<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

குசேலனில் நடிகராக ரஜினி காந்த் நடிப்பதைப் போல பந்தயம் படத்தில் நடிகராகவே விஜய் நடித்துள்ளாராம். ஷூட்டிங்குக்காக ஏலகிரிக்குப் போயிருந்த ஏகன் படக் குழுவினர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒவ்வொரு படத்தின்போதும் வரும் 'கன்னட சிக்கல்' குசேலனுக்கும் வந்து விட்டது. மிருகம் படத்தில் நடித்ததைப் போன்ற சவாலான கேரக்டர்களில் நடித்துக் கலக்க வேண்டும் சோனாவின் விருப்பம்!. 'கலர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள புதிய பொழுதுபோக்கு சேனலில் இடம்பெறவுள்ள 'பிக் பாஸ்' ஷில்பா!. தனுஷ் நடிக்கும் படிக்காதவன் படத்திலிருந்து வடிவேலுவை தூக்கி விட்டார்கள்.வடிவேலுவுக்குப் பதில் விவேக்!.  சேரனுடன் நடிப்பதுதான் தேசிய விருதுக்கு தகுதியா?-சேரன் பொய் சொல்கிறார்!-ப்ரியாமணி. மெக்ஸிகோவில் நடந்த கந்தசாமி படப்பிடிப்பிலிருந்து திரும்பியுள்ள கந்தசாமி யூனிட் சேதமான 'கந்தசாமி'!. தவமாய் தவமிருந்து படத்தின் லைம் லைட்டோடு காணாமல் போன மீனாளுக்கு மீண்டும் புதுப் படம்!

 

 

 

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 23 ஜுலை, 2008
 

குசேலனில் நடிகராக ரஜினி காந்த் நடிப்பதைப் போல பந்தயம் படத்தில் நடிகராகவே விஜய் நடித்துள்ளாராம்.

Vijay with Asin விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்க, நிதின்சத்யா ஹீரோவாக நடிக்கும் படம் பந்தயம். இப்படத்தில் விஜய்யின் பரம விசிறி வேடத்தில் நடித்துள்ளாராம் நிதின் சத்யா. சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

இப்படத்தில் விஜய்யும் விஜய்யாகவே ஒரு காட்சியில் தோன்றுகிறார். எம்.ஜி.ஆர். என்று பெயரிடப்பட்ட படத்தில், பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்கின்போது விஜய்யை செட்டில் நிதின் சத்யா சந்திப்பது போல காட்சி வருகிறதாம்.

இப்படி தனதுதந்தையின் படத்தில் கெஸ்ட் ரோலில் வருவது விஜய்க்குப் புதிதல்ல. ஏற்கனவே சந்திரசேகர் இயக்கிய சுக்ரன் படத்தில் விஜய் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்படத்தின் நாயகன் ரவிகிருஷ்ணா.

ஷூட்டிங்குக்காக ஏலகிரிக்குப் போயிருந்த ஏகன் படக் குழுவினர் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பியுள்ளனர்.

Ajith ராஜு சுந்தரத்தின் முதல் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகிறது ஏகன். வித்தியாசமான கெட்டப்பில் அஜீத் இப்படத்தில் நடிக்கிறார்.

அய்ங்கரன் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படம், இந்தியில் வெளியான மெய்ன் ஹூன் நா படத்தின் ரீமேக் ஆகும். செப்டம்பரில் உலகம் முழுக்க திரையிட திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின் ஷூட்டிங்குக்காக ஏலகிரி மலைக்குப் போயிருந்தது படக்குழு. வேலூர் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைப் பிரதேசமான ஏலகிரியில் வைத்து சில முக்கிய காட்சிகளையும், நயன்தாரவுடன் அஜீத் ஆடிப் பாடும் ஒரு பாடல் காட்சியையும் சுட்டுள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடவடைந்து விட்டது. விரைவில் பின்னணி இசைப் பதிவு நடைபெறவுள்ளதாம்.

ஏகனை முடித்து விட்டு சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில், கெளதம் மேனன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் அஜீத் நடிக்கவுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒவ்வொரு படத்தின்போதும் வரும் 'கன்னட சிக்கல்' குசேலனுக்கும் வந்து விட்டது.

Rajiniசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒவ்வொரு படத்தின்போதும் வரும் 'கன்னட சிக்கல்' குசேலனுக்கும் வந்து விட்டது.

ரஜினியின் படங்கள் கர்நாடகத்தில் ரிலீஸாவதற்கு முன்பு ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி கன்னட அமைப்புகள் சில பிரச்சினையைக்கிளப்புவது வழக்கமாகி விட்டது. இப்போது குசேலனுக்கு எதிராக அங்கு கன்னட ரக்சன வேதிகே அமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

ஜூலை 31ம் தேதி குசேலன் ரிலீஸாகிறது. கர்நாடகத்திலும் அதே தேதியில் படத்ைத திரையிட திட்டமிட்டுள்ளனர். ஆனால் குசேலனை திரையிட விட மாட்டோம் என கன்னட ரக்சன வேதிகே அறிவித்துள்ளது.

இதனால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளார். காரணம் படம் திட்டமிட்டபடி வராவிட்டால் ரூ.1.50 கோடி நஷ்டம் ஏற்படுமாம் அவருக்கு.

ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகத்தைக் கண்டித்து சென்னையில் திரையுலகினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின்போது கர்நாடக தலைவர்களை சரமாரியாக விளாசி ரஜினி வீராவேசமாக பேசியதுதான் இப்போது வினையாகியுள்ளது.

இந்த பேச்சின் மூலம் ரஜினி தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் சாதகமாக இருக்கிறார். காவிரிப் பிரச்சினையிலும் அவர் தமிழகத்திற்கு சாதகமாக இருக்கிறார் என்ற எண்ணம் கர்நாடகத்தில் பரவியுள்ளது.

இதன் காரணமாக உலக அளவில் சூப்பர் ஸ்டாராக பார்க்கப்படும் ரஜினியை, கன்னட ரக்சன வேதிகே வில்லனாக பார்க்க ஆரம்பித்திருக்கிறது. கன்னட மக்களின் நலனுக்கு எதிரானவராக, அவர்களின் உணர்வுகளை மதிக்காதவராக ரஜினியை அவர்கள் வர்ணிக்கின்றனர். ரஜினிகாந்த் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டால்தான் அவரது படத்தை கர்நாடகத்தில் திரையிட அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் எனது படம் கர்நாடகத்தில் திரையிடாவிட்டால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை. யாரிடமும் நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று முன்பே ரஜினி கறாராக கூறி விட்டார்.

இந்த நிலையில் குசேலனுக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து வேதிகேவின் செயலாளரான தீபக் ஷெட்டி கூறுகையில், ஓகனேக்கல் விவகாரத்தில் வேதிகே உறுப்பினர்களை அவமதித்து விட்டார் ரஜினி. இது எங்களுக்கு மட்டுமல்ல, மொத்த மாநிலத்துக்குமே அவமானமாகும். எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வேதிகே அமைப்பினர் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் வர்த்தக சபையில் அவர்கள் ரஜினி படத்ைத அனுமதிக்கக் கூடாது என்று மனுவும் கொடுத்தனர்.

இதற்கு என்னதான் தீர்வு?:

அதற்கும் தீபக் ஷெட்டியே ஒரு யோசனையைக் கூறுகிறார். ரொம்ப சிம்பிள். குசேலன் ரிலீஸுக்கு முன்னதாக கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என்று கர்நாடக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை ரஜினி கேட்க வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் படத்தை திரையிட விட மாட்டோம். எங்களது கோரிக்கையை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் ஏற்றுக் கொண்டுள்ளது. எங்களது கோரிக்கையை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்துள்ளனர் என்றார்.

ஆனால் டபுள் கேம் போல, குசேலன் சிக்கலின்றி ரிலீஸாக உதவுவதாக திரைப்பட வர்த்தக சபை உறுதியளித்துள்ளதாம் விநியோகஸ்தருக்கு.

திரைப்பட வர்த்தக சபை தலைவராக இருக்கும் முன்னாள் நடிகை ஜெயமாலா, இந்தப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளாராம். தமிழ் திரையுலகுக்கு எதிராக கன்னட நடிகர், நடிகையர் பெங்களூரில் நடத்திய போட்டி உண்ணாவிரதத்தில் ஜெயமாலாவும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஜெயமாலா கூறுகையில்,இது எனக்கு பெரிய சவாலாக உள்ளது. ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகர். அதில் சந்தேகம் இல்லை. ஈகோவுக்காக அவர் சண்டை போட மாட்டார் என நம்புகிறேன். ரஜினியிடமும் பேசியுள்ளேன். இதுகுறித்து யோசிக்க அவகாசம் தேவை என்று அவர் கூறியுள்ளார். பிரச்சினை நீடிப்பதை அவர் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன் என்றார்.

வர்த்தக சபையின் துணைத் தலைவரான ராக்லைன் வெங்கடேஷ் (இவர் சில தமிழ்ப் படங்களை தயாரித்து நல்ல லாபம் பார்த்தவர்) கூறுகையில், இந்தப் பிரச்சினையால் தமிழ் மற்றும் கன்னட திரையுலகினருக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை அமைதியான முறையில் சுமூகமாக தீர்க்க முயற்சிக்க வேண்டும். ரஜினியிடமிருந்து எந்தப் பதிலும் வராவிட்டால், அது தமிழ் திரையுலகுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். அதேபோல கர்நாடகத்தில் உள்ள விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.

குசேலன் வருகைக்காக அனைவரும்காத்திருக்கிறார்கள். இதற்காக நிறையப் பணத்தை செலவிட்டுள்ளனர். வேதிகே திட்டமிட்டபடி போராட்டத்ைத நடத்தினால் எங்களுக்கு பெரும் பாதிப்பும், நஷ்டமும் ஏற்படும் என்றார்.

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும் இந்தப் பிரச்சினையில் இறங்கியுள்ளன. மாற்று ஏற்பாடுகள், தீர்வுகள் குறித்து யோசித்து வருகின்றனராம்.

ரஜினி இந்தப் பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது

மிருகம் படத்தில் நடித்ததைப் போன்ற சவாலான கேரக்டர்களில் நடித்துக் கலக்க வேண்டும் சோனாவின் விருப்பம்!

Sona மிருகம் படத்தில் நடித்ததைப் போன்ற சவாலான கேரக்டர்களில் நடித்துக் கலக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்கிறார் ஜில் ஜில் சோனா.

கவர்ச்சியில் எல்லை என்றால் என்ன என்ற கேள்வியுடன் கேள்விக்குறி படத்தில் அறிமுகமானவர் சோனா. தொடர்ந்து மிருகம் படத்தில் கிறக்கமான ரோலில் நடித்து அசத்திய சோனா இப்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தில் வடிவேலுவுடன் 10 நிமிடமே தோன்றும் காட்சியில் நடித்திருக்கிறார்.

பத்து நிமிட சீன் என்றாலும் ரஜினி படமாச்சே என்கிறார் சந்தோஷத்துடன். கவர்ச்சி மட்டும்தான் உங்கள் லட்சியமா, அல்லது வேறு ஏதாவது கொள்கை வைத்திருக்கிறீர்களா என்று சோனாவிடம் கேட்டால், மிருகம் படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது.

எனது உடலில் இருக்கும் கவர்ச்சியை மட்டும் காட்டாமல், உள்ளுக்குள் இருக்கும் நடிப்பையும் வெளிக் கொணர்ந்து எனக்கு பெரும் பிரேக் கொடுத்தவர் இயக்குநர் சாமி. அப்படிப்பட்ட கேரக்டர்களில், விதம் விதமான கேரக்டர்களில் நடித்துக் கலக்க வேண்டும் என்பதுதான் எனது ஒரே ஆசை.

கவர்ச்சி முக்கியம்தான். கவர்ச்சி இல்லாமல் எதுவுமே இல்லை. அதேசமயம், நடிப்புக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் நீடித்து நிலைக்க முடியும்.

நடிப்புடன் கூடிய கவர்ச்சிக்கு நான் எப்போதும் சிவப்பு கொடி காட்டவே மாட்டேன் என்கிறார் சோனா.

சோனா நடித்துள்ள பத்து பத்து படம் அவருக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திலும் கவர்ச்சி அதிகம்தானாம். ஆனாலும் படம் முழுக்க நடிப்பையும் தாராளமாக காட்டியிருக்கிறாராம் சோனா. படத்தில் அவருடைய முழுக் கவர்ச்சியில் தோய்த்தெடுக்கப்பட்டுள்ள ஒரு பாடல் காட்சி படு ஹிட் ஆகும் என்கிறது பத்து பத்து வட்டாரம்.

'கலர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள புதிய பொழுதுபோக்கு சேனலில் இடம்பெறவுள்ள 'பிக் பாஸ்' ஷில்பா!

Shilpa Shetty'கலர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள புதிய பொழுதுபோக்கு சேனலில் இடம்பெறவுள்ள 'பிக் பாஸ் சீசன் 2 'என்ற நிகழ்ச்சியை நடத்த ஒப்புக் கொண்டுள்ளாராம் 'பிக் பிரதர்' புகழ் ஷில்பா ஷெட்டி.

கலர்ஸ் என்ற பெயரில் புதிய பொழுதுபோக்கு சேனல் ஆகஸ்ட் மாதம் முதல் ஒளிபரப்பைத் தொடங்குகிறது. இந்த சேனலில், பிக் பாஸ் 2 என்கிற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ இடம் பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஷில்பா ஷெட்டி தொகுத்து வழங்கவுள்ளார்.

டிவி எப்போது ஒளிபரப்பை தொடங்கும் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 13 போட்டியாளர்கள் பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் பெயர்கள், டிவி தொடங்கப்படும்போது அறிவிக்கப்படும்.

படப்பிடிப்பு முழுவதும் லோனாவாலா பகுதியில் நடைபெறும். 3 மாதங்களுக்கு இந்த ரியாலிட்டி ஷோ இடம் பெறும்.

இந்த நிகழ்ச்சியின் முதலாவது பாகம் சோனி டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பானது. அதை நடிகர் அர்ஷ்த் வர்சி ஹோஸ்ட் ஆக இருந்து தொகுத்து அளித்தார். தற்போது ஷில்பா அந்த இடத்திற்கு வருகிறார்.

இது லண்டன் டிவியில் ஒளிபரப்பான பிக் பிரதர் நிகழ்ச்சியைப் போன்றதுதான். பிக் பிரதர் என பெயரிடப்பட்ட அந்த நிகழச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுதான் ஷில்பா 'பிக் பாஸ்' ஆனார் என்பது நினைவிருக்கலாம். இப்போது தேசி கலர் பூசி இந்தியாவுக்கு கலர்ஸ் டிவி மூலம் வருகிறது இந்த ரியாலிட்டி ஷோ. அதை ஷில்பா தொகுத்து அளிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிக்கும் படிக்காதவன் படத்திலிருந்து வடிவேலுவை தூக்கி விட்டார்கள்.வடிவேலுவுக்குப் பதில் விவேக்!

Vivek with Chaya Singh தனுஷ் நடிக்கும் படிக்காதவன் படத்திலிருந்து வடிவேலுவை தூக்கி விட்டார்கள். அவருக்குப் பதில் காமெடி செய்கிறார் விவேக்.

படிக்காதவன் படத்தில் ஆரம்பத்தில் வடிவேலுதான் புக் ஆகியருந்தார். ஹைதராபாத்தில் 2 நாள் ஷூட்டிங்கிலும் கூட கலந்து கொண்டார். ஆனால் தனக்கான காமெடி டிராக் சரியில்லை என்று கூறி ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வாக் அவுட் செய்தார்.

வசனம் மற்றும் காட்சியமைப்புகளால் கடுப்பான வடிவேலு, இயக்குநர் சுராஜுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பஞ்சாயத்தில் இறங்கினார்.

படத்தில் வரும் ஒரு காட்சியில், ஹீரோ தனுஷ், வடிவேலுவை போட்டு அடிப்பதாக வருகிறதாம். இதுதான் வடிவேலுவை டென்ஷன் ஆக்கி விட்டது. இதெல்லாம் சீனா என்று கோபத்துடன் கூறியபடி கிளம்பிய வடிவேலு, வாங்கிய அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதையடுத்து தற்போது வடிவேலுவுக்குப் பதிலாக விவேக்கைப் போட்டுள்ளனராம். தனுஷுடன்,விவேக் ஜோடி சேருவது இதுவே முதல் முறை என்பதால் தனது பிசியான ஷெட்யூலுக்கு மத்தியிலும், தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறாராம் விவேக்.

தனுஷ் இதுவரை நடித்துள்ள 13 படங்களில் பெரிய காமெடியன்களுடன் நடித்ததில்லை. கருணாஸ், மயில்சாமி என அடுத்த ரேங்க் காமெடியன்களுடன்தான் கலாய்த்து வந்தார். இப்போதுதான் முதல் முறையாக பெரிய காமெடியனுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

சேரனுடன் நடிப்பதுதான் தேசிய விருதுக்கு தகுதியா?-சேரன் பொய் சொல்கிறார்!-ப்ரியாமணி  

Priyamaniசேரனுடன் நடிப்பதுதான் தேசிய விருதுக்கு தகுதியா?-ப்ரியாமணி பாய்ச்சல்
சேரன் பெரிய இயக்குநராக இருக்கலாம். அதற்காக என்னைப் பற்றி பத்திரிகைகளில் கமெண்ட் அடிக்க அவருக்கு உரிமை கிடையாது. அவர் படத்தில் நடிக்க மறுத்ததால் எனக்கு தேசிய விருது பெறவே தகுதி இல்லை என்று கூறுவதா என வெடிக்கிறார் ப்ரியாமணி.

சேரன் சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், தனது பொக்கிஷம் படத்தில் நடிக்க ப்ரியாமணியைத் தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதில் தரக்கூட மறுத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர் தனது பேட்டியில், இங்கே சில நடிகைகள் ஆணாதிக்கம் மிகுந்த தமிழ் சினிமா உலகில் எங்களுக்கான இடம் ஏது எனப் புலம்புகிறார்கள் ஆனால், பொக்கிஷம் போன்ற கதைகளைச் சொன்னால், காத தூரம் ஓடுவார்கள்.

சமீபத்தில் தேசிய விருது வாங்கிய பிரியாமணிக்கு, இந்த கதையைச் சொல்ல நினைத்தேன். இரண்டு நாட்கள் என் செல்போன் அழைப்புக்குக்கூட அவர் பதில் அளிக்கவில்லை. பிரியாமணிக்கு அவர் தகுதியைவிட அதிகமாக பெருமை சேர்ந்து விட்டது. அவருக்கு சினிமா பற்றிய அக்கறை துளியும் இல்லை என விளாசியிருந்தார்.

இதுகுறித்து ப்ரியாமணியிடம் கேட்டதற்கு, ஏற்கெனவே பலமுறை இதற்கு பதில் சொன்ன அலுப்புடன் நம்மிடமும் பேசினார்.

நிறையப் பேர் கேட்டுட்டாங்க. நானும் நிறைய சொல்லிட்டேன். முதலில் ஒரு விஷயம். சேரன் பொய் சொல்கிறார். அவர் என்னிடம் பேசவே இல்லை. தன்னை மதிக்கவில்லையே என்ற மனப்பான்மையில் சில ஆண்கள் வாய்க்கு வந்தபடி பேசுவார்களே, அந்த மாதிரி இருக்கிறது சேரன் சொல்வது.

என்னைப் பற்றி என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் போய்விடுவேன் என தப்புக் கணக்குப் போடுகிறார்.

சில தினங்களுக்கு முன் அவர் அலுவலகத்திலிருந்து ஒருவர் பேசினார். ஆனால் நான் அப்போதே என்னுடைய கமிட்மெண்டுகள் பற்றிக் கூறி நடிக்க முடியாது எனச் சொல்லிவிட்டேன். ஏற்கெனவே ஒப்புக் கொண்ட 3 படங்களை நான் முடித்துக் கொடுத்தாக வேண்டியுள்ளது.

என்னால் நடிக்க முடியவில்லை, அதனால் மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். இதில் என்ன தவறு. சேரன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதாலேயே தேசிய விருதுக்கு நான் தகுதியில்லாமல் போய்விட்டேனா...

அவருடன் நடிக்கும் நடிகைகளுக்கு மட்டுமே அந்தத் தகுதி இருக்கிறது என்று அவர் நினைத்தால், அப்படியொரு தகுதியே எனக்குத் தேவையில்லை...என்றார்.

அடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ப்ரியாமணி. இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே பல படங்களைத் தவிர்த்து வருகிறாராம்.

இயக்குநர்கள் அடித்தாலும் பயபக்தியோடு இருந்தது பாரதிராஜா காலம் என்பதை சேரன் அடிக்கடி மறந்துவிடுகிறாரே...!

மெக்ஸிகோவில் நடந்த கந்தசாமி படப்பிடிப்பிலிருந்து திரும்பியுள்ள கந்தசாமி யூனிட் சேதமான 'கந்தசாமி'!  

Vikram with Shreyaமெக்ஸிகோவில் நடந்த கந்தசாமி படப்பிடிப்பிலிருந்து திரும்பியுள்ள கந்தசாமி யூனிட், மொத்தம் உள்ள 120 பிலிம் ரோல்களில் 30 ரோல்கள் சேதமடைந்திருப்பதால் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளதாம்.

ஹீரோ விக்ரமும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனராம்.

மெக்ஸிகோவில் உள்ள பல சிறப்பான இடங்களில் சமீபத்தில் படப்பிடிப்பை நடத்தி முடித்தது கந்தசாமி யூனிட். வழக்கமாக வெளிநாடுகளில் படப்பிடிப்பை முடித்து விட்டு வரும்போது, பயன்படுத்தப்பட்ட பிலிம் ரோல்களைப் பாதுகாப்பாக, ஸ்கேனிங்குக்கு ஆளாகி விடாமல் கொண்டு வருவார்கள்.

ஆனால் கந்தசாமி விஷயத்தில் அந்த நடைமுறையில் கோளாறு ஏற்பட்டு விட்டது.

விமான நிலைய ஊழியர்கள்தான் பிலிம் ரோல்கள் அடங்கிய பெட்டிகளை தவறாக கையாண்டு சேதப்படுத்தி விட்டதாக இயக்குநர் சுசி கணேசனும், கேமராமேன் ஏகாவும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இது யூனிட்டாரின் தவறுதான் என படக்குழுவினர் கிசுகிசுக்கின்றனர்.

அஜாக்கிரதையால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

மெக்ஸிகோவில் போட்ட பணமும் எடுத்த முயற்சிகளும் வீணாகி விட்டதே என்று பெரும் அப்செட்டில் இருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இருப்பினும், காட்சிகளின் முக்கியத்துவம் கருதி மறுபடியும் மெக்ஸிகோ சென்று அதே காட்சிளை மீண்டும் படம் பிடிக்குமாறு இயக்குநர் சுசி. கணேசனிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவருக்கு வேண்டியவர்கள் வேண்டாம் விபரீதம் என்று அட்வைஸ் செய்யவே தற்போது பின்னி மில்லில் அந்தக் காட்சிகளை எடுக்கவுள்ளனராம். கிளைமேக்ஸையும் அங்கேயேதான் படம் பிடிக்கவுள்ளனராம்.

இனிமேலாவது கவனமா இருங்க சாமி!

தவமாய் தவமிருந்து படத்தின் லைம் லைட்டோடு காணாமல் போன மீனாளுக்கு மீண்டும் புதுப் படம்!  

Meenalதவமாய் தவமிருந்து படத்தின் லைம் லைட்டோடு காணாமல் போன மீனாளுக்கு மீண்டும் ஒரு படம் கிடைத்துள்ளது. ஆனால் அவர் நாயகி இல்லை.

தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் அண்ணியாக வந்து போனார் மீனாள். சின்ன கேரக்டர் என்றாலும் கூட மீனாளும் பேசப்பட்டார். இதையடுத்து அவரைத் தேடி பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வந்தவையெல்லாம் கிளாமர் வாய்ப்புகள்தான்.

இதனால் புதுப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் யோசித்து வந்த மீனாள், வேறு வழியில்லாமல் ஒரு படத்தில் நல்ல கிளாமரோடு கூடிய வேடத்தை ஏற்று நடித்தார். படம் என்ன ஆனது என்றுதான் தெரியவில்லை.

இந்த நிலையில் மீனாளுக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. கந்தன் குமரன் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் மீனாள் முக்கிய வேடத்தில் தலை காட்டுகிறாராம்.

இளைஞர்களை மையமாகக் கொண்ட படமாம் இது. ஆனால் நல்ல கருத்துடன் படத்ைத எடுக்கவிருக்கிறார்களாம். மீனாளின் கேரக்டரும் படத்தில் பேசப்படுமாம்.

படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ரதீஷ், அவருக்கு ஜோடி ரூபஸ்ரீ. இருவருமே புதுமுகங்கள்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் படப்பிடிப்பை தொடங்கி வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.

<<முன்னைய பதிவுகள>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright