<%@ Language=JavaScript %> Welcome. !

குசேலன் படத்தால் நஷ்டம்-ரஜினிக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!.விக்ரமுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்! மணிரத்னம் இயக்கும் புதிய தமிழ்-இந்தி இரு மொழிப் படத்தில்.சமீபத்தில் திரைக்கு வந்த சத்யம் படத்தில் நயனதாரா காட்சிகளை வெட்டிய விஷால்! 

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

 

 

You are visitor No:Welcome. to Visit.angaltheaasam.com ..!

 
 
 

  Wanni Operation.17. August 2008 view video 

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

  T.B.C.Rodio.Live      

  B.B.C.Tamil       

Download Baamni    

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: வார்ப்பு  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் (கவிதைகள்) வார பலன்

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:19 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

குசேலன் படத்தால் நஷ்டம்-ரஜினிக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!

Rajini சென்னை:குசேலன் படத்தால் தங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை தயாரிப்பாளர்கள் கே. பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் திருப்பி தர ரஜினி உதவ வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். பன்னீர் செல்வம், காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. பழனியப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் நேற்று கூறியதாவது:

குசேலன் படத்தில் எனது பங்கு 25 சதவீதம்தான் என ரஜினி கூறினார். ஆனால் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் நேரத்தில், இது ரஜினி படம், அவர் படம் முழுக்க வருகிறார் என இயக்குனர் வாசு தெரிவித்தார்.

படத்தை திரையிட நாங்கள் வாங்கும்போதும் வாசு இதையே கூறினார். எனவே அதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கினோம். தமிழகம் முழுவதும் 375 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டது.

ஆனால் படம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனால் வசூல் குறைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே இதைச் சரிகட்ட நாங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கொடுத்த தொகையை சதவிகித கணக்கு வைத்து, 'மினிமம் கியாரண்டி' தொகையை டெபாசிட்டாக வைத்துக்கொண்டு, மீதித் தொகையை திருப்பித் தருமாரு கோருகிறோம்.

ரஜினி தலையிட வேண்டும்:

இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்களை விட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தைத்தான் நாங்கள் அதிகம் நம்புகிறோம். இந்தப் படத்தில் தன்னுடைய பங்களிப்பு குறித்து அவர் ஏற்கெனவே தெளிவாகக் கூறியும், அதை எங்களிடம் தவறாகச் சொல்லி வியாபாரம் செய்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.

இது நல்ல படம்தான். ஆனால் தவறாக வியாபாரம் செய்யப்பட்ட படம். அதுதான் பிரச்சினையே!

எனவே மனித நேயமிக்க சூப்பர்ஸ்டார் ரஜினி சார் இதில் தலையிட்டு எங்களுக்கு பணத்தை வாங்கித் தர வேண்டும், என்றார் பன்னீர் செல்வம்.

ரஜினி இந்தப் படத்தில் கவுரவ நடிகர்தானே... அப்படியே கதாநாயகனாக இருந்தாலும், அவரிடம் நீங்கள் எப்படி பணத்தைத் திருப்பித் தரக் கேட்பீர்கள்? என்ற நிருபர்களின் கேள்விக்கு, நீங்கள் சொல்வதை நாங்கள் மறுக்கவில்லை. நாங்கள் இப்போதும் ரஜினி சாரிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களிடம் எங்களால் நியாயமாகப் பணத்தைப் பெற முடியுமா எனத் தெரியவில்லை. எனவேதான் ரஜினி சார் இதில் தலையிட வேண்டும் என்கிறோம். அவருக்கு எங்களைப் போன்றவர்களின் கஷ்டம் தெரியும்.

பாபா படத்தில் நாங்கள் கேட்காமலே கூப்பிட்டுப் பணத்தைக் கொடுத்தார் ரஜினி. இப்போது சொல்கிறோம், பாபா தோல்விப் படமல்ல. அதற்கே நஷ்ட ஈடு கொடுத்தவர்தான் ரஜினி. அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரின் காதுகளுக்கு இந்த விஷயம் போக வேண்டும், இந்த வியாபாரத்தில் நடந்த உண்மையான விஷயங்கள் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, என்றார்.   

படத்துக்கான நஷ்டத்தை திருப்பி தராவிட்டால் கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆகஸ்ட் 23-ம் தேதி சென்னையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் கலந்து ஆலோசிக்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம்-திருவள்ளூர் மாவட்ட தியேட்டர் அதிபர்கள் சங்க செயலாளர் பி. கண்ணப்பன், பொருளாளர் ஆர். சுந்தர் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

ரூ.10 கோடி உத்தரவாதம்:

இந்தப் படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட ரூ.10 கோடியை திருப்பித் தருவதாக ரஜினிகாந்த் ஏற்கெனவே பிரமிட் சாய்மிராவிடம் உறுதியளித்திருந்ததை நேற்று வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் அந்தத் தொகையில் தங்களுக்கான பங்கு உடனடியாக உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு என்று திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

விக்ரமுக்கு ஜோடி ஐஸ்வர்யா ராய்! மணிரத்னம் இயக்கும் புதிய தமிழ்-இந்தி இரு மொழிப் படத்தில்.

Vikram with Asin ஐஸ்வர்யாவுடன் ஜோடியாக நடிப்பதை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் விக்ரம்.ரூ.120 கோடி பட்ஜெட்டில் மணிரத்னம் பிரமாண்டமாக உருவாக்கும் இந்திப் படம் ராவண். ராமாயணக் கதையின் நவீன வடிவமாக மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தில் அபிஷேக்பச்சன்-ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்கள்.

இதே படத்தின் தமிழ் பதிப்பில் விக்ரம்-ஐஸ்வர்யா ஜோடி போடுகிறார்கள். அபிஷேக் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து விக்ரம் கூறியிருப்பதாவது:

மணிரத்னம் சாரின் இந்திப் படத்திலும் நான் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். ஆனால் அந்த வேடம் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. ஆனாலும் ஒரு சின்ன ஏக்கம். முதல்முதலாக நான் நடிக்கும் இந்திப் படத்தில் ஹீரோவாக நடிக்க முடியவில்லையே என்பதுதான். ஆனால் மணிரத்னம் போன்ற ஜாம்பவான் படத்தில் எந்த வேடமும் தரமானமாதாகத்தான் இருக்கும். 

அதன் தமிழ் பதிப்பில் நான்தான் ஹீரோ. ஐஸ்வர்யா ராய்தான் நாயகி. அபிஷேக், ஐஸ்வர்யா இருவரையும் எனக்கு நன்றாக தெரியும். அவர்களுடன் சேர்ந்து நடிப்பது புது அனுபவம். குறிப்பாக உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் நடிப்பது எனக்குக் கிடைத்த எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஷூட்டிங் துவங்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..., என்றார் விக்ரம்.

சமீபத்தில் திரைக்கு வந்த சத்யம் படத்தில் நயனதாரா காட்சிகளை வெட்டிய விஷால்!

Nayanatara with Vishal நயனதாரா நடித்துள்ள பல காட்சிகள் போரடிப்பாதாக ரசிகர்களும், விநியோகஸ்தர்களும் குறை கூறியதைத் தொடர்ந்து, 22 நிமிட காட்சிகளை வெட்டி எறிந்து படத்தை ட்ரிம் பண்ணிவிட்டதாக அறிவித்துள்ளார் விஷால்!

கடந்த வியாழக்கிழமை திரைக்கு வந்தது சத்யம். இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் விஷால். அவருக்கு ஜோடி நயனதாரா.

படம் திரையிட்டபிறகு வந்த பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் விஷாலை அதிரிச்சியடைய வைத்தன. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் பலரும், நயன்தாரா வருகிற பாடல் காட்சிகள் மற்றும் குழந்தைகளுடன் அவர் அடிக்கும் லூட்டி, இந்தியன் பட நகைச்சுவைக் காட்சிகளை ரீமேக் செய்திருந்தது போன்றவற்றை நீக்கிவிடுமாறு விஷாலைக் கேட்டுக் கொண்டனர்.

அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, அந்தக் காட்சிகள் அனைத்தும் வெட்டப்பட்டு படம் வேகமாக நகரும் வகையில் சரிப்படுத்தப்பட்டுள்ளதாக விஷால் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

இந்தப்படம் சரியாகப் போகவில்லை என பலரும் அதற்குள் தகவல் பரப்பி வருகிறார்கள். சத்யம் ரிலீசாகி மூன்று நாட்கள் தான் ஆகின்றன. அதற்குள் இந்தப்படம் தோல்வியடைந்து விட்டதாகக் கூறுவது அபத்தம். தாய்மார்கள், குடும்பம் சகிதமாகப் படம் பார்க்க வருபவர்கள் இந்தப் படத்துக்கு வர இன்னும் சில தினங்கள் பிடிக்கும்.

இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இருந்தாலும், ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் கருத்துக்களுக்கு இணங்க, போரடிக்கும் பல காட்சிகளைக் குறைத்துள்ளேன். மொத்தம் 22 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டு, இப்போது படம் படு விறுவிறுப்போடு அமைந்துள்ளது, என்றார்.

வெட்டப்பட்ட காட்சிகளில் பெரும்பாலும் நயனதாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நயன்-விஷால் நடித்த ஒரு பாடலும் முழுமையாக வெட்டப்பட்டு விட்டதாம்.

எதையும் அளவோடு தரவேண்டும். கவர்ச்சியே என்றாலும் அளவுக்கு மிஞ்சினால்...?

டிவி பேட்டிக்கு வந்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல் மல்லிகா உத்தரவு-வெடித்த ராவல்!

Mallika Sherawat சூட், கோட் போட்டு வந்தால்தான் நான் பேட்டி தருவேன் என மல்லிகா ஷெராவத் கூற கடுப்பாகிய ராவல் கொதித்தெழுந்து விட்டார்.பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல், மல்லிகா ஷெராவத், சர்ச்சைப் புயலாகவும் மாறியிருக்கிறார்.

மல்லிகா ஷெராவத், ராகுல் போஸ், பரேஷ் ராவல் நடித்துள்ள படம் 'மான்கயே முகல் ஏ ஆஸம்'. இப் படம் தொடர்பான நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு, மும்பையிலுள்ள ஒரு தனியார் டி.வி. சேனலின் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்கு குர்தா, பைஜாமா அணிந்து வந்திருந்தார், பரேஷ் ராவல்.

அப்போது அங்கு வந்த மல்லிகா ஷெராவத் பரேஷ் ராவலை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு விறுவிறுவென தன் காருக்குப் போய் விட்டாராம்.

பரேஷிடம் தயங்கியபடி வந்த அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், உங்க உடை மல்லிகாவுக்கு பிடிக்கல, நீங்க கோட் சூட் போட்டால்தான் அவர் பேட்டி தருவாராம். அவரோட பேட்டி ரொம்ப முக்கியம். ப்ளீஸ் சார், நாங்களே கோட் சூட் தரோம். நீங்க அத போட்டுக்கிட்டா போதும், என்று சொல்லி முடிப்பதற்கு முன் வெடித்து விட்டாராம் பரேஷ்.

நான் எந்த உடை போட்டா இவங்களுக்கு என்ன... நான் வரவில்லை, என்று கத்தியபடி அரங்கத்தை விட்டு வெளியே வந்து விட்ட பரேஷின் காலில் விழாத குறையாக சமாதானப்படுத்தி கோட் சூட் போட சம்மதிக்க வைத்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். பிறகுதான் அரங்கத்துக்குள்ளேயே வந்தாராம் மல்லிகா.

மல்லிகா 'சமத்து'ன்னு பெயர் வாங்குங்க ஷெராவத்!

எனக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க ஆசைதான்.

Sundar C with Namitha ஆனால் அவர்கள் தரும் இம்சை தாங்காமல் தான் கதாநாயகியாக புதுமுகங்களை நடிக்க வைக்கிறேன் என்கிறார் சுந்தர் சி.

தெலுங்கில் வெற்றி பெற்ற படம், ஆக்ஷன் துரியோதனா. இப்படம் 'தீ' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜி.கிச்சா இயக்கும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக நமீதாவும் ராகிணியும் நடித்துள்ளனர்.

உங்கள் படங்களில் நிறைய புது நடிகைகளை மட்டுமே நடிக்க வைப்பது ஏன்? என்ற கேள்விக்கு சமீபத்தில் சுந்தர் அளித்துள்ள பதில் சுவாரஸ்யமானது.

நான் இயக்குனராக இருந்த போதும், சரி, இப்போதும் சரி புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதையே விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள். அதே சமயம் முன்னணி நடிகைகள் செய்யும் இம்சை தாங்க முடிவதில்லை. அவர்கள் கேட்கும் சம்பளமும் அதிகம் உள்ளது.

அதனால்தான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். தீ படத்தில் ராகிணி என் மனைவியாகவும், நமீதா காதலியாக வந்து அரசியல்வாதியாக மாறும் வேடத்திலும் நடித்துள்ளனர் என்றார்.

மேலும் விரைவிலேயே ரூ.15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதுப்படம் ஒன்றை இயக்கி நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுந்தர்.சி சொல்லும் காரணம் தீயாக இருக்கிறது!

ஏகன் படத்தில் அஜீத்துடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் பியா.

Ajith with Nayanatara தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்குவார் என ஏகன் பட வட்டாரம் தெரிவிக்கிறது.பில்லாவை முடித்த கையோடு அஜீத் நடிக்க வந்துள்ள படம் ஏகன். ராஜு சுந்தரம் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் அஜீத்துக்கு இரு ஜோடிகள். ஒருவர் நயனதாரா. இன்னொருவர் பியா. கதைப்படி பியாவுக்குத்தான வெயிட்டான ரோலாம். இதை சொல்லித்தான் நயனதாராவிடம் ஒப்புதல் பெற்றுள்ளனர்.

கவர்ச்சியில் சிறப்பாக இருக்கும் பியா நடிப்பிலும் ஓஹோவென அசத்திக் கொண்டிருக்கிறாராம். ராஜு சுந்தரம், அஜீத் ஆகியோரிடம் நடிப்புக்காக பாராட்டுக்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறாராம்.

நயனதாராவுக்கு சரியான போட்டியாக கலக்கிக் கொண்டிருக்கும் பியா, தமிழ் நாயகிகளுக்கும் சரியான சவாலாக இருப்பார் என ஏகன் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

திரிஷாவின் வேகத்திற்கு நயனாரா ஸ்பீட் பிரேக்கராக வந்து சேர்ந்தார். இப்போது நயனதாராவின் வேகத்திற்கு பியாதான் பிரேக்கரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக மற்றும் தேமுதிக கட்சிக் கொடிகளின் நிறங்களை மட்டுமே ஒரு படத்தின்.

Archana with Richard தலைப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள் படத்துக்குப் பெயர் தமிழகம்.சீக்கிரம் எல்லோரது கவனத்தையும் கவர வேண்டுமென்றால் ஏதாவது வித்தியாசமாகச் செய்தாக வேண்டுமே. சிண்டைப் பிய்த்துக் கொண்டு யோசித்ததில் புது இயக்குநர் சுரேஷ்குமாருக்குக் கிடைத்த யோசனைதான் இந்த அனைத்துக் கட்சி டைட்டில்.

ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் என்கிற ரிஷி நாயகனாக நடிக்க, வேகம் படத்தில் நடித்த அர்ச்சனா நாயகியாக நடிக்கிறார்.

மாதா மூவீஸ் சார்பில் ஏ.ஜி.அருள், பி.சந்திரசேகரன் தயாரிக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் ஏவிஎம்மில் நடந்தது. இயக்குநர் பாக்யராஜ் பாடல்களை வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பெற்றுக் கொண்டார். மக்கள் தொடர்பாளர் பெரு துளசி பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். 

முன்னதாக மூன்று பாடல்களைத் திரையிட்டுக் காட்டினார்கள். 

வருது வருது அரபுக் குதிரை..., என்னை வச்சிக்கடா, இல்ல கட்டிக்கடா... போன்ற 'கருத்தாழமிக்க' பாடல்களை முறையே பா.விஜய்யும், கவிஞர் சினேகனும் எழுதியிருந்தார்கள். ஆஸிப் அலி இசையமைத்துள்ளார்.

தமிழ் ரசிகர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கவர்ச்சி மோகினி நமீதா.

Namitha மலையாள ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் 'அவ்விட நாட்டு'ப் படம் (நீங்க எதிர்பார்க்கிற மாதிரி படம் இல்லீங்ணா இது!) ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

கலாபவன் மணிக்கு ஜோடியாக நமீதா நடிக்கும் இந்தப் படத்துக்கு பிளாக் ஸ்டாலின் என்று தலைப்பு வைததிருக்கிறார்கள்.

இரட்டை இயக்குநர்களான பிரமோத் பப்பன் இப்படத்தை இயக்குகிறார்கள். சாதா தாராவாக இருந்த நயனதாராவை கவர்ச்சிப் புயலாக்கிய பெருமைக்குரிய இயக்குநர்கள் இவர்கள்தான். மம்முட்டி நடித்த தஷ்கரவீரன் படத்தில்தான் முதல்முதலாக படுகவர்ச்சியாக நடித்து அதிர வைத்தார் நயனதாரா.

பிளாக் ஸ்டாலினில் நடிக்க நமீதாவுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் பேசியிருக்கிறார்களாம். மலையாளத் திரையுல வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாகப் பெற்றுள்ள முதல் நடிகை நமீதாதான்.

மலையாளத் திரையுலகில் பெரிய நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் கூட இன்னும் ரூ.50-60 லட்சங்கள்தான் வாங்குகிறார்கள்.  

அஞ்சாதே படத்துக்குப் பின்னர் நரேன் அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார்.

Narain with Pooja பூஜா மற்றும் மலையாளத்து ரம்யா நம்பீசனுடன் இணைந்து அவர் நடிக்கப் போகும் அடுத்த படத்திற்குப் பெயர் பந்தயக் கோழி.

புதுமுகம் வேணு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் கதை வித்தியாசமானது. ஒரு தாய்க்கும், மகனுக்கும் இடையிலான உறவைச் சொல்லும் படம். இப்படிப்பட்ட கதைகள் நிறைய வந்து விட்டதால் இக்கதையை சற்றே வித்தியாசமாக்கியிருக்கிறாராம் வேணு.

தாயின் லட்சியத்தை அடைய எப்படி மகன் போராடுகிறார், கடைசியில் எப்படி அதை சாதிக்கிறார் என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறாராம் வேணு.

சென்டிமென்ட் கலவை கலந்துள்ள இப்படத்தில் பூஜாவுக்கும், ரம்யா நம்பீசனுக்கும் நல்ல கேரக்டர்களாம். கதைப்படி பூஜாதான் நாயகி. இருப்பினும் ரம்யாவின் கேரக்டரும் சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளதாம்.

சென்னை மற்றும் பொள்ளாச்சியில் வைத்து படப்பிடிப்பை முடித்துள்ள வேணு, செப்டம்பருக்கு பந்தயக்கோழி திரைக்கு வரும் என்கிறார்.

ரம்யாவுக்கு இது இரண்டாவது தமிழ்ப் படம். ஏற்கனவே சேரனுடன் இணைந்து ராமன் தேடிய சீதையில் நடித்துள்ளார் ரம்யா. அப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. விரைவில் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்த படமும் ரெடியாகியிருப்பது ரம்யாவுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஜெய்க்கு சரியான இடத்தில் மச்சம் இருக்கும் போல ஜீவாவுக்குப் பதில் ஜெய்!

Jay with Vijayalakshmi ஜெய்க்கு சரியான இடத்தில் மச்சம் இருக்கும் போல. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் படு வேகமாக கிளம்பியிருக்கும் அவரது திரை வலம், இப்போது ஜீவாவின் படத்தில் அவருக்குப் பதில் இடம் பெறும் அளவுக்குப் போயிருக்கிறது.

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக சின்ன வேடத்தில் வந்து போனவர் ஜெய். அது அவருக்கு நல்ல முகவரியாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வந்த சென்னை 600028 படம் ஜெய்யின் நடிப்பை அடையாளம் காட்டியது.

இருப்பினும் தனி ஹீரோவாக மதுரை பாஷையில் பட்டையைக் கிளப்பிய சுப்ரமணியபுரம், ஜெய்யின் மார்க்கெட்டில் கன மழையை கொண்டு வந்து விட்டுள்ளது.

ஜெய் கூட இப்படி நடிப்பாரா என்ற ஆச்சரியத்துடன் வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனவாம். தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெய். மூன்றுமே வித்தியாசமான கதைகளாம்.

இந்த நிலையில் எதிர்பாராத ஆச்சரியமாக ஒரு படம் ஜெய்யைத் தேடி வந்துள்ளது. ஜீவா நடிக்க மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற படம் உருவாகவிருந்தது. இந்த நிலையில் திடீரென ஜீவா அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஜெய்யை அணுகியுள்ளனராம்.

ஜெய்யும் கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம். சீனியர் நடிகர் ஒருவரை நீக்கி விட்டு தன்னைத் தேடி வந்துள்ள கதை என்பதால் நிச்சயம் தனக்கு அது பெரும்வெற்றியைத் தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளாராம் ஜெய்.

ஜே ஜே-ன்னு நடிங்க ஜெய்!

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright