|
|
|
|
|
 |
|
பேராதனைப் பல்கலைக்கழக நான்கு
மாணவர்கள் அடையாளம் காணப் பட்டனர். |
|
|
பேராதனைப்
பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த உயர்
கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின்
செயற்பாடுகளுக்கு இடையூறு
விளைவித்தவர்கள் என
அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு
மாணவர்கள் அடையாளம் காணப்பட் டுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
ஒழுக்காற்று குழுவினர் நடாத்திய
விசாரணையின் போதே உயர் கல்வி
அமைச்சரின் செயற்பாடுகளுக்கு இடையூறு
விளைவித்த குறித்த நான்கு மாணவர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு மாணவர்களையும் கண்டி
பிரதான மஜிஸ்ரேட் நீதவான்
நீதிமன்றத்தில் நாளை (30ம் திகதி)
ஆஜர்படுத்துவதற்கும் ஒழுக்காற்று
குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கடந்த
12ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை
மேற்கொண்டிருந்த உயர் கல்வி அமைச்சர்
எஸ்.பி.திசாநாயக்க அவரது கடமையை
மேற்கொள்ளும் தறுவாயில் இடையூறுகள்
விளைவிக்கப் பட்டன.இச்சம்பவம் குறித்து
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
பல்கலைக்கழக ஒழுக்காற்று குழுவும்
விசாரணை நடத்தியது.இதனடிப்படையில்
நேற்று (28)கண்டி பிரதான மஜிஸ்திரேட்
லலித் ஏக்கநாயக்க முன்னிலையில்
குறித்த நான்கு மாணவர்களும்
சட்டத்தரணிகள் சகிதம் ஆஜராகிய போது
இவர்களினது விசாரணை நளை
எடுத்துக்கொள்ளப்பட விருப்பதாக
மஜிஸ்திரேட் உத்தரவிட்டது. |
|
|
|
|
|