<%@ Language=JavaScript %> Welcome. !

ஷங்கர் இயக்கும் ரஜினியின் பிரமாண்ட படமான ரோபோ படப்பிடிப்பு-யுஎஸ் புறப்படும் ரஜினி!. செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அவரது தம்பி தனுஷ்.ஒரு நல்ல மனுசன எவ்வளவுதான் இது அநியாயம்ணே...!-வடிவேலு.ராதிகா-குஷ்புவுக்கு விருது; 70 படங்களுக்கு ரூ.5 கோடி மானியம்!.சமீப காலமாக ஆபாச வீடியோ-மனித உரிமை ஆணையத்தை நாடும் நயன். நிர்வாணக் காட்சி...அதிர்ந்து போன ரவி!  நிர்வாணமாக நடிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்?. பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே த்ரிஷாவின் புதுமுடிவு. இன்று ஜெனிலியாவுக்குப் பிறந்தநாள். எப்போதும் இல்லாத குதூகலத்துடன் இந்த ஆண்டுதான் பிறந்தநாள்.திருமணம் முடிந்து, தேனிலவுக்கும் கிளம்பிவிட்டது கோபிகா-டாக்டர் அஜிலேஷ் ஜோடி.    

 E-mail: eenagal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

 

 

You are visitor No:Welcome. to Visit.angaltheaasam.com ..!

 
 

Wanni Operation 06. August 2008 view video 

Wanni Operation 25th and 27th July 2008view video 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

 T.B.C.Rodio.Live      

 B.B.C.Tamil       

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: வார்ப்பு  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:07 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

ஷங்கர் இயக்கும் ரஜினியின் பிரமாண்ட படமான ரோபோ படப்பிடிப்பு-யுஎஸ் புறப்படும் ரஜினி!

Rajini ஷங்கர் இயக்கும் ரஜினியின் பிரமாண்ட படமான ரோபோ ஆகஸ்ட் 10-ம் தேதி அமெரிக்காவில் துவங்குகிறது. டப்பிடிப்பில் கலந்து கொள்ள வருகிற 9-ம் தேதி இரவு அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்.

தமிழ்ப் படம் ஒன்று படப்பிடிப்புடன் ஹாலிவுட்டில் துவங்குவது இதுவே முதல்முறை.

ரஜினி-ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்க, ரூ.150 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரமாண்டமாய் உருவாகும் ரோபோ திரைப்படத்தை அய்ங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஷங்கர் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடியாகத் தயாராகும் ரோபோ ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மெழிகளில் டப்பிங் செய்யப்படவுள்ளது.

இந்தப் படத்தின் திரைக்கதை உருவாக்கம் மற்றும் போட்டோ செஷன்கள் முடிவடைந்துவிட்டன. குசேலன் படம் வெளியான கையோடு, ரோபோவின் படப்பிடிப்பு துவங்கும் என ரஜினி அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த வாரம் குசேலன் வெளியானதும், ரோபோ படப்பிடிப்பு துவங்கும் தேதியை அறிவித்துள்ளனர் ரஜினியும் இயக்குநர் ஷங்கரும்.

ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ரோபோவின் படப்பிடிப்பு வரும் 10-ம் தேதியன்று துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் பங்கேற்க ரஜினிகாந்த் வரும் சனிக்கிழமை இரவு அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார். அவருடன் இம்முறை அவரது மனைவி லதா மற்றும் மகள் சவுந்தர்யா ஆகியோரும் அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார்கள்.

தனது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு ஐஸ்வர்யா ராய் நேரடியாக ரோபோ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

முதல் கட்டமாக பிரமாண்ட பாடல் காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஸ்டுடியோக்களிலும் ரோபோ படமாக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதன் மூலம் ஹாலிவுட்டில் நேரடியாகப் படமாகும் முதல் தமிழ் திரைப்படம் எனும் பெருமை ரோபோவுக்குக் கிடைக்கிறது.

ரோபோ படப்பிடிப்பு குறித்து நேற்று ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது:

வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி அமெரிக்காவில் துவங்குகிறது ரோபோ படப்பிடிப்பு. மிகப் பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படம் நிச்சயம் தமிழ் சினிமாவுக்கு பெருமை தருவதாக அமையும். இதன் படப்பிடிப்புக்காக வரும் சனிக்கிழமை மாலை நான் அமெரிக்கா புறப்படுகிறேன் என்றார்.

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அவரது தம்பி தனுஷ்.

Dhanush with Nayanatara இப்போது ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், அடுத்ததாக விவேக் ஓபராயை வைத்து இந்தியில் தனது 7ஜி ரெயின்போ காலனியை ரீமேக் செய்யும் திட்டத்திலிருந்தார்.

ஆனால் திடீரென தனது திட்டத்தை மாற்றிக் கொண்ட செல்வா, அடுத்த படத்தையும் தமிழிலேயே உருவாக்கப்போகிறார். புதுமையான கதை ஒன்று கிடைத்திருப்பதால், அதில் தனுஷை கதாநாயகனாக வைத்து இயக்குகிறாராம்.

படத்தைத் தயாரிக்கப் போவது வேறு யாருமல்ல, அவர்களது தந்தை கஸ்தூரிராஜாதான்.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டைக்குப் பிறகு மகன்கள் இருவரையும் இணைத்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஆர்கே பிலிம்ஸ்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தின் நாயகி மற்றும் தொழில்நுடப்க் கலைஞர்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜாதானே?

ஒரு நல்ல மனுசன எவ்வளவுதான் இது அநியாயம்ணே...!-வடிவேலு.

Vadivelu with Babylona ஒரு நல்ல மனுசன எவ்வளவுதான் சோதிக்கிறதுன்னு அளவில்லையா... இது அநியாம்ணே என்கிறார் வடிவேலு.

ஒகேனக்கல் விவகாரத்தில் அடுத்தடுத்து அந்தர் பல்டி அடித்த ரஜினிக்கு எழுந்துள்ள கண்டனத்துக்கு எதிராகத் தான் இப்படிக் கொதிக்கிறார் வைகைப் புயல்.

அவர் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமா, தமிழ் மக்கள் நல்லாயிருக்கணும்னு எப்பவுமே சொல்றவர் அண்ணன் ரஜினி. அவரைப் போயி இப்படியெல்லாம் பேசுறாங்களே நம்மாளுங்க... ரொம்ப வருத்தமா இருக்குண்ணே...

யாருக்கு எப்போ வாய்ப்புக் குடுக்கணும்னு சரியா புரிஞ்சு, தெரிஞ்சு வச்சிருக்கிறவர் ரஜினி. அவர் என்னிக்குமே நம்ம ஆளுதாங்க. அவரை வேற மாநிலத்துக்காரரா பாக்கிறதே தப்பு.

யாரைப் பத்தி யார் பேசறதுன்னே ஒரு வரைமுறை இல்லாமப் போயிடுச்சி... அதனாலதான் போற வாரவிங்கெல்லாம் ஒரு கல்ல விட்டெறிஞ்சிட்டுப் போறாய்ங்க.

பெங்களூர்ல குசேலன் ஓடலன்னா அவருக்கு என்னங்க நஷ்டம்? அவருக்கென்ன கன்னட ரைட்ஸூக்கும் சேர்த்தா காசு கொடுத்தாய்ங்க. அவருக்கு இதுல சம்பந்தமே இல்ல என்கிறார்.

ராதிகா-குஷ்புவுக்கு விருது; 70 படங்களுக்கு ரூ.5 கோடி மானியம்! 

Kushboo with Nayanatara நடிகைகள் ராதிகா, குஷ்பு உள்ளிட்ட திரைக் கலைஞர்களுக்கு கலைத்துறை வித்தகர் வழங்குகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வரும்ற 8ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ள விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

தமிழக அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையுலகில் சாதனை புரிந்தவர்களுக்கு கலைத்துறை வித்தகர் விருதுகள் மற்றும் திரைப்படக் கல்லூரி மாணவர் விருதுகளை வழங்கி வருகிறது.

அதேபோல சிறந்த சின்னத்திரைத் தொடர்கள், வாழ்நாள் சாதனையாளர்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் திட்டத்தை 2006ம் ஆண்டு அரசு அறிமுகம் செய்தது.

இதன்படி, நடிகைகள் ராதிகா, குஷ்பு, திருச்செல்வம், அபிஷேக் உட்பட 22 சின்னத்திரை கலைஞர்களுக்கான விருதுகளை கருணாநிதி வழங்குகிறார்.

மேலும் 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட தரமான தமிழ் படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 70 படங்களுக்கு மொத்தம் ரூ.4.9 கோடியையும் வழங்குகிறார் முதலமைச்சர் கருணாநிதி.

இதற்கான விழா வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடக்கிறது.

சமீப காலமாக ஆபாச வீடியோ-மனித உரிமை ஆணையத்தை நாடும் நயன்.

Nayanatara with Vishal சமீப காலமாக இணைய தளங்களில் உலாவி வருகிறது நம்பர் ஒன் நடிகையான நயனதாராவின் பெயரிலான ஆபாச வீடியோ.

இதையடுத்து மனித உரிமை ஆணையத்துக்குச் செல்ல முடிவெடுத்துள்ளார் நயனதாரா.

நயனதாராவும் சிம்புவுடன் மிக மிக 'நெருக்கமாக' இருந்த படங்கள் இரு ஆண்டுகளுக்கு முன் இணைய தளங்களை ஆக்கிரமித்தன. சிம்புவுடன் காதல் முறிந்ததாக நயன் அறிவித்தவுடன் இப்படங்கள் வெளியாகின.

அவற்றைப் பார்த்து கோபமடைந்த நயன், போலீசில் புகார் செய்தார்.

இந் நிலையில் மலையாள இயக்குநர் ஒருவருடன் நயனதாரா ஆபாச நிலையில் இருப்பதைப் போன்ற வீடியோக்கள் இணைய தளங்களிலும் எம்எம்எஸ்களாகவும் வலம் வரத் தொடங்கியியுள்ளன.

இது கிராபிக்ஸ் மூலமாக தனது பெயரைக் கெடுக்க தனது தொழில் எதிரிகள் செய்துள்ள சதி என்று கூறி மனித உரிமை ஆணையத்திடம் போக முடிவு செய்துள்ளார் நயனதாரா.

ஆனால், சிம்புவுடன் இவர் நெருக்கமாக இருந்த படங்கள் வெளி வந்தபோது போலீசுக்குப் போனவர் இப்போது போலீசுக்குப் போகாமல் ஏன் மனித உரிமை கமிஷனை நாட திட்டமிடுகிறார் என்று தெரியவில்லை.

இம்மாதிரி விஷயங்களில் மனித உரிமை கமிஷன் எந்த அளவுக்கு தலையிட முடியும் என்றும் தெரியவில்லை.

நிர்வாணக் காட்சி...அதிர்ந்து போன ரவி!  நிர்வாணமாக நடிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்?

Ravi with Kangana Ranaut இயக்குநர் ஜனநாதன் இப்படியொரு குண்டைப் போடுவார் என நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார் ஜெயம் ரவி.

பின்னே... சாக்லெட் பாயாக கலக்கிக் கொண்டிருந்தவரை, காட்டுக்குக் கூட்டிப் போய் கிட்டத்தட்ட நிர்வாணமாக நடிக்கச் சொன்னால் எப்படியிருக்கும்?

இப்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் பேராண்மை படத்துக்காகத்தான் அப்படியொரு 'மகா ரிஸ்க்' எடுக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.

இந்தப் படத்துக்காக ரவியை ஒப்பந்தம் செய்தபோது, படத்தின் ஒருவரிக் கதையை மட்டும்தான் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன். அதுவே மிகவும் சுவாரஸ்யமாக இருந்த்தால் மீதிக் கதையைக் கூடக் கேட்காமல் ஒப்புக் கொண்டாராம் ரவி (மீதிக் கதையைக் கேட்டாலும் சொல்கிற ரகமில்லை இந்த இயக்குநர்!).

இப்போது முள்ளுக்காடு எனும் வனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஏராளமான மும்பை மாடல்கள் மற்றும் பொது மக்கள் குழுமியிருக்க, திடீரென்று வந்த இயக்குநர் ஜனநாதன், அடுத்த காட்சியில் கிட்டத்தட்ட நீங்க நிர்வாணமாத்தான் நடிக்கணும் என ரவியிடம் கூறிவிட்டாராம்.

அதிர்ந்துபோன ஜெயம் ரவி முதலில் மறுத்துவிட, இயக்குநர் தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளவே இல்லையாம். தனது அண்ணனுக்கும் தந்தைக்கும் செல்போனில் தகவல் சொல்ல, அவர்களின் கோரிக்கைக்கும் ஜனநாதன் இறங்கி வரவில்லையாம்.

வேறு வழியின்றி கூடியிருந்த கூட்டத்தைக் கலைக்கச் சொல்லி, அவர்கள் அனைவரும் போன பிறகுதான் அந்தக் காட்சியில் நடித்தாராம் ரவி.

இந்தக் காட்சியை நினைத்து மிகவும் வருந்திய ஜெயம் ரவி ஒரு நாள் முழுக்க சாப்பிடாமலேயே பட்டினி கிடந்தாராம். கடைசியில் அவரது அப்பா மோகன் சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தாராம்.

வருத்தப்படாதீங்க... கோவணத்தோட நடிச்ச கமலால்தான் உலக நாயகனாக ஜொலிக்க முடிந்தது!

பார்ட்டிக்குப் போகாம இருக்க முடியலியே த்ரிஷாவின் புதுமுடிவு.

Trisha சாயங்காலம் ஆனா பார்ட்டிக்குப் போகாமல் இருக்க முடியல, என்று புலம்பத் தொடங்கிவிட்டாராம் த்ரிஷா.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்த த்ரிஷாவை இறக்கிவிட்டு அந்த இடத்தில் இப்போது உட்கார்ந்து கொண்டிருப்பவர் நயன்தாரா.

தனது இந்த நிலைக்குக் காரணம் உடல் தோற்றத்தில் தெரியத் தொடங்கியுள்ள தளர்ச்சிதான் என்பதைப் புரிந்து கொண்ட த்ரிஷா, தனக்கு வேண்டிய அழகியல் நிபுணரைக் கலந்தாலோசித்தாராம்.

தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியில் இறங்குவதுதான் ஒரே வழி என்று நிபுணர் சொல்லிவிட இப்போது, அழகை மேம்படுத்தும் உணவுகள், உடற்பயிற்சிகள் என த்ரிஷா மும்முரமாகிவிட்டாராம்.

ஆனாலும், அழகு நிபுணர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் அவரால் கடைப்பிடிக்க முடியவில்லையாம். அது மாலை நேர விருந்துகள் மற்றும் டிஸ்கொத்தேக்களுக்குச் செல்லாமல் தவிர்ப்பது.

இந்த விருந்துகளுக்குப் போவதால் தூக்கம் கெடுகிறது. அதுவே அழகையும் கெடுக்கிறது, என நிபுணர் சொன்னதைக் கடைப்பிடிக்க முடியாமல் தவிக்கிறாராம் அம்மணி.

படத்துக்குப் படம் ஒரே மாதிரி கவர்ச்சியாக நடிப்பதும் தனது கேரியரில் ஏற்பட்ட தொய்வுக்குக் காரணம் எனப் புரிந்து கொண்ட த்ரிஷா, இனி வரும் படங்களில் கவர்ச்சித் தோற்றத்துக்கு கடிவாளம் போடும் முடிவிலிருக்கிறாராம்.

அடுத்து வெளிவரும் அபியும் நானும், சென்னையில் ஒரு மழைக்காலம் இரண்டிலுமே த்ரிஷாவுக்கு கவர்ச்சியில்லாத கண்ணிய வேடம்தானாம்.

இன்று ஜெனிலியாவுக்குப் பிறந்தநாள். எப்போதும் இல்லாத குதூகலத்துடன் இந்த ஆண்டுதான் பிறந்தநாள்.

Genelia இன்று ஜெனிலியாவுக்குப் பிறந்தநாள். எப்போதும் இல்லாத குதூகலத்துடன் இந்த ஆண்டுதான் பிறந்தநாள் கொண்டாடியதாகத் தெரிவிக்கிறார் ஜெனிலியா.

காரணம் இந்த ஆண்டு அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே மிகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளன.

தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியம், இந்தியில் ஜானே து ய ஜானே ந இரண்டும் அவரை ஒரு சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியுள்ளன.

இதனால் இன்றைக்கு இந்திய அளவில் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்த வண்ணமுள்ளன.

இதுகுறித்து ஜெனிலியா இப்படிக் கூறுகிறார்:

பாலிவுட்டில் இவ்வளவு பெரிய வெற்றி நான் எதிர்பார்க்காதது. இப்போதுதான் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது புரிகிறது. இனி தேர்ந்தெடுத்து நல்ல கதைகளை மட்டுமே ஒப்புக் கொள்ளப் போகிறேன். தமிழில் இரண்டு படங்களும், இந்தி மற்றும் தெலுங்கில் தலா மூன்று படங்களும் நான் எதிரிபார்த்த மாதிரி அருமையான கதைகளுடன் வந்துள்ளன. நிஜமாகவே இந்த ஆண்டு ஹாப்பி பர்த் டேதான்‍! என்கிறார்.

திருமணம் முடிந்து, தேனிலவுக்கும் கிளம்பிவிட்டது கோபிகா-டாக்டர் அஜிலேஷ் ஜோடி.

Gopika Marriage Reception திரையுலகை விட்டு முழுமையாக விலகிப் போனாலும், அம்மணிக்கு ஒரே ஒரு ஏக்கம் மட்டும்தான் பாக்கியிருக்கிறதாம்.

ஆட்டோகிராப்பில் நடித்து முடித்த கையோடு கோபிகாவுக்கு வந்த வாய்ப்பு 'காதல்' படம். ஆனால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் தர மறுத்துவிட்டாராம் கோபிகா, அப்போதிருந்த சூழலில். ஆனால் படம் வெளியாகி புதிய வசூல் சரித்திரம் படைத்தது.

இப்போதும் அதேபோன்றதொரு வாய்ப்பு வந்த்தாம். ஆனால் திருமணம் நிச்சயமாகிவிட்டதால் அதிலும் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.

எர்ணாகுளத்தில் நடந்து முடிந்த திருமண வரவேற்புக்குப் பிறகு சிறிது நேரம் மலையாளப் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த கோபிகா, இப்படிக் கூறினார்:

தமிழிலும் மலையாளத்திலும் நல்ல நடிகை என்ற பெயரோடுதான் விடைபெறுகிறேன். ஆனால் காதல் மாதிரி மிகச் சிறந்த படம் ஒன்றில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தோடு விடைபெறுகிறேன். இந்த ஒரு ஏக்கம்தான் எனது திரைப்பட வாழ்க்கையில் இன்னும் மிச்சமிருப்பது.

மற்றபடி திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்றெல்லாம் என் கணவர் கண்டிஷன் எதுவும் போடவில்லை. நடிக்க வேண்டாம் என்பது நான் எடுத்த முடிவுதான். பார்க்கலாம்... முதலில் அவருடன் இருந்து அவருக்கு ஏற்ற கதாநாயகியாக திருப்தி தர விரும்புகிறேன். மறுபடி நடிக்க வருவேனா என்று இப்போதே கூற முடியாது என்றார்.

ஆல் த பெஸ்ட் கோபிகா!

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright