அமெரிக்க
ஜனநாயகத்தின்
அறுவடைகள்
ஈராக்கிய
அகதிப்
பெண்கள்
பாலியல்
தொழிலாளர்களாக
மாற்றப்பட்டுள்ள
அவலம்
கத்தரின்
ஸோப்வ்
- மே
29 2007. உம்மு
ஹிபாவின்
16 வயது
மகள்
பக்தாதில்
இருந்த
போது
அதிகாலையில்
எழுந்து
காலைத்
தொழுகையை
நிறைவேற்றி
தனது
அன்றைய
பாடங்களை
ஆர்வத்துடன்
மீட்டும்
ஒரு
துடிப்பான
மங்கை.
ஹிஜாப்
அணிந்து
பாடசாலைக்கு
செல்லும்
அந்தப்
பெண்ணின்
கல்வி
ஆர்வமும்
எதிர்காலக்
கனவுகளும்
இன்று
அமெரிக்க
ஆக்கிரமிப்பாளர்களால்
சிதறடிக்கப்பட்டு
விட்டன.
மராபா டமஸ்கசின்
ஒரு
புறநகர்ப்
பகுதி.
இரவு
விடுதிகள்,
சூதாட்ட
கிளப்புகளுக்கு
பேர்போன
இடம்.
இன்றைய
சிரியாவில்
விபச்சாரத்தின்
கேந்திர
நிலையமாக
வேகமாக
மாறி
வருகிறது.
அமெரிக்க
ஆக்கிரமிப்பின்
நெருக்குவாரங்கள்
மென்மேலும்
அதிகரித்து
உயிர்வாழ்வதே
கேள்விக்குறியான
போது
பக்தாதை
விட்டுப்
புலம்
பெயர்ந்து
டமஸ்கசை
நோக்கி
வந்தவர்கள்
தாம்
உம்மு
ஹிபா
குடும்பத்தார்.
முற்றிய
நீரிழிவு
நோயாளியான
வயதான
தந்தை
தாயுடன்
உடைந்து
நொறுங்கிய
தனது
எதிர்காலக்
கனவுகளுடனும்
ஹிபா
இங்கே
தஞ்சமடைந்திருக்கிறாள்.
கையறுநிலையிலிருக்கும்
அவர்களுக்கு
'கைகொடுக்க'
வந்த
ஒருவர்
ஹிபாவை
மராபா
நகரின்
விபச்சாரத்துக்கு
பேர்
போன
நெடுஞ்சாலையில்
அமைந்திருக்கும்
இரவு
விடுதி
ஒன்றி
சேர்த்துவிடப்
போவதாகக்
கூறினார்.
'நாங்கள்
பெருமை
மிக்க
பாரம்பரியத்தை
உடையவர்களாக
இருந்தோம்'.
ஹிபாவின்
குரல்
அந்த
க்ளப்பின்
அதிரும்
ஒலிபெருக்கிகளினூடாக
பரிதாபமாக
ஒலிக்கிறது.
மெல்லிய
இளஞ்சிவப்பு
நிற
அரைகுறை
ஆடை
உடலைத்
இறுகத்
தழுவியிருக்க
துவண்டு
வெளியில்
தெரியும்
அவளது
தோள்கள்
மீது
மேடை
மீதெறியும்
வண்ண
விளக்குகள்
ஒளியைப்
பாய்ச்ச
அந்த
16 வயதான
பருவ
மங்கை
ஹிபா
டசின்
கணக்கான
அவள்
போன்ற
பெண்களுடன்
ஆடிக்கொண்டிருக்கிறாள்.
கீழிருந்து
உம்முஹிபா
(தாய்)
செய்வதறியாது
பார்த்திருக்க,
பெருந்திரளான
பார்வையாளர்களுக்கு
மத்தியிலிருந்து
நடுத்தர
வயதுடைய
ஒருவன்
பாய்ந்து
மேடையேறி
அவர்களுடன்
கலந்து
ஆடுகிறான்.
அசிங்கமான
களியாட்டம்
தொடர்கிறது.
'போர்
எல்லாவற்றையும்
எங்களிடமிருந்து
பறித்தெடுத்துவிட்டது'.
'எங்கள்
மானத்தையும்
சேர்த்துத்
தான்'.
அவளது
தாய்
உம்மு
ஹிபாவின்
குரல்
கம்மியபடி
வெளிவருகிறது.
டமஸ்கசில்
வசிப்போருக்கு
ஈராக்கிய
பெண்கள்
விபசாரத்தில்
ஈடுபடுத்தப்படுவது
இனிமேலும்
மறைத்துவைக்க
முடியாத
ஒரு
விடயமாக
மாறி
வருகிறது.
மத்திய
டமஸ்கசில்
கூட
பாதையோர
பழரச,
சன்விச்
கடைகளுக்கருகில்
கூடி
நிற்கும்
கும்பல்களுக்கிடையில்
நடமாடும்
'தரகு'முகவர்கள்
சமயத்தில்
'தேவையுடையோரை'
அணுகி
சர்வ
சாதாரணமாக
'ஆள்
பிடிப்பது'
நடக்கிறது.
அரபுக்களின்
கலாசாரத்தில்
நினைத்துப்
பார்க்கவும்
முடியாத
விடயங்கள்
இன்று
சாதாரணமாக
மாறிவிட்டன.
கன்னி
மரியாளின்
அருள்
அற்புதங்கள்
தெரிந்ததாக
நம்பப்படும்,
கிறிஸ்தவர்களை
மட்டுமன்றி
முஸ்லிம்
யாத்திரிகர்களையும்
கவரும்
வரலாற்றுப்
புகழ்
பெற்ற
கிறிஸ்தவ
மடாலயம்
அமைந்துள்ள
ஸயித்நயா
நோக்கிச்
செல்லும்
சாலை
இந்த
மராபா
பிரதேசத்தினை
ஊடறுத்துச்
செல்கிறது.
யாத்திரைக்கான
இந்நெடுஞ்சாலை
ஈராக்
பெண்களின்
பாலியல்
தொழில்
பேட்டையாக
வேகமாக
மாறிவருவதாக
டமஸ்கசைச்
சேர்ந்த
டாக்சி
ட்ரைவர்கள்
சொல்கின்றனர்.
விபசாரத்தில்
ஈடுபடும்
பெண்களில்
டீன்ஏஜ்
வயதினரும்
உள்ளனர்.
அனைவரும்
ஆக்கிரமிக்கப்பட்ட
ஈராக்கிலிருந்து
அகதிகளாக
இடம்
பெயர்ந்து
வந்தவர்கள்.
வேறு
தொழில்கள்
கிடைக்குமென்ற
ஆவலில்
வந்து
வஞ்சிக்கப்பட்டு
இந்த
படுகுழியில்
விழுந்தோர்
கணிசமாக
உள்ளனர்.
பெரும்பாலானோரின்
வாக்குமூலம்
இப்படித்தான்
உள்ளது.
'எமது
குடும்பங்களை
வாழவைக்க
வேறு
தொழில்
மார்க்கங்கள்
இங்கு
இல்லை'.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள
ஈராக்கை
அடுத்துள்ள
சிரியா
போன்ற
நாடுகளில்
நிதர்சனமாக
வெம்பி
வெடித்து
நாறும்
சமூக
அவலங்களின்
சாட்சிகளாக
இந்தப்
பெண்கள்
இருக்கின்றனர்.ஐக்கிய
நாடுகள்
அகதிகளுக்கான
உயர்
ஸ்தானிகரின்
அறிக்கையின்படி
சுமார்
1.2 மில்லியன்
ஈராக்
அகதிகள்
சிரியாவில்
தஞ்சம்
புகுந்துள்ளனர்.
சிரிய
அரசாங்கத்
தகவல்களின்படி
இத்
தொகை
1.2 மில்லியனை
விடவும்
அதிகமாகும்.
ஈராக்
அகதிகளின்
படு
மோசமான
பொருளாதார
நிலை
பற்றி
மேலும்
விளக்கும்
ஐ.நா.
அறிக்கை
'பெண்களின்
குறிப்பாக
கட்டிளமைப்
பருவத்தினரின்
பொருளியல்
கையறு
நிலையும்
பட்டினியும்
அவர்களை
இரகசியமாகவோ
அல்லது
ஏனைய
குடும்ப
அங்கத்தவரின்
அனுசரணையுடனோ
பாலியல்
தொழிலாளர்களாக
மாற்றியுள்ளது'
எனத்
தெரிவிக்கிறது.
பெரும்பாலும்
குடும்பத்திலுள்ள
மூத்தோர்
தமது
பொறுப்பிலுள்ள
'பாலியல்
பண்டத்தின்'
தரகர்களாய்
மாறியுள்ள
அவலத்தையும்
விபரித்துச்
செல்கிறது
அறிக்கை.
அரச
சார்பற்ற
நிறுவனங்களின்
நிவாரணப்
பணியாளர்கள்
இடம்
பெயர்ந்து
வந்துள்ள
ஆயிரக்
கணக்காக
ஈராக்கியப்
பெண்கள்
சிரியாவில்
பாலியல்
தொழிலில்
ஈடுபட்டுள்ளதாகக்
கூறுகின்றனர்.
தொடராகவும்
தீவிரமாகவும்
ஈராக்கில்
அதிகரித்து
வந்துள்ள
வன்முறைகள்
பெண்கள்
தலைமையிலான
பெருமளவிலான
குடும்பங்களையும்
மற்றும்
ஆண்
துணையின்றி
கைவிடப்பட்ட
ஏராளம்
பெண்களையும்
சிரியாவில்
குவித்துள்ளதை
காணக்கூடியதாக