|
|
| செய்தி்
புதுப்பிக்கப்பட்ட நாள்: 19 ஜுலை, 2008
|
|
|
|
தேசப் பிதா மகாத்மா காந்தி எழுதிய பஜன்
பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா
இசையமைத்துள்ளார்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு முன்பு
எழுதப்பட்ட பஜன் பாடல்கள் இவை. இவற்றை
பிர்லா நிறுவனத்தினர் 3 ஆண்டுகளுக்கு
முன்பு கண்டுபிடித்தனர். இதையடுத்து
இளையராஜாவை அணுகிய அவர்கள் மகாத்மாவின்
பாடல்களை அவரிடம் கொடுத்து இவற்றுக்கு
இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டனர்.
இந்தப் பணியை இசைஞானி இளையராஜா ஒரு
மாதத்திற்கு முன்பு முடித்துக்
கொடுத்தார். இந்துஸ்தானி இசைக் கலைஞர்
பண்டிட் பீம்சென் ஜோஷி பாடல்களைப்
பாடியுள்ளார்.
மகாத்மாவின் இந்த பஜன் பாடல்கள்
புதன்கிழமை திருப்பதி வெங்கடாசலபதி
கோவிலில் ஒலித்து பக்தர்களைப்
பரவசப்படுத்தியது.
தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடத்தி
வரும் ஸ்ரீ வித்யாநிகேதன் பொறியியல்
கல்லூரியில் மகாத்மாவின் பஜன் சிடி
வெளியீட்டு விழா நடந்தது. ஆதித்யா
பிர்லா குழுமத்தின் பொது மேலாளர் பாரத்
பரேக் வெளியிட, முதல் சிடியை இளையராஜா
பெற்றுக் கொண்டார். பின்னர் அதை அவர்
மோகன்பாபுவிடம் கொடுத்து கல்லூரியில்
இதை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்
கொண்டார்.
நிகழ்ச்சியின்போது இளையராஜா பேசுகையில்,
மகாத்மாவின் ஆத்மார்த்தமான பஜன்
பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு
கிடைத்ததை நினைத்துப்
பெருமைப்படுகிறேன். பிர்லா குழுமத்தின்
பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது.
மகாத்மாவுக்கு அவர்கள் உண்மையான
அஞ்சலியை செலுத்தியுள்ளனர் என்றார்.
பின்னர் பஜன் பாடல்களிலிருந்து ஓரிரு
வரிகளையும் தனது தெய்வீகக் குரலில்
பாடிக் காட்டி கூட்டத்தினரை மெய்
சிலிர்க்க வைத்தார் இளையராஜா. |
|
|
7வது
நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட
பிரமாண்ட மர்மயோகி - கமல்
7வது
நூற்றாண்டைப் பின்னணியாகக் கொண்ட
கதைக்களத்துடன் கூடிய மர்மயோகி
வித்தியாசமான ஒரு முயற்சி பிரமாண்டமான
வரலாற்றுப் படமாக இது உருவாகவுள்ளது
என்று உலக நாயகன் கமல்ஹாசன்
கூறியுள்ளார்.
கலைத் தாகத்தோடு திரையுலகை வலம் வந்து
கொண்டிருக்கும் கமல்ஹாசன், தசாவதாரத்தை
முடித்த கையோடு மர்மயோகிக்குப் போய்
விட்டார். அது தொடர்பான பூர்வாங்கப்
பணிகளில் மும்முரமாக இருக்கும்
கமல்ஹாசன், தனது மர்மயோகி
எப்படிப்பட்ட படம் என்பதை
விளக்கியுள்ளார்.இது மிகப்
பிரமாண்டமான படமாக இருக்கும்.
முற்றிலும் வரலாற்று கதை. தசாவதாரத்தை
விட இந்தப் படத்தில் இசை
முக்கியத்துவம் உடையதாக இருக்கும்.
7வது நூற்றாண்டில் நடந்த சில
சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கதையின்
கரு.இது வரலாறும், அறிவியலும்
கைகோர்க்கும் படமாக இருக்காது.
முற்றிலும் வித்தியாசமான முயற்சி.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சேவைக்கு நிறைய
வாய்ப்புகள் உள்ளது. அவரது
விருப்பத்திற்கேற்ப இதில் இசையமைக்கும்
வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.
ஆரம்பத்தில் பட்ஜெட் ரூ. 100 கோடியாக
இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
இப்போது அதையும் தாண்டிப் போய் விட்டது.
இந்திய திரையுலக வரலாற்றில் இது புதிய
சாதனை படைக்கும். ஆகஸ்ட் மாதம்
பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு
தொடங்குகிறது.மர்மயோகி குறித்து
மீடியாக்களில் நிறைய செய்திகள்
வருகின்றன. அவை அனைத்தையும் நான்
மறுக்க மாட்டேன், மீடியா நண்பர்களை
ஏமாற்ற மாட்டேன்.
மீடியாக்களில், மும்பையில்
பிரமாண்டமான முறையில் தொடக்க விழா
இருக்கும் என செய்திகள்
வெளியாகியுள்ளது. உண்மையில் முதலில்
அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை.
ஆனால் இப்போது மீடியாக்களில்
வந்துள்ளதைப் போலவே, பாலிவுட்
நட்சத்திரங்களுக்கு மத்தியில்
பிரமாண்டமான முறையில் மர்மயோகியின்
தொடக்க விழா இருக்கும்.
தசாவதாரம் குறித்து இரு வித
கருத்துக்கள் நிலவுகின்றன. அப்படத்தில்
சில தவறுகள் இருப்பதை ஒப்புக்
கொள்கிறேன். அதை நான் மறைக்க
விரும்பவில்லை. ஆனால் அனைத்து
திறமையாளர்களுக்கும், கலைஞர்களுக்கும்
ஏற்படக் கூடிய ஒன்றுதான் இது. அது
எனக்கும் ஏற்பட்டுள்ளது.
அவ்வளவுதான்.உண்மையில் இந்தத் தவறுகளை
அடுத்து படத்தில் திருத்திக் கொள்ள
எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது
என்றார் கமல்ஹாசன்.
கமலை மட்டும் பார்த்தால் குறைகள்
தெரியாது! |
|
|
இசைக்
குயில் லதா மங்கேஷ்கருக்கு டாக்டர்
பட்டம்
இசைக் குயில் லதா மங்கேஷ்கருக்கு
நாக்பூர் ராஷ்டிரசந்த் துக்தோஜி
மஹாராஜ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர்
பட்டம் வழங்கியுள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த ராஷ்டிரசந்த்
துகோத்ஜி மஹாராஜ் நாக்பூர்
பல்கலைக்கழகம், பாலிவுட் இசைக்குயில்
லதா மங்கேஷ்கருக்கு கெளவர டாக்டர்
பட்டம் வழங்குவதாக நேற்று
அறிவித்திருந்தது.
இன்று நாக்பூரில் நடந்த 95வது ஆண்டு
பட்டமளிப்பு விழாவில் லதாவுக்கு
டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. லதாவால்
வர இயலாததால், லதாவின் சார்பில் அவரது
சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கரின் மகன்
ஆதிநாத் மங்கேஷ்கர் வந்து டாக்டர்
பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஆதிநாத்திடம், ஓய்வு பெற்ற நீதிபதி
சி.எஸ். தர்மாதிகாரி பட்டத்தை
வழங்கினார்.
நிகழ்ச்சியில் லதாவின் வீடியோ உரை
ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில்,
நாக்பூர் பல்கலைக்கழகம் வழங்கியுள்ள
டாக்டர் பட்டம் மிகவும் கெளரவமானது.
இதை நேரில் வந்து வாங்க இயலாத நிலையில்
உள்ளேன். அதற்காக வருந்துகிறேன் என்று
கூறியிருந்தார்.
|
|
|
சில
வருடங்களுக்கு முன்பு
எடுக்கப்படவிருந்து 'காக்கி'யை கையில்
எடுக்கும் சரத்
சில
வருடங்களுக்கு முன்பு
எடுக்கப்படவிருந்து, பின்னர் நிறுத்தி
வைக்கப்பட்ட காக்கி படத்தை மீண்டும்
சரத்குமார் கையில் எடுத்துள்ளார்.
வின்சென்ட் செல்வா இயக்க, ஜிஜே
கம்பைன்ஸ் தயாரிப்பில் சரத்குமார்
நடிக்கவிருந்த படம் காக்கி.
இப்படத்திற்காக சரத்குமார் பளபளவென
மொட்டையும் போட்டார். கிட்டத்தட்ட 30
சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில்
திடீரென படம் நிறுத்தப்பட்டு விட்டது.
இந்த நிலையில் மீண்டும் காக்கியை
கையில் எடுத்துள்ளார் சரத்குமார்.
விரைவில் லண்டன் சென்று சில பாடல்
காட்சிகளைப்
படமாக்கவுள்ளனராம்.படத்தில்
கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக
வருகிறார் சரத்குமார்.
தற்போது 1977 படத்தில் பிசியாக
இருக்கும் சரத்குமார், அதை முடித்து
விட்டு கே.எஸ்.ரவிக்குமாரின்
ஜக்குபாயில் நடிக்கவுள்ளார். அப்படியே
காக்கியையும் முடித்து விட
திட்டமிட்டுள்ளாராம்.இதுதவிர
மலையாளத்தில் மம்முட்டியுடன்,
பழசிராஜாவிலும் நடித்து வருகிறார்
சரத்குமார்.
தனது கட்சித் தொண்டர்களை
புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்காக
வருடத்திற்கு இரண்டு படங்களில் நடித்து
விட வேண்டும் என்ற வைராக்கியத்துடன்
உள்ளாராம் சரத். |
|
|
சிணுங்கும்
ஸ்ரேயா! செலவுக்கு அஞ்சாத தயாரிப்பாளர்
அக்கடா'
என்று அசந்து படுக்கிற நேரம் 'டொக்
டொக்' என்று கதவை தட்டினால்
எப்படியிருக்கும்? ஸ்ரேயாவின்
நிலைமையும் அப்படிதான் இருக்கிறது.
படப்பிடிப்பு முடிஞ்சுது என்று
நினைத்துக் கொண்டிருந்தால் பேட்ச்
வொர்க் என்று அழைக்கிறார்களாம்
கந்தசாமி குழுவினர். 'மெக்சிகோவிலேயே
எல்லா படப்பிடிப்பும் முடிஞ்சு போச்சே'
என்று சந்தேகம் கேட்ட ஸ்ரேயாவுக்கு
கிடைத்த பதில்தான் 'அச்சச்சோ' ரகம்.
எப்போதுமே கோடிகளை கொட்டுவதற்கு
அஞ்சாத தயாரிப்பாளர் தாணு,
கந்தசாமிக்காக பெட்டி பெட்டியாக பணத்தை
கொட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ்
சினிமா பார்த்திராத தேசங்களில் எல்லாம்
படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று
முடிவு செய்த இயக்குனர் சுசி கணேசன்
தான் நினைத்தபடியெல்லாம் படத்தை
இழைத்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் மெக்சிகோ போய்விட்டு
திரும்பிய கந்தசாமி டீம், விமானத்தில்
அதுவரை எடுத்த பிலிம் பாக்சோடு பயணம்
செய்திருக்கிறது. சென்னைக்கு வந்து
பார்த்தால் 120 பாக்ஸ்களில் 20 பாக்ஸ்
பிலிம் சேதமாகிவிட்டதாம். இது யாரால்
வந்த கோளாறு என்பதையெல்லாம் ஒரு பக்கம்
விசாரித்துக் கொண்டிருக்கிற
தயாரிப்பாளர் தாணு, எக்காரணத்தை
கொண்டும் ரிலீஸ் தாமதமாகிவிடக் கூடாது
என்பதால், ரீ ஷ§ட் செய்ய
சொல்லிவிட்டாராம்.
சென்னை பின்னி மில்லில் மெக்சிகோவை
உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்காகதான் மறுபடியும் ஒரு முறை
ஸ்ரேயாவின் கால்ஷீட்
கேட்கப்பட்டிருக்கிறது. இப்போது
புரிகிறதா ஸ்ரேயாவின் சிணுங்கலுக்கு
காரணம்? |
|
|
புடவையில் வந்தார் நமீதா!முதல்வர்
விழாவில் அடக்கம்!
பெருமாள் படத்தின் ஆடியோ வெளியீட்டு
விழா சென்னையில் நடந்தது. முதல்வர்
கலைஞர் கலந்து கொண்டு பாடல்களை
வெளியிட்டார். சுந்தர்.சி ஹீரோவாக
நடிக்கும் இப்படத்தில் இவருக்கு
ஜோடியாக நமீதாவும், மீனாட்சியும்
நடித்திருக்கிறார்கள்.
முதல்வரின் பேரனும் மு.க.முத்துவின்
மகனுமாகிய அறிவுநிதி, 'காதல் வைபோகமே'
என்ற பாடலை பாடியிருக்கிறார்.
சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தில்
இடம்பெற்ற பாடலின் ரீமிக்ஸ் இது.
திரையுலக பிரபலங்கள் ஏராளமானவர்கள்
கலந்து கொண்ட விழாவில் ஆச்சர்யம்
என்னவென்றால் நமீதா புடவை கட்டி
வந்ததுதான்.
முதல்வர் கலந்து கொள்ளும் விழா என்ற
நாகரீகம் கூட இல்லாமல் குட்டி
பாவாடையோடு வந்து எல்லாரையும்
தர்மசங்கடப்படுத்திய ஸ்ரேயா, ரஜினி,
ஷங்கர் ஆகியோரிடம் நன்றாக வாங்கிக்
கட்டிக் கொண்டார். அந்த சம்பவத்திற்கு
பின் இதுபோன்ற முக்கிய விழாக்களில்
கலந்து கொள்வதையே தவிர்த்து வந்தார்
ஸ்ரேயா. இந்த பிரச்சனை தொடர்பாக
சட்டசபையிலேயே பேச்சு எழுந்தது.
அப்போது நமீதாவின் ஆடை விஷயங்கள்
பற்றியும் அங்கு விவாதிக்கப்பட்டது.
ஆனாலும், தனது துணிக் கொள்கையில் 'துணி'ச்சலாகவே
இருந்தார் நமீதா! இதுபற்றி கேள்வி
கேட்ட நிருபர்களிடம் கூட, எனக்கு
இதுதான் காற்றோட்டமாக இருக்கிறது என்று
ஓப்பனாகவே பதில் சொன்னார் அவர்.
இந்த நிலையில் பெருமாள் பட விழாவுக்கு
நமீதா எப்படி வருவார் என்பதுதான்
பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனாலும், முதல்வர் கலந்து கொள்ளும்
விழாவுக்கு வருவதால், கண்ணியமாக ஆடை
அணிந்து வர வேண்டும் என்று இயக்குனர்
சுந்தர்சி கேட்டுக் கொண்டாராம்.
அதனால்தான் புடவை கட்டி வந்திருந்தார்
நமீதா. அவரது இந்த தோற்றம் பலருக்கும்
இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. |
|
|
'மைக்'
மோகனின் புதிய ஸ்டைல்! ரேடியோ ஸ்டேஷனில்
ஆடியோ விழா
முன்பெல்லாம் திரைப்பட ஆடியோ
வெளியீட்டு விழாக்கள் பெரிய
அரங்குகளில் நடக்கும். காலப்போக்கில்
அதை தனியார் தொலைக்காட்சியில் நேரடி
ஒளிபரப்பாக நடத்த ஆரம்பித்தார்கள்.
ஆனாலும், விழாவாக நடத்துகிற திருப்தி
இதில் கிடைப்பதில்லை என்ற விமர்சனம்
பரவலாக எழுந்தது. இதையடுத்து இந்த
ஸ்டைலை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்
கொள்ள துவங்கினார்கள் இயக்குனர்கள்.
ஆனால் இதிலும் கொஞ்சம் அட்வான்ஸ்
நிலைக்கு போயிருக்கிறார் மைக் மோகன்.
தனது சுட்டப்பழம் படத்தின் ஆடியோ
வெளியீட்டு விழாவை தனியார் எப்.எம்
ரேடியோ ஸ்டேஷனில் நடத்தியிருக்கிறார்.
106.4 ஹலோ எப்.எம் இந்த ஆடியோ
வெளியீட்டு விழாவை நேரடி ஒளிபரப்பாக
நடத்தியிருக்கிறது. ஒரு படத்தின் ஆடியோ
வெளியீட்டு விழா இப்படி நடத்தப்படுவது
இதுவே முதல் முறையாகும். கேசட்டை ஷாம்
வெளியிட, விமலாராமன் பெற்றுக் கொண்டார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க
வந்திருக்கும் மோகன், தனது சுட்டப்பழம்
படத்தை டிஜிட்டல் முறையில் படமாக்கி
வந்தார். சென்னையிலும், பிற ஊர்களிலும்
டிஜிட்டல் தியேட்டர்கள் குறைவாகவே
இருப்பதால், படத்தை பிலிமுக்கு மாற்றி
பிரிண்ட் போடும் வேலைகளில்
இறங்கியிருக்கிறாராம். இப்படி
செய்யலாமே என்று கடைசி நேரத்தில்
முடிவு செய்ததால் இம்மாதம் 18-ந் தேதி
ரிலீஸ் என்று அறிவித்திருந்த
சுட்டப்பழத்தை, 25-ந் தேதிக்கு தள்ளி
வைத்திருக்கிறார் |
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |
|
|
|