|
பாகிஸ்தானில்,பயணிகள்
விமானம் மலையில் மோதி நொறுங்கி
விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த
பயங்கர விபத்தில்,அந்த விமானத்தில்
பயணம் செய்த.152 பேரும் பலியாயினர்.
துருக்கியிலிருந்து,பாக்.,லைநகர்
இஸ்லாமாபாத்திற்கு,தனியார்
நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள்
விமானம் ஒன்று,152 பேருடன் நேற்று
புறப்பட்டது.விமானம் கராச்சி
வந்து,பின்னர் இஸ்லாமாபாத்திற்கு
புறப்பட்ட சிறிது
நேரத்திலேயே,விமானத்துடனான தகவல்
தொடர்பு முழுவதும்
துண்டிக்கப்பட்டது.பின்னர் அந்த
விமானம், இஸ்லாமாபாத்திற்கு அருகே
உள்ள,"மர்கல்லா'மலையில் மோதி
விபத்துக்குள் ளாகியிருப்பது தெரிய
வந்தது.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு
வந்து மீட்புப் படையினரும்,போலீசாரும்
மீட்புப் பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.இந்த கோர விபத்தில்,
அதில் பயணம் செய்த 152பேரும்
பலியாயினர்.விபத்து நிகழ்ந்த இடம்
மலைப்பகுதி என்பதாலும்,அடர்ந்த மரங்கள்
இருப்பதாலும் மீட்புப் பணிகளில் தொய்வு
ஏற்பட்டுள்ளது.மீட்புப் பணியில் மூன்று
ஹெலிகாப்டர்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன.ராணு
வமும்,மீட்புப் பணிகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து,உயர் போலீஸ் அதிகாரி பின்
யாமின் கூறியதாவது:விமான
நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட
சிறிது நேரத்திலேயே இந்த கோர விபத்து
நடந்துள்ளது.இதில்,விமான ஊழியர்கள் ஆறு
பேரும்,146பயணிகளும் இருந்தனர்.இந்த
விபத்தில் அனைவருமே
இறந்திருக்கலாம்.ராணுவத் தினர்
மீட்புப் பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.இந்த பகுதியில்
தொடர்ந்து மழை பெய்து
வருவதாலும்,மரங்கள் அடர்ந்த பகுதியில்
விமானத்தின் பாகங்கள்
சிக்கியிருப்பதாலும்,அதில்
சிக்கியிருக்கும் உடல்களை மீட்பதில்
சிக்கல் ஏற்பட்டுள்ளது.
விமானம் மலையில்
மோதி,தீப்பிடித்துள்ளது.இதனால்,பயணிகளின்
உடல்கள் உருக்குலைந்துள்ளன. அந்த உடல்
பாகங்களை பைகளில் தான் சேகரிக்க
முடிகிறது.இந்த விமான
விபத்து,மழையினாலும்,மோசமான வானிலை
காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம் என்று
கருதப்படுகிறது.மேலும்,விமானம் மிகத்
தாழ்வாக பறந்து சென்றதாக, விபத்தை
பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே,
இந்த விபத்திற்கான காரணம் குறித்து
தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு யாமின் கூறினார். |