புலிகளின்
இராணுவம்,புலிகளின்
கடற்படை(விமானத்
தாக்குதல்
எதுவம்
இடம்பெறாத
காலமாகையால்
புலிகளின்
விமானப்படை
அங்கீகரிக்கப்படவில்லை),புலிகளின்
காவல்
துறை,புலிகளின்
நீதித்துறை,புலிகளின்
நிதித்துறை,புலிகளின்
நிர்வாகப்
பிரதேசங்கள்
என்றெல்லாம்
ஒரு
அரசுக்குரிய
எல்லாம்
இருப்பதாக
ஏற்றுக்கொண்டு,இந்நாட்டுப்
பிரதமரால் (அன்றைய
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க
அவர்களால்)அதிகாரபூர்வமாக,இந்நாட்டின்
மற்றொரு
சிறுபான்மைச்
சமூகமான
முஸ்லிம்
சமூகத்தையும்
முற்று
முழுதாகப்
புறக்கணித்துவிட்டு
சர்வதேச
உத்தரவாதத்துடன்
எழுதிக்கொடுக்கப்பட்டு,பிரிக்கப்பட்டு,துண்டாடப்பட்டிருந்த
இந்த நாட்டை…
தரைப்படை,கடற்படை,விமானப்படை,தற்கொலைப்படை,காவல் துறையென்று அனைத்துப் படைகளையும் கொண்டிருந்தது மட்டுமன்றி,ஒரு அரசு நடத்தப் போதுமான அல்லது நமது நாடு போன்ற ஒரு சிறிய நாட்டை முழுதாக அழிக்க அல்லது ஆக்கிரமிக்கப் போதுமான அனைத்துப் பேரழிவு ஆயுதங்களையும்,பொளதீக வளங்களையும் கொண்டிருந்த உலகின் முதல்தரமான பாசிச பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து…
(புலிகளை விடவும் தரம் குறைந்த படைகளுடன் உலக வல்லரசுகள் செய்து கொண்டிருக்கும் யுத்தங்கள் எல்லாம் தோல்விக்கு மேல் தோல்வியையே தழுவிக் கொண்டிருக்கும் இன்றைய உலகில்) இந்நாட்டை யுத்தம் செய்து மீட்டது மட்டுமன்றி…
ஒரு மதத்தின் தலைமையகம் என்றுகூடப் பாராது தலதா மாளிகையைத் தாக்கிய அரக்கனும், பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்களை காத்தான்குடியிலும்,புனித மக்காவுக்குச் சென்று ஹஜ் என்னும் வணக்கத்தைச் செய்துவிட்டு நாடு திரும்பிய காத்தான்குடி ஹாஜிமார்களை வீடு திரும்பவிடாது(அம்பிளாந்துறை)நடு வழியிலும்,பௌத்த மத குருமார்களை அரந்தலாவையிலும்,இன்னும் ஆயிரமாயிரம் அப்பாவிப் பொதுமக்களையும், பலநூறு அரசியல் தலைவர்களையும் ஈவிரக்கமின்றி கொன்று குவித்த மகா கொலைகாரனும், கர்ப்பிணித்தாயின் வயிற்றை வெட்டிப் பிளந்து உள்ளே இருந்த பிறவாச் சிசுவை வெளியே இழுத்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன்பே அது முஸ்லிம் என்பதற்காக ஏறாவூரில் இரவோடிரவாக வெட்டிக்கொன்ற மகா கொடுமைக்காரனும்,ஆயிரக்கணக்கானோரைப் பிணமாகவும்,இலட்சக்கணக்கானோரை அகதிகளாகவும் மாற்றிய மகா அநியாயக்காரனும், முதல் நாள் வரைக்கும் ஒற்றுமையாக இருந்து விட்டு மறுநாள் ஒரு சிறுபாண்மை இனத்தை (வடக்கு முஸ்லிம்களை) ஒரே நாளில் முற்று முழுதாகக் கொள்ளையடித்து பதறப் பதற வெளியேற்றிய மகா கொள்ளைக்காரனும்,நயவஞ்சகனும்,நம்பிக்கைத் துரோகியும், தன்னுயிரைப் பாதுகாக்க இலட்சக்கணக்கான தன் இன மக்களின் இன்னுயிர்களையே பணயம் வைத்தும்,அதில் ஆயிரக்கணக்கானோரை தானொருவன் வாழ வேண்டும் என்பதற்காகக் கொன்று குவித்த உலக மகா சுயநலக்காரனுமாகிய மாபாவி பிரபாகரனையும் அழித்த…
உலக சரித்திரம் படைத்திருக்கும் சரித்திர நாயகனும்,இந்நாட்டுச் சரித்திரத்தின் ஒரேயொரு நாயகனும்,வரலாற்றுப் புத்தகங்களின் தலைப்பானவனும்,வரலாற்றின் ஒரேயொருவனும், துணிவுக்கும், துடிப்புக்கும், வீரத்திற்கும், மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும், தலைமைத்துவத்திற்கும், இன்றைய உலகின் உதாரண புருஷனும், இந்நாட்டின் சேனாதிபதியும், ஜனாதிபதியுமான அதி உத்தம மஹிந்த ராஜபக்ஷ அவர்களை விட்டு விட்டு…
எவ்விதப் போராட்டங்களும் செய்யாது,இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்து விட்டதால் இலங்கைக்கு இனாமாகக் கிடைத்த சுதந்திரத்தை இருகைகளையும் நீட்டிப் பெற்றதால் இலங்கையின் முதலாவது பிரதமர் கௌரவ டீ.எஸ். சேனநாயக்க அவர்களை‘தேச பிதா’ என்கின்ற கௌரவப்பட்டத்தில் தொடர்ச்சியாக வைத்திருப்பதானது…
‘சுதந்திரம்’என்றால் என்னவென்பதையும்,‘தேசபிதா’என்றால் எப்படிப்பட்டவர் என்பதையும் செயலில் காட்டித்தந்த‘மஹிந்த’என்னும் அந்த சிறந்த,உயர்ந்த,விஷேடமான மனிதனுக்குச் செய்யும் சரியான கைமாறாக அமையாது என்பதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்!
மேலும்,பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினம் என்பதை விடவும், விடுமுறை தினம் என்பதுவே கடந்த 60 வருடங்களாக மேலோங்கி இருந்தது. நாட்டுப்பற்றுள்ள ஒரு சிலர் தேசியக் கொடியைத் தாமாகவே ஏற்றுவார்கள். வேறு சிலர் கடமைக்காக ஏற்றுவார்கள்.பட்டாசுகளும் பண்டிகைக்காகக் கொளுத்தப்பட்டனவேய ன்றி சுதந்திர தினத்தன்று அதுவும்கூட இல்லை.
ஆனால், இந்நாட்டின் நிரந்தர நோயாகவும், சாபமாகவும் இருந்த மாபாவி பிரபாகரனும்,அவனின் கொலைகாரக் கூட்டமும் முற்று முழுதாக அழிக்கப்பட்டு,அவன் பிடியிலிருந்த இறுதி அங்குல நிலமும் மீட்கப்பட்டு‘இந்நாடு முற்று முழுதாக சுதந்திரம் அடைந்து விட்டது’என்ற இனிய செய்தி இந்நாட்டு மக்களின் காதுகளுக்கு 2009மே 18ம் திகதி எட்டியபோது,இந்நாட்டு மக்கள் எப்படிப்பட்ட சுதந்திரத்தை அடைந்தார்கள்ளூ எவ்வாறான சுதந்திர விடுதலை உணர்வை உணர்ந்தார்கள்ளூ எவ்வாறு ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்கள்,எவ்வாறு தெரிந்தவரும் தெரியாதவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்கள், எவ்வாறு மக்கள் வீதிகளில் இறங்கி ஆனந்தக் கூத்தாடினார்கள்,ஆடிப் பாடினார்கள்ளூ எவ்வாறு சந்திக்குச் சந்தி மக்கள் கூடி பால்சோறு சமைத்து பண்டிகை போல உணர்வு பூர்வமாகக் கொண்டாடினார்கள்,தேசியக் கொடியும், பட்டாசும் வாங்க நாட்டில் எங்கேயும் இடமில்லை எனுமளவு வரலாறுகாணாத வகையில் பட்டாசு கொளுத்தி,தேசியக் கொடியால் இந்நாட்டையே போர்த்தி எவ்வாறெல்லாம் கொண்டாடினார்கள் என்பவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது உண்மையான சுதந்திர தினம் பெப்ரவரி 4ம் திகதியல்ல.அது மே 18 தான் என்பதை இந் நாட்டு மக்கள் உளரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
அத்துடன்,இந்நாடு அடைந்த மாபெரும் வரலாற்று வெற்றியை ஜீரணிக்க முடியாது,வரலாற்று நாயகனான இந்நாட்டின் உயிர்போன்ற எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களை குற்றவாளியாக நினைக்கும் இன்றைய வெள்ளையர்களின் மூதாதையர்களான அன்றைய வெள்ளையர்கள் தீர்மானித்த பெப்ரவரி 4ல் கிடைத்த சுதந்திரத்திற்கும், புலிகளுடன் நேரடியாகவும், (புலி வால்களுடன்) மறைமுகமாகவும் யுத்தம் செய்து போராடிப் பறித்தெடுத்து,இலங்கையன் தீர்மானித்த தினமான மே 18ல் கிடைத்த சுதந்திரத்திற்கும் இடையிலான பாரிய இடைவெளியை இந்நாட்டு மக்கள் மே 18ந் திகதி வெளிப்படுத்தியதன் மூலம் இந்நாட்டின் சுதந்திர தினத்தை மே 18 ஆக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மேலும் உறுதியாகப் புலனாகின்றது.
ஆயிரமாயிரம் ஆண்டு காலச் சரித்திரத்தைக் கொண்டதான இந்நாட்டின் அறியப்பட்ட சரித்திரங்களில் வந்துபோன அரசர்கள்,மன்னர்கள்,தலைவர்கள்,பிரதமர்கள்,ஜனாதிபதிகள் என்றுள்ள ஆயிரக்கணக்கானோரின் சரித்திரங்கள் எல்லாம் நம் சரித்திர நாயகன் மஹிந்த ராஜபக்ஷ முன்னால் மங்கி,மறைந்து,பொலிவிழந்து நிற்பதானது இந்நாட்டுக்கு இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்துக் கொடுத்ததே உண்மையான சுதந்திரமும்,மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்த தினமே உண்மையான சுதந்தர தினமும்,மஹிந்த ராஜபக்ஷவே உண்மையான‘தேசபிதா’என்பதையும் சந்தேகமற நிரூபிக்கின்றன.
ஒரு நாட்டின் சுதந்திர தினம் அந்நாட்டு மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண் டும். அடிபணிந்து சேவகம் செய்து, போராடாது பிச்சைபோல் கிடைக்கும் சுதந்திரம் ஒரு மனிதனுக்கு உண்மையான சுதந்திர உணர்வை ஊட்டாது. ஆனால், எதிர்த்து நின்று போராடிப் பெறுகின்ற சுதந்திரமே ஒரு மனிதனுக்கு உண்மையான சுதந்திர உணர்வை ஊட்டும்!
இத்தகைய உண்மையான சுதந்திர உணர்வினை இந்நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திய மே 18ம் திகதியை இந்நாட்டின் புதிய சுதந்திர தினமாகப் பிரகடனப்படுத்துவதா?அல்லது உண்மையான சுதந்திர உணர்வையோ அல்லது எவ்விதமான உணர்வையோ எமக்குள் ஏற்படுத்தாத பெப்ரவரி 4ந் திகதியையே சுதந்திர தினமாகத் தொடர்ந்தும் வைத்திருப்பதா? என்பதையிட்டும்ளூ சரித்திரத்திலும் இவ்வாறானதோர் படை நகர்வை வழிநடாத்தி பாரிய யுத்தம் செய்து நாட்டை மீட்ட எந்தத் தலைவரும் இந்நாட்டில் இருந்ததில்லையென்ற நிலையில்‘தேசபிதா’வாக மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே‘தேசபிதா’வாகப் பிரகடனப்படுத்துவதா?அல்லது இன்றைய ரணில் போன்றவர்களது மூதாதையரான அன்றைய டி.எஸ்.சேனநாயக்க அவர்களையே தொடர்ந்தும் தேசபிதாவாக வைத்திருப்பதா?என்பதையிட்டும் வாதப் பிரதிவாதங்கள் நடத்தி நல்லதோர் முடிவுக்கு வரவேண்டியது சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரினதம் சரித்திரக் கடமையாகும்.
யுத்தம் செய்வதால் அபிவிருத்தி செய்ய முடியாது என்று கூறிக் கொண்டு யுத்தமும் செய்யாது அபிவிருத்தியும் செய்யாது நாட்டைச் சீரழித்த தலைவர்களுக்கு மத்தியில்,யுத்தமும் செய்து அபிவிருத்தியும் செய்து இரண்டிலும் வெற்றியடைந்து,இச்சுதந்திர நாட்டை நம் பரம்பரைக்கு மீட்டுத்தந்துள்ள அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்னும் ஆறாண்டுகளுக்கு என்ன..ஆயுள் காலமெல்லாம் இப்பதவியில் அமர்த்தினாலும் அவர் செய்த சேவைக்கு இணையாகாது என்ற நிலையில் அவரைத்‘தேசபிதா‘வாகவும்,அவர்தந்த சுதந்திர தினமான மே 18ஐ சுதந்திர தினமாகவும் பிரகடனப்படுத்தி‘சரித்திர நன்றி’களை அவருக்குக் காணிக்கையாகச் செலுத்த வேண்டியது பெரும்பான்மையினராகவும்,சிறுபான்மையினராகவும் இத்தேசத்தை நேசிக்னும் மக்கள் அனைவரினதும் கடமையாகும்.
-அஹமத் பஷீர்



