<%@ Language=JavaScript %> Welcome. !

குசேலன் பட விவகார பிரச்சனையை தீர்க்க ரஜினி முயற்சி- தோல்வி!.விரைவில் வரவிருக்கும் தனது சிலம்பாட்டம் படத்தில் நயன்தாராவை தாக்கி சிம்பு வசனம்!. எந்த விஷயத்தில் எப்படி கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற உண்மை பலருக்கும் உரிய நேரத்தில் சேரனின்!

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

 

 

You are visitor No:Welcome. to Visit.angaltheaasam.com ..!

 
 

  Wanni Operation.25. August 2008 view video 

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

  T.B.C.Rodio.Live      

  B.B.C.Tamil       

Download Baamni    

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: வார்ப்பு  :: இலக்கிய :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் (கவிதைகள்) வார பலன்

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:26 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

குசேலன் பட விவகார பிரச்சனையை தீர்க்க ரஜினி முயற்சி- தோல்வி!

Kuselan movie still குசேலன் பட விவகாரத்தைத் தீர்க்க படத்தின் நாயகன் ரஜினியே முன் நின்று முயற்சி செய்து வருகிறார். ஆனால், அந்த முயற்சிகள் முழு அளவில் பலனளிக்கவில்லை.

இந்தப் படத்தைத் திரையிட்ட பிரமிட் சாய்மிரா நிறுவன திரையரங்குகள் தவிர, மற்ற திரையரங்குகளின் உரிமையாளர்கள் தாங்கள் செலுத்திய மினிமம் கேரண்டி தொகையை எடுக்க முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானதாகக் குரல் எழுப்பினர்.

படம் வெளியாகி 23 நாட்கள் மட்டுமே முடிந்திருந்த நிலையில், படம் ஓட அவகாசம் தராமல், மக்களைப் படம் பார்க்க வரவிடாமல் தடுக்கும் வகையில் தியரையரங்க உரிமையாளர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

பதிலுக்கு, இந்த தயாரிப்பாளர்களுக்கு எதிர்வரும் நாட்களில் ஒத்துழைக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சென்னையில் திரண்ட இவர்கள் அனைவரும், தங்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினிகாந்த் உதவ வேண்டும் எனக் கோரினர்.

நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது அலுவலகத்தில் சந்தித்த திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தங்களுக்கு 70 சதவிகித மினிமம் கியாரண்டி தொகையைத் திரும்பத் தர வேண்டும் எனக் கோரினர்.

இறுதியில் பிரமிட் சாய்மிரா அல்லாத திரையரங்குகளுக்கு மட்டும் விற்கப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, அவர்களிடம் பெற்ற மினிமம் கியாரண்டி தொகையில் 33 சதவிகிதம் வரை அதாவது 7 கோடி ரூபாய் வரை திருப்பித் தர ஏற்பாடு செய்வதாக ரஜினிகாந்த் உறுதியளித்தார்.

இந்தத் தொகையை ரஜினிகாந்த் செலுத்த வேண்டியதில்லை என்றும் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரமிட் சாய்மிராவிடமிருந்து வாங்கிக் கொடுத்தால் போதும் என்றும் இந்தப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பாலச்சந்தரிடம் எக்காரணம் கொண்டும் பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், தானே அந்தப் பணத்தைக் கொடுத்து விடுவதாகவும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் பிரமிட் சாய்மிரா மற்றும் ஜிபி விஜயகுமார் இருவரும் இந்தத் தொகையில் ஒரு பகுதியைத் தர முன்வந்துள்ளனர்.

இதைத்தவிர பிரமிட் சாயமிராவின் சரோஜா படத்தையும் குறைந்த விலையில் தர ஒப்புக் கொண்டுள்ளார்களாம். நஷ்ட ஈடு வேண்டாதவர்களுக்கு மட்டும் சரோஜாவை முழுவதும் இலவசமாகத் தருவதாகத் திட்டம்.

ரஜினி சமரசம் நிராகரிப்பு:

ஆனாலும் ரஜினியின் இந்த சமரசத் தீர்வுக்கும் சில திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கு 75 சதவிகித தொகை வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.

இன்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர்கள் கூடி விவாதித்தனர்.

பின்னர் இரண்டு முக்கிய தீர்மானங்களை அவர்கள் நிறைவேற்றினர். அதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், குசேலன் பட நஷ்டம் தொடர்பாக ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர், எம்.ஜி. அடிப்படையில் வாங்கப்பட்ட தொகையில் 35 சதவீதத்தை திருப்பித் தருவதாக கூறினார்.

இதுகுறித்து இன்று கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த் கூறிய 35 சதவீத இழப்பீட்டை ஏற்க இயலாது. 70 சதவீத இழப்பீட்டை ஈடு கட்ட வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறி விட்டனர்.

எனவே இதுகுறித்து தீர்மானமாகப் போட்டு ரஜினிகாந்த், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ளோம்.

இனி எம்.ஜி. கிடையாது:

அதேபோல இனிமேல் எதிர்காலத்தில் எந்தப் படத்தையும் மினிமம் கியாரண்டி அடிப்படையில் வாங்குவதில்லை என்றும் முடிவு செய்யபப்ட்டுள்ளது என்றார்.

3 நாளாக அலையும் கர்நாடக விநியோகஸ்தர்கள்:

இதற்கிடையே, ரஜினியை சந்தித்து இழப்பீடு கோருவதற்காக 3 நாட்களுக்கு முன்பு சென்னை வந்த கர்நாடக மாநில விநியோகஸ்தர்கள், ரஜினியை சந்திக்க முடியாமல் முகாமிட்டுள்ளனராம்.

இதுகுறித்து குசேலன் பட கர்நாடக விநியோகஸ்தரான மகிந்திரா என்பவர் கூறுகையில், எங்களுக்கு குசேலன் படத்தால் ரூ. 1.60 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 70 லட்சம் ரூபாய்தான் வசூலாகியுள்ளது. இந்தப் பிரச்சினையில் ரஜினிகாந்த் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

ரஜினி சாரை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளோம். இருப்பினும் அவரை சந்திக்க முடியவில்லை என்றார்.

விரைவில் வரவிருக்கும் தனது சிலம்பாட்டம் படத்தில் நயன்தாராவை தாக்கி சிம்பு வசனம்!

Nayanatara with Simbu நயனதாரவை கடுமையாகத் தாக்கி வசனம் வைத்திருக்கிறாராம் சிம்பு.நயனும் சிம்புவும் காதலித்ததும், கண்டபடி திட்டிக் கொண்டு பின்னர் பிரிந்ததும் ஊருக்கே தெரிந்த ரகசியம்.

அதன்பிறகு பல முறை, பல வழிகளில் நயன்தாராவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ள விரும்பினார் சிம்பு. ஆனால் எதற்கும் மசிவதாகத் தெரியவில்லை நயனதாரா.

இந்நிலையில் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் நயனுடன் போஸ் கொடுக்கவும் தவறவில்லை சிம்பு.

அப்படியும் நயனதாராவிடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்காமல் போகவே, இப்போது அதிரடி தாக்குதலில் இறங்கிவிட்டார். 

விரைவில் வரவிருக்கும் சிலம்பாட்டம் கதையில் பல இடங்கலில் நயன்தாராவைத் தாக்குவது போன்ற காட்சிகளை தாராளமாக வைத்துள்ளாராம் சிம்பு.

ஒரு காட்சியில் சிம்புவின் நண்பர் ஒருவர் நயன்தாரா பற்றிக் கமெண்ட் அடிப்பது போலவும், அதற்கு சிம்பு, நயன்தாராவா போட்டுத் தாக்கு என வசனம் பேசுவது போலவும் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

இதைத் தவிர தனக்கும் நயனதாராவுக்கும் நடந்த தனிப்பட்ட உரையாடல்கள் சிலவற்றையும் படத்தில் வைத்து நயனதாராவுக்கு ஷாக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் சிம்பு.
சென்ஸார் விடுவாங்களா...?

எந்த விஷயத்தில் எப்படி கட்டுப்பாடாக இருக்க வேண்டும் என்ற உண்மை பலருக்கும் உரிய நேரத்தில் சேரனின்!

Cheran and Padmapriya உறைப்பதில்லை. அபராதம், தண்டனை என்று வந்தால்தான் திருந்துகிறார்கள்.ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனில் பேசக் கூடாது என்ற தயாரிப்பாளர் சங்கம் ஏற்கனவே ஒரு கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. ஆனால் இதனை பெரும்பாலான நடிகர்-நடிகைகள், கலைஞர்கள் பின்பற்றுவதேயில்லை.

ஆனால் இதைக் கடுமையாகக் கடைப் பிடித்தே தீருவது என்று முடிவு செய்த நடிகரும் இயக்குநருமான சேரன், உடனடியாக அதை செயலிலும் காட்டினார்.

தனது பொக்கிஷம் படத்தின் படப்பிடிப்பில் யாருமே செல்போனில் பேசக்கூடாது என கடுமையாக சட்டம் போட்டுவிட்டாராம். அதையும் மீறி யாராவது செல்போனில் பேசினால் ரூ.250 ஸ்பாட் பைன் வசூலிக்கப்படும் என அறிவித்து அதை செயலிலும் காட்டியிருக்கிறார்.

இப்படி வசூலித்த தொகை ரூ.10,000த்தை தாண்டி விட்டதாம்.

படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பின்னர் இந்த தொகை ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்தப்படும், என்று தெரிவித்துள்ளார் சேரன்.

அதேநேரம், ஆரம்பத்தில் அதிகமாகச் சேர்ந்த இந்த அபராதத் தொகை போகப்போக குறைந்துவிட்டதாம்.

அது சரி... பொது மேடைகளில் பேசும்போது உங்களுக்கும் இதே கட்டுப்பாட்டைப் பயன்படுத்தலாமா சேரன்?

'நேற்று போல் இன்று இல்லை'- இது படத்தின் பெயர். குஷ்பு தம்பி ஹீரோவாகிறார்!

Kushboo உங்கள் ஊகம் சரிதான். ரஜினி நடித்த தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பாடல் வரிதான் இது.ஆனால் இந்தத் தலைப்பை ஒரு மென்மையான காதல் படத்துக்குச் சூட்டவில்லை, திகில் நிறைந்த மாயாஜாலப் படத்துக்கு வைத்திருக்கிறார்கள்.

கதாநாயகன் யார் தெரியுமா... குஷ்புவின் தம்பியான அப்துல்லா!

இந்தப் படத்தின் விசேஷம், முழுக்க முழுக்க ஃபேண்டஸி அடிப்படையில், ஹாரி பாட்டர் மாதிரி உருவாகும் படம் இது என்பதுதான். தமிழில் ஃபேண்டஸி கதைகள் வருவதே அபூர்வமாக உள்ள நிலையில், குடும்பத்தினரைக் கவரும் விதத்தில் இப்படத்தை உருவாக்கி வருகிறார்களாம்.

தந்திரக் காட்சிகளுக்கு ஏராளமாய் செலவு செய்து வருகிறார்கள்.

ஸ்கைலாப் எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் நாயகி ப்ரியா சகாயதேவ். புதுமுகம்தான், என்றாலும் அனுபவசாலிகளுக்கு இணையாக நடித்திருக்கிறாராம் இந்தப் படத்தில்.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷம் முன்னாள் கவர்ச்சி நடிகை வினிதா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதுதான். கதாநாயகிக்கு இணையான ரோலில் நடிக்கிறாராம்.

ரஜனி ராயன் இசையமைப்பில் பாடல்கள் நன்றாக வந்திருப்பதாகச் சொல்கிறார் படத்தின் புதுமுக இயக்குநர் எம்.கவுசர்.

இந்தப் படம் முழுக்க முழுக்க வித்தியாசமான படம். அதே நேரம் இளைஞர்களைக் கவரும் பல அம்சங்களும் இந்தப் படத்தில் உள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப் பட்டுள்ளது, என்கிறார் கவுசர்.

குத்துப்பாட்டு, காமெடி எல்லாமும் உண்டாம். இல்லாட்டி எப்படி தமிழ்ப் படமாகும்!!

விஜயகாந்தின் ஆஸ்தான நாயகி என்ற பட்டத்திலிருந்து தப்பிக்க விரும்பிய வாடா...சுந்தர்.சி-ஷெரில்.

Sheryl Pinto பிண்டோ அடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படம் வாடா (ரொம்ப மரியாதையான தலைப்பு)

இந்தப் படத்தில் முதலில் நடிக்கவிருந்தவர் பாலிவுட்டின் கீதா பஸ்ரா. ஆனால் கதையைக் கேட்டுவிட்டுப் போன கீதா, பின்னர் தமிழ்நாட்டுப் பக்கம் எட்டியே பார்க்கவில்லையாம். அதன்பிறகுதான் கேப்டனின் நாயகியை அவரது அனுமதியோடு பிடித்துப் போட்டிருக்கிறார்கள்.

முதல் படத்தில் கனடா நாட்டுப் போலீஸ் வேடத்தில் வந்து டொரண்டோ தெருக்களில் கேப்டனுடன் குத்தாட்டம் போட்ட ஷெரிலுக்கு இந்தப்படத்தின் கதை ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம்.

வாடாவில் ஒரு விசேஷம்... அதில் இடம் பெறவிருக்கும் ரீமிக்ஸ் பாட்டு ஒன்று. வழக்கமாக இளையராஜாவின் பாடலை ரீமிக்ஸ் பண்ணும் சுந்தர், இந்தப் படத்தில் சிவாஜி கணேசனின் என்னடி ராக்கம்மாவை உல்டா பண்ணச் சொல்லியிருக்கிறாராம்.

இந்தப் படம் குறித்து ஷெரில் கூறுகையில்,

கதை ரொம்ப யூத்புல்லா இருந்தது. இயக்குநர் வெங்கடேஷ் ஆக்ஷன் படங்களில் எக்ஸ்பர்ட். அதனால் அவர் படத்தில் என்னைப் போன்ற நாயகிகளின் பங்கு என்ன என்பதும் புரியும். என் மனம் விரும்பிய மாதிரி இளமையான, நடிக்க வாய்ப்புள்ள காட்சிகள் நிறைய. சுந்தர் படங்களைப் பார்த்திருக்கிறேன். நிச்சயம் வித்தியாசமான ஹீரோ அவர் என்கிறார்.

நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!

டிவி விளம்பரங்கள், தொலைக்காட்சி சீரியல்கள், இசை விநியோகம் என பல 'கவர்ச்சி எக்ஸ்பிரஸ்' மேகா ராஜ்!

Megha Raj அனுபவம் பெற்ற லேகா ரத்னகுமார் முதல் முறையாக ஒரு படம் இயக்குகிறார். அதுவும் காதலும் சஸ்பென்ஸூம் கலந்த மகா த்ரில்லர் படம்.

இப்போதைக்கு நாயகி ரெடி. (அதானே முக்கியம்!) புத்தம் புதுசாக மும்பையிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்திருக்கிறார் ரத்னகுமார்.

அம்மணியின் பெயர் மேகா ராஜ். குஷ்புவும் பூஜா பட்டும் சரிவிகித்த்தில் கலந்த மாதிரி அப்படியொரு அபாரத் தோற்றம்.

தமிழ் சினிமாவுக்குதான் இவர் புதிதே தவிர, விளம்பர உலகத்துக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர். கோல்கேட், பார்லே ஜி, சிட்டி வங்கி, ரோட்டோமேக் என பிரபல நிறுவனங்களின் 100க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்து அசத்தியவர் மேகா.

அனுபம் கெர் நடிப்புப் பள்ளியில் படித்த மேகா ராஜின் தந்தை ராஜ் இஸ்ரானி போஜ்புரியில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அம்மா மாடல் கோ ஆர்டினேட்டர்.

கலைக் குடும்பம் என்பதால் மேகாவும் 'தில் தோ பாகல் ஹை' படத்தில் சுட்டிப் பெண்ணாகத் தோன்றி தன் கலை ஆர்வத்தை அப்போதே காட்டிவிட்டார். ஆனாலும் தனக்கு இந்திப் படங்கள் சரிப்படாது என்று கூறிவிட்டு தமிழைத் தேடி வந்திருக்கிறது இந்த மும்பை ஓவியம்.

அப்படி என்ன தமிழ் மீது காதல்?

அது... சின்ன வயசிலிருந்தே தமிழ் படங்கள் பிடிக்கும். போன வருஷம் சிவாஜி பார்த்தேன். பிரமிச்சிப் போய்ட்டேன். இந்தியாவில் உலகத் தரத்துக்கு சவால் விடும் வகையில் க்ளீன் பொழுது போக்குப் படம் கொடுக்க முடியும் என்பதற்கு ரஜினி சாரின் சிவாஜி ஒரு உதாரணம்.

இன்னொன்று, தமிழ் படவுலகின் புரபஷனல் அப்ரோச் வேறு எங்கும் கிடையாது. அதனால்தான் எத்தனையோ இந்திப் பட வாய்ப்புகளை உதறித் தள்ளி விட்டு தமிழுக்கு வந்துவிட்டேன், என்கிறார் மேகா.

கதைக்குத் தேவையான கவர்ச்சியை நிபந்தனை போடாமல் காட்டவும் தயாராக இருக்கிறாராம்.

லேகா ரத்னகுமார் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கக் கூடும் என்று தெரிகிறது. இந்தப் படத்தின் கதையை ரத்னகுமாரின் பிஸினஸ் பார்ட்னர் எழுதியுள்ளார்.

விரைவில் படம் குறித்த அறிவிப்பு வரும் என்கிறார் லேகா...வரட்டும் வரட்டும்!

ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என குளுகுளு 'மூணாறில்' ஜிலு ஜிலு ரகஸியா!

Ragasya ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி என குளுகுளு பிரதேசங்கள் ஒன்று விடாமல் சினிமா படத் தலைப்பாக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது மூணாறு.

தம்பிதுரை எனும் புதிய இயக்குநர் இயக்கும் இந்தப் படத்தின் நாயகியாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையாகப் பேசப்படுபவர் 'சிரிச்சி சிரிச்சி வந்த சீனாதானா...' ரகஸியா. அதுவும் இரண்டு குத்தாட்டப் பாடல்களில் செமத்தியாக சூடேற்றும் விதத்தில் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறாராம் ரகஸியா.

ரஞ்சித் - ரித்திமா எனும் இரண்டு புதுமுக்கள் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.

நீண்ட நாளைக்குப் பிறகு தனியாகக் காமெடியில் கலக்க வருகிறார் செந்தில். படத்தின் தலைப்பை மூணாறு என வைத்துவிட்டு, சென்னையில் படமாக்க முடியுமா... அதனால் மூணாறு, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் ஜிலு ஜிலு எனப் படமாக்கியிருக்கிறார்களாம்.

குறிப்பாக மூணாற்றி பிரமாதமான லொக்கேஷனில் ரகஸியாவை வைத்து எடுக்கப்பட்டுள்ள ஒரு பாடல், ரசிகர்களைத் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

ரெக்கார்ட் டான்ஸ் ரேஞ்சுக்குப் போய்ட்டாங்களோ?

மீனாட்சி! எனது உதடுகள் அழகானவை என்று பல ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

Meenakshi இதுவரை சினிமாவில் முத்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்தால் நடிப்பேன். அதிலும் கமல்ஹாசனுடன் முத்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே ரெடி என்கிறார் கருப்பசாமி குத்தகைதாரர் புகழ் மீனாட்சி பகிரங்கமாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.

கொல்கத்தா கண்ணழகி மீனாட்சி, கருப்பசாமி குத்தகைதாரர் மூலம் தமிழுக்கு வந்த தங்கச்சிலை. முதல் படத்திலேயே நடிப்பாலும், நடனத்தாலும் அனைவரையும் கவர்ந்திழுத்த மீனாட்சி, இடையில் சின்ன கேப் விட்டு, இப்போது கை நிறையப் படங்களுடன் நயனதாராக்களையும், திரிஷாக்களையும் நடு நடுங்கவைக்க வருகிறார்.

லாரன்ஸுடன் ராஜாதி ராஜா, பெருமாள், த.நா. 07 ஏ.எல்.4777 உள்பட பல படங்கள் மீனாட்சி கைவசம். சந்தோஷப் பூரிப்புடன் இந்தப் பட்டியலை வெளியிட்ட மீனாட்சி செய்தியாளர்களிடம் பல சமாச்சாரங்களையும் பகிர்ந்து கொண்டார்.

எனக்கு கண்களும், உதடுகளும் வெகு அழகு என்று பலரும் கூறியிருக்கிறார்கள். குறிப்பாக ஆண்கள்தான் நிறையப் புகழ்ந்துள்ளனர். உதடுகள் அழகாக இருந்தால் உடனே முத்தக் காட்சி வைத்து விடுவார்கள். ஆனால் எனக்கு இதுவரை அப்படி வாய்ப்பு அமையவில்லை.

முத்தக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் தாராளமாக நடிப்பேன். அதிலும் கமல்ஹாசனுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் உடனே தயார்.

எனக்கு கிளாமர் காட்டுவதில் எதிர்ப்பு கிடையாது. அதற்கு நான் பொருத்தமாக இருக்க வேண்டும். எனக்கு நீச்சல் உடை போட்டால் பொருத்தமாக இருக்காது. எனவே அப்படி நான் நடிக்க மாட்ேடன்.

விதம் விதமான கேரக்டர்களில் நடிக்க ஆசையாக இருக்கிறேன். நல்ல
கதாபாத்திரம் கிடைக்க வேண்டும். நடிப்புக்கு நல்ல வாய்ப்பு வேண்டும்.

இதுவரை கல்யாணமான ஹீரோக்களுடனேயே நடித்து வருகிறேன். எனவே எனக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. பாதுகாப்பாகவும் இருக்கிறது என்கிறார் மீனாட்சி.

நிறைய தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும். தமிழ் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான் மீனாட்சியின் லட்சியமாம்.

மீனாட்சிக்கு இப்போது வயது 21 நடக்கிறதாம். 30 வரைதானாம் நடிப்பு. பிறகு செட்டிலாகி விடுவாராம்.

நெல்லை, பாளையங்கோட்டையில் திரையிடப்பட்ட மலையாளப் படம் ஆபாசமாக இருந்ததாக கூறி ஷகீலாவுக்கு சம்மன்!  

Shakeela தொடரப்பட்ட வழக்கில், அந்தப் படத்தில் நடித்திருந்த கவர்ச்சிப் புயல் ஷகீலா உள்ளிட்ட 9 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என நெல்லை கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.

கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி பாளையங்கோட்டையில், உள்ள ஒரு தியேட்டரில் ஷகீலா நடித்த இளமைக் கொண்டாட்டம் என்ற படம்திரையிடப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் ஷகீலாவின் ஆபாசக் காட்சிகள் இணைக்கப்பட்டு ஓடுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் மாறுவேடத்தில் சென்று படத்தைக் கண்காணித்தனர்.

அப்போது ஷகீலாவின் ஆபாச பிட் காட்சிகள் ஓட்டப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ஆபாசப் படச் சுருளைக் கைப்பற்றினர்.  இதையடுத்து ஷகீலா, அவருடன் நடித்திருந்த நடிகர் திணேஷ், தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவம் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதில் பாஸ்கர் தலைமறைவாகி விட்டார். மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால் ஷகீலா மட்டும் இதுவரை ஆஜராகவில்லை.

இந்த நிலையில், வருகிற செப்டம்பர் 26ம் தேதியன்று ஷகீலா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் ஜெசிந்தா மார்ட்டின் உத்தரவிட்டார். அதேசமயம், பாஸ்கரனைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

த்ரிஷா! சொந்தக்குரலில் பாடுவது இருக்கட்டும், சொந்தமா எப்போ டப்பிங் பேசப் போறீங்க?

Trisha குருவி நொண்டியடித்த பிறகு, சொல்லிக் கொள்கிற மாதிரி வேறு படம் எதுவும் இல்லாததால் ரொம்ப அப்செட்டிலிருக்கிறார் த்ரிஷா. முன்பு நடிக்க நேரமில்லாத அளவுக்கு தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தன. இவரோ, ஒரு கோடி இரண்டு கோடி என சம்பளம் கேட்டு மிரள வைத்துக் கொண்டிருந்தார்.

குருவிக்குப் பின்னர் நிலைமை அப்படியே மாறிப்போனது. இப்போதைக்கு அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் ஆகிய இரு படங்கள்தான் தமிழில்.

தெலுங்கில் இரண்டே படங்கள். ஒன்றில் தொலைக்காட்சிப் பாடகியாக வருகிறாராம். இந்த வேடத்தில் அச்சு அசலாகத் தோன்ற வேண்டுமே என்பதற்காக, சரியான உடல் மொழியைக் (தப்பா எடுத்துக்காதீங்க... அதான் பாடி லாங்குவேஜ்!) கற்றுக் கொண்டாராம் த்ரிஷா.

உண்மையில் த்ரிஷாவுக்கு பாடுவதில்தான் அலாதி ஆர்வமாம்.

'நடிப்பை விட பாடுவதில்தான் ஆரம்பத்தில் எனக்கு அதிக ஆர்வமிருந்தது. ஆனால் வாய்ப்பு அமையவில்லை. தெலுங்கில் 'கிங்' என்ற படத்தில் தொலைக் காட்சிப் பாடகியாக நடித்து வருகிறேன். இதில் அந்த வேடத்தில் சிறப்பாகத் தோன்ற முன் பயிற்சி எடுத்துக் கொண்டேன்..' என்கிறர் த்ரிஷா.

விரைவிலேயே ஏ.ஆர். ரஹ்மான இசையில் பாடப்போவதாகவும் கூறியுள்ளார்.

'ரஹ்மான் இசைக்கு தீவிர விசிறி நான். ஒருமுறையாவது அவரது இசையில் பாடிவிடத் துடித்துக் கொண்டிருந்தேன், இப்போது அப்படியொரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. விரைவில் இதுபற்றி அறிவிப்பேன், என்கிறார் த்ரிஷா.

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright