செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஆகஸ்ட்,31.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

அரசின் காய் நகர்த்தலை முறியடிக்க முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் ஆளும் தரப்புக்குச் சாதகமாகவே கள நிலைவரம்

அரசாங்கம் சமர்ப்பிக்கும் அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவழியிலும் தோற்கடிக்க முடியாத நிலைக்கு எதிரணிக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.இதை அரசாங்கம் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்திற்குக்கொண்டு வரவிருப்பதால் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிய சட்டமூலம் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் பிரகாரம் பொதுவாக சாதாரண சட்டமூலமொன்று பாராளுமன்றத்துக்கு முதலாம் வாசிப்புக்கென சமர்ப்பிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்னதாக வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.அது மட்டுமல்லாது அச் சட்டமூலம் முதலாம் வாசிப்புக்கென பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் 7 நாட்களுக்குள் அதை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் இருக்கின்றன.

எனினும் அவசர சட்டமூலமாக அரசிலயமைப்பு திருத்தம் பற்றிய விடயமொன்று கொண்டுவரப்படும் பட்சத்தில் இவ்வாறான ஏற்பாடுகள் கிடையாது.அரசியலமைப்பு திருத்தம் பற்றிய யாதுமொரு விடயம் அவசர சட்டமூலமாகக்கொண்டு வரப்படுமிடத்து அது அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால் உயர் நீதிமன்ற ஆலோசனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அரசியலமைப்பின் பிரகாரம் இந்த திருத்தம் பற்றிய சட்டமூலத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் போதுமா அல்லது அதற்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தவேண்டுமா என்பது பற்றிய ஆலோசனை கோரியே ஜனாதிபதி இதை உயர் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிப்பார்.

அரசியலமைப்பின் பிரகாரம் அவசர சட்டமூலமொன்று உயர் நீதிமன்ற ஆலோசனைக்கு சமர்ப்பிக்கப்பட்டு 48.மணி நேரத்திற்குள் அதன் தீர்மானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்படவேண்டும் என்பதற்கேற்ப உயர் நீதிமன்றத்தினால் நாளொன்று அறிவிக்கப்பட்டு சட்டமூலம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும். எனவே,சட்டமூலம் பற்றி ஆட்சேபமுள்ளவர்கள் இச் சந்தர்ப்பத்தில் மன்றில் ஆஜராகி (சட்டத்தரணிகள் மூலம்) தத்தமது அபிப்பிராயங்களை முன்வைக்க முடியும்.

இதன் பின்னர் உயர் நீதிமன்றம் வாதப் பிரதிவாதங்களை ஆராய்ந்து தமது தீர்மானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கும்.

எவ்வாறியிருப்பினும் அரசியலமைப்பின் பிரகாரம் யாதேனும் அரசியலமைப்பு திருத்தம் பற்றிய உயர் நீதிமன்ற தீர்மானமானது அத் திருத்தத்தை சட்டமாக நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதுமா அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டுமா என்பதை பாராளுமன்ற சபாநாயகருக்கு பரிந்துரை செய்வதாகவே அமைந்திருக்கும்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்தத்துக்கு ஆதரவளிக்க முன்வந்ததன் மூலம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்கவைத்துக் கொண்டுள்ளது. அப்படியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்த நேர்ந்தாலும் வெற்றி வாய்ப்பு அரசாங்கத்துக்கு கிடைப்பதற்கான சூழ்நிலைகளே பெரும்பான்மையாக காணப்படுகின்றன.

எனவே,அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பு திருத்தத்தை எவ்வழியிலும் தோற்கடிக்க முடியாத நிலைமையில் எதிரணிக் கட்சிகள் இருக்கின்றன.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!