|
|
|
|
|
 |
|
ஜனாதிபதியின் அழைப்பிலேயே இந்திய
பிரதிநிதி வருகை தருவார்
கருணாநிதி,தமிழ்க்கூட்டமைப்பு
கேட்டதால் அல்ல;அமைச்சர் கெஹலிய. |
|
|
தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும்
விடயத்தில் எந்தவொரு
விட்டுக்கொடுப்புக்கும் இடமே
கிடையாதெனத் தெரிவித்திருக்கும் தகவல்
மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல,இந்த முடிவில் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ மிகவும் தெளிவாகவே
உள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.
போருக்குப்பின்னரான நாட்டின் உண்மை
நிலையை கண்டறிவதற்கு வருகைதர எந்தவொரு
நாட்டுக்கும் கதவு திறந்தே
இருப்பதாகவும் அமைச்சர் ரம்புக்வெல்ல
தெரிவித்தார்.நேற்று செவ்வாய்க்கிழமை
தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர்
மாநாட்டில் இந்தியபிரதமர் மன்மோகன்சிங்
தனது பிரதிநிதியை அனுப்பப்போவதாக
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம்
உறுதியளித்திருப்பது பற்றி ஊடகவியலாளர்
ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையிலேயே அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அமைச்சர் இது தொடர்பில் மேலும்
விளக்கமளிக்கையில் கூறியதாவது;
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர்கள்
கருணாநிதியையும் இந்தியப் பிரதமரையும்
சந்திப்பதற்கு முன்னதாகவே ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ புதுடில்லி விஜயத்தை
மேற்கொண்டிருந்தபோது பிரதமரிடமும்
தமிழக எம்.பி.க்களிடமும் நிலைமைகளை
தெளிவுபடுத்தி யார் வேண்டுமானாலும்
வாருங்கள் நிலைமைகளை நேரில்
கண்டறியுங்கள் என்று அழைப்பு
விடுத்திருந்தார்.கலைஞர் கருணாநிதியோ,
கூட்டமைப்பு எம்.பி.க்களோ கேட்டதற்காக
இந்தியப் பிரதமர் தனது பிரதிநிதியை
அனுப்பத்தீர்மானிக்க வில்லை.
ஜனாதிபதியின் அழைப்பை எப்போதோ அவர்
ஏற்றிருந்தார். அதன் பிரகாரமே
பிரதிநிதியை அனுப்ப விருக்கிறார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில்
நீண்டகால நெருக்கமான உறவுகள்
காணப்படுகின்றன.இலங்கை விவகாரத்தில்
இந்தியா எப்போதும்
நல்லெண்ணத்துடனேயேசெயற்பட்டு
வருகின்றது. பிரதமர் மன்மோகன்சிங்
எடுத்திருக்கும் இந்த முடிவையும் நாம்
நல்ல விடயமாகவே
பார்க்கின்றோம்.இந்தியப்பிரதமரின்
பிரதிநிதியுடன் தமிழக எம்.பி.க்கள்
குழு வந்தாலும் அதனையும் நாம் நிச்சயம்
வரவேற்போம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் தமிழக
முதல்வர் கலைஞர் கருணாநிதியும் இலங்கை
விவகாரத்தை தமது குறுகிய அரசியல்
நலன்களுக்காகப் பயன்படுத்த
முனைகின்றனர்.இது கவலைதரக் கூடியதாகும்
எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
தெரிவித்தார். |
|
|
|
|
|