|
வெளிமாவட்டங்களிலிருக்கும்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
அனைவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்
4.ஆம் திகதி முதல்
மீள்குடியமர்வதற்காக உரிய இடைத்தங்கல்
முகாம்களில் தமது பதிவுகளை மேற்கொள்ள
முடியுமென கிளிநொச்சி மாவட்ட பதில்
அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பிய செய்திக்
குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
வெளிமாவட்டங்களில் வசித்து வரும்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி
பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
அனைவரும் தமது தற்காலிக பதிவுகளை உரிய
பிரதேச செயலகங்களில் நீக்கம் செய்து
மீள்குடியமர்விற்காக எதிர்வரும் ஆகஸ்ட்
மாதம் 4.ஆம் திகதி உரிய இடைத்தங்கல்
முகாம்களில் தமது பதிவுகளை
மேற்கொள்ளலாம்.
குறிப்பிட்ட திகதிகளில் குறிப்பிட்ட
கிராமிய அலுவலர்
பிரிவிற்குட்பட்டவர்கள் உரிய
இடைத்தங்கல் முகாம்களில் காலை 9.மணி
முதல் பிற்பகல் 2மணி வரை தங்களது
மீள்குடியமர்விற்கான பதிவுகளை
மேற்கொள்ளலாம்.இதன்படி ஆகஸ்ட் 4ஆம்
திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி
இடைத்தங்கல் முகாமில் உதய நகர்
கிழக்கு,உதய நகர்
மேற்கு,அம்பாள்குளம்,செல்வாநகர்,ஆனந்தபுரம்,விவேகானந்த
நகர்,தொண்டமான் நகர், கிருஷ்ணபுரம்
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச்
சேர்ந்தவர்களும் ஆகஸ்ட் 8ஆம் திகதி
கிளிநொச்சி இராமநாதபுரம் மகா
வித்தியாலய இடைத்தங்கல் முகாமில்
வட்டக்கச்சி,
மாவடியம்மன்,மாயவனூர்,இராமநாதபுரம்,சிவிக்
சென்ரர் ஆகிய கிராம அலுவலர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் ஆகஸ்ட்
12 ஆம் திகதி
கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கல்
முகாமில் மருதநகர்,பன்னங்கண், கிளிநகர்,
இரத்தினபுரம்,கனகாம்பிகைக்குளம்,
திருவையாறு ஆகிய கிராம அலுவலர்
பிரிவுகளைச்
சேர்ந்தவர்களும் ஆகஸ்ட் 16ஆம் திகதி
கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கள்
முகாமில்திருவையாறுமேற்கு,பாரதிபுரம்,மலையானபுரம்,பொன்னகர்,ஊற்றுப்புலம்புதுமுறிப்பு
ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளைச்
சேர்ந்தவர்களும் ஆகஸ்ட் 20.ஆம் திகதி
கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கல்
முகாமில்
ஸ்கந்தபுரம்,கண்ணகைபுரம்,கோணாவில்,
அக்கராயன்குளம்,ஆனைவிழுந்தான்,வன்னேரிக்குளம்
ஆகிய கிராம அலுவலர்
பிரிவுகளைச்,சேர்ந்தவர்களும் ஆகஸ்ட்
24ஆம் திகதி கிளிநொச்சி மத்திய கல்லூரி
இடைத்தங்கல் முகாமில் உருத்திரபுரம்
வடக்கு, உருத்திரபுரம் கிழக்கு,
உருத்திரபுரம் மேற்கு,
சிவநகர்,கனகபுரம்,ஜெயந்திநகர் ஆகிய
கிராம அலுவலகர் பிரிவுகளைச்
சேர்ந்தவர்களும் ஆகஸ்ட் 30ஆம் திகதி
கிளிநொச்சி மத்திய கல்லூரி இடைத்தங்கல்
முகாமில் திருநகர் மேற்கு, திருநகர்
வடக்கு, கணேசபுரம்,பெரிய பரந்தன்,
அம்பாள் நகர் ஆகிய கிராம அலுவலர்
பிரிவுகளைச் சேர்ந்தவர்களும்
மீள்குடியமர்விற்காக தமது பதிவுகளை
மேற்கொள்ளலாம்.
மேலும் குறித்த திகதிகளில் உரிய கிராம
அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்
மட்டுமே பதிவுகளை மேற்கொள்ள முடியும்
என்பது குறிப்பிடத்தக்கது. |