<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

எங்கள் தேசம் இணையம்

 

www.engaltheaasam.com Welcome To Visit   

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.30.ஜூன்,2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

ஈழப்போராட்டத்தின் இரத்த சாட்சியங்கள்! 119!......

பொன் கந்தையா அவர்கள் குறித்து சில விடயங்களை இங்கே சொல்லியே ஆக வேண்டும்.1947 இல் ஒரு தேர்தல் நடந்தது.அது ஒரு பாராளுமன்ற தேர்தல்.இப்போது இருப்பது போல் அன்று நடந்த தேர்தல் விகிதாசார பிரதிநழித்துவம் அல்ல. தொகுதிவாரியான தேர்தலே நடந்தது.

அப்போது உடுப்பிட்டி தொகுதியும் பருத்தித்துறை தொகுதியும் ஒரே தொகுதியாகவே இருந்தது. இதுதான் இலங்கையில் நடந்த முதலாவது பாராளுமன்ற தேர்தல்.இத்தேர்தலில் இடது சாரிக்கட்சியாகிய லங்கா சம சமாஐ கட்சியின் சார்பில் ஜெயம் பருத்தித்துறை தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.இவரது சொந்த பெயர் சி.தர்மகுலசிங்கம்.இவர் ஒரு சட்டத்தரணியாகவும் இருந்தவர். ஆனாலும் அந்த தேர்தலில் ஜெயம் தோல்வியடைந்தார்.

ஆனாலும் இடது சாரி சிந்தனைகள் உள்ளவர்கள் மத்தியில் அந்த தேர்தல் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.அதன் பின்னர் 1952 இல் நடந்த தேர்தலில் அதே பருத்தித்துறை தொகுதியில் பொன் கந்தையா அவர்கள் கம்யூனிஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு அவரும் வெற்றியடை முடியவில்லை.

அடுத்த தேர்தல் 1956 இல் நடந்தது. அதில் பொன் கந்தையா அவர்கள் வெற்றியடைந்தார்.அப்போது பாராளுமன்றத்தில் தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டது.அதை எதிரத்து அன்றைய தமிழரசு கட்சியினர் பாராளுமன்றத்தில் வாக்களித்திருந்தனர்.

தனிச்சிங்கள சட்டத்தை இடது சாரிக்கட்சிகளும் எதிர்த்திருந்தன என்பது உண்மைதான்.இதில் பொன் கந்தையா அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முக்கியமானது.தமிழரசு கட்சியினர் தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்திருந்தனர்.ஆனாலும் அதற்கு எதிராக மாற்று யோசனைகள் எதனையும் முன்வைத்திருக்கவில்லை.

அரசாங்கம் எந்த முடிவை எடுத்தாலும் அதை எதிர்ப்பதுதான் அவர்களது வேலை. ஆனால் பொன் கந்தையா மாற்று யோசனை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.

இந்த நாட்டில் வாழும் தமிழ் குடிமகன் ஒருவர் தன் மனைவியுடன்,அல்லது தன் பிள்ளைகளுடன்,உறவினர்களுடன் எந்த மொழியில் பேசுவது என்பதை தீர்மானிக்குமாறு நான் கோரவில்லை.மாறாக,தமிழ் பிரiஐ என்ற வகையில் இந்த நாட்டின் அரசாங்கத்துடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்பதையே தீர்மானிக்குமாறு நான் கோருகின்றேன்.தமிழர்கள் எல்லோரும் சிங்கள மொழியை படிப்பதற்கும்,சிங்கள மக்கள் எல்லோரும் தமிழ் மொழியை படிப்பதற்குமான ஒரு ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டால் அதை நாங்கள் வரவேற்போம் என்றார் பொன் கந்தையா அவர்கள்.

ஆனாலும் பொன் கந்தையா அவர்களின் அந்த கருத்தை அப்போது தமிழரசு கட்சியினர் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை.தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் எல்லோரும் இணைந்து பொன் கந்தையா அவர்கள் கேட்டது போல் கேட்டிருந்தால் அன்றைய அரசாங்கம் அதை ஏற்றிருக்கும் என்று பலராலும் அப்போது சொல்லப்பட்டது.

பொன் கந்தையா அவர்கள் கேட்டது போல் தமிழ் மக்கள் சிங்கத்தையும்,சிங்கள மக்கள் தமிழையும் கற்பதற்கு அன்று இணங்கியிருந்தால் இந்த பிரச்சினை இந்தளவிற்கு நீண்டு சென்றிருக்காது.

சிங்கள மொழியை நாம் ஏற்கவும் மாட்டோம்,கற்கவும் மாட்டோம் என்று அடம்பிடித்து நின்ற தமிழரசு கட்சியினரின் பிள்ளைகள் பிற்காலத்தில் சிங்கள மொழியை மிக இரகசியமாக படித்து அதற்கான பரீட்சையும் எழுதி அதில் சித்தியடைந்து வேலை வாயப்புகளை பெற்றுக்கொண்டனர் என்பது பலருக்கும் தெரியாத இரகசியம்.

இதில் பரிதாபத்திற்குரியவர்கள் அப்பாவி தமிழ் மக்கள்தான். மொழிப்பிரச்சினையால் ஆரம்பமான இனப்பிரச்சினை பெரும் யுத்தமாக வெடித்து பல இலட்சம் மக்கள் வெளி நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி சென்று விட்டனர்.

அவர்களது பிள்ளைகள் அந்தந்த நாடுகளில் ஆங்கிலம்,ஜேர்மன், பிரன்சு,இத்தாலி,நோர்வே,டச்சு என்று அந்தந்த நாட்டு மொழிகளையே பேச வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு உருவாகியிருக்கின்றது.பொதுவாக சொல்லப்போனால் சிங்கள மொழியை படிக்க மாட்டோம் என்று அடம்பிடித்த தமிழரசு கட்சியினரால் தமிழ் மக்களின் பிள்ளைகள் வெளி நாடுகளில் தமிழ் மொழியையே மறந்து போய்விடக்கூடய அபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.

உண்மையில் தனிச்சிங்களச்சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று முதன் முதலில் பகிரங்க கூட்டத்தில் பேசியவர் யு.என்.பி கட்சி சார்ந்த சேர் ஜேயன் கொத்தலாவல அவர்களே.அவர் யாழ்ப்பணம் சென்று கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு கொழும்பு சென்று இந்த கருத்தை முன்வைத்திருந்தார்.

இதை பார்த்து விட்டு எஸ்,டபிள்யு,ஆர்,டி. பண்டாரநாயக்கா விசயத்தில் முந்தி விட்டார். அந்த சூழலில் சிங்கள மக்களின் வாக்குகளை கவர்ந்திழுக்க இதுதான் வழி என்று இரு கட்சிகளுமே கருதியிருந்தன. ஆனாலும் அதில் வென்றவர் பண்டாரநாயக்கா அவர்களே.

பொன் கந்தையா அவர்கள் தமிழ் பேசும் மக்களுக்கு நல்ல வழியை காட்டியிருக்கின்றார். ஆனாலும் பெரும்பான்மை பலத்தை பெற்றிருந்த தமிழரசு கட்சியினரோ,தமிழ் காங்கிரஸ் கட்சியினரோ அந்த வழியை பின்பற்ற விரும்பியிருக்கவில்லை.பண்டாரநாயக்கா அவர்கள் கொண்டு வந்திருந்த பல முற்போக்கான திட்டங்களை பொன் கந்தையா அவர்கள் ஆதரித்திருந்தார். அவைகள் எவைகள் என சாட்சியத்தில் பின்பு சொல்லப்படும்.

காரணம் பழைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு அரசியல்தான். எதிர்க்க வேண்டிய விடயங்களை எதிர்க்கத்தான் வேண்டும். ஆனாலும் தமிழ் பாரம்பரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பது போல் பாராளுமன்றத்தில் உரையாறுவார்கள்.மறு நாள் பத்திரிகைகளில் அந்த அறிக்கை வெளிவரும்.

தமிழ் மக்கள் தமக்காகவே தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாதாடுகின்றார்கள் என்று நம்பி விடுவார்கள்.அதே நேரத்தில் அரசாங்கத்தை எதிர்த்து பேசியவர்கள் அதே அரசாங்க அமைச்சர்களோடு பாராளுமன்றத்தில் உள்ள தேனீர்விடுதியில் கைகுலுக்கி பேசி சமரசம் செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு முறை நான் பாராளுமன்ற பக்கம் சென்றிருந்தேன்.அங்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஐசிங்கம் அவர்கள் வீர முழக்கமிட்டு பேசிக்கொண்டிருந்தார். சுவாரசியமான அந்த சம்பவம் அடுத்த சாட்சியத்தில் வரும்…..

தேடனார்..

நன்றி தினமுரசு.

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright