<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

உயரே பறக்கும் இளையராஜாவின் கொடி! - கைவசம் 18 படங்கள்!. ஜீவன்-ஸெல்வன் ஈகோ!இயக்குனர் சிகரம் அதிர்ச்சி. நமீதாவுக்கு பதிலாக ஆறு நடிகைகள்- ராஜாதி ராஜா ரகளை!. அர்ச்சனாவின் அருவிக்குளியல்!- வெயிலை தணிக்கும் அகராத. வடிவேலு இயக்குனர் மோதல் சப்போர்ட்டுக்கு வந்த தனுஷ் வடிவேலுவை நடிக்க அழைத்தார். கோலிவுட்டில் இன்னொரு ரஹ்மான்? வழி-டென்மார்க்கிலிருந்து சென்னை!.போடா போடியில் சரத்குமார் மகள்-நயன்தாரா அதிர்ச்சி. 'கொள்ளாத' மனசோடு வந்த சார்மி மீடியாக்கள் தள்ளுமுள்ளு!

 

 

 

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 17 ஜுலை, 2008

உயரே பறக்கும் இளையராஜாவின் கொடி! - கைவசம் 18 படங்கள்!

Ilayaraja 80 களில் கொடிகட்ட பறந்த இளையராஜா, அதன்பின் தனது வேகத்தை மெல்ல மெல்ல குறைத்துக் கொண்டார். ராஜாவை விடவும் வேகமாக பரவியது ரஹ்மான் ஜுரம்! இந்த நேரத்தில் இவரை விட்டு முன்னணி இயக்குனர்கள் கூட விலகினர். காரணம், படத்தின் முழு கதையையும் கேட்கும் ராஜா, அதில் பல மாற்றங்களை சொல்வதாகவும், அப்படி மாற்ற விரும்பாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் கூறப்பட்டது.

பின்பு கீபோர்டு வைத்திருக்கிற எவரும் இசையமைப்பாளராகலாம் என்ற நிலை வந்தது. போட்டிகள் பெருகினாலும், தந்தையை போலவே பல மடங்கு புகழை சம்பாதித்தார் அவரது இளையமகன் யுவன் சங்கர் ராஜா. ஒரு படத்திற்கு ஒரு கோடி வாங்குகிற அளவுக்கு மார்க்கட்டின் உச்சத்தை தொட்ட யுவன், தற்போது ஆல்பம் தயாரிக்கும் பணியில் மும்முரமாக இறங்கிவிட்டார். இன்னொருபுறம் வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீ பிரசாத், என்று அடுத்தகட்ட இசையமைப்பாளர்கள் வெற்றி உலா வந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது மீண்டும் ராஜாவின் கொடி உயர ஆரம்பித்திருக்கிறது. அவரது கைவசம் சுமார் 18 படங்கள் இருக்கிறதாம். ஹிந்தி, கன்னடம், மலையாளம் தமிழ் என்று பிசியாக இருக்கிறார். முன்பெல்லாம் கம்போசிங் செய்வதற்கு அவுட்டோர்களை நாடாத ராஜா, இப்போது தனது ஸ்டைலையும் மாற்றிக் கொண்டார் என்பதுதான் ஆச்சர்யம். மேற்படி படங்களுக்கு கம்போஸ் செய்வதற்காக திருவிதாங்கூர் பகுதியில், மிதக்கும் படகு வீடு ஒன்றில் தங்கியிருக்கிறாராம். சென்னை வரும்போது முத்து முத்தான ட்யூன்களோடு வருவார் என்பது மட்டும் உறுதி!

ஜீவன்-ஸெல்வன் ஈகோ!இயக்குனர் சிகரம் அதிர்ச்சி

Krishnaleelai ஆணானப்பட்ட பாலசந்தரையே அதிரி புதிரியாக்கி விட்டார்கள் ஸெல்வனும், ஜீவனும். படம்-கிருஷ்ண லீலை! விக்னேஷ் நடித்த சூரி என்ற படத்தை எடுத்தவர் ஸெல்வன். அதன் பின் இவர் ஸெல்லும் இடமெல்லாம் 'நோ என்ட்ரி' போர்டுதான் கண்களில் பட்டது. ஆனாலும் தன் முயற்சியை சற்றும் விடாமல் முன்னணி ஹீரோக்களை சந்தித்து கதை சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி இவர் கதையை கேட்டு ஓ,கே சொன்னவர்தான் ஜீவன். கவிதாலயா நிறுவனம், ஏற்கனவே இவருக்கு அட்வான்ஸ் கொடுத்து வைத்திருந்தது. இந்த நிலையில் தனக்கு கதை பிடித்திருந்ததால் ஸெல்வனை கவிதாலயாவுக்கு அனுப்பி வைத்தார் ஜீவன்.

கம்பெனிக்கும் கதை பிடித்துப் போக விறுவிறுவென்று படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். ஒருநாள் படப்பிடிப்பில் ஜீவனுக்கு சீன் சொன்ன ஸெல்வன், இப்படி வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு விஷயத்தை சொல்ல, இப்படியிருக்கலாமே என்று ஜீவன் வேறு மாதிரி எடுத்துக் கொடுக்க, அவ்வளவுதான்... ஈகோ தலைதூக்கிக் கொண்டது இருவருக்கும் இடையே!

நான் சொன்ன மாதிரி எடுக்கவில்லையென்றால், நான் நடிப்பதாக இல்லை என்று ஜீவன் கூற, நீங்க சொல்ற மாதிரி எடுக்கணும்னா அதுக்கு நான் தயாராக இல்லை என்று ஸெல்வன் எகிற, கொஞ்ச நேரம் படப்பிடிப்பு நின்று போய்விட்டதாம். ஒரு நாள் படப்பிடிப்புக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டிருக்கும் நிறுவனம், பதறிப் போனது. பிறகு பாலசந்தரே தலையிட்டு இந்த பிரச்சனையை சரி செய்தாராம்.

சிகரத்தின் உச்சியிலேயே கரகம் ஆடியிருக்காங்களே, அடக்கடவுளே...!

நமீதாவுக்கு பதிலாக ஆறு நடிகைகள்- ராஜாதி ராஜா ரகளை!

இதுவரை எத்தனையோ நடிகர்களை வைத்து டைரக்ட் பண்ணியிருக்கேன். முதன்முதலா ஒரு மனிதனை வைத்து டைரக்ட் பண்றேன்' இப்படி ஒரு முன்னுரையுடன் தனது ராஜாதி ராஜா படம் பற்றி பேச துவங்குகிறார் ஷக்தி சிதம்பரம். இவர் மனிதன் என்று குறிப்பிட்டது ராகவா லாரன்சை!

அனாதை குழந்தைகளுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் ஆதரவு கரம் நீட்டிவரும் லாரன்சின் மனநிலையை அப்படியே வெளிப்படுத்தும் படமாகவும் இருக்குமாம் ராஜாதிராஜா. இந்த படத்தின் தலைப்பை பார்த்துவிட்டு 'இது ரஜினி நடித்த ராஜாதி ராஜாவின் ரீமேக்தானே?' என்கிறார்கள். பொல்லாதவன், படிக்காதவன் மாதிரி, இதுவும் புதிய கதைதான் என்றார் ஷக்தி சிதம்பரம்.


இவர் படங்களில் ஓயாமல் தலை காட்டும் (தலையை மட்டுமா?) நமீதா, இந்த படத்தில் இல்லை. விநியோகஸ்தர்களின் குபேர ஸ்தானத்தில் குடியிருக்கும் நமீதா இல்லாமல் ஒரு படமா? என்றால், 'அதான் அவருக்கு பதிலா ஆறு ஹீரோயின் இருக்காங்களே?' என்றார் ஷக்தி.

ஸ்னிக்தா, மீனாட்சி, மும்தாஜ், சமிக்ஷா, காம்னா, கிரண் என்ற ஆறு நடிகைகளும் வெவ்வேறு ஸ்டைலில் கவர்ச்சி
காட்டியிருப்பதுதான் விசேஷம். ஆறு ஹீரோயின்களுக்கும் ஆறு பாடல்கள்! அதிலேயே பாதி படம் முடிந்துவிடும். பிறகு கதையை எப்போ சொல்வீங்க என்றால், டைட்டில் போட்டவுடனேயே கதை ஆரம்பித்துவிடுமே, பிறகெதுக்கு இப்படி ஒரு கேள்வி என்கிறார் ஷக்தி சிதம்பரம். சதுரங்க ஆட்டத்தில் மற்றவர்கள்தான் ராஜாவுக்கு செக் வைப்பார்கள். ஆனால் இந்த ராஜாவுக்கு யாரும் செக் வைக்க முடியாது. மாறாக இவர்தான் மற்றவர்களுக்கு செக் வைப்பார். ஏன்? எப்படி? வெள்ளித்திரையில் காண்க என்று இரண்டு வரியில் கதையை பற்றி லீட் கொடுத்த ஷக்தி சிதம்பரம், இந்த முறை வடிவேலு, விவேக் வகையறாக்களை விட்டு விட்டு கருணாசை நம்பியிருக்கிறார்.

அண்ணன் வச்ச நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். கடுமையாக உழைப்பேன் என்கிறார் கருணாசும். முதன் முதலாக இப்படத்தின் ஸ்டோரி டிஸ்கஷனிலும் இருக்கிறார் கருணாஸ்.

அர்ச்சனாவின் அருவிக்குளியல்!- வெயிலை தணிக்கும் அகராதி

Archana அதிகமாக பேசுகிறவர்களை அகராதி பிடித்தவன் என்பார்கள். எந்த வார்த்தைக்காவது அர்த்தம் புரியவில்லை என்றால், அதை தெரிந்து கொள்ள தேடுவதும் அகராதிதான். இப்படி தலைகணமும் அகராதி, இலக்கணமும் அகராதி என்ற கோணத்தை எடுத்துக் கொண்டு கதை சொல்ல வந்திருக்கிறார் நாகா வெங்கடேஷ். படத்தின் பெயரும் அதேதான்.... அகராதி!

ராஜேஷ்குமாரின் இரவில் ஒரு வானவில் என்ற கதையைதான் படமாக்கி வருகிறார் நாகா. பணம் என்ற மாயப் பிசாசால், கலாச்சாரங்களும், உறவுகளும் சிதறிப்போவதை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறாராம். தெரிந்த முகங்கள் என்று பார்த்தால், சிலந்தி மோனிகா, ஜெமினி கிரண், இவர்களுடன் முமைத்கானும் இருக்கிறார்.

முமைத்கானை வைத்துக்கொண்டு கிளாமர் ஆட்டம் வைக்காமல் இருந்தால், சமுதாயம் தூற்றாதா? ஜிகிடு ஜிகிடு பம்பம் என்ற பாடலுக்கு ஆடுகிறார் இவர். வாளமீன், கத்தாழ ஸ்டைலில் தமிழகத்தை கலக்கப் போகும் பாடல் இது என்கிறார் நாகா. மேலே சொன்ன இரண்டு பாடலுக்கும் இசையமைத்த சுந்த சி பாபுதான் இந்த படத்திற்கும் இசை.

படத்தில் இன்னொரு விசேஷம், 'அகரம்' என்ற படத்தில் மெல்லிய ஆடையில் அருவிக்குளியல் போடும் அர்ச்சனா, இப்படத்திலும் ஒரு குளியல் போட்டிருக்கிறார். ஸ்டில்களை பார்த்தால் நமக்கு ஜலதோஷம் பிடிக்கும் போலிருக்கிறது!

வடிவேலு இயக்குனர் மோதல் சப்போர்ட்டுக்கு வந்த தனுஷ் வடிவேலுவை நடிக்க அழைத்தார்.

Vadivelu ரயில்வே பர்மிஷன் கிடைக்காததால் படிக்காதவன் ஷ§ட்டிங் பாதியிலேயே நிற்கிறது. இப்படி சொல்லப்பட்டாலும், உண்மை வேறு என்கிறார்கள் படிக்காதவன் யூனிட்டில். சுந்தர் சி யிடம் உதவி இயக்குனராக இருந்த சுராஜ் இப்படத்தை இயக்குகிறார். தலைநகரம் படத்திற்கு பிறகு வடிவேலுவுக்கும் சுந்தர்சிக்கும் கருத்து வேறுபாடு வந்து இனிமேல் உன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று ஒதுங்கிக் கொண்டார் வடிவேலு. ஆனாலும், குருநாதர் சண்டையை கருத்தில் கொள்ளாத சுராஜ் தனது படத்தில் வடிவேலுவை நடிக்க அழைத்தார்.

பெரிய மனசோடு வந்த வடிவேலுவுக்கு ஷ§ட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனை. சுராஜ் ஒரு டயலாக்கை சொல்லிக் கொடுக்க, அதை தனது ஸ்டைலில் மாற்றிக் கொண்டாராம் வடிவேலு. நான் சொன்ன மாதிரியே பேசுங்க என்று சுராஜ் சொல்ல, இப்படி சொன்னாதான் மக்கள் ரசிப்பாங்க என்றாராம் வடிவேலு. இல்லையில்லை நான் சொன்ன மாதிரிதான் நீங்க பேசணும் என்று இவர் வற்புறுத்த, பொசுக்கென்று கோபித்துக் கொண்ட வடிவேலு, 'முதலில் எனக்கு கதையை சொல்லுங்க. கதை தெரிஞ்சா அதுக்கேற்ற மாதிரி நடிக்கலாமில்லையா' என்று கூறிவிட்டு சென்னைக்கு ரயிலேறி விட்டார்.

அதிர்ச்சிக்குள்ளான சுராஜ், விஷயத்தை தனுஷிடம் சொல்ல, 'அவர் போனா போகட்டும். வேறு ஆளை பாருங்க' என்று கூறிவிட்டாராம் தனுஷ். இப்போதெல்லாம் புயல் ஆள் தெரியாம கவுக்குது. எங்கே போய் முடியுமோ? என்று கவலைப்படுகிறது படிக்காதவன் யூனிட்.

கோலிவுட்டில் இன்னொரு ரஹ்மான்? வழி-டென்மார்க்கிலிருந்து சென்னை!

Ilampuyalபுலம் பெயர்ந்த தமிழர்களில் பலர், பலம் நிறைந்த தமிழர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கே.எஸ்.துரை. டென்மார்க்கில் வசிக்கும் துரை தமிழர்களின் பெருமையை உலகமெல்லாம் சொல்லும் விதத்தில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். படத்தின் பெயர் இளம்புயல். வசந்த், பூர்ணிதா நடிக்கும் இப்படத்தில், பண்டைகால தமிழறிஞர்களின் சிந்தனையோடு, இக்கால தமிழர்களின் எண்ணங்களையும் மிக்ஸ் பண்ணியிருக்கிறார் துரை.

படம் முழுவதும் டென்மார்க்கில் எடுக்கப்பட்டிருந்தாலும், பூர்ணிதா, கருணாஸ், ஸ்ரீமன் ஆகியோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். முழு படமும் முடிந்த நிலையில், உலகம் முழுவதும் இளம்புயலை ரிலீஸ் செய்யும் வேலைகளில் பிசியாக இருக்கிறார் இவர். தமிழகத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்குதான் வியாபாரம் இருப்பதால், வேறொரு முறையில் படத்தை திரையிட முடிவு செய்திருக்கிறார். அதாவது இங்கு படத்தை ரிலீஸ் செய்து வரும் லாபத்தில், அல்லது கலெக்ஷனில் இங்கு தயாராகும் பத்து படங்களின் வெளிநாட்டு உரிமையை வாங்கிக் கொள்வது. இங்கே வசூலான பணத்தை இங்கேயே படம் எடுக்கும் பத்து பேரின் உதவிக்காக ஒதுக்குவது என்பதுதான் அது.

இளம்புயலின் ஹீரோ வசந்த், டென்மார்க்கில் படித்து வருகிறார். படத்திற்கு இசையும் இவர்தானாம். வெஸ்டர்ன் இசையில் இன்னொரு ரஹ்மானாக தன்னை உருவாக்கி கொண்டிருக்கும் வசந்திற்கு, தமிழ்நாட்டிலேயே இருந்து, கோடம்பாக்கத்தை ஒரு கலக்கு கலக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இம்மாதம் ஆடியோ வெளியீட்டு விழா இருக்கிறது அன்றிலிருந்தே வசந்தின் விருப்பத்திற்கான கதவு திறக்கும் போலிருக்கிறது.

போடா போடியில் சரத்குமார் மகள்-நயன்தாரா அதிர்ச்சி

'Varalakshmiதிரு போடா, திருமதி போடி' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சரத்குமாரின் மகள் வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தை ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்கிறது. கதைப்படி, இன்டர்நேஷனல் டான்ஸ் காம்படிஷனில் வெற்றி பெறும் ஜோடியாக சிம்புவும், வரலட்சுமியும் நடிக்கிறார்கள். சிம்பு ஏற்கனவே நன்றாக டான்ஸ் ஆடக்கூடியவர். வரலட்சுமியும் ஏராளமான டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டு பரிசுகளை பெற்றவர். வெளிநாட்டில் படித்து வந்த இவருக்கு மேற்கத்திய நடனங்களும் அத்துபடி. சினிமாவில் நடிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததால், தந்தை சரத்குமாரின் சம்மதத்தோடு நடிக்க வந்திருக்கிறார்.

சிம்புவின் நண்பர் விக்கி என்கிற விக்னேஷ் சிவா இந்த படத்தை இயக்குகிறார். இம்மாதம் 15-ந் தேதியிலிருந்து 60 நாட்கள் தொடர்ந்து கனடாவில் நடக்கிறது ஷ§ட்டிங். அதற்குள் இந்த படத்தின் கதை நயன்தாராவை சீண்டுவது மாதிரி இருப்பதாக இறக்கை கட்டி பறக்கிறது வதந்தி. அப்படியென்ன கதையாம்?

டான்ஸ் ஒன்றையே உயிர் மூச்சாக நினைக்கும் கதாநாயகி பிற ஆண்களுடன் கட்டிப்பிடித்து ஆடுகிறார். இதை பார்த்து வேதனைப்படும் ஹீரோ, அவருக்கு அட்வைஸ் செய்கிறபோது கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ஹீரோயினை திருத்த வேண்டும் என்று நினைக்கிற ஹீரோ, தானும் பிற பெண்களுடன் கட்டிப்பிடித்து ஆடுகிறார். அப்போது 'என் புருசன்தான், எனக்கு மட்டும்தான்' என்ற உணர்வு வருகிறது ஹீரோயினுக்கு. மனம் திருந்துகிற இருவரும் இணைந்து போட்டியில் ஆடி வெற்றி பெறுகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

இதில் நயன்தாராவின் சொந்த விவகாரத்தை இழுத்திருக்கிறாராம் சிம்பு. இந்த படத்தின் கதை தன்னை வைத்துதான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்த நயன்தாரா பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறாராம். தன்னை சுற்றி நடக்கிற சம்பவங்களை பதிவு செய்கிறவன்தான் நல்ல படைப்பாளியாக இருக்க முடியும் என்பார்கள். சிம்பு எப்படி?

'கொள்ளாத' மனசோடு வந்த சார்மி மீடியாக்கள் தள்ளுமுள்ளு!

Charmi சிக்கென்று வந்திருந்தார் சார்மி. இடம் கிரீன் பார்க். பல்லு போன கிழவிகள் வந்தாலே பாய்ந்து சென்று படம் எடுக்கிற மீடியா, சார்மியை கண்டதும் சலசலப்பை கிளப்பியது. சார்மியின் 'கொள்ளாத' மனசு பலரையும் பாடாய் படுத்த, அதை மேலும் ஏற்றும் விதமாக 'இந்த படத்தில் ஒரு காட்சியை ஏழு டேக் திருப்பி திருப்பி எடுத்தோம். அது ஹீரோ அரவிந்தனும், சார்மியும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி' என்றார் சாலமன். இவர் கொக்கி, லீ ஆகிய படங்களை இயக்கியவர்.

அதெல்லாம் இல்லை. ஒரே முத்தம்தான். அதை ஏழு ஆங்கிளில் எடுத்தாங்க என்று திருத்திய சார்மி, படத்தை பற்றி விறுவிறுவென பேச ஆரம்பித்தார். தமிழில் ஆரம்பத்தில் நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. பிறகு ஆந்திராவுக்கு போய், முக்கிய இடத்தை பிடித்தாலும், தமிழில் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்று ஆசை அப்படியே இருந்தது. அந்த நேரத்தில்தான் சாலமன் சார் ஒரு கதையை சொன்னார். பிடிச்சிருந்தது. நடிக்கிறேன் என்ற சார்மி, ஹீரோ அரவிந்தனையும் லேசாக சீண்டினார். இவரை கரப்பான் பூச்சி என்றுதான் அழைப்பாராம்.

சாஃப்ட்வேர் என்ஜினியரான அரவிந்தனும், சேல்ஸ் கேர்ள் சார்மியும் காதலிக்கிறார்கள். அரவிந்தன் சொல்லும் ஒரு வார்த்தை அவர் தலையெழுத்தையே மாற்றுகிறது. இதை வைத்து வித்தியாசமாக கதையை வடித்திருக்கிறார் சாலமன். முந்தைய படங்களை போலவே கோமிராவை ஒளித்து வைத்து ஜன சந்தடி நிறைந்த பகுதிகளில் படமாக்கியிருக்கிறார். தமிழ் தெலுங்கு இருமொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகவிருக்கிறது லாடம்.

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright