|






யாழ்
குடாநாட்டில் அதிகரித்துக்
காணப்படும் பொருட்களின்
விலைகளைக் குறைத்து
நியாயமான வகையில் தரமான
பொருட்களை தாராளமாகக்
கிடைக்கச் செய்தல் தொடர்பில்
உயர்மட்ட மாநாடொன்று
இன்று(11) மாலை சமூகசேவைகள்
மற்றும் சமூகநலத்துறை
அமைச்சரும், வட மாகாணத்திற்கான
விசேட செயற்பாட்டுக்
குழுவின் தலைவருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்களின்
தலைமையில்
கொழும்பிலுள்ள அமைச்சு
அலுவலகத்தில் இடம்பெற்றது.
கொழும்பிலிருந்து
யாழ் குடாநாட்டுக்கு
பொருட்களை கொண்டு
செல்வதில் ஏற்படுகின்ற
அதிக செலவீனங்கள், தாமதங்கள்,
பொருட்கள் வீண்விரயமாதல்,
பொருட்கள் காணாமல் போதல்
போன்ற பல்வேறு விடயங்கள்
தொடர்பில் இமமாநாட்டில்
வரிவாக ஆராயப்பட்டு
அவ்வாறான குறைபாடுகளைத்
தீர்க்கும் வகையில்
பல்வேறு தீர்மானங்கள்
எடுக்கப்பட்டன.
அதேநேரம் உணவுப்
பொருட்கள் உட்பட ஏனைய
பொருட்கள் அனைத்தும்
தரம் பேணப்பட
வேண்டும் என்பதை இங்கு
வலியுறுத்திக்
கூறியுள்ள அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள்,
நியாயமான விலை பேணப்படல்
வேண்டும் என்பதையும்,
குடாநாட்டு சந்தையில்
தாரளமாகவும், இலகுவாகவும்
பொருட்களைப் பெறக்கூடிய
நிலை நுகர்வோருக்கு
ஏற்பட வேண்டும் என்பதையும்
சுட்டிக்காட்டினார்.
இம்மாநாட்டில், அத்தியாவசிய
சேவைகள் ஆணையாளா நாயகம்,
இலங்கை துறைமுக அதிகார
சபையின் உயரதிகாரிகள்,
பாதுகாப்பு அமைச்சின்
மேலதிகச் செயலாளர்,
கடற்படை உயரதிகாரி,
சமூக சேவைகள் மற்றும்
சமூகநலத்துறை அமைச்சின்
செயலாளர், கப்பல்
போக்குவரத்து
கூட்டுத்தாபன உயரதிகாரிகள்,
கொழும்பிலிருந்து
யாழ்ப்பாணத்திற்கான
கப்பல் உரிமையாளர்கள்
மற்றும் அமைச்சு அதிகாரிகள்
உட்பட பலர் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். |