<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து எடுக்கப்போகும் பிரமிக்க வைக்கும் ஒப்பந்தங்கள்!. ஜூலை 31-ம் தேதி ரிலீசாகும் குசேலனைத் தரிசிக்க ரசிகர்கள் இப்போதே டிக்கெட்டுக்கு முன்பதிவு ஆரம்பம்!. இந்தியத் திரையுலகின் இசை மேதைகளுள் ஒருவரான ரஹ்மானின் புதிய முயற்சி!. இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட 'முயற்சி'!. கோபிகாவின் கல்யாணம் முடிந்த கையோடு வேகவேகமாக ஒரு வேலையில் இறங்கியிருக்கிறார் ஐஸ்லாந்து ஹனிமூன்!. ஷாகித்- கரீனா கபூர் நடித்து இந்தியில் வெளியாகி தமன்னாவின் 'ஜப் வி மெட்'!. திரையுலகில் கொடி கட்டிப் பறந்த ஐந்தாம் படையில் தேவயானி!. ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி நான் விமர்சிக்கவில்லை சேரன்!.வெக்கம்னா என்னன்னே தெரியாத என்னையும் நடிக்க வைச்சிட்டாங்க ஸ்வாதி!. 

 

 

 

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 27 ஜுலை, 2008
 

உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து எடுக்கப்போகும் பிரமிக்க வைக்கும் ஒப்பந்தங்கள்!

Kamal Hassan உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்து எடுக்கப்போகும் மர்மயோகி அவரது சொந்தப் படம் என்றுதான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் இல்லை!

தசாவதாரம் தந்திருக்கும் புதிய தெம்பில், இப்போதைக்கு அப்படி எந்த ரிஸ்க்கையும் எடுக்க விரும்பாத கமல்ஹாசன் புத்திசாலித்தனமாகச் செய்திருக்கும் சில ஒப்பந்தங்களைப் பற்றிய 'எக்ஸ்க்ளூசிவ்' தொகுப்புதான் இந்தச் செய்தி!

இந்தப் படத்தை முதல்பிரதி அடிப்படையில் எடுக்கிறார் கமல். நாயகனும் அவரே, இயக்குநரும் அவரே என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

பிரமிட் சாய்மிராதான் இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் வாங்கப்போகிறார்கள். சில தினங்களாக இந்தப் படத்தை ரூ.100 கோடி செலவில் எடுக்கப்போவதாகக் கமல் கூறி வருகிறார்.

ஆனால் இரு மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் முதல் பிரதியை ரூ.150 கோடிக்கு விற்றிருக்கிறார் கமல்ஹாசன் (சம்பளம் உள்ளிட்ட செலவுத் தொகை மட்டுமே இந்த முதல் பிரதிக் கணக்கில் சேரும்).

இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்போது கமல் ரூ.100 கோடி மட்டும்தான் செலவு எனக் கூறி வருவது ஏன் எனத் தெரியாமல் விழிக்கிறது சாய்மிரா நிறுவனம். மீதி   ரூ. 50 கோடிக்கு என்ன கணக்கு என கமலிடம் கேட்கவும் இந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாக நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.

வெளிப்படையாகப் பார்க்கும்போது, இந்த ஒப்பந்தம் கமல் – சாய்மிராவுக்கிடையே செய்யப்பட்டது போல் தெரிந்தாலும், இதில் சாய்மிராவுக்கே தெரியாத இன்னொரு உள் ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தப்படி கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து இந்த முதல் பிரதியை தயாரிக்கப்போவது வால்ட் டிஸ்னி நிறுவனம். இந்த உல் ஒப்பந்தப்படி படம் எடுப்பதற்கான முழுத் தொகையையும் வால்ட் டிஸ்னியே வழங்கும். ஒரு நிர்வாகத் தயாரிப்பாளரைப் போல ராஜ்கமல் அதை மர்மயோகிக்குக் கையாளும்.

இதற்குப் பிரதியுபகாரமாக, படத்தின் பப்ளிசிட்டி போஸ்டர்களில், வால்ட் டிஸ்னி-ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து வழங்கும், பிரமிட் சாய்மிரா பெருமையுடன் அளிக்கும், உலக நாயகன் கமல்ஹாசனின் மர்மயோகி–எனப் போட்டுக் கொள்ள அனுமதிக்கப்படும்.

அதாவது தென்மாநில மொழிப் படம் ஒன்றின் மூலம் உள்ளே நுழைய இந்தச் செலவைச் செய்கிறது வால்ட் டிஸ்னி. ஆக, செலவில்லாமல், ஆனால் ஒரு மகா பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்.

இந்த புத்திசாலித்தனமான ஒப்பந்தங்கள் அனைத்திலும் கமல்ஹாசனின் மூளையாய் இருந்து செயல்பட்டவர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாயகன் இப்போ நல்ல தெளிவான் பிஸினஸ் நாயகனாகவும் மாறிவிட்டாருங்கோ!

ஜூலை 31-ம் தேதி ரிலீசாகும் குசேலனைத் தரிசிக்க ரசிகர்கள் இப்போதே டிக்கெட்டுக்கு முன்பதிவு ஆரம்பம்!

Rajini with Nayanatara ஜூலை 31-ம் தேதி ரிலீசாகும் குசேலனைத் தரிசிக்க ரசிகர்கள் இப்போதே டிக்கெட்டுக்கு முட்டி மோதத் தொடங்கிவிட்டனர். நாளை முதல் அதிகாரப்பூர்வமாக டிக்கெட் ரிசர்வேஷன் ஆரம்பமாகிறது சென்னை மற்றும் தமிழகத்தின் இதர திரையரங்குகளில்.

ஆந்திராவிலும் நாளை முதல் ரிசர்வேஷன். ஆனால் அமெரிக்கா, கனடா, மலேஷியா, இலங்கை மற்றும் ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிவிட்டன. முதல் வாரத்துக்கான எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து போய்விட்டதால், அடுத்த வாரத்துக்கான விற்பனை துவங்கப்பட்டுள்ளதாக பிரமிட் நிறுவனம் தெரிவிக்கிறது.

சென்னை நகரில் மட்டும் 15 (பிருந்தா தவிர்த்து) திரையரங்குகளில் குசேலன் திரையிடப்படுகிறது. அண்ணாசாலையில் சாந்தி, அண்ணா, ஆல்பர்ட், சத்யம், உட்லண்ட்ஸ் என 5 திரையரங்குகளில் தினசரி 4 காட்சிகளாக குசேலன் வெளியிடப்படுகிறது.

ரஜினியின் சிவாஜி திரைப்படம் பிருந்தா உள்பட 18 திரையரங்குகளிலும் (இது கணக்கில் காட்டப்பட்ட எண்ணிக்கை. ஆனால் முதல் இரு வாரங்களில் மட்டும் 26 திரையரங்குகளில் ஓட்டி வசூல் பார்த்தார்கள்!!), அதன் தெலுங்குப் பதிப்பு காஸினோவிலும் வெளியானது. அதைவிட அதிக எண்ணிக்கையிலான திரையங்குகளில் வெளியிடவே முதலில் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திட்டமிட்டது.

ஆனால் ரஜினி இதை விரும்பவில்லை. இந்தப் படம் நீண்ட நாட்கள் ஓடவேண்டும், எப்போதும் ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளில் இருக்க வேண்டும் என்றால் குறைவான திரையரங்குகளில் வெளியிடுங்கள் என பிரமிட் சாய்மிரா நிர்வாக இயக்குநரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

ஆந்திராவில் குசேலனின் தெலுங்குப் பதிப்பு கதாநாயகுடு 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. ஐதராபாத்தில் மட்டும் 24 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. திருப்பதியில் 12 திரையரங்குகள் கதாநாயகுடுவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்காததால் முதலில் இப்படத்தை ஆகஸ்ட் 15-ம் தேதிக்கு தள்ளி வைப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே திரையரங்குகள் கிடைத்துள்ளனவாம்.

கர்நாடகத்தில் இப்படம் ரிலீசாக எவ்வித ஆட்சேபணையும் இல்லை என அம்மாநில பிலிம்சேம்பர் கூறிவிட்டது. ஆனாலும் கன்னட ரக்ஷன வேதிகாவின் மிரட்டல் திரையரங்கு உரிமையாளர்களை யோசிக்க வைக்கிறது.

மும்பை, புனே, டெல்லி, கொல்கத்தா மற்றும் உள்ளிட்ட வட இந்திய நகரங்களிலும் குசேலன் மற்றும் கதாநாயகுடு கணிசமான திரையரங்குகளில் வெளியாகிறது.

குசேலனின் மூலப் பதிப்பு மலையாளத்தின் வெளியான கதபறயும் போல். இன்னும்கூட அந்தப் படம் கேரளாவின் சில இடங்களில் ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கேரளாவிலும் குசேலன் தமிழ் பதிப்பு வெளியாகிறது. சிவாஜியைப் போல அதிக திரையரங்குகளில் வெளியிடாமல், தேர்ந்தெடுத்த திரையரங்குகளில் மட்டுமே வெளியிடுவதாக பிரமிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குசேலனுக்கு 'யு':

இதற்கிடையே குசேலன் திரைப்படத்தை இந்திய தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நேற்று பார்த்தனர்.

படத்தின் எந்தக் காட்சியும் ஆபாசமாகவோ, அருவருக்கத்தக்க வகையிலோ அல்லது ஆட்சேபணைக்குரியதாகவோ இல்லை எனக் கூறி யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்தியத் திரையுலகின் இசை மேதைகளுள் ஒருவரான ரஹ்மானின் புதிய முயற்சி!

Rahman இந்தியத் திரையுலகின் இசை மேதைகளுள் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மான் தனது அடுத்த இசைப் பரிசோதனை முயற்சியை ஆரம்பித்துவிட்டார்.

முன்பு வந்தே மாதரத்தை தன் மந்திர இசையால் இளைஞர்களின் தேசிய கீதமாக்கியவர், இப்போது உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆல்பமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.இந்த ஆல்பத்தைத் தயாரிக்கப் போகிறவரும் அவரே.

திருக்குறள் ஒரு அற்புதமான இலக்கியம். அதை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டியது நம் கடமை. அதனால்தான் நானும் பிளாஸியும் (பாபா தீம் பாட்டுப் பாடியவர்) இணைந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளோம், எனும் ரஹ்மான், இப்போதே வேலைகளைத் துவங்கிவிட்டார்.

ஏற்கெனவே எக்கோ நிறுவனத்தின் ரங்கசாமி பார்த்தசாரதி திருக்குறளுக்கு இசையமைத்துள்ளார். 

இனி, தமிழ்ப் பாடத்தில் திருக்குறளுக்கு மட்டும் பத்துக்குப் பத்து மதிப்பெண்கள் அப்படியே கிடைத்துவிடும் மாணவர்களுக்கு!!

இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட 'முயற்சி'!

Namitha இனி புதிதாக நமிதா தமிழ் டிக்ஷ்னரி போட்டுவிட வேண்டியதுதான்... காரணம் இதுவரை ஹாய் மச்சான்ஸ்... எப்டிக்து... நீ என்கு வேணும்... என்றெல்லாம் வெளியில் மட்டுமே பேசி வந்த நமீதா, இனி திரையிலும் தனக்கு தானே பின்னணி பேசப் போகிறாராம்.

அய்யோ... தாங்காதும்மா... என்று அலறும் உங்களுக்கு ஒரு சின்ன ஆறுதல், ஒரு தமிழ் வாத்தியாரிடம் இருமாத பயிற்சி எடுத்த பிறகே சொந்தக் குரலில் பேசப் போகிறாராம் நமீதா (அப்போ அந்த வாத்தியாருக்கு தமிழ் மறந்துபோவது நிச்சயம்!!).

இப்போது அவர் நடித்துவரும் இந்திரா விழா படத்துக்காகத்தான் இப்படியொரு மெகா ரிஸ்க்கில் இறங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.ராஜேஷ்வர்.

நமீதா பேசுகிற தமிழை விடுங்கள்... தமிழை குஜராத்தியில் எழுதி வைத்துப் பேசாமல், நன்கு கற்றுக் கொண்டு பேச வேண்டும் என்ற நமீயின் தமிழ் முயற்சிக்கு ஒரு ஜே போடலாமே!

கோபிகாவின் கல்யாணம் முடிந்த கையோடு வேகவேகமாக ஒரு வேலையில் இறங்கியிருக்கிறார் ஐஸ்லாந்து ஹனிமூன்!

Gopika and Ajilesh கல்யாணம் முடிந்த கையோடு வேகவேகமாக ஒரு வேலையில் இறங்கியிருக்கிறார் கோபிகா. சமையல் கற்றுக் கொள்வதுதான் அது.

ஏற்கெனவே இந்த வேலையை அவர் துவங்கிவிட்டாலும் திருமணத்துக்குப் பிறகுதான் மிகத் தீவிரமாக கற்றுக் கண்டு வருகிறாராம்.

திருமணம் முடிந்ததுமே தேனிலவுக்காக வெளிநாடு கிளம்பத் திட்டமிட்டிருந்த அவரது கணவர் டாக்டர் அஜிலேஷ், மனைவியின் சமையல் கோச்சிங் முடியும் வரை காத்திருக்கிறாராம்.

இப்போதைக்கு கொச்சி அதிரப்பள்ளி மூணாரு என கேரள அழகைப் பருகுவதில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர் புதுமணத் தம்பதிகள். விரைவிலேயே தேனிலவுக்காக ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்ஜாவிக் செல்லப் போகிறார்களாம். பின்னர் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கும் ஒரு விசிட் அடிக்கும் திட்டமும் உள்ளதாம்.

ஆரம்பத்தில், திருமணத்துக்குப் பிறகு சினிமாவா... நோ சான்ஸ் எனக் கூறிவந்த கோபிகாவிடம், இப்போது சின்ன மாறுதல். இப்போதைக்கு நடிக்கும் மதிட்மே இல்லை. முதலில் டப்ளினுக்குப் போகிறேன். பின்னர் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன் என பிரபல மலையாள நாளிதழுக்கு அவர் இரு தினங்களுக்கு முன் பேட்டியளித்துள்ளார்.

ஒரு கூடுதல் தகவல்: கோபிகா நடித்த ஒரு படத்தைக் கூட இதுவரை அவரது கணவர் அஜிலேஷ் பார்த்ததே இல்லையாம்...

ரொம்ப நல்லதாப் போச்சி, தப்பிச்சாங்க சேச்சி!!

ஷாகித்- கரீனா கபூர் நடித்து இந்தியில் வெளியாகி தமன்னாவின் 'ஜப் வி மெட்'!

Tamanna ஷாகித்-கரீனா கபூர் நடித்து இந்தியில் வெளியாகி ஹிட்டான 'ஜப் வி மெட்' படம் தமிழில் தயாராகிறது.

மோசர் பேர் நிறுவனம் தயாரகிக்கும் இந்தப் படத்தில் முதலில் தனுஷ்-த்ரிஷா நடிப்பார்கள் எனக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது ஜோடியே முழுவதுமாக மாறிவிட்டது. தனுஷ்-த்ரிஷா இருவருக்குமே கால்ஷீட் பிரச்சினை என்பதால், அவர்களுக்குப் பதில் பரத்- தமன்னா ஜோடி போடுகிறார்கள். இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல் முறை.

கல்லூரிக்குப் பின் தேர்ந்தெடுத்து படங்களை ஒப்புக் கொண்டு வரும் தமன்னா, ஆனந்த தாண்டவம், அயன், படிக்காதவனுக்குப் பிறகு நடிக்கவிருக்கும் படம் இது.

பரத் தற்போது சேவல், திருத்தணி உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார். ஹரியின் இயக்கத்தில் உருவாகிவரும் சேவல் தீபாவளிக்கு வெளியாகிறது.

திரையுலகில் கொடி கட்டிப் பறந்த ஐந்தாம் படையில் தேவயானி!

Devayani திரையுலகில் கொடி கட்டிப் பறந்த தேவயானி, கொஞ்ச கால ஓய்வுக்குப் பின் பின் பெரிய திரைக்குத் திரும்பி இருக்கிறார்.

குஷ்பு தயாரிக்க அவரது கணவர் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் ஐந்தாம் படையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து தேவயானியிடம் கேட்டபோது, மீண்டும் பெரிய திரைக்கு வருவதில் எனக்குக் கொஞ்சம் தயக்கமிருந்தது.

என் கணவர் இயக்கும் திருமதி தமிழ் (தேவயானிதான் தயாரிப்பாளர்) படத்தில் மட்டும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நடித்து வந்தேன். இதைக் கேள்விப்பட்ட என் தோழி குஷ்பு, தனது ஐந்தாம் படையில் முக்கிய பாத்திரத்தில் நடித்தே தீரவேண்டும் என அன்புக் கட்டளையிட்டு விட்டார். அதைத் தட்ட முடியவில்லை.

சிம்ரனுக்கும் எனக்கும் மிக முக்கியமான வேடங்களைக் கொடுத்துள்ளார் இயக்குநர். இந்த இரு படங்களுக்கும் கிடைக்கப் போகும் வரவேற்பைப் பொறுத்துதான், அடுத்தடுத்த படங்களை முடிவு செய்யப் போகிறேன், என்கிறார் தேவயானி.

வாங்க.. மீண்டும் வண்ணக் கோலம் போடுங்க!

 

ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி நான் விமர்சிக்கவில்லை சேரன்!

Priyamani ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி நான் விமர்சிக்கவில்லை. ஆனால் நல்ல வாய்ப்புகளை மறுக்கிறாரே என்ற ஆதங்கத்தில் நான் கூறியதை அவர் தவறாக எடுத்துக் கொண்டுவிட்டார், என்று கூறியுள்ளார் இயக்குநர் சேரன்.

சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தேசிய விருது கிடைத்த தலைக் கனத்தில் ப்ரியாமணி என்னைப் போன்ற இயக்குநர்களிடம் கதை கேட்கக் கூட முன்வருவதில்லை, என்று கூறியிருந்தார்.

உடனே இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த ப்ரியாமணி, சேரன் படத்தில் நடிப்பதுதான் விருதுக்கான தகுதி என்றால், அப்படி ஒரு தகுதியே எனக்குத் தேவலையில்லை என்று காட்டமாகக் கூறியிருந்தார்.

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சேரன் இப்போது பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

ப்ரியாமணியின் தகுதிக்கு மீறிய கௌரவம் கிடைத்துவிட்டதாக நான் ஒரு போதும் கூறவில்லை. பருத்தி வீரன் பார்த்ததுமே, அவருக்குதான் தேசிய விருது கிடைக்கப் போகிறது என நினைத்தேன். ஒரு தமிழ்ப் படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சியே. அது அந்தப் படத்தின் இயக்குநருக்குக் கிடைத்த வெற்றி. தொடர்ந்து அதுபோன்ற இய்க்குநர்களின் படங்களில் நடிக்கும் போதுதான் நடிப்புக்கு புதிய பரிமாணம் கிடைக்கும்.

அதனால் என்னுடைய பொக்கிஷம் படத்தில் அவரை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்து அணுகினோம். நான் நேரடியாகப் பேசவில்லை. ஆனால் அவர் என்னுடைய உதவியாளர்களின் எந்த அழைப்புக்கும் பதிலே சொல்லவில்லை. ப்ரியாமணி போன்றவர்கள், தங்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாவிட்டாலும், பெரிய நடிகர்களின படங்களில் நடிப்பதற்கே விரும்புகிறார்கள். நல்ல கதை, நடிக்க வாய்ப்புள்ள பாத்திரங்களைக் கொடுத்தாலும் என் போன்றவர்களின் படங்களில் நடிக்க மறுக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லயிருந்தேன். மற்றபடி அவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை, என்றார்.

மேலும் கூறுகையில், நான் இப்போது எடுத்து வரும் பொக்கிஷம் திரைப்படம், ஆட்டோகிராப்பின் 2-ம் பாகமல்ல. இது வேறு கதை. ஆட்டோகிராப் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும். பொக்கிஷத்துக்கு அடுத்த படம் அதுதான்.  

மாயக்கண்ணாடி தோல்வியால் நான் துவண்டுவிடவில்லை. என்னை மறுபடியும் புதிதாக்கிக் கொள்ள அந்தத் தோல்வி உதவியது என்பதே உண்மை.

வித்தியாசமான சிந்தனையோடு இன்றைக்கு புதிய இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சசிகுமார், வசந்தபாலன் போன்றோர் வருவது சந்தோஷமாக இருக்கிறது.   

பிரமாண்டம்தான் உலகத் தரமா?

தமிழ்ப் படங்கள் பிரமாண்டமாய் தயாராவதாகவும், அதனால் அவை உலகத் தரத்துக்கு உயர்ந்திருப்பதாகவும் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. வியாபாரம் வேண்டுமானால் உயர்ந்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் நல்ல தமிழ்ப் படங்கள் என்று சொல்ல முடியாது. அவை வெறும் பொழுதுபோக்குப் படங்கள்.

அவை, உலக அரங்கில் தமிழர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்காதவை. உலகத் தரத்துக்கான தமிழ் படத்துக்கு அவ்வளவு பிரமாண்டம் தேவையில்லை. எளிமையாக இருப்பதுதான் தமிழர்களின் வாழ்க்கை. அதே சமயம் வியாபார யுக்தியில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை தமிழ் சினிமா அடைந்ததும், அதில் ஜெயித்ததும் பாராட்டத்தக்கது, என்கிறார் சேரன்.

உங்களுக்கு ஏதாவது புரியுதா?

வெக்கம்னா என்னன்னே தெரியாத என்னையும் நடிக்க வைச்சிட்டாங்க ஸ்வாதி!

Swathi வெக்கம்னா என்னன்னே தெரியாத என்னையும் நடிக்க வைச்சிட்டாங்க, என்கிறார் சுப்பிரமணியபுரம் நாயகி ஸ்வாதி.விரிந்த விழிகள் வெட்கம் சிந்தும் பார்வை கவிதைச் சிரிப்பு என சுப்பிரமணியபுரத்தில் இளசுகளின் மனசை அள்ளியவர் 'கலர்ஸ்' ஸ்வாதி. தெலுங்கு மா டிவியில் தொகுப்பாளரான இவர் செல்வராகவனின் சூப்பர் ஹிட் தெலுங்குப் படமான ஆடவாரி மாட்டலாகு அர்த்தலே வேறுலே படத்தில் த்ரிஷாவின் தங்கையாக வந்து கலக்கினார்.

அந்தப் படத்துக்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தாலும், சுப்பிரமணியபுரம் வாய்ப்பு வந்ததும் அனைத்தையும் உதறிவிட்டு இந்த படத்திலேயே முழுமையாக கவனம் செலுத்தி வந்தார்.

அதற்கான பலன் இப்போது கைமேல் கிடைத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் நன்கு நடிக்கத் தெரிந்த புதுமுகம் என்ற அங்கீகாரத்தை தனது முதல் படத்திலேயே பெற்றுவிட்டார் ஸ்வாதி. அடுத்த படத்தைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் ஸ்வாதியின் பேட்டி:

சுப்பிரமணியபுரம் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்தீர்களா?

இந்தப் படத்தை மிகவும் சின்ஸியராக எடுத்தார்கள். அந்த முயற்சிக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்பினேன். ஆனால் அது இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என நினைக்கவில்லை. மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

படத்தில் சாதுப் பெண்ணாக இருந்தீர்களே... நிஜத்தில் எப்படி?

அய்யோ... நான் நிஜத்தில் படு சுட்டி. ரகளைப் பேர்வழி. என்னை அந்தப் படத்தில் பார்த்துவிட்டு, ஏய்.. நீதானா அது? என்னமா கலாட்டா பண்ணுவ, இப்படி அடக்க ஒடுக்கமா நல்ல பொண்ணா எப்படி மாறினே... என எல்லாரும் கிண்டலடித்தார்கள். அந்த அளவு கலாட்டா பார்ட்டி நான்.

இந்தப் படத்தில் வெட்கப்படும் காட்சிகள் நிறையவே இருந்தன. உண்மையைச் சொல்லணும்னா, வெக்கப்படறதுன்னா என்னன்னே எனக்குத் தெரியாது.

இன்னொன்னு படம் முழுக்க முழுக்க கிராமத்தில் நடப்பது போல கதை அமைப்பு வேறு. எனக்கு கிராமமும் தெரியாது, வெக்கமும் தெரியாது (இவரல்லவா மாடர்ன் மங்கை!). இருந்தும் இயக்குநரும், யூனிட் ஆட்களும் எனக்கு மிகப் பெரிய உதவியாய் இருந்தார்கள். வெக்கப்படறது எப்படின்னு இயக்குநர் சசிகுமார்தான் சொல்லிக் கொடுத்தார். அவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்.

அடுத்து என்ன படம்?

தெரியல... நான் எதையுமே திட்டம் போட்டுச் செய்யறதில்ல. நிறைய வாய்ப்புகள் வருது. பார்க்கலாம்... எத்தனை படம் என்பது முகியமில்லை. ஒண்ணு ரெண்டு செஞ்சாலும் பிடிச்சமாதிரி செய்யணுமே. அவ்வளவுதான், என்கிறார்.

நல்ல பாலிஸி!

<<முன்னைய பதிவுகள>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright