இதுவரை சினிமாவில் 83 ஹீரோயின்களுடன்
ஆடிப் பாடி, 150 பெண்களுக்கு தாலி
கட்டி சாதனை படைத்திருக்கிறார் ஒரு
நடிகர்!
யாரந்த கில்லாடி என்கிறீர்களா...
என்றும் மார்க்கண்டேயனான
சிவக்குமார்தான்.இப்போதும் ஹீரோ போலவே
இளமைத் தோற்றத்துடன் காட்சிதரும்
சிவக்குமார், தன் வீட்டிலேயே இரு
சூப்பர் ஹீரோக்கள் உருவாகிவிட்டதால்,
தன் சினிமா பயணத்துக்கு செல்ப் பிரேக்
போட்டுக் கொண்டுள்ளார்.
ஒருகாலத்தில் காதல் மன்னனாக திரையில்
வெளுத்துக் கட்டிய சிவக்குமார் மீது
இதுவரை எந்த கிசுகிசுவோ தவறான
செய்திகளோ வந்தது கிடையாது. மது,
சிகரெட் என எந்தப் பழக்கத்துக்கும்
அவர் அடிமையானதும் இல்லை. அவரது தொழில்
எதிரிகளும் போற்றும் அளவு ஒழுக்க
சீலராகவே வாழ்ந்து வந்திருக்கிறார்.
கோவையில் தான் படித்த சூலூர் அரசு
ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அறிவியல்
கண்காட்சியை நேற்று துவக்கி வைத்த
அவரிடம் இதுகுறித்து மாணவர்கள் கேள்வி
கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
மாணவர்களின் சாதனைக்கு, அடிப்படை
ஒழுக்கம் அவசியம். நான் இதுவரை
திரைப்படங்களில் 150 பெண்களுக்கு தாலி
கட்டி உள்ளேன். 83 கதாநாயகிகளுடன்
நடித்து இருக்கிறேன். ஆனால் ஒழுக்கம்
தவறியதில்லை.
மது, மாது, சூது போன்ற கெட்ட
பழக்கங்கள் என்னிடம் என்றுமே கிடையாது.
நான் சுத்தமாக இருந்ததால்தான் என்
வீட்டிலும் இரண்டு ஹீரோக்களை உருவாக்க
முடிந்தது.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் எனக்கு
கல்வி அறிவு போதித்த ஆசிரியர்கள்தான்.
எனவே மாணவர்கள் முதலில் ஒழுக்கத்தைக்
கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்கள்
ஒழுக்கத்துக்கு ஆசிரியர்கள்
முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்றார்.
முன்னதாக சூலூர் அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு கூடத்துக்கு
தேவையான ரூ.1 லட்சம் மதிப்புள்ள
உபகரணங்களை கோவை மத்திய ரோட்டரி சங்க
நிர்வாகிகள் வழங்கினர். இதனை அப்
பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கல்வி
அறக்கட்டளை தலைவர் என்ற முறையில்
சிவகுமார் பெற்று கொண்டார்.
சந்தேகமில்லை, மாணவர்களுக்கு
சிவக்குமார் ஒரு நல்ல பாடம்தான்!
இந்த நவம்பர் வந்தால் பாலா இயக்கும்
நான் கடவுள் படம் தொடங்கப்பட்டு
கிட்டத்தட்ட 3-வது ஆண்டாகப் போகிறது.
படம் ஒருவழியாக முடிந்து
விட்டதென்றாலும் எப்போது வெளியாகும்
என்று சொல்ல முடியவில்லை.படத்தின்
தாரிப்பாளர் பிரமிட் சாய்மிரா நிறுவனமோ
அல்லது இயக்குநர் பாலாவோ எந்தத்
தகவலும் சொல்ல மறுக்கிறார்கள். ஆனால்
படத்தின் நாயகன் ஆர்யாவுக்கு அபார
நம்பிக்கை.
நான் கடவுள் எனக்கு மிகப்பெரிய
நம்பிக்கையை அளித்துள்ளது. தமிழ்
சினிமாவுக்கு நிஜமான சர்வதேச
அங்கீகாரம் பெற்றுத் தரக்கூடிய
அளவுக்குத் தரமான படம் இது.
எல்லா வேலைகளும் முடிந்து ரிலீசுக்குத்
தயாராக உள்ளது. தீபாவளிக்கு
கண்டிப்பாக ரிலீசாகிவிடும், என்கிறார்
ஆர்யா.
இப்போது சர்வம் படத்தில் நடிக்கும்
ஆர்யாவுடன் முதல் முறையாக ஜோடி
சேர்கிறார் த்ரிஷா. அதிரடி ஆக்ஷன்
கதையாக உருவாகும் இந்தப் படம்
பொங்கலுக்கு ரிலீஸாம்.
சும்மா சொல்லக் கூடாது, யாருய்யா இது
என்று அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டுக்
கேட்கும் வகையில், ஆர்யா கலக்கலாக
நடித்துள்ளாராம் இப்படத்தில்,.
அப்ப, இந்த ஆண்டு பண்டிகை நாயகன்
ஆர்யாதானா!
குசேலனில் ரஜினியின் இயக்குநராக இரு
காட்சிகளில் நடித்தாலும், எனக்கு
தந்தது என நடிகை மம்தா.
குசேலனில் ரஜினியின் இயக்குநராக இரு
காட்சிகளில் நடித்தாலும், எனக்கு
மிகுந்த மனநிறைவைத் தந்தது என நடிகை
மம்தா மோகன்தாஸ் கூறியுள்ளார்.
கிராமத்து அப்பாவி பெண் கேரக்டரில்
நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது
இப்போதைய கனவாம்.
தமிழில் சிவப்பதிகாரம் படத்தில்
அறிமுகமான மலையாள நடிகை மம்தா, சரியான
வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்குப்
பக்கம் போனார். அங்கே தொடர்ந்து பல
படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.
முறையான சங்கீதம் கற்றவர் என்பதால்
பின்னணிப் பாடகியாவும் புகழ்பெற்று
விங்குகிறார் தெலுங்கில். குசேலனில்
ரஜினியை இயக்கும் சினிமா டைரக்டர்
வேடத்தில் நடித்த பிறகு அவருக்கு
தமிழிலும் வாய்ப்புகள் வரத்
தொடங்கியுள்ளன.
தெலுங்கில் இப்போது பிஸான நடிகையாகி
விட்டேன். தெலுங்கில் பல ஹீரோக்களுடன்
நடித்திருந்தாலும் சிரஞ்சீவி ஜோடியாக
நடிக்கவே விரும்புகிறேன்.
தமிழில் சிவப்பதிகாரம் படத்தில்
நடித்தேன். அதன்பின் நல்ல
வாய்ப்புக்காக காத்திருந்தேன்.
குசேலனில் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும்
வாய்ப்பு கிடைத்தது. மிகவும்
மகிழ்ச்சியான அனுபவம் அது.
வாழ்க்கையில் குசேலனில் நடித்த
தினங்களை மட்டும் மறக்க மாட்டேன்.
இப்போது குரு என் ஆளு படத்தில் நடித்து
வருகிறேன். இதில் நடிப்புக்கு
முக்கியத்துவம் உள்ள வேடம். தெலுங்கில்
வெங்கடேஷ் ஜோடியாக சின்தகயாலா ரவி
படத்தில் நடிக்கிறேன்.
இந்திய பாரம்பர்ய உடைகளில் நடிக்கவே
எனக்கு விருப்பம். ஆனால் தொடர்ந்து
எனக்கு மாடர்ன் உடையை மாட்டி நடிக்க
வைக்கிறார்கள். கிராமத்து அப்பாவி
பெண்ணாக ஒரு படத்திலாவது நடிக்க
விரும்புகிறேன். அப்படி ஒரு வாய்ப்பு
வந்தால் சம்பளம் பற்றிக் கூட
யோசிக்காமல் ஒப்புக் கொள்வேன்...
என்கிறார் மம்தா.
கிராமத்து வேடங்களில் நடிக்க நாயகிகளே
இல்லை எனப் புலம்பும் பாரதிராஜா
வாரிசுகளே... உங்களுக்கு ஒரு கிராமத்து
தேவதை ரெடி!
இந்திப் படமான ஜப் வி மெட்டின் தமிழ்
ரீமேக்கில் பரத் ஜோடியாக நடிக்க
முதலில் ஒப்புக் கொண்ட தமன்னா,
இப்போது அதில் நடிப்பதா வேண்டாமா என
யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.மோசர்
பேர் தயாரிக்கும் இப்படம் குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில
தினங்களுக்கு முன்புதான் வெளியானது.
இதில் பரத் ஜோடியாக தமன்னா நடிக்கப்
போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்
இப்போது இந்தப் படத்தில் நடிப்பது
குறித்து இன்னும் நான் முடிவு
செய்யவில்லை என தமன்னா
தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஜப் வி மெட் இந்திப் படம் எனக்கு
மிகவும் பிடித்திருந்தது. மோசர் பேர்
நிறுவனம் என்னிடம் இதுகுறித்துப்
பேசியதெல்லாம் உண்மைதான். ஆனால்
இன்னும் நான் இந்தப் படத்தில் நடிப்பது
குறித்து முடிவு செய்யவில்லை. காரணம்
நான் இன்னும் நான்கு படங்களை முடிக்க
வேண்டியுள்ளது என்கிறார்.
இந்தப் படத்தை அவர் தவிர்க்கவே
விரும்புவதாக கோலிவுட் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. காரணம் அல்லு
அர்ஜூனாவுடன் ஒரு தெலுங்குப் படத்தில்
நடிக்க பெரும் தொகை
பேசப்பட்டிருக்கிறதாம்.
'ஜப்...'பை விட 'டப்பு' முக்கியம்ல!
காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன்
வாசன் கார்த்திக் நாயகனாக நடிக்கும்
அய்யன்.
படப்பிடிப்பில் கதாநாயகி திவ்யா
பத்மினி தாவணியில் தீ பிடித்தததால்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சிங்கமுத்து மகன் வாசன்
கார்த்திக், புதுமுகம் திவ்யா பத்மினி
ஜோடியாக நடிக்கும் படம் அய்யன்.
இளையராஜா இசையமைக்க கேந்திரன் முனுசாமி
என்பவர் இயக்குநராக அறிமுகமாகும் படம்
இது. இப்படத்தின் ஷூட்டிங்,
பரமக்குடியில் 2 நாட்களுக்கு முன்
நடந்தது.
இன்னொரு பக்கம் பயத்தில் அலற
ஆரம்பித்துவிட்டார் திவ்யா பத்மினி.
உடனே படப்பிடிப்பு குழுவினர்,
ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு திவ்யாவின்
மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
பின்னர் முதலுதவி சிகிச்சை
அளிக்கப்பட்டது. இந்தப் பதட்டத்தால்
அய்யன் படத்தின் ஒரு நாள் ஷூட்டிங்
நிறுத்தப்பட்டது.
பத்திக்கிட்டது ஹீரோயின் தாவணியாச்சே
- ஹீரோவால் பதறாமல் இருக்க முடியுமா!
விக்ரம் நடித்த 'ஜெமினி'
படத்தில் 'ஓ போடு' பாடலுக்கு ஆடிய
ராணியை நினைவிருக்கிறதா.
கன்னட பட உலகுக்குப் போனவர் அங்கேயே
ஒருவரைக் கல்யாணம் செய்து கொண்டு
செட்டிலானார். பின்னர் மீண்டும்
நடிக்க வந்தார். ஆனால் ஓ போடு...
பாட்டுக்குப் பிறகு பெரிதாக ஒன்றும்
அமையவில்லை. மதமதர்ப்பான உடலுடன் சில
மலையாளப் படங்களிலும் கூட நடித்தார்.
இப்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு
தமிழுக்கு
வருகிறார்.எஸ்.ஏ.சந்திரசேகரன்
இயக்கியுள்ள பந்தயம் படத்தில் கெட்ட
ஆட்டம் போடுகிறாராம் அம்மணி.
நிதின் சத்யா நாயகனாக நடிக்கும் இந்தப்
படத்தில் சிந்துதுலானி நாயகியாக
நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் முக்கிய
வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்யும் ஒரு
காட்சியில் வருகிறார், நடிகர்
விஜய்யாகவே. எம்.ஜி.ஆர், எனும்
படத்தில் நாயகனாக நடிப்பது போன்ற வேடம்
விஜய்க்கு. நிதின் சத்யா, தீவிர விஜய்
ரசிகராக நடிக்கிறார்
இந்தப் படத்தில் 'சின்ன மாமியே...'
என்ற இலங்கை 'பப்பிசைப்' பாடல் விஜய்
ஆண்டனி இசையில் ரிமீக்ஸ்
செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாடலில்
சிந்து துலானியுடன் ஆடியுள்ளார் ராணி.
ஓ போடு பாடலை விட இந்த சின்ன மாமியே
பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகுமாம்.
இந்தக் கவர்ச்சி போதாதென்று நினைத்தாரோ
என்னமோ... மற்றொரு பாடலுக்கு மேக்னா
நாயுடுவையும் மகா கவர்ச்சியாக ஆட
வைத்துள்ளாராம் எஸ்.ஏ.சி.
எஸ்ஏ சந்திரசேகர் படமென்றால் அரசியல்
குத்து, சட்டக் குத்துகளுக்கு
பஞ்சமிருக்காது முன்பெல்லாம். இப்போது
அதனுடன் இன்னொன்றையும் சேர்த்துக்
கொள்ளலாம், கவர்ச்சிக் குத்து!
அஜந்தா,
எல்லோரா போய் பாருங்கள். அங்குள்ள
சிலைகள் எல்லாம் என்னை மாதிரிதான்
கவர்ச்சியாய், குண்டாய் இருக்கும்
என்கிறார் நமீதா.
கவர்ச்சியாக நடிப்பதற்கு கொஞ்சமும்
தயங்காத வெகு சில நடிகைகளில் நமீதாவும்
ஒருவர். அவரது சம்பளத்தை சரியாக தந்து
விட்டால் போதும், திருப்திகரமாக
நடித்துத் தருவார்.
இப்படி திகட்ட திகட்ட கிளாமராக
நடிக்கிறீர்களே என்ன காரணம் என்று
அவரிடம் கேட்டால், புது விளக்கம்
கொடுத்து அசத்துகிறார். நான் 'டிமாண்ட்
அன்ட் சப்ளை தியரி'யைத்தான்
பின்பற்றுகிறேன். அதாவது கேட்கும்
பொருளைக் கொடுப்பதுதான் எனது பாலிசி.
என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?.
பெரும்பாலும் கவர்ச்சியைத்தான்
எதிர்பார்க்கிறார்கள். அதை நான்
கொடுக்கிறேன். அதேசமயம், எனது எல்லை
என்று என்று தெரியும். கொடுக்க முடிவதை
கொடுக்கிறேன். அதிகபட்ச
எதிர்பார்ப்புகளை என்னால் நிறைவேற்ற
முடியாது.
எல்லா நடிகைகளும் ஸ்லிம் ஆக
இருக்கிறார்களே என்று நான் கவலைப்பட
முடியாது. எனக்கு என்னைப் பற்றி
மட்டும்தான் கவலைப்பட முடியும். எனது
உடல் வாகு இப்படித்தான். இதை நான்
வெறுக்கவில்லை. இப்படிப்பட்ட உடம்பு
எல்லோருக்கும் கிடைத்து விடாதே. அந்த
வகையில் நான் கொடுத்து வைத்தவள்தான்.
எனது உயரத்திற்கேற்ற உடல்வாகுதான் இது.
அஜந்தா, எல்லோரா குகைகளுக்குப் போய்
பாருங்கள். என்னைப் போன்றுதான்
அங்குள்ள பெண் சிலைகள் இருக்கும். ஒரு
சிலை கூட ஒல்லியான பெண்ணாக இருக்காது.
அந்தக் கால சிற்பிகள் முட்டாள்கள்
கிடையாது. அவர்களுக்குத் தெரியும்,
எந்தப் பெண் அழகானவள், செக்ஸியானவள்
என்று. எனவேதான் எனது உடல்வாகு
குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதே
கிடையாது. ஆண்டவன் கொடுத்த உடல் இது
என்கிறார் பெருமையாக.
எல்லாம் சரி நமீதா, இப்படியே போய்க்
கொண்டிருந்தால் எப்படி. எப்போது
கல்யாணம் என்று கேட்டால், எங்களது
ஊரில் எல்லாம் பெண்களுக்கு 19 வயதிலேயே
கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள்.
நான் இப்போதைக்கு கல்யாணம் குறித்து
யோசிக்கவில்லை. கேரியர்தான் முக்கியம்
என்று குழப்பமான பதிலைக் கொடுத்தார்.
ஒருவேளை இன்னும் 19 வயசு ஆகலையோ?
தனுஷ் படத்தில் நடிப்பதற்காக தான்
வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையைத்
திருப்பித் தந்து ஷாக்
கொடுத்திருக்கிறார் கிளாமர் தேவதை
ஸ்ரேயா.
பொல்லாதவன் தயாரிப்பாளர் கதிரேசன்
மீண்டும் தனுஷை வைத்து ஒரு படம்
தயாரிக்க முடிவு செய்தார். இந்தப்
படத்தின் நாயகியாக ஸ்ரேயாவை ஒப்பந்தம்
செய்திருந்தார்.
இந்தப் படத்துக்காக கணிசமான தொகை
அட்வான்ஸாகத் தரப்பட்டது ஸ்ரேயாவுக்கு.
ஆனால் ஸ்ரேயா கொடுத்த தேதிகளில்
தயாரிப்பாளரால் படப்பிடிப்பு நடத்த
முடியவில்லை.
காரணம், வழக்கம்போல தனுஷ்!
அடுத்தடுத்த படங்களில் நடிக்க
அட்வான்ஸை வாங்கிக் குவித்துவிட்ட
தனுஷால், இந்தப் படத்துக்கு உடனடியாக
திரும்ப முடியவில்லை. இதுகுறித்து
சமீபத்தில் தயாரிப்பாளர் கவுன்சிலில்
ஒரு ரகசிய பஞ்சாயத்து நடந்து முடிந்தது.
அதில், ஏற்கெனவே தனுஷ் ஒப்புக் கொண்ட
இரு படங்களை நடித்துக் கொடுத்த பிறகே
கதிரேசனின் படத்தில் நடிக்க வேண்டும்
என கவுன்சில் நிபந்தனை விதிக்க, அதை
தனுஷும் ஒப்புக் கொண்டார்.
ஆனால் ஸ்ரேயாவால் அதுவரை காத்திருக்க
முடியாது. காரணம் ஏற்கெனவே இந்தி,
தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் அவர்
ஒப்புக் கொண்ட 5 படங்களை முடித்துக்
கொடுத்தாக வேண்டும்.
எனவே வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்
கொடுத்துவிடுவதாகக் கூறி தயாரிப்பாளரை
வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னாராம்.
ஆனால் அவரோ இதோ அதோ என இழுத்தடிக்க,
அட்வான்ஸ் தொகைக்கான காசோலையையும், ஒரு
விளக்கக் கடிதத்தையும் நடிகர்
சங்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்
ஸ்ரேயா.
இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு
நடிகையா என வியந்து போனாராம் நடிகர்
சங்க செயலாளர் ராதா ரவி.
சத்யம் படத்துக்காக அநியாயத்திற்கு
உடலைக் குறைத்த நயனதாரா இப்போது
கொஞ்சம் போல குண்டடிக்க முடிவு
செய்துள்ளாராம்.
சத்யம் படத்தில் இதுவரை பார்த்திராத
நயனதாராவைப் பார்க்கலாம். அந்த
அளவுக்கு தனது உடலை கடுமையான உணவுக்
கட்டுப்பாடு பிளஸ் உடற்பயிற்சியின்
மூலம் குறைத்திருக்கிறார்.
படு ஸ்லிம்மாக, ெசக்ஸியாக காணப்படும்
நயனதாரா, இந்த அளவுக்கு எடை
குறைந்ததற்கு முக்கிய காரணம், படத்தில்
வரும் ஒரு பாடலுக்கு படு செக்ஸியாக
தோன்ற வேண்டும் என்பற்காகத்தானாம்.
இப்படி கஷ்டப்பட்டு எடையைக் குறைத்த
நயனதாரா படு செக்ஸியாகவும்,
ஸ்லிம்மாகவும் இருக்கிறார் என்பது
உண்மைதான். ஆனால் அது அவரது நலம்
விரும்பிகளிடையே விசனத்தை ஏற்படுத்தி
விட்டதாம்.
'சைஸ் ஸீரோ' லெவலுக்கு உடம்பைக்
குறைத்தால் எப்படி, முன்பு போலவே
கொஞ்சம் சதைப்பாங்குடன் இருந்தால்தான்
பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
இப்படிப்பட்ட ஒல்லிப்பிச்சான்
நயனதாராவை பார்க்கவே சகிக்கவில்ைல
என்று அவர்கள் கவலை தெரிவிக்க,
யோசித்துப் பார்த்த நயனதாரா மீண்டும்
கொஞ்சம் போல உடம்பை ஏற்ற முடிவு
செய்துள்ளாராம்.
இதனால் உணவுக்கட்டுப்பாட்டை லேசாக
தளர்த்தியுள்ள அவர், உடற்பயிற்சிக்கும்
சற்று பிரேக் விட்டுள்ளாராம்.
மறுபடியும் பழைய மாதிரி ஆகி விடுகிறேன்
என்று தன்னைப் பற்றி கவலையுடன்
விசாரிப்பவர்களிடம் ஆறுதலாக கூறி
வருகிறாராம்.
கமல்தான் இப்படி உடம்பை ஏற்றி,
இறக்குவதில் 'கிங்' என்பார்கள்,
நயனதாரா 'ராணி' ஆகிறாரோ?
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில்
பிரசன்னாவுடன் முதல்முறை ஜோடி
சேர்ந்தார் ஸ்னேகா.
இந்தப் படத்தின் அமெரிக்க ஷூட்டிங்கில்
இருவருக்கும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக
ஒர்க் அவுட்டாகி, படமும் சிறப்பாக
வந்துவிட்டதாம்.
பிரசன்னாவின் வில்லங்கமில்லாத இந்த
கெமிஸ்ட்ரி ஸ்னேகாவுக்குப் பிடித்துப்
போக 'அச்சமில்லை அச்சமில்லை' என
அடுத்த படத்துக்கும் தானே வலியப் போய்
கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
மூன்று நாயகர்களில் ஒருவராக பிரசன்னா
நடிக்கும் காதலிக்க நேரமில்லை
ரீமேக்கில், ஸ்னேகாதான் அவருக்கு ஜோடி.
ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லையில்
ரவிச்சந்திரன் நடித்த வேடத்தில்
பிரசன்னா நடிக்கிறார். அதே விஸ்வநாதன்
வேலை வேணும்... பாடலை ரீமிக்ஸ் செய்யத்
தயாராகிவிட்டார் யுவன் ஷங்கர் ராஜா.
பழைய படத்தில் நாகேஷ் ஏற்ற வேடத்தை
வடிவேலுவும், முத்துராமன் வேடத்துக்கு
பசுபதியும், டிஎஸ் பாலையா வாழ்ந்த
அந்த முக்கியமான வேடத்தில் எஸ்பி
பாலசுப்பிரமணியமும்
நடிக்கவிருக்கின்றனர்.
மனோபாலா தயாரிக்கும் இந்தப் படத்தின்
இயக்குநர் கே.செல்வபாரதி.
சீரியஸ் ரோல்களின் தேவதையாக அறியப்பட்ட
வங்கத்து ரெய்மா சென், காமெடியிலும்
கலக்கியுள்ளார் சி கம்பெனியில்.
வங்காளத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும்
ரஸகுல்லா ரெய்மா இதுவரை வங்காளத்திலும்,
இந்தியிலும் நிறைய சீரியஸ் ரோல்களில்
தலைகாட்டியுள்ளார். ஆனால் அது
ரெய்மாவுக்கு அலுத்து விட்டது.எனவே
காமெடி உள்பட அனைத்து விதமான கேரக்டர்களிலும்
நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
இது குறித்து ரெய்மா கூறுகையில்,
சினிமாவில் பலவிதமான கேரக்டர்கள் உள்ளன.
ஒரு நடிகரோ அல்லது நடிகையோ தனக்கு எந்த
கேரக்டர் கொடுக்கப்பட்டாலும் அதில் நடிக்க
தெரிந்திருக்க வேண்டும். எனக்கு எல்லா
வகையான கேரக்டர்கள் மீதும் ஈடுபாடு,
ஆர்வம் உண்டு. அது கமர்ஷியலோ அல்லது
ஆஃப் பீட் படமோ. அதுகுறித்து எனக்குக்
கவலை இல்லை.
எனக்கென்று இமேஜ் விழுவதை நான் விரும்பவில்லை.
நல்ல நடிகையாக அறியப்பட வேண்டும் என்பதே
எனது விருப்பம்.
நான் நடித்த பாலிவுட் படமான ஹனிமூன்
டிராவல்ஸ் பிரைவேட் லிமிட்டெட் படத்தில்
எனக்கு சீரியஸான கேரக்டர்தான். ஆனாலும்
காமெடியும் இருந்தது.
விரைவில் வெளி வரப்போகும் சி கம்பெனி
படத்தில் நான் காமெடி செய்துள்ளேன்.
இப்படம் எனது இமேஜை துடைத்தெறியும் என்று
நம்புகிறேன்.
படம் பார்க்க வருபவர்கள் சோகத்துடன்
போகக் கூடாது. சிரித்தபடி செல்ல
வேண்டும். படத்தை அனுபவித்து பார்க்க
வேண்டும். சோகம், அழுகை, உணர்ச்சிப்பெருக்கு
ஆகியவை அனைவரிடமும் இருப்பதால், அதையெல்லாம்
மறக்க சினிமாதான் ஒரே வழி. அங்கும் அதையே
காட்டினால் எப்படி.
சி கம்பெனியில் நிறைய காமெடி இருக்கிறது.
எனது கேரக்டர் ரொம்பவே காமெடியாக இருக்கும்.
படம் பார்க்க வரும்அனைவரும் நன்கு
சிரித்து மனசு லேசாகி வீடு
திரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
சி கம்பெனியில் நான் மிதுன் சக்கரவர்த்தியின்
தங்கையாக நடித்துள்ளேன். எனது ஜோடியாக
துஷார் கபூர் நடித்துள்ளார். மிதுன்
தாதாவாக வருகிறார். படம் முழுக்க
காமெடிதான்.
நிறைய மெச்சூர்டான கேரக்டர்களில் நடித்து
விட்டேன். எனது வயதுக்கேற்ற ரோல் இப்போதுதான்
கிடைத்துள்ளது. சும்மா விடுவேனா, கலக்கியுள்ளேன்
என்கிறார் ரெய்மா.