செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,27.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகஜர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றைய தினம்(27)அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கான மகஜரை அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் திரு தயானந்தா அவர்களிடம் கையளித்தனர்.

2006ஆம் ஆண்டு முதல் யாழ்.போதனா வைத்தியசாலையில் சுகாதாரத் தொண்டர்களாக தாம் பணியாற்றி வருவதாகவும் தமக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மகஜரைப் பெற்றுக் கொண்ட பிரத்தியேகச் செயலாளர் பதிலளிக்கையில் தான் உங்களது மகஜரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிப்பதாகவும் உங்களது பகிஸ்கரிப்புப் போராட்டத்தை கைவிட்டு மக்களுக்குச் சேவையாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!