<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.02. பிப்ரவரி, 2010

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

வட்டுக்கோட்டை தீர்மானத்தை வைத்து மீண்டும் உருவாகி வரும் புலம் பெயர் புலனாய்வு புலி பாசிச பயங்கரவாதம்.

*முஸ்லிம்கள் இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை தம் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படும் ஒன்றாக பார்த்தனர் பார்க்கின்றனர்.

*வட்டுக்கோட்டை தீர்மானம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுவதானது தமிழ் மக்களின் உள்ளங்களில் இருந்து வழுக்கி விழ்ந்து இறுதி கட்ட போரில் நந்திகடல் மூழ்கி விட்ட தமிழ் தேசியம் மீண்டும் அத்திவாரமிடபட்டு அதில் இலகுவாக புலி பாசிச பயங்கரவாதம் கட்டமைக்க முடியும்.

மீண்டும் புலிகள் உருவாகிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன"இதன் உண்மை தன்மை ஆராயப்படவேண்டும் புலிகளின் பல இணையத்தளங்கள் மூடப்பட்டு மீண்டும் வேறு பெயர்களில் தீவிரமாக இயங்கி வருகிறது என்பதுடன் புலம் பெயர் நாடுகளில் இவர்கள் நடத்தி வருகிற ஈழத்துக்கான தேர்தல்கள்,இளையோருக்கான ஈழ போராட்ட விளக்க வகுப்புகள்,இரகசிய ஒன்று கூடல்கள் என்பன வற்றை பார்க்கும்போது புலிகள் முனைப்புடன் இருப்பது தெரியவருகிறது என்பதுடன் புலிசார்பு இணையத்தளங்களை இவர்கள் மீண்டும் ஒரு திசை நோக்கி வழி நடத்த முற்படுவதும் தெரிகிறது சில தினங்களுக்கு முன்பு ஒரு புலி சார்பான இணையத்தளம் 24 மணிக்குள் ஈழத் துரோகிகளின் பட்டியல் ஒன்றை தாம் வெளி இடப்போவதாக அறிவித்தது எனிலும் அது வெளியிடப்படவிலை காரணம் புலிகளின் புலனாய்வு பிரிவு தமக்கு தடை விதித்ததாக குறிப்பிட்டது என்பது நோக்கதக்கது.

இங்கு புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்டு விட்டது என்பது அவர்களின் பாசிச இயங்கும் சக்தி அழிக்க பட்டுவிட்டதாக அர்த்தம் கொள்ள முடியாது புலிகள் இறுதி கட்ட போரில் நந்திகடல் பகுதியில் தமது தலைவனுடன் ஆட் பலத்தை,ஆயுத பலத்தை,நில பரப்புடன் நில பலத்தை இழந்து சுமார் மூன்று வருடங்கள் நீடித்த மஹிந்தவின் யுத்தத்தில் முப்பது வருடங்களாக உருவாகிய பிரமாண்டமான பாசிச பயங்கரவாத இராணுவ கட்டுமானம் முற்றாக இடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை ஆனால் அவர்களின் பாசிச சிந்தனை இன்னும் பல ஆயிரம் புலம் பெயர் புலிகளிடம் புது முனைப்புடன் இருக்கிறது, உருவாக்கபடுகிறது.

இந்த புலி பாசிச சிந்தனை பல பிரிவுகளாக முரண்பட்டாலும் பிரதானமாக ஒரு புலி பாசிச சிந்தனை வலுவாக முனைப்பு பெறுகிறது அது மேலாதிக்க பயங்கரவாத பாசிச கனவுடன் மற்ற ஈழ போராட்ட சிந்தனைகளை வழிநடாத்தும் அல்லது மேலாதிக்கம் செலுத்தும் சக்தியாக பரிமாணம் பெற்று வருகிறது இந்த பாசிச சக்தி தனித் தமிழ் ஈழம் என்ற சிந்தனைக்கு மாற் ஈடுடாக எந்த வகையான விட்டு கொடுப்பையும்,சிந்தனைமாற்றத்தையும் துரோகமாக பார்க்கும் மனோ பாவம் கொண்டது இதன் பணிகள் மிகவும் உற்சாகமாக திரை மறைவில் முன் நெடுக்க படுவது தெரிகிறது.

இவர்கள் குறித்த ஒரு கால வரையறைக்குள் தமது இரண்டு பிரதான வேலை திட்டங்களை ஆரம்பித்து விட்டதாக உணரமுடிகிறது ஒன்று வெளிக்கள அரசியல் வேலை திட்டம் அதாவது 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்வைத்து ஜனநாயக போர்வையில் தமிழ் மக்களை தமது மேலாதிக்க சிந்தனைக்கு சார்பாக அணிதிரட்டுவது இரண்டாவது புலி பாசிச மேலாதிக்க சிந்தனையை கொண்ட உள்வாரியான இராணுவ இரகசிய புலனாய்வு பிரிவு இது வெளிப்படையாக தமிழ் மக்களுடன் தொடர்பு படாது என்பதால் முழுமையான புலி பாசிச பயங்கரவாத சிந்தனை கொண்டதாக கட்டமைக்க முடியும் இந்த இரண்டு பிரதான பிரிவுகளை கொண்ட ஒரு பாசிச இயக்கம் இது புதிய முகமூடி கொண்ட அதே பயங்கரவாத புலி பாசிசம்தான்.

இவர்கள் 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்தை நோக்கி போவதற்கும், இரகசிய புலனாய்வு பிரிவிவை உருவாக்குவதற்கும் பலமான கரணங்கள் உண்டு 1976 வட்டுக்கோட்டை தீர்மானம்தான் தமிழ் ஈழ விடுதலை போராட்டதின் ஒரேஒரு ஒருமித்த ஜனநாயக குரலாக பார்க்க படுவதும்(இதில் கிழக்கு மாகாண தமிழர்கள் அதிகமாக கலந்து கொள்ள வில்லை என்பது ஒரு விமர்சனம்)இதன் பின்னரான தமிழ் ஈழ விடுதலை போராட்டம் ஒரு வேகமான வளர்ச்சி பாதையில் பயணித்தது என்பதும் நோக்கபடுகிறது,வட்டுக்கோட்டை தீர்மானம் மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படுவதானது தமிழ் மக்களின் உள்ளங்களில் இருந்து வழுக்கி விழ்ந்து இறுதி கட்ட போரில் நந்திகடல் மூழ்கி விட்ட தமிழ் தேசியம் மீண்டும் அத்திவாரமிடபட்டு அதில் இலகுவாக புலி பாசிச பயங்கரவாதம் கட்டமைக்க முடியும் என்பதாலாகும் 1976வட்டுக்கோட்டை தீர்மானம் முஸ்லிம்களை ஒரு தனித்துவமான தேசிய இனமாக அல்லது கோட்பாட்டு சமுகமாக பார்க்கவில்லை என்பதுடன் தமிழ் சமுகத்தில் ஒடுக்க பட்டிருக்கும் தமிழ் இன பிரிவுகளில் ஒன்றாக மட்டும் பார்க்கிறது என்பதுடன் முஸ்லிம்கள் இந்த தீர்மானத்தை தம் மீது மேலாதிக்கம் செலுத்த முற்படும் ஒன்றாக பார்த்தனர் பார்க்கின்றனர் என்பதுடன் இந்த தீர்மானம் தமிழ் மேலாதிக்க வர்க்கத்தின் செல்வாக்கு மிகுந்து காணபடுகிறது என்பது ஜனநாயக தமிழ் ஈழ விடுதலை போராளிகளின் விமர்சனம்.

இந்த பிணைப்பை கொண்ட வட்டுக்கோட்டை தீர்மானம் ஜனநாயக தமிழ் ஈழ விடுதலை போராட்டம் அமைப்புகளை விடவும் பாசிச தேசியம் போதிக்கும் புலிகளுக்கு அதிகம் உதவியுள்ளது என்பது இவர்கள் வட்டுக்கோட்டை தீர்மானம் நோக்கி மக்களை திருப்பும் நடத்தைக்கு காரணமாக அமைகிறது.

இரண்டாவது புலி பாசிச மேலாதிக்க சிந்தனையை கொண்ட உள்வாரியான இரகசிய புலனாய்வு பிரிவு இது ஒரு விடுதலை போராட்டத்துக்கு உதவுவதை விடவும் பாசிச மேலாதிக்கம் கொண்ட சக்திகளுக்கு மிகவும் அவசியமான துறை இந்த பிரிவு 1983ஆம் ஆண்டு புலிகளின் முதல் இராணுவ தாக்குதல் தின்னவேலியில் நடத்தும்போது 23முழு நேர போராளிகளும்,7 பகுதி நேர போராளிகளும் இருந்த நிலையில் பிரபாகரனினால் இரகசிய புலனாய்வு உருவாக்க பட்டிருந்தது இதன் தலைவராக வல்வெட்டிதுறை வசந்தன் இருந்தார் இவர் இப்போது சுவிஸில் இருக்கிறார் . முழுவடிவில் 1987இல் பீட்டா-2 என்ற பெயரில் மாத்தையாவின் தலைமை யில் உருவாக்கப்பட்டு பின்னர் கத்தோலிக்க கிறிஸ்தவ மத குருக்கள் பாடசாலையில் கற்ற போஸ்கோ(பொற்கோ) தலைமை யில் சிறப்பாக பாசிச பாதையில் உருபெற்று வந்தது இந்த கால பகுதியில் இருந்து இஸ்ரேல் மொசாத் மற்றும் சின் பெட் போன்ற பயங்கரமான இஸ்ரேலிய இரகசிய புலனாய்வு அமைப்புகளுடன் புலிகளுக்கு தொடர்பு ஏற்பட்டது,988 இல் பொட்டு அம்மான் புலிகளின் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்க பட்டார் 1988 இல் நியமிக்க பட்ட பொட்டு அம்மான் இறுதி கட்ட போரில் நந்திகடல் மே 18 ஆம் திகதி கொல்லப் படும் வரை 21 வருடங்கள் தொடர்ந்து பாசிச வேட்டை யாடியுள்ளார்.

பொட்டு அம்மானின் புலனாய்வு பிரிவின் ஐந்து பிரதான பிரிவுகள் காணப்பட்டன தகவல் சேகரிப்பு பிரிவு-பொறுப்பாளர் கபில் அம்மான் தலைமையில் இவர் புலனாய்வு பிரிவின் இரண்டாம் நிலை பொறுப்பாளரும் கூட இவர் தொடர்ந்து 40கும் அதிகமான விடையங்களை கண்காணித்து மாதவன் மாஸ்டருக்கு தகவல் அனுப்பவேண்டும்,ஆய்வு மற்றும் வெளியீட்டு பிரிவு பொறுப்பாளர் மாதவன் மாஸ்டர் இவர் கிடைக்கும் தகவல்களை ஆரம்ப நிலை தகவல்களை முடிவான நிலைக்கு மாற்றும் பணியை செய்வதும் இறுதியாக ஆய்வில் பெறப் பட்ட தகவல்களை நிர்வாக பிரிவு பொறுப்பாளர் சங்கருக்கு அனுப்பவேண்டும் இவர் பொட்டு அம்மானுக்கு அனுப்புவார்,பின்னர்,பொட்டு அம்மான் விசேட செயல் பாட்டு பிரிவு பொறுப்பாளர் ஜனன் மாஸ்டரின் ஊடாக விசேட செயல் பாட்டு பிரிவின் தற்கொலை படையின் மூலம் இலக்குகளை தாக்குவார்,பயிற்சி மற்றும் தொழில் நுட்ப பிரிவு பொறுப்பாளர்-ஆதவன் மாஸ்டர், இவர் புலிகளின் புலனாய்வு அமைப்பின் உறுபினர்களின் பயிற்சிக்கு பொறுப்பாக இருந்தார் இப்படித்தான் புலிகள் பாசிச அமைப்பு நடத்தினர் இது 10வருடங்களுக்கு முன்பு இஸ்ரேல் மொசாத் அமைப்பின் நிருவாக கட்டமைப்பை ஓர் அளவு ஒத்ததாகும்.

தற்போது இலங்கையில் அரசியல் நகர்வுகள் புலிகளின் புலனாய்வு பிரிவின் தொழில் பாடுகளுக்கு சாதகமாக அமைந்து வருகிறது சரத் பொன்சேகா,மஹிந்த பிளவு இதை தொடர்ந்த மற்றைய அரசின் வேகமான,அவசரமான தேர்தலை முன்நிலை படுத்திய அரசியல் நகர்வுகள் புலிகளின் புலனாய்வு பிரிவு தாம் எதிர்பார்பதை விடவும் வேகமாக களம் திறந்து வருகிறது தமது இருப்பை நிருபித்து புலிகள் செய்யப்போகும் ஒரு சிறிய தாக்குதல் ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடும் அரசியல் ஆய்வுகள்,அரசியல் நோக்கு,அரசியல் பார்வை என்பன புதிய அணுகு முறைகளை நோக்கி நகரும் செயல் பாடுகள் தடுத்து நிறுத்தபட்டு விடும் ஜனநாயக சிந்தனைகள் மீண்டும் ஒதுங்கி விடும் இந்த புலிகளின் புலனாய்வு பிரிவை மீண்டும் இந்தியா பயன்படுத்த முடியும்,இஸ்ரேல் மொசாத் வளை குடாவில் தனது தேவைகளை பூர்த்தி செய்ய இவர்களை பயன்படுத்தவும் முடியும் பொட்டு அம்மான் வைத்திருந்த அமைப்பு இஸ்ரேல் மொசாட்டை ஒத்ததாக இருந்தது என்றால் இந்த புதிய புலனாய்வு அமைப்பு இஸ்ரேல் சியோனிச அமைப்பை ஒத்திருக்கப் போகிறது என்பதை அவர்களின் நடத்தை காட்டுகிறது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 
 
 
 

 

 

Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!