<%@ Language=JavaScript %> Welcome. !

ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இசைஞானி இளையராஜாவை நடிக்க வைக்க அவரது நெருங்கிய நண்பர் பாரதிராஜா உள்பட நிறைய பேர் முயன்றும் அவர் மறுத்துவிட்டார்!. பழம்பெரும் ஹாலிவுட் நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில்!.மர்மயோகியில் தனக்கு ஜோடியாக கேட்டுக்கொண்ட கமலுக்கு நோ சொன்ன காஜோல்!.  அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவது பெரும் தர்மசங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் சேரன் கேட்ட பகிரங்க மன்னிப்பு!.  படப்பிடிப்பில் எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தார் அனுப நடிகரான பிரகாஷ் ராஜ் என்கிறார் நடிகை சிந்து துலானி.தன்னிடம் பாடி கார்ட் ஆக பணியாற்றி வரும் இஸ்ரேல் ராணுவ வீரர் டாம் லீயுடன் பிரிட்னி 'கசமுசா'!. முன்னாள் உலக அழகி, நடிகை என்று பல அவதாரம்  'டைரடக்கர்' யுக்தா முகி!. முன்பு ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு நள்ளிரவில் போய் வெளியே நின்று கதவைத் தட்டி அமர்க்களம் சல்மான் கலாட்டா!

     E-mail: eenagal@gmail.com

 

 

 

   

Wanni Operation 25th and 27th July 2008view video 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live

 T.B.C.Rodio.Live      

 B.B.C.Tamil       

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: நிச்சாமம் :: இலக்கிய  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 1 ஆகஸ்ட் , 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Rajini ஹைதாராபாத்: ஒகேனக்கல் விவகாரத்தில் நான் தவறாகப் பேசிவிட்டேன். இனி மீண்டும் அந்தத் தவறை திரும்பச் செய்ய மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நாளை ரஜினியின் குசேலன் படம் ரிலீஸ் ஆகிறது. ஆனால், ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னட மக்களை உதைக்க வேண்டும் என்று பேசிய ரஜினி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால்தான் குசேலன் படத்தை ரிலீஸ் செய்ய விடுவோம் என்று கன்னட ரக்ஷ்ன வேதிகே மற்றும் கன்னட சளுவளி வாட்டாள் பக்ஷா ஆகிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந் நிலையில் ஹைதராபாத்தில் இன்று கன்னட தொலைக்காட்சிக்கு கன்னடத்தில் பேட்டியளித்த ரஜினி,

ஒகேனக்கல் விவகாரத்துக்காக சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், பொது மக்களின் சொத்துக்களை நாசமாக்கியவர்களைத் தான் உதைக்க வேண்டும் என்று சொன்னேன். வேறு யாரையும் அப்படிச் சொல்லவில்லை.குசேலன் படத்தை தயவுசெய்து வெளியிட அனுமதியுங்கள்.நான் கர்நாடகத்தில் ஒரு கண்டக்டராக இருந்தேன் என்பதை இன்றும் மறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் நான் பாடம் கற்றுக் கொண்டுவிட்டேன். கன்னட மக்கள் எனக்கு பாடம் கற்றுத் தந்துவிட்டனர். இனி அதே தவறை திரும்பச் செய்ய மாட்டேன்.இனி எதி்ர்காலத்தில் யார் மனதும் புண்படாமல் பேசுவேன் என்றார்.

சிக்கல் தீருமா?:

இருப்பினும் ரஜினியின் மன்னிப்பை ஏற்க கன்னட அமைப்புகள் மறுத்துள்ளன. இதுகுறித்து கன்னட ரக்சன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா கூறுகையில், ரஜினிகாந்த் கர்நாடகத்திற்கு வர வேண்டும். 5 கோடி கன்னட மக்களிடமும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதுவரை அவரது படத்தை வெளியிட விட மாட்டோம் என்று கூறியுள்ளார்.


எனவே திட்டமிட்டபடி குசேலன் நாளை கர்நாடகத்தில் திரைக்கு வருமா என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

பெங்களூரில் 14 தியேட்டர்களில் குசேலன் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடக வர்த்தக சபையின் தலைவர் நடிகை ஜெயமாலாவுக்கும் ரஜினி கடிதம் எழுதினார். அதில், கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் எதையும் கூறவில்லை. குசேலன் படம் ரிலீஸ் தடையால் ரசிகர்கள் ஏமாந்துவிடக்கூடாது என்று ரஜினி கூறியிருந்தார்.

அந்தக் கடிதத்தை ஜெயமாலா இன்று வெளியிட்டார். ரஜின புண்படுத்தும் நோக்கத்தில் எதுவும் பேசவில்லை. அவருக்கு கர்நாடகாவும், தமிழகமும் ஒன்றுதான் என்று ஜெயமாலா கன்னட அமைப்புகளிடம் சமரசம் பேசினார்.

இசைஞானி இளையராஜாவை நடிக்க வைக்க அவரது நெருங்கிய நண்பர் பாரதிராஜா உள்பட நிறைய பேர் முயன்றும் அவர் மறுத்துவிட்டார்!

Illaiyaraja ஆரம்ப நாட்களில் நிழல்கள் படத்திலும், பின்னர் சாதனை படத்திலும் ஒவ்வொரு காட்சியில் அவரை இசையமைப்பாளராகவே காட்டியிருப்பார்கள். புதுப்புது அர்த்தங்கள், கரகாட்டக்காரன் படங்களிலும் ஒரு காட்சியில் வருவார் ராஜா.

ஆனால் முதல்முறையாக, இளையராஜாவை ஒரு முழு பாடல் காட்சியிலும் நடிக்க வைத்துப் படமாக்கியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரும் இளையராஜாவின் பால்ய காலத் தோழருமான சங்கிலி முருகன், அழகர் மலை படத்துக்காக.

தான் படித்த பண்ணைபுரம் பள்ளிக்கு ராஜா செல்வது போலவும், பின்னர் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்துக்குப் போய் தியானிப்பது போலவும் இந்தப் பாடல் காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கிலி முருகன் கூறுகையில், எனக்கும் ராஜாவுக்கும் உள்ள உறவு, ஒரு அண்ணனுக்கும் தம்பிக்குமான பாசம். என் படங்களை ராஜாவின் இசைதான் ஜெயிக்க வைத்தது. அந்த ராஜாவை கௌரவிக்க நான் செய்த சின்ன முயற்சி இது. உண்மையில் இது என் படத்துக்குதான் கவுரவம் என்றார்.

பழம்பெரும் ஹாலிவுட் நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர் எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில்!

Elizabeth Taylor பழம்பெரும் ஹாலிவுட் நடிகையும், இருமுறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்றவருமான எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் கனவுக் கன்னியான எலிசபெத்துக்கு உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். 76 வயதாகும் டெய்லர், விவாகரத்துக்கு புகழ் பெற்றவர். ஒவ்வொரு கணவரையும் அவர் விவாகரத்து செய்த வேகம் உலகப் பிரசித்தி பெற்றது.

லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள பெல் ஏர் பகுதியில் வசித்து வரும் டெய்லர், 55க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் மிகவும் புகழ் பெற்ற படம் கிளியோபாட்ரா.

நான்கு குழந்தைளுக்கு தாயான டெய்லர், 8 முறை திருமணம் செய்து எட்டு முறை விவாகரத்தும் செய்தவர்.

தற்போது இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள எலிசபெத் டெய்லர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அவருக்கு நிமோனியா காய்ச்சலும் பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் எலிசபெத் டெய்லர் கவலைக்கிடமாக இல்லை என்றும் அதுதொடர்பான செய்திகள் தவறு என்றும் டெய்லரின் செய்தித் தொடர்பாளர் டிக் குட்மேன் வெளியிட்ட அறிக்கையில், எலிசபெத் டெய்லர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் பத்திரிக்கைளில் வெளியாகியுள்ளது போல அவர் கவலைக்கிடமாக இல்லை. அவர் விரைவில் வீடு திரும்புவார்.

டெய்லருடன் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மர்மயோகியில் தனக்கு ஜோடியாக கேட்டுக்கொண்ட கமலுக்கு நோ சொன்ன காஜோல்!

Kajol with sister Tanisha and mother Tanuja மர்மயோகியில் தனக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்டுக்கொண்ட கமலுக்கு ஆரம்பத்தில் ஒப்புக் கொண்ட காஜோல், இப்போது தனது நிபந்தனைகளை கமல் ஏற்க மறுப்பதாகக் கூறி நடிக்க மறுத்து விட்டார்.

இதுகுறித்து நம்பகமான சில வட்டாரங்கள் இப்படிக் கூறுகின்றன.

இந்தப் படத்தில் நடிக்க மிகப்பெரிய தொகையை காஜோலுக்கு சம்பளமாகத் தருவதாகக் கூறியிருந்தாராம் கமல். காஜோலின் சம்மதம் பெறுவதற்காக, அவரது கணவர் அஜய் தேவ்கனிடமும்
பேசியிருந்தாராம் கமல்.

இதைத் தொடர்ந்து நடிப்பதற்கு முதலில் ஒப்புக் கொண்ட காஜோல் சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்படுகிறது.

நெருக்கமான காதல் காட்சிகளி்ல் நடிக்க மாட்டேன், முத்தக் காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடந்தால் வரமாட்டேன் என ஏகப்பட்ட கண்டின்கள் போட சற்று
யோசனைக்குப் பிறகு ஒப்புக் கொண்டாராம் கமல்.

ஆனால், சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்கள் சிலருக்குப் பேட்டியளித்த கமல், இந்தப் படத்தின் படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்தப்போவதாகக் கூறியிருந்தார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தினால் இந்தப் படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்றும், நட்புடன் இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ள விரும்புவதாகவும் கூறிவிட்டாராம் காஜோல்.

வேறு வழியின்றி இப்போது நயன்தாராவின் பதிலுக்குக் காத்திருக்கிறார் உலக நாயகன்.

அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவது பெரும் தர்மசங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் சேரன் கேட்ட பகிரங்க மன்னிப்பு!

Cheran with Ramya அளவுக்கதிகமாக உணர்ச்சிவசப்படுவது பெரும் தர்மசங்கடத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இது நன்கு தெரிந்தும்கூட இயக்குநர் சேரன் திரும்பத் திரும்ப உணர்ச்சி வசப்பட்டு வம்பில் மாட்டிக் கொள்கிறார்.

நிலைமை எல்லை மீறியதும் வழக்கம் போல் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளும் அதே பாணியை இன்னும் தொடர்கிறார்.

இதோ நேற்று நடந்த ஒரு சம்பவம்.

மோசர்பேயர் தயாரிப்பில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள ராமன் தேதிய சீதை படத்தின் இசை வெளியீட்டு விழா.


பாக்யராஜ், அமீர், ராம நாராயணன், கலைப்புலி எஸ் தாணு என தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட விழாவில் கடைசியாகப் பேசினார் சேரன்.

அவர் பேசியதன் ஒரு பகுதி:

ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. இதுதான் நம்ம குணம். என்னைப் பற்றி நிறைய மோசமான விமர்சனங்கள் வருகின்றன. இந்த படத்தின் கிளைமாக்சை மாற்றும்படி டைரக்டர் ஜெகனிடம் நான் சண்டை போட்டதாக ஒரு வாரப் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள்.

நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை. ஜெகன் என்ன நினைத்தாரோ அந்த கிளைமாக்ஸ்தான் படத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.


எனக்கும், ஜெகனுக்குமான கருத்து வேறுபாடு படம் சம்பந்தப்பட்டது அல்ல. மனசு சம்பந்தப்பட்டது. அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நானும், நான் நன்றாக இருக்க வேண்டும் என்று அவனும் விரும்புகிறவர்கள். ஒரு அண்ணனுக்கும், தம்பிக்குமான பிரச்சினை அது.

பொக்கிஷம்' படப்பிடிப்பில் பத்மப்ரியாவை நான், (ஒரு தவறான வார்த்தையை சொல்லி) செல்லமாக அழைத்ததாக ஒரு பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். நான் அப்படி அழைக்கவில்லை. அட (மொத்தத்தில் பத்திரிக்கையாளர்களை அதே தவறான வார்த்தையை சொல்லி குறிப்பிட்டு) ... அப்படி அழைக்க பத்மப்ரியா என் காதலியா, பெண்டாட்டியா அல்லது... (மீண்டும் ஒரு மோசமான வார்த்தை சொல்கிறார்). அவளை நான் ஏன் அப்படிக் கூப்பிடணும்.


அப்படி அழைப்பதற்கு வேறு சில பெண்களை வைத்திருக்கிறேன். அந்த லிஸ்ட்டைத் தரட்டுமா?

ஊருக்குப் போறேன்!

இப்படியெல்லாம் இருக்கும் என்று தெரிந்திருந்தால், நான் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன். கிராமத்திலேயே இருந்திருப்பேன்.

2 வருடங்களில் கடனை எல்லாம் அடைத்துவிட்டு, ஒரு பெரிய கும்பிடு போட்டு நான் ஊருக்கே போய்விடுகிறேன், சாமி. ஊரில் உள்ள என் ஆத்தா-அய்யாவுடன் அப்பழுக்கில்லாத வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறேன்...., என்று பேசிக்கொண்டே போனார்.

பத்திரிகையாளர்கள் ஆவேசம்:

உடனே பத்திரிகையாளர்கள் அனைவரும் சேரனின் ஆபாசப் பேச்சைக் கண்டிக்கும் விதத்தில் அரங்கை விட்டு வெளியேற, நிகழ்ச்சி அப்படியே ஸ்தம்பித்துப் போனது. சமாதானப்படுத்த ஓடோடி வந்தார் இயக்குநர் அமீர். அவருக்குப் பின்னால் சேரனும் வந்தார்.

தங்களை சேரன் தவறான வார்த்தையால் திட்டியதை அனைத்துப் பத்திரிகையாளர்களும் கண்டித்து, உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

உடனே சேரன், தனது தவறான வார்த்தைப் பிரயோகத்துக்காக பகிரங்க மன்னிப்புக் கேட்பதாகத் தெரிவித்தார்.

நான் தவறாகப் பேசிவிட்டேன். வேண்டுமானால் என்னை ஒரு அடி அடித்துவிடுங்கள் என்றார் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு. அவரை ஏற இறங்கப் பார்த்த அனைத்துப் பத்திரிகையாளர்களும் பின்னர் அமைதியாய் கலைந்து சென்றனர்!

 படப்பிடிப்பில் எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தார் அனுப நடிகரான பிரகாஷ் ராஜ் என்கிறார் நடிகை சிந்து துலானி.

பந்தயம் படப்பிடிப்பில் எனக்கு நிறையவே கற்றுக் கொடுத்தார் அனுப நடிகரான பிரகாஷ் ராஜ் என்கிறார் நடிகை சிந்து துலானி.

சுள்ளான் படத்தில் அறிமுகமான சிந்து, பெரிய வாய்ப்புகள் கிடைக்குமென்று எதிர்பார்த்தார். ஆனால் அவரது நேரம் ராசியில்லாத நாயகி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கி வைக்கப்பட்டார்.

இப்போது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் பந்தயம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

தனது மறுபிரவேசம் குறித்து பந்தயம் படப்பிடிப்புத் தளத்தில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:


மும்பைவாசியான நான் தமிழில் சுள்ளான், மன்மதன், அலையடிக்குது, பசுபதி மே/பா ராசக்காபாளையம், மஜா ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், எனக்கு பெயர் வாங்கி தருகிற மாதிரி எந்த படமும் அமையவில்லை.

பந்தயம் படம் அந்த குறையைத் தீர்க்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தப் படத்தில் நான், பிரகாஷ்ராஜ் தங்கையாக நடித்து இருக்கிறேன்.

நிதின் சத்யா என்னைக் காதலிப்பார். அதிரடி அரசியல்வாதியான பிரகாஷ்ராஜ் எங்கள் காதலை ஏற்றுக் கொள்ள மாட்டார். இந்த காதல் போராட்டம்தான் கதை.

படப்பிடிப்பின்போது பிரகாஷ்ராஜ் எனக்கு நிறைய `டிப்ஸ் கொடுத்து, உற்சாகப்படுத்தினார். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

இந்தப் படத்தில் என் நடிப்பைப் பார்த்து விஜய் என்னை பாராட்டியதை மறக்க முடியாது. இந்த படத்தின் பாடல் காட்சிகளில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன் என்பது உண்மைதான். அதேசமயம் நிறைய காட்சிகளில் நன்றாக நடித்துமிருக்கிறேன், என்றார் சிந்து துலானி.

தன்னிடம் பாடி கார்ட் ஆக பணியாற்றி வரும் இஸ்ரேல் ராணுவ வீரர் டாம் லீயுடன் பிரிட்னி 'கசமுசா'! 

Britney தன்னிடம் பாடி கார்ட் ஆக பணியாற்றி வரும் இஸ்ரேல் ராணுவ வீரர் டாம் லீயுடன், பிரிட்டிஷ் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், அந்தரங்க உறவு வைத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

26 வயதாகும் பிரிட்னி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகி விட்டது. அந்த வரிசையில், அவருக்கும் அவரது பாடிகார்ட் டாம் லீக்கும் இடையே, படு நெருக்கமான உறவு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டாம் லீ இஸ்ரேல் நாட்டு ராணுவ வீரர். இருவரும் சேர்ந்து ஒரு இறவை ஒரே அறையில் கழித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றனர்.

இதுகுறித்த சூடான செய்தியை சன் இதழ் வெளியிட்டு சூட்டைக் கிளப்பியுள்ளது. டாம் லீ மீது  பிரிட்னி காதல் கொண்டுள்ளாராம். அவர்தான் முதலில், லீ மீதான அன்பை வெளிப்படுத்தினாராம். இதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு சமீபத்தில் இருவரும் சேர்ந்து ஒரு இரவைக் கழித்தனராம்.

பிரிட்னிக்குப் பிடித்தமான சில விஷயங்களை தனது உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளாராம் லீ. இப்போதெல்லாம் இருவரும் சேர்ந்தேதான் காணப்படுகின்றனராம். மன ரீதியில் ஆரம்பித்த இந்த உறவு இப்போது உடல் ரீதியாகவும் மாறி விட்டதாம்.

சமீபத்தில் இருவரும் மெக்சிகோவில் ஒன்றாக சுற்றியுள்ளனர். லீயுடனான நட்பை பிரிட்னி பெரிதும் மதிக்கிறாராம், விரும்புகிறாராம் ... இப்படிப் போகிறது சன் செய்தி.

முன்னாள் உலக அழகி, நடிகை என்று பல அவதாரம்  'டைரடக்கர்' யுக்தா முகி!  

Yukta Mookhey முன்னாள் உலக அழகி, நடிகை என்று பல அவதாரம் எடுத்தும் சுஷ்மிதா, ஐஸ்வர்யா, பிரியங்கா சோப்ரா ரேஞ்சுக்கு ஒரு நல்ல நடிகையாக உயர முடியாமல் போன யுக்தா முகி, கட்டக் கடைசியாக டைரக்டர் ஆக முடிவு செய்து விட்டார்.

மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றவரான யுக்தா முகி, தனது முன்னோடிகளான சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா வரிசையில் நடிகையாக மாறினார். பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த அவரை தமிழுக்கும் கூட்டி வந்து அஜீத் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வைத்துப் பார்த்தனர்.

ஆனால் நடிகையாக புகழ் பெறத் தவறி விட்டார் முகி. மூக்கும், முழியுமாக இருந்தும் கூட தான் ஏன் வெற்றி பெறவில்லை என்பது யுக்தாவுக்கே இன்னும் புரியாத புதிர்.

இந்த நிலையில், இயக்குநராகப் போகிறாராம் யுக்தா. இதற்காக முதலில் நியூயார்க் சென்று அங்குள்ள திரைப்பட அகாடமியில் சேர்ந்து படிக்கப் போகிறாராம். அதை முடித்து விட்டு இயக்குநர் அவதாரம் பூணுகிறார். இளைஞர்கள், பெண்களை மையப்படுத்தி தனது படங்கள் இருக்கும் என்று கூறும் அவர், குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள் எடுப்பதும் தனது லட்சியம் என்கிறார்.

இதுதவிர நடிகைகளுக்கு ஒரு சூப்பர் அட்வைஸையும் வைத்திருக்கிறார் யுக்தா. நல்ல ரோல்களில்தான் நடிக்க வேண்டும். வருகிற ரோல்களையெல்லாம் வாரிப் போட்டுக் கொண்டு தாறுமாறாக நடிக்கக் கூடாது. வீட்டில் உட்கார்ந்து அனைவரும் பார்க்கும்போது முகம் சுளிக்கும் வகையில் நமது நடிப்பும், கேரக்டரும் இருக்கக் கூடாது என்கிறார் யுக்தா.

நடிப்பு சரிப்பட்டு வரவில்ைல என்பதால் சைடில் சமூக சேவையிலும் ஈடுபட்டு வந்தார் மூகி. அது அவருக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளதாம். சினிமாதான் எல்லாமே என்று கிடையாது. அதையும் தாண்டி பல உலகங்கள் உள்ளன. சமூக சேவையில் எனக்கு அதிக நாட்டம் உள்ளது. அதற்காக உலகம் பூராவும் நான் சுற்றியுள்ளேன் என்கிறார் பெருமிதமாக.

சமூக சேவையின் ஒரு பக்கமாக, எய்ட்ஸ் விழிப்புணர்வு, மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு பிரசாரம், தலசீமியா குறித்த நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் முகி பங்கேற்கிறாராம். அது மட்டுமா, தனது உறுப்புகளையும் தானம் செய்து சக நடிகைகளுக்கு நல்ல பாடமாக விளங்குகிறார்.

இது போதாதென்று கடந்த ஐந்து வருடங்களாக யோகாவிலும் தீவிரமாக இறங்கியிருக்கிறார் யுக்தா. ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்வதை விட யோகா நமது உடலையும், மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது என்கிறார் யுக்தா. எனது இளமைக்கு முக்கிய காரணமே யோகாதான் என்கிறார் பெருமையாக.

மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பேசிக் கொண்டே போகிறார் யுக்தா. அசத்துங்க முகி.

முன்பு ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு நள்ளிரவில் போய் வெளியே நின்று கதவைத் தட்டி அமர்க்களம் சல்மான் கலாட்டா! 

Salman Khan, Shah Rukh Khan and Katrina Kaif முன்பு ஐஸ்வர்யா ராய் வீட்டுக்கு நள்ளிரவில் போய் வெளியே நின்று கதவைத் தட்டி அமர்க்களம் செய்தது போல, ஷாருக்கான் வீட்டுக்குப் போய், ரகளை செய்து அவரது மனைவியின் பெயரைச் சொல்லி மிரட்டியும், தைரியமாக இருந்தால் வெளியே வா என்று ஷாருக்குக்கு சவால் விட்டும் அமளியை ஏற்படுத்தியுள்ளார் சல்மான் கான்.

சர்ச்சை என்கிற சல்மான் கான் என்று சல்மானுக்கு பெயரை மாற்றி வைத்து விடலாம். அந்த அளவுக்கு அவரும், சர்ச்சையும் சரமாரியாக நட்பு பாராட்டி வருகிறார்கள்.

முன்பு ஐஸ்வர்யா ராயை அவர் காதலித்துக் கொண்டிருந்த ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். ஐஸ்வர் யாராய் வீட்டுக்கு நள்ளிரவில், நல்ல மப்பில் சென்று ஏடாகூடமாக பேசி ரகளை செய்தார்.

பின்னர் மான் வேட்டையாடி சிக்கி சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்திருக்கிறார். இந்த நிலையில், மறுபடியும் ஒரு மெகா சர்ச்சையில் சிக்கியுள்ளார் சல்மான்.

ஐஸ்வர்யாவை விட்ட பின்னர் சல்மானின் காதலியாக காத்ரீனா கைப் மாறினார். இருவரும் இணை பிரியாமல் இருந்து வருகின்றனர். சமீபத்தில், காத்ரீனா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

பார்ட்டிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரையும் அழைத்திருந்தார். அவர்களில் ஷாருக் கானும் ஒருவர்.

காத்ரீனாவின் வீட்டில் பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஷாருக்குடன் 'ஒரண்டை' (அதாவது வம்பு) இழுத்துள்ளார் சல்மான். இதனால் ஷாருக் உள்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சண்டை வேண்டாம் என விலகிப் போக நினைத்தார் ஷாருக். இருந்தாலும் சல்மான் ரசாபாசமாக பேசி அவருடன் சண்டை போடவே, பதிலுக்கு ஷாருக்கும் கோபமாக பேசியுள்ளார்.

இதையடுத்து ஷாருக் மீது பாய எத்தனித்தார் சல்மான். உடன் இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு கானாக பிடித்து இழுத்து சண்டையைத் தவிர்த்து, ஷாருக்கை அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

சல்மான் கானின் செயலால் காத்ரீனா பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார்.

விவகாரம் அத்தோடு முடியவில்லை. கடந்த திங்கள்கிழமை நள்ளிரவில், ஷாருக் வீட்டுக்கு காரை விட்டுள்ளார் சல்மான். காரை வெளியே நிறுத்தி விட்டு வீட்டுக்குள் நுழைய பார்த்தார். ஆனால் வெளியே இருந்த கூர்க்காக்கள் அவரை தடுத்துள்ளனர்.

இதனால் வெளியில் இருந்தபடியே ஷாருக், தைரியம் இருந்தால் வெளியே, நீயா, நானா பார்த்து விடலாம் என கோபமாக கத்தியுள்ளார். அத்தோடு ஷாருக்கின் மனைவி கெளரி கானின் பெயரைச் சொல்லி அழைத்து திட்டியுள்ளார்.

வெளியே இருந்த கூர்க்காக்கள் நிலைமை விபரீதமாவதை உணர்ந்து ஷாருக்குக்கு இன்டர்காம் மூலம் தகவல் தெரிவித்தனர். ஷாருக்கும் உடனே வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். ஆனால் அதற்குள் கத்தி முடித்து விட்டு காரில் ஏறிப் போய் விட்டார் சல்மான்.

சல்லு, ஏன் இந்த லொள்ளு?

<<முன்னைய பதிவுகள்>>

தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage

INFO
LANKA

Worldnews

        Last update: 20-06-2008. Desigin and Copyright