார்.இந்த இடத்தில்தான் கூட்டமைப்புக்குள் முரண்பாடு ஏற்பட்டது.வட்டுக்கோட்டை பிரகடனம் திம்பு பிரகடனம் மங்கள முனசிங்க அறிக்கை இலங்கை-இந்திய உடன்படிக்கை மற்றம் சந்திரிகா அரசு முன்வைத்த அரசியல் தீர்வு யோசனை ஆகியன இரு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படாதவை.ஒரு பக்கச் சார்பானவையாகும்.

ஆனால் 2002.டிசம்பரில் நோர்வே ஒஸ்லோவில் வெளியிடப்பட்ட பிரகடனம் இலங்கை அரசாங்கத்தினாலும் தமிழீழ விடுததலைப் புலிகள் இயக்கதினாலும் எற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும்.அதன் அடிப்படையிலேதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதற்கும் தயாராக அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்துத் தயாராக வைத்திருக்கிறது என்று சம்பந்தர் கூறியிருக்கிறார்.

பெரும்பாண்மையினர் மத்தியில் பனங்காட்டு குள்ள நரியாக ஜே.ஆர்.இருந்தாரே அதேபோலத்தான் சிறுபான்மையினர் மத்தியில் சம்பந்தர்.முன்னவர் ஏகாதிபத்தியத்துக்கு இலங்கையை தாரைவார்த்துக்கொடுத்தவர் என்றால் பின்னவர் யூஎன்பிக்கு தமிழ் மக்களின் வாழ்நாளை தாரைவார்த்துக்கொடுத்தவர்.

அரசியல் தீர்வினை தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியாது என்பதே சம்பந்தர் நிலைப்பாடு. ஏனெனில் இல்லாத புலிகளும் தற்போது ஆட்சியில் இல்லாத யூஎன்பியும் ஒத்துக்கொண்ட அரசியல் தீர்வு திட்டத்தினையே ஏற்றுக்கொண்டிருக்கிறார் சம்பந்தர்.இது வெறுமனே வாக்குகளை மட்டும் குறிவைக்கப்பட்ட சித்துவிளையாட்டல்ல.

ஒஸ்லோ பிரகடனத்துக்கு முன்னர் சந்திரிகா அரசு முன்வைத்த அரசியல் தீர்வு யோசனையும் இலங்கை-இந்திய உடன்படிக்கையும் கூத்தமைப்பைப் பொறுத்தவரை முக்கியமாகப்படவில்லை. காரணம் புலிகளால் ஓரம்கட்டப்பட்டவை என்பதாலா?

ஆனால் சந்திரிகா அரசு முன்வைத்த அரசியல் தீர்வு யோசனை பெரும்பாலான தமிழ்-சிங்கள– முஸ்லீம் புத்திஜீவிகளால் அரசியல் ஆய்வாளர்களால் சிலாகிக்கப்பட்டது.இன்றும் தமிழ் மக்கள் மத்தியில் அதன் உண்மைத்தன்மை எடுத்து இயம்பப்டுமானால் தமிழ்-முஸ்லீம் மக்களின் முழு அங்கீகாரத்தையும் பெறமுடியும்.இதன் காரணமாகவேதான் சிங்கள-தமிழ் இனவாதிகள் ஒற்றுமையாக கைகோர்த்துக்கொண்டு பாராளுமன்றத்தில் அதனை எரிய10ட்டினர்.சந்திரிகா அரசு மீதும் சந்திரிகா மீதும் சேறுபூசும் கைங்கரியத்தை அவசர அவசரமாக வெற்றிகரமாக மேற்கொண்டனர்.இன்றும் தமிழ் மிதவாத அரசியல்வாதிகளும் அவர்தம் அடிவருடிகளுக்கும் சந்திரிகா மீது இருக்கும் காழ்ப்புணர்வுகூட ஜே.ஆரின் மீது இல்லை.இலங்கை வரலாற்றில் சிறுபான்மை மீது கட்டவிழ்த்துவிட்ட இனசுத்திகரிப்பும் அழிப்பும் ஜே.ஆரின் காலத்திலேயே உச்சநிலையில் இருந்தது என்பதை இங்கு சுட்டிக்காட்டுவதுதகும்.

இலங்கை-இந்திய உடன்படிக்கை தமிழர்களுக்கு கிடைத்தும் கிடைகாகாத வரப்பிரதாசம்.அதற்கு குறிப்பிடத்தக்க வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் கிடைத்திருந்தது.வடக்கு கிழக்கு மாகாண சபையின் நிர்வாகம் பூச்சியத்திலிருந்து ஒவ்வொரு செங்கல்லாக கட்டியெழுப்பப்பட்டது.இன்றும் வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்டாலும் மாகாண சபை அரசு இயங்குகின்றன.வடக்கு மாகாணசபைக்கு அரசாங்கம் தெரிவு செய்யப்படவில்லையாயினும் கிழக்கு மாகாணசபைக்கு தற்போது அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.பொதுத் தேர்தலின் பின் வடக்கு மாகாணசபை அரசாங்கம் வடக்கு மக்களால் தெரிவுசெய்யப்படப்போகிறார்கள் என்பது நிதர்சனம்.இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் இவர்கள் அரசாங்க சார்பானவர்கள் என்றோ அரசாங்க சார்பானவர்களின் சார்பானவர்கள் என்று தட்டிக்கழிப்பவர்களிடம் ஒரேஒரு விண்ணப்பம்.

தமிழ்ச் சமூகம் தனது உண்மையான சாத்தியங்களிலிருந்து அந்நியப்பட்டுள்ளது.வாழ்வு இன்பம் இவற்றைத் தேடுவதைப்போலவே சாவையும் அழிவையும் தேடிச்செல்லும் தமிழ்ச் சமூகத்தை குறைந்தபட்ச சாத்தியங்களுக்கு இட்டுச்செல்வதும் குறைந்தபட்ச அடிப்படையான வாழ்வுلل இன்பம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியே நமது.

சுயநிர்ணயம் உள்ளக சுயநிர்ணயம் என்ற இந்தப் பயங்கர திரிபு ஆராக்கியமற்ற தமிழ்ச் சமூதாயத்தையே உருவாக்கியிருக்கிறது.அதி அற்புதமான தந்திரங்களால் நேர்ந்திருக்கிற வேதனையையும் அழிவையும் பற்றியே நாம் முழுக்கவனத்தையும் செலுத்துகிறோம்.

மிதவாத அரசியல் கட்சிகள் குறிப்பாக தமிழ் மிதவாத அரசியல் கட்சிகள் மென்மேலும் தன்னலத்தில் தனிநிறைவில் கூடிச்செல்வதும் மிகுந்து செல்வதும் அலட்டிக்கொள்ளாமலே அனைத்தையும் தனக்குச் சாதகம் ஆக்குதலுமே!அதற்காக இவர்கள் தமக்கும் தம்மைச் சார்ந்தவர்களுக்கும் குறைந்தபட்ச கெடுதல் இல்லாமல் எதனையும் செய்யத் தயாராகிவிடுகின்றனர்.

‘இன்னொரு மனிதன் மீது கொள்ளும் முழுமையான ஆதிக்க உணர்வு’சாடிசத்தின் சாரம் என்று எரிக்ஃபிராம் வரையறுக்கிறார்.அந்த நபரை நம் மன உறுதிக்கு முற்றாகக் கீழ்ப்படுத்தி–அவன் மீது முழுமையான ஆதிக்கம் செய்து–அவனுக்கு தான் கடவுளாதலாக இதனை விளக்குகிறார்.தற்போது தமிழர்களுக்கு தான்தான் கடவுள் என்பதை நிலைநாட்டவே அவரவர் முண்டியடிக்கின்றனர்.இதில் முதன்மைவகிப்பது தற்போதைய புலி கூத்தமைப்பு.

ஒஸ்லோ உடன்படிக்கையுடன் சம்பந்தப்பட்டவர்களில் ஒருசாரரான ரணில் தலைமையிலான ய10என்பி.அதுவும் தற்போது அதிகாரத்தில் இல்லை.மறுசாரார் உயிருடனே இல்லை.இந்நிலையில் சம்பந்தனின் இந்த ஒஸ்லோ சம்பந்தம் எதற்கு?எப்படிச் சாத்தியமாகும்?இதற்கு தற்போதைய ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா?

அரசியல் கற்றுக்குட்டிக்குக்கூட தெரியும் அரசாங்கம் முன்வைக்கும் எந்த சிறிய திட்டத்தையும் எதிர்கட்சி என்பது எதிர்ப்பதுதான்.இது காலகாலம் நடைபெற்றுவரும் சடங்கு.மேலும் ஒஸ்லோ உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட அன்றைய தூசணபுருசர் அன்ரன்பாலசிங்கம் லண்டனுக்கு போனதுடன் வன்னிப்பக்கம் தலைவைத்துக்கூட படுத்ததில்லை.“மாத்தையா மாதிரி நீயும் எனக்குத் துரோகம் செய்துவிட்டாய் என்ன?”என்று பிரபாகரன் கேட்டதால்தான் தனது கதை முடியப்போகிறது என்று கிழக்குக்கு ஓடிவந்த கேணல் கருணா தப்பித்துக்கொண்டார்.கருணா மட்டுமல்ல அவருடன் இருந்த கிழக்குமாகாண உறுப்பினர்களும் மக்களும்தான்.

இப்போ ஒஸ்லோ உடன்படிக்கையை கையிலெடுத்திருக்கும் சம்பந்தர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்கள் மாத்தையா மாதிரி அகப்பட்டிருந்தால் என்னகெதி?

எனவே புலிக் கூத்தமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அல்ல இவர்கள் எந்தக் காலத்தில் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.இவர்களுடைய கருத்து வெளிப்பாடுகள் மற்றவர் மீது துன்பத்தை சுமத்தும் நோக்கமல்ல மற்றவர் மீது செலுத்தும் முழு அதிகார இன்பத்தின் வெளிப்பாடுதான் இது. மற்றவர் மீது தான் செலுத்தும் சக்தியிலிருந்து ஏற்படும் இன்பம். இதுவே சாடிசத்தின் சாரம்.

தமிழன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் அறவே அற்றநிலையில் அவன்மீது துன்பத்தையும் கேவலத்தையும் ஏற்படுத்தும் உணர்வு மிகக் கொரூரமான வெளிப்பாடுதான்.

‘வட கிழக்கு தமிழ்பேசும் மக்களின் தெளிவான ஆணையே சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பு’ என்று மேலும் கதைவிடும் சம்பந்தர் கூட்டங்கள் திருந்தப்போவதில்லை.‘விலைபோகாத மண்டியிடாத அரசியில் அனுபவமுள்ள’என்று குழறிக்கொட்டிக்கொண்டு திரிபவர்களிடம் தமிழ் மக்கள் மயங்கத்தான் போகிறார்கள்.அந்த மயக்கத்தை வைத்துக்கொண்டே குழறிக்கொண்டிருப்பவர்கள் பிழைப்பார்கள்.இதற்கு உடுக்கடித்துக்கொண்டு தமிழ் ஊடகங்களும் தமது பிழைப்பைப் பார்த்துக்கொள்வார்கள்.பாவம் மக்கள் என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் செய்வதற்கும் இல்லை நம்மிடத்தில்.

அறிவியலிலும் தொழில் நுட்பத்தில் உலகம் உச்சத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் என ஆய்வாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார்கள். விவாதிக்கிறார்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.நாமோ வெறும் உணர்ச்சிகளுக்கும்- வெற்றுப் பேச்சுகளுக்குமாக எமது வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்.இதில் மிகக் கேவலம் என்னவென்றால் அடிமைப்பட்ட புத்திஜீவிகளும் இந்த வெற்றுப் பேச்சுக்களுக்கு சப்புக் கட்டுவதுதான்.

மக்களை‘பொருளாக்கி’–ஜடமாக்கி விடுகிறான் அரசியல்வாதி.அப்பொருளை தன் விருப்பத்திற்கு உகந்த எல்லா வழிகளிலும் இவன் இயக்க முடியும்.இம்முறையில் மற்றவர்களின் கடவுளாகிறான். மற்ற மனித உயிர்கள்மீது இவன் செய்யும் ஆதிக்கம் மற்றவர்களை முடமாக்கிவிடுகிறது.மூச்சுத் திணறடிக்கிறது.புலிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு உண்டு.புலிகள் நாசம் செய்பவன் மற்ற மனிதனை இல்லாமற் செய்கிறான்.ஒழித்துக் கட்டுகிறான்.அரசியல்வாதிகள் மற்றவர் வாழ்வைக் கட்டுப்படுத்தி - மூச்சுத் திணறவைக்கும் உணர்வில் இன்புறுகிறார்கள்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 
 
 
 

 

 

Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!