நடிகர்
திலகம் சிவாஜி கணேசனின் சிலை தஞ்சையில்
வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது.
மூத்த நடிகர் எஸ்எஸ்ஆர் சிலையை திறந்து
வைக்கிறார்.
சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும்
ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்
மா.நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம்
கூறியதாவது:-
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொந்த
மாவட்டமான தஞ்சையில் அவரது சிலையை
அமைக்க வேண்டும் என்று 72 கிராமங்களை
சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொண்டனர்.
இதற்காக நடராஜன் தலைமையில் ஒரு குழு
அமைக்கப்பட்டது.
சிவாஜியின் மனைவி கமலாம்மாள் உயிருடன்
இருக்கும்போதே சிலையை திறக்க ஏற்பாடு
செய்தோம். அதற்குள் அவர் மறைந்து
விட்டார். சிலை அமைப்பதற்கு முதல்வர்
கருணாநிதியிடம் நடிகர் பிரபு,
ராம்குமார் அனுமதி பெற்றனர்.
அதன்படி அவரது சிலை தஞ்சை,
புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே
அமைக்கப்படுகிறது. இதற்காக
முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்
கொள்கிறோம். மெரீனா கடற்கரையில்
வைக்கப்பட்டுள்ளதை போன்று அதே
வடிவத்தில், அதே உயரத்தில்
அமைக்கப்படுகிறது.
இந்த சிலை வருகிற 15ம் தேதி மாலை 6
மணிக்கு திறக்கப்படுகிறது. நடிகர்
எஸ்.எஸ்.ராஜேந்திரன் இதை திறந்து
வைக்கிறார். இதில் முக்கிய பிரமுகர்கள்,
கலை உலக பிரமுகர்கள் கலந்து
கொள்கிறார்கள்.
இதே போன்று நாகர்கோவில், மதுரை,
குமாரபாளையம் ஆகிய இடங்களிலும்
சிவாஜியின் சிலை விரைவில்
திறக்கப்படும். அக்டோபர் 1ம் தேதி
சிவாஜியின் 80வது பிறந்த நாள் விழா
கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர்
கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து
கொள்கிறார் என்றார்.
மறைந்த திரையுலக சாதனையாளர்களுள்
ஒருவரான சிவாஜிகணேசனைப் பற்றி
நெகிழ்ந்த பாலுமகேந்திரா!
எழுத்தாளர் தியோடர் பாஸ்கரன் எழுதிய
நூல் வெளியீட்டு விழாவில் சிவாஜியைப்
பற்றி நினைவு கூர்ந்த இயக்குநர் பாலு
மகேந்திரா கண்ணீர் விட்டு அழுதார்.
சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை
நடந்த இந்த விழாவில் ஏவி எம் சரவணன்,
இயக்குநர் கே. பாக்யராஜ் உள்பட பலர்
பங்கேற்றனர்.
சிவாஜி கணேசனை பற்றிய புத்தகத்தை பட
அதிபர் ஏவி.எம்.சரவணன் வெளியிட,
டைரக்டர் கே.பாக்யராஜ்
பெற்றுக்கொண்டார்.
மற்ற சாதனையாளர்கள் ஷம்மிகபூர்,
பி.சி.பரூவா, குருதத், மெகபூப்கான்,
சோராப் மோடி 5 பேர்களை பற்றிய
புத்தகங்களை ஏவி.எம்.சரவணன் வெளியிட,
டைரக்டர் பாலு மகேந்திரா
பெற்றுக்கொண்டார்.
விழாவில், டைரக்டர் பாலு
மகேந்திரா பேசியதாவது:
சின்ன வயதில் நான் தீவிர சிவாஜி ரசிகன்.
சிவாஜி நடித்த படங்களை முதல்நாள்,
முதல் காட்சி பார்த்து விடும் தீவிர
ரசிகன். சிவாஜி நடித்த படங்களைப்
பார்த்துவிட்டு வந்து, அந்த படத்தின்
கதைகளை என் நண்பர்களிடம் சொல்வேன்.
எனக்கு 14 வயது இருக்கும். சிவாஜி
கொழும்பு வந்திருந்தார். என் குடும்பம்
கிழக்கு இலங்கையில் உள்ள ஒரு
குக்கிராமத்தில் இருந்தது. சிவாஜியைப்
பார்க்கப் போகவேண்டும் என்று என்
பெற்றோர்களிடம் அடம் பிடித்தேன்.
அனுமதி கிடைக்கவில்லை. வீட்டைவிட்டு
ஓடிவந்து விட்டேன். எங்க கிராமத்தில்
இருந்து கொழும்பு 250 மைல் தூரம்!
கொழும்பு நகரில், மாலையில் நிகழ்ச்சி
நடந்தது. அதில் சிவாஜி கலந்துகொண்டார்.
ஸ்டைலாக மேடை ஏறினார். அந்த மேடையில்
இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி நான்
உட்கார்ந்திருந்தேன். சிவாஜி, சிம்மக்
குரலில் பேச ஆரம்பித்தார். அவர் பேசி
முடிக்கும் வரை நான் இரண்டு கைகளையும்
மேலே தூக்கி கும்பிட்டபடி
அமர்ந்திருந்தேன் (உடனே உணர்ச்சி
வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்...).
இன்றைய நடிகர்களுக்கெல்லாம் நடிப்பில்
வழிகாட்டி சிவாஜிதான். அவர் சாகவில்லை.
நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
சிவாஜி போன்ற மேதைகள் வாழ்ந்த சினிமாவை
பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடமாக
வைக்க வேண்டும்.
ஒருமுறை நான் பிரபுவை பார்ப்பதற்காக,
அவர்கள் வீட்டுக்கு சென்றேன். அப்போது
சிவாஜி மாடியில் இருந்து இறங்கி
வந்தார். நான், பிரபுவைப் பார்க்க
வந்ததாக அவரிடம் கூறினேன். ஏனப்பா,
என்னைப் பார்த்தால் நடிகராக
தெரியவில்லையா? என்றார் அவருக்கே உரிய
தோரணையில்.
சிவாஜியை வைத்து படம் டைரக்டு செய்ய
முடியவில்லை என்பதுதான் என்
வாழ்க்கையில் எனக்கு மிச்சமிருக்கும்
ஒரே வருத்தம் என்றார் பாலுமகேந்திரா.
தாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன்
பேசியதாவது:
தெய்வப்பிறவி படப்பிடிப்பு எங்கள்
ஸ்டூடியோவில் நடைபெற்றபோது, படத்தின்
தயாரிப்பு நிர்வாகியாக நான்,
சிவாஜியைச் சந்தித்தேன். அப்போது
அவருடன் பழகும் பாக்கியம் பெற்றேன்.
உலகிலேயே ஒரு நடிகர் நின்று நடித்த
இடத்தில், அவருக்கு நினைவுச் சின்னம்
அமைக்கப்பட்டு இருப்பது, ஏவி.எம்.
ஸ்டூடியோவில்தான்.
சிவாஜி நல்ல நடிகராக, நல்ல மனிதராக,
நல்ல தந்தையாக, நல்ல தாத்தாவாக, நல்ல
கொள்ளு தாத்தாவாக வாழ்ந்தார்.
இந்தியாவிலேயே சிவாஜி குடும்பம் மாதிரி
ஒற்றுமையான கூட்டு குடும்பம் வேறு
எந்த நடிகர் குடும்பத்திலும் இல்லை
என்றார்.
சூர்யா-ஜோதிகா நட்சத்திரத் தம்பதியின்
மகள் தியாவின் முதல் பிறந்த நாள்
ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள
தாஜ் பிஷர்மென் கேவ் ஹோட்டலில் நடந்த
இந்த விழாவில் சிவக்குமார், அவரது
மனைவி லட்சுமி, மகள் பிருந்தா, மகன்
சூர்யா, மருமகள் ஜோதிகா மற்றும்
அவர்களுக்கு நெருக்கமான உறவினர்கள்
மற்றும் திரையுலகப் பிரமுகர்கள்
திரளாகக் கலந்து கொண்டு குழந்தையை
வாழ்த்தினர்.
ஜோதிகாவின் அக்காவும் குழந்தைக்குப்
பெரியம்மாவுமான நடிகை நக்மாவும்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஜோதிகாவின் தந்தை சந்தர் சதானா மற்றும்
அவரது மும்பை உறவினர்களும்
நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
திரையுலகப் பிரமுகர்கள்,
கே.எஸ்.ரவிக்குமார், தரணி, கவுதம்
மேனன் உள்பட பலர் வந்திருந்து
வாழ்த்தினர்.
நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்த
கலைஞானி கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து
இந்த ஆண்டோடு 50 ஆண்டுகள் ஆகின்றனவாம்.
இதைச் சிறப்பாகக் கொண்டாட முடிவு
செய்த துபாயின் பிரபல தொழிலதிபர்
ஒருவர் கமல்ஹாசனிடம் தனது யோசனையைத்
தெரிவித்துள்ளார்.
இதற்கு ஒப்புக்கொண்ட கமல்ஹாசன்,
துபாயில் கமல்-50 எனும் பெயரில் இந்த
நிகழ்ச்சியை நடத்த ஒப்புதல்
அளித்துள்ளார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இன்னும் சில தினங்களில் வெளியாகிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள
கமலுக்கு ரூ.2 கோடி காணிக்கையாகத்
தரப்படுகிறது. ஆனால் இந்த
நிகழ்ச்சிக்காக ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள கலைநிகழ்ச்சிகள்
எதிலும் தான் பங்கேற்க முடியாது என
தெளிவாகக் கூறிவிட்டாராம் கமல்.
கமல்-50 விழாவில் தமிழ், தெலுங்கு,
மலையாளம் மற்றும் இந்திப் படவுலகைச்
சேர்ந்த திரைப் பிரபலங்கள் பலரையும்
பங்கேற்க வைக்கும் திட்டத்தில் உள்ளார்
அந்தத் தொழிலதிபர்.
வருகிற நவம்பர் மாதம் இந்த விழாவை
நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
பொதுவாக நட்சத்திங்களையோ ரீமேக்கையோ
நம்பாத இயக்குநர்களில் முக்கியமானவர்
அமீர்.
ஆனால் அவரே ஒரு படத்தை ரீமேக் செய்ய
ஆசைப்படுகிறாராம்.அமீர். அந்தப் படம்
சிவாஜி கணேசன் நடித்த பலே பாண்டியா.
அதுவும் அஜீத்குமாரை வைத்து ரீமேக்
செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறாராம்
அமீர். சமீபத்தில் ஒரு விழாவில் அமீரே
சொன்ன தகவல் இது.
அமீர் பேசுகையில், நான் அஜீத்தின்
நட்சத்திர அந்தஸ்துக்காக இதைச்
சொல்லவில்லை. அவரது உடல் தோற்றத்துக்கு
மிகப் பொருத்தமான வேடம் இது.
குறிப்பாக காமெடி ரோல்களில் ரஜினி
மாதிரி அருமையாக நடிக்கும் திறமை
அஜீத்துக்கு உண்டு. அதற்கு அவரது
வில்லன் திரைப்படமே சான்று, என
வெளிப்படையாகப் பேச, இதைக்
கேள்விப்பட்ட அஜீத்தும் ஆர்வமாக
விசாரித்துள்ளாராம்.
நமக்குக் கிடைத்த தகவல்களின் படி,
இப்படி ஒரு படம் செய்தால் என்ன என்ற
யோசனையுடன் அமீரிடம் அஜீத்தும் அவர்
மேனேஜரும் பேசியதாகத் தெரிகிறது.
இந்தப் படத்தையும் நாங்களே
தயாரிக்கிறோம் என தாங்களாகவே முன்
வந்துள்ளனராம் அய்ங்கரன் நிறுவனத்தினர்.
கருப்பு வெள்ளையில் நடிகர் திலகம்
படைத்த சாதனையை அஜீத் கலர் புல்லாக
நிகழ்த்தப்போகிறார்!
ஜப்பானின் பிரபல நடிகர் தடானோபு
அசானோவுடன் ஒரு புதிய ஜப்பானிய
படத்தில் கமல்-ஆசின்!
ஆங்கில-ஜப்பான் மொழிப் படத்தில்
நடிக்கிறார் கமல்ஹாசன். இந்தப்
படத்தில் அசானோவுடன் ஜோடியாக நடிக்கப்
போகிறவர் நம்ம ஊர் ஆசின்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜன கண மன...
இசை ஆல்பத்தை தயாரித்து இயக்கியவர்
பரத்பாலா. இவர் தயாரித்து,
இயக்கவிருக்கும் படம் 19 ஸ்டெப்ஸ்.
ஆங்கில - ஜப்பானிய மொழிகளில் தயாராகும்
இதில் ஹீரோவாக தடானோபு அசானோ
நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசின்
நடிப்பார் என்று தெரிகிறது. இவர்களுடன்
முக்கியப் பாத்திரத்தில் கமல்ஹாசன்
நடிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இப்படத்தின்
படப்பிடிப்பு அடுத்த ஆண்டு
தொடங்குகிறது. பரத் பாலா, வால்ட்
டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து
இப்படத்தை தயாரிக்க உள்ளார். மலையாள
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர்
எழுதிய கதை இது.
9-ம் நூற்றாண்டில் கேரளாவில் நடக்கும்
இந்தக் கதையில் கேரளாவின் பாரம்பரிய
தற்காப்புக் கலையான களரிப்பயட்டுவை
அசானோவுக்கு கற்றுத் தரும் கவுரவ
வேடத்தில் நடிக்கிறாராம் கமல்.
இந்த வித்தையைக் கற்றுக் கொண்டு, அதன்
மூலம் தனது எதிரிகளை அசானோ
வீழ்த்துகிறாராம்.
அசினுக்கு இதில் கேரளா ராணி வேடம்.
களரிப் பயட்டு கற்க வரும் அசானோவுக்கு
காதல் பயிற்சி அளிக்கும் கவர்ச்சி ராணி
இவர்.
இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான்
இசையமைக்கிறார். இவ்வளவு தகவல்கள்
உறுதியாகக் கூறப்பட்டாலும், படத்தில்
நடிப்பது குறித்து கமல் இன்னமும்
உறுதியாக எதையும் தெரிவிக்கவில்லை.
அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனும்
இது குறித்து இப்போது எதுவும்
கூறுவதற்கில்லை என்கிறார்.
யானை
குழிக்குள்ள விழுந்தா எறும்பு கூட எட்டிப்
பார்த்து சிரிக்குமாம்....இந்தப் பழமொழி
அடிக்கடி தமிழ் சினிமாவில் நிஜமாவதைப்
பார்க்கலாம்.
நடிகை மீனா கடைசியாக தமிழில் நடித்த படம்
பார்த்திபனுடைய இவன். அதிலும்கூட முதல்
ஹீரோயின் மறைந்த செளந்தர்யா. இவருக்கு
இரண்டாவது இடம்தான்.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது
அந்தப் படம் வெளியாகி. அதன்பிறகு மீனாவை தமிழ்
திரையுலகம் திரும்பிப் பார்க்கவில்லை. அவரும்
தன் இன்னிங்ஸ் முடிந்துவிட்டதை ஒப்புக் கொண்டு
டிவி சீரியலிலும் சில மலையாளப் படங்களிலும்
கவனம் செலுத்தப் போய்விட்டார்.
இதற்கிடையே ரஜினியின் குசேலனில் பசுபதிக்கு
ஜோடியாக நடிக்க சிம்ரன் கேட்ட சம்பளத்தைப்
பார்த்து மிரண்டு போன வாசு, மீனாவை ஒப்பந்தம்
செய்தார். படமும் வெளியாகிவிட்டது.
இப்போது படத்தின் இயக்குநரைக் குறைசொல்ல
ஆரம்பித்துவிட்டார் அம்மணி. தன் சம்பந்தப்பட்ட
காட்சிகள் நிறைய எடுக்கப்பட்டதாகவும்,
நயனதாராவுக்காக அவற்றை இயக்குநர் வாசு
குறைத்துவிட்டது, தன்னை அவமானப்படுத்துவது போல்
உள்ளதாகவும் பேட்டியளித்துள்ளார்.
மேலும், இந்தப் படத்தின் கதாநாயகி நான்தான்.
ஆனால் டைட்டிலில் என்பெயரை முதலில் போடாமல்
நயன்தாரா பெயரைப் போட்டிருக்கிறார்கள். தமிழ்
சினிமாவில் முன்னணி நடிகை நான். என்னைவிடப்
பெரிய நடிகையல்ல நயனதாரா. எனக்கு அடுத்துதான்.
குசேலனில் என்னை இயக்குநர் வாசு நடத்திய விதம்
சரியில்லை. அதற்காக நான் ரஜினியைக் குறை
சொல்வதாக நினைக்க வேண்டாம். அவர் நல்ல மனிதர்.
அன்புள்ள ரஜினிகாந்திலிருந்து இன்று வரை அவர்
ஒரே மாதிரிதான் இருக்கிறார் என்றும்
கூறியுள்ளார்.
திரும்பவும் முதல் பாராவின் முதல் வரியைப்
படித்துக் கொள்ளுங்கள்!
சத்யம்
படத்தில் விஷாலும் நயனதாராவும் படு
சூடாக நடித்த பாடல் மலேசியாவில்
நயனுக்கு முழு 'கட்'!
ரொமான்ஸ் காட்சிகளுக்கு இந்திய
தணிக்கைக் குழு ஏகப்பட்ட வெட்டுகளும்,
ஏ சர்ட்டிபிகேட்டும் கொடுத்ததல்லவா...
இப்போது மலேசிய தணிக்கைக் குழு, இந்தப்
பாடலைப் பார்த்து மிரண்டு போய்,
முழுசாகவே வெட்டி எறியச் சொல்லி
விட்டார்களாம்.
இந்தப் பாடல் காட்சி தவிர மேலும் 4
வன்முறை மிக்க மோசமான காட்சிகளுக்கும்
வெட்டு கொடுத்துள்ளதாம் மலேசிய
சென்சார் போர்டு.
மலேசிய கலாச்சாரத்துக்கு எதிராகவும்,
மக்கள் மனங்களைக் கெடுக்கும்
விதமாகவும் அமைந்த ஆபாசம் மற்றும்
வன்முறைக் காட்சிகளை ஒருபோதும்
அனுமதிக்க மாட்டோம் என மலேசிய சென்சார்
போர்டு அதிகாரிகள் விளக்கமும்
அளித்துள்ளனர்.
சத்யம் படம் நாளை மலேசியாவில்
வெளியாகிறது. இதன் சிறப்புக் காட்சி
இன்று இரவு கோலாலம்பூரில் நடக்கிறது.
இந்தக் காட்சி முடிந்து நாளை சென்னை
வரும் விஷால், நாளை இரவு சென்னையில்
நடைபெறும் சத்யம் சிறப்புக்
காட்சியிலும் பங்கேற்கிறார்.
சத்யம் படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம்
கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
ஏன் எடுக்கணும், எதற்கு
வெட்டுப்படணும்?
ஆந்திர
தொழிலதிபருடன் உல்லாசமாக இருந்ததை
படமாக எடுத்து பத்மா-தொழிலதிபர் திடீர்
சமரசம்!
ஆந்திர தொழிலதிபருடன் உல்லாசமாக
இருந்ததை படமாக எடுத்து, ரூ.10 கோடி
கேட்டு மிரட்டியதாக நடிகை பத்மா
நாராயணன் மீது வழக்கு தொடரப்பட்டதே...
நினைவிருக்கிறதா...இதில் இப்போது
இப்போது ஒரு திடீர் திருப்பம்.
நடிகை பத்மா ரூ.10 கோடி கேட்டு
மிரட்டியதாக நான் புகார் கூறவில்லை.
போலீசாரே அப்படி எழுதிக் கொண்டனர்
என்று புகார் கொடுத்த தொழிலதிபரே
நேற்று கோர்ட்டில் கூறிவிட்டார்.
சென்னை அண்ணா நகரில் வசிப்பவர்
தொழிலதிபர் பிரதீப் கொனாரே. இவர்
கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி, தென்
சென்னை துணை கமிஷனர் துரைராஜிடம்
அளித்த புகாரில், வீராசாமி பட
நாயகியும் மாடல் அழகியுமான பத்மாவுடன்,
மீனம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர
ஓட்டலுக்குச் சென்றேன்.
அங்கு இருவரும் தனியாக செக்ஸில்
ஈடுபட்டிருந்தபோது செல்போனில் என்னை
ஆபாச படம் எடுத்தார். அதைக் காட்டி
ரூ.10 கோடி கேட்டு நடிகை பத்மா என்னை
மிரட்டுகிறார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து பத்மாவை பரங்கிமலை போலீஸ்
நிலையத்துக்கு அழைத்துச் சென்று
விசாரித்த போலீசார், பத்மாவையும்
அவரது நண்பர்கள் சஞ்சய், அமீர்ஜான்,
சந்திரன் ஆகியோரையும் கைது செய்து
ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர்.
இதில் பத்மா உட்பட 4 பேரும் ஜாமீனில்
வெளி வந்தனர். சில வாரங்கள் காவல்
நிலையத்தில் நேரில் ஆஜராகி (ஹெல்மட்
அணிந்து முகத்தை மறைத்தவாரே)
கையெழுத்து போட்டு வந்தார். இந்த
வழக்கு நீதிபதி ராமநாதன் முன்னிலையில்
ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதீப்
கொனாரே, பத்மா, சஞ்சய், அமீர்ஜான்,
சந்திரன் ஆகியோர் ஆஜராயினர். பின்னர்
விசாரணையை பிற்பகலுக்கு தள்ளி வைத்தார்
நீதிபதி ராமநாதன்.
அதற்குள், பிரதீப் கொனாரேவும்
பத்மாவும் தங்கள் வக்கீல்கள் மூலம் ஒரு
மனு தாக்கல் செய்தனர். அதில்
தங்களுக்குள் சமரசம் செய்து கொள்வதாகக்
கூறியிருந்தனர்.
இதற்கு அரசு வக்கீல் வேலுச்சாமி கடும்
எதிர்ப்பு தெரிவித்தார். பணம் கேட்டு
மிரட்டல், ஆயுதம் வைத்திருத்தல்,
கூட்டாக கொள்ளை அடித்தல், கூட்டுச் சதி
ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு
செய்யப்பட்டுள்ளதால் சமரசம் செய்து
கொள்ள அனுமதிக்கக் கூடாது என்றார்.
இதையடுத்து அந்த சமரச மனுவை நீதிபதி
தள்ளுபடி செய்தார்.
பின்னர் இந்த வழக்கில் பிரதீப்
கொனாரேயிடம் அரசு வக்கீல் விசாரணை
நடத்தினார். பத்மாவுக்கும் எனக்கும்
ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டது. அவரை
மிரட்டுவதற்காக போலீஸ் நிலையத்தில்
புகார் கொடுக்க சென்றேன். ஆனால்,
போலீசார் வேறு மாதிரியாக எழுதிக்
கொண்டனர். பணம் கேட்டு அவரோ அவரது
ஆட்களோ துப்பாக்கியைக் காட்டி என்னை
மிரட்டவில்லை என்றார் பிரதீப்.
ஆசை நாயகியாக்க
பார்த்தார்-பத்மா:
நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்த
பத்மா, நிருபர்களிடம் கூறுகையில்,
எனக்கும் பிரதீப் கொனாரேவுக்கும் 3
ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. பல முறைமுறை
நாங்கள் தனிமையில் உல்லாசம்
அனுபவித்துள்ளோம். ஒருகட்டத்தில் அவர்
தன்னுடன் தொடர்ந்து இருக்கும்படி என்னை
வற்புறுத்தினார்.
சினிமா பீல்டில் நான் முன்னணியில்
உள்ளதால் அதற்கு நான் ஒப்புக்
கொள்ளவில்லை. எனக்கு என்ன அழகு
குறைந்தா விட்டது? எனக்கு வேறு
வாழ்க்கை கிடைக்காதா? என்று கூறித்
திட்டி விட்டேன்.
அவரது ஆசை நாயகியாக இருக்க மறுத்ததால்
ஆத்திரம் அடைந்து போலீசில் பொய் புகார்
கூறிவிட்டார். இப்போது சமாதானமாக
செல்லலாம் என்கிறார். என் பெற்றோர்
கூறியதால் இந்த சமாதானத்துக்கு ஒப்புக்
கொண்டேன் என்றார்.
தமிழ் சினிமாவ விட ஏகப்பட்ட லாஜிக்
மிஸ் ஆகுதே...
தன்னைவிட சீனியராகத் தெரிவதால் நவ்யா
நாயருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என
ஜெய் மறுத்ததால்!
அவள் பெயர் தமிழரசி படத்திலிருந்து
கழட்டி விடப்பட்டுள்ளார் நவ்யா
நாயர்.சர்ச்சை நாயகன் சேரனின் ஆஸ்தான
நாயகியாக அறியப்பட்ட நவ்யா நாயர்,
மோசர் பேர் தயாரிக்கும் அவள் பெயர்
தமிழரசி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இந்தப் படத்தின் நாயகனாக
சமீபத்தில்தான் சுப்பிரமணியபுரம் பட
நாயகன் ஜெய்யை ஒப்பந்தம் செய்தார்கள்.
தனக்கு ஹீரோயின் யாரென்று கேட்டதும்,
சற்று யோசித்த ஜெய், நாயகியை
மாற்றினால் நடிக்க சம்மதம்
தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே படத்தின் இயக்குநர் மீரா
கதிரவனுக்கும் நவ்யாவுக்கும்
சரிப்பட்டு வரவில்லையாம். ஞ
பிறகென்ன... நவ்யாவை எந்தப்
பிரச்சினையுமின்றி சுமுகமாகக்
கழட்டிவிட்டுவிட்டார்களாம்.
ஆகஸ்ட் 15-ம் தேதி துவங்கும்
இப்படத்துக்கு புது நாயகியை தேடிக்
கொண்டிருக்கிறார்கள்.
படமே துவங்கல... அதுக்குள்ள சண்டையா!
வாழ்க்கையில் இனி திருமணம் பற்றி
நினைத்துக் கூடப் பார்க்க
விரும்பவில்லை என்கிறார் நடிகை மீரா
வாசுதேவன்.
உன்னைச் சரணடைந்தேன், ஜெர்ரி உள்ளிட்ட
படங்களில் நடித்த, மீரா வாசுதேவன்,
பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன்
விஷாலை சில வருடங்களுக்கு முன்
திருமணம் செய்து கொண்டார். பின்னர்
கருத்துவேறுபாடு காரணமாக அவரை
விவாகரத்து செய்ய கோர்ட்டில் வழக்கு
தொடர்ந்துள்ளார்.
கணவரை விட்டுப் பிரிந்து, சென்னை
சேத்துப்பட்டில் உள்ள பெற்றோர்கள்
வீட்டில் வசித்து வரும் மீரா வாசுதேவன்,
மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து
இருக்கிறார்.
தனது மறுபிரவேச அறிவிப்பை நிருபர்களைக்
கூட்டி அறிவித்த மீரா, கூறியதாவது:
திருமண வாழ்க்கையில் இருந்து விலகி,
கொஞ்ச நாட்கள் நிம்மதியாக இருந்தேன்.
இந்த வழக்கினால் என் தொழிலுக்கு எந்த
பாதிப்பும் இல்லை.
நான், மும்பையில் வேறு ஒருவரை திருமணம்
செய்துகொண்டதாக ஒரு வதந்தியை
பரப்பிவிட்டு இருக்கிறார்கள். அது
வெறும் வதந்திதான். அதில் உண்மை இல்லை.
இனிமேல் என் வாழ்க்கையில், குறைந்த
பட்சம் 15 வருடங்களுக்கு திருமணம்
என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கல்யாணம்
பற்றி இனிமேல் நினைத்துக் கூடப்
பார்க்க மாட்டேன்.
நான் என் பெற்றோர்களுடன் சந்தோஷமாக
இருக்கிறேன். இனிமேல் என்னுடைய ஒவ்வொரு
நிமிடமும் சினிமா பற்றிய சிந்தனைதான்.
நான் நடித்து அடுத்து வெளிவர இருக்கும்
`கத்திக் கப்பல்' என்ற படம் எனக்கு ஒரு
திருப்பமாக அமையும். இந்தப் படத்தில்,
கணவரை கொலை செய்தவர்களை பழிவாங்கும்
பெண்ணாக நடித்து இருக்கிறேன்.
அடுத்து 'நீயே' என்ற புதிய படத்தில்
கலெக்டராக நடிக்கிறேன். மலையாளம்,
இந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து
வருகிறேன் என்றார்.
கவர்ச்சிக் 'குண்டாக'க் கலக்க இனி
வாய்ப்பில்லை 'தம்' வில்லி மும்தாஜ்!
கவர்ச்சிக் 'குண்டாக'க் கலக்க இனி
வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்ட
மும்தாஜ், இப்போது வில்லியாக புது
அவதாரம் எடுத்துள்ளார்.
லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் ராஜாதி
ராஜா படத்தில்தான் வில்லியாக திறமை
காட்டப் போகிறார் மும்ஸ். அதுவும்
ஆண்களைக் கண்டாலே வெறுக்கும்
பாத்திரமாம்!
வில்லத்தனத்தை சாதாரணமாகக் காட்டினால்
சரிவருமா... அதனால் வாயில் எந்நேரமும்
புகையும் சிகரெட்டோடு வேறு
வருகிறாராம்.
அவர் கூறுகையி்ல்,
இந்தப் படத்தில் முழுக்க முழுக்க
வில்லாயாகவே, அதிலும் ஆண்களைக்
கண்டாலே வெறுக்கும் கேரக்டரில்
நடிக்கிறேன். இந்தக் கேரக்டரை ரொம்ப
தத்ரூபமாகக் காட்ட சிகரெட் பிடிப்பது
போன்ற காட்சிகளை எடுத்துள்ளனர்.
விளம்பரத்துக்காக இவை
பயன்படுத்தப்படும் ஆனால் படத்தில்
அந்த மாதிரி காட்சிகள் வராது என
நினைக்கிறேன்.
அடுத்து மைலா, அரசி படங்களில்
நடிக்கிறேன். அரசியில் என்கவுன்ட்டர்
போலீஸ் வேடம்!
மலபார் போலீஸ், வீராசாமி, பட்ஜெட்
பத்மநாபன் போன்ற படங்களில் குடும்பப்
பாங்காகவே நடித்தேன். ஆனால்
கட்டிப்புடி கட்டிப்புடிடா... போன்ற
கவர்ச்சி ஆட்டத்தை மட்டுமே ரசிகர்கள்
ஞாபகம் வைத்துள்ளனர். அதற்கு நான்
என்ன செய்வது?
சரி, அதை விடுங்க... உங்க 'தம்'
மேட்டர் அன்புமணி ராமதாசுக்குத்
தெரியுமா...!