செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,27.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படையினரைக் கொல்ல தலிபான் தீவிரவா திகளுக்கு பாகிஸ்தான் ரகசிய உதவி.

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி,அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்து வந்தனர்.அமெரிக்கா மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி, தலிபான்களை விரட்டியடித்தது.

ஆப்கானிஸ்தான் மலைக் காடுகளில் பதுங்கி இருக்கும் தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்க ராணுவத்துக்கு கடும் சவாலாக உள்ளனர்.அவர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா தலைமையில் கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் போராடி வருகின்றன.அந்த போருக்கு இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.

தலிபான் தீவிரவாதிகளில் பலர் பாகிஸ்தான் வடக்கு எல்லையில் பதுங்கி யுள்ளனர். எனவே அங்குள்ள தலிபான்களை ஒழிக்க பாகிஸ்தானை அமெரிக்கா நாடியது.பல ஆயிரம் கோடி ரூபாய்களையும்,ஏராளமான நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தானுக்கு,அமெரிக்கா அள்ளி, அள்ளி கொடுத்து வருகிறது.

பணம்,ஆயுதங்களை பெறும் பாகிஸ்தான் பெயருக்கு சில தாக்குதல்களை நடத்துகிறது. அமெரிக்காவுக்கு உதவுவது போல நாடகமாடி கொண்டே,தலிபான் களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ரகசிய உதவிகளை செய்கிறது.பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., தலிபான் தீவிரவாத தலைவர்களுடன் நேரடி தொடர்பே வைத்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியா,இதுபற்றி சொன்ன போது அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.ஆனால் தற்போது“விக்கி லீக்ஸ்”என்ற இணையத்தளம் சுமார் 92ஆயிரம் ஆவணங்களை வெளியிட்ட பிறகு, தலிபான்களுக்கு பாகிஸ் தான் ரகசிய உதவி செய்வது முழுமையாக அம்பலத்துக்கு வந்துள்ளது.இந்த 92ஆயிரம் ஆவணங்களும்,அமெரிக்க ராணுவ ஆவணங்களாகும்.

இந்த ஆவணங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,தலிபான்களுக்கு செய்து கொடுக்கும் எல்லா உதவி களும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.இந்த ஆவணங்கள் 2004-ம் ஆண்டு முதல் சமீபகாலம் வரை சேகரிக்கப்பட்ட தொகுப்புகளாகும். இந்த தொகுப்புகளை ஆப்கன் வார் டைரி என்ற தலைப்பில் வீக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ளது.

இந்த இணையத் தள தகவல்களை நியூயார்க் டைம்ஸ்,கார்டியன் பத்திரி கைகள் பெற்று வெளியிட்டுள்ளன.தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ.செய்து வரும் உதவிகள் ஒன்றன் பின் ஒன்றாக கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் சாலை போடுதல் உள்பட மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய காண்டிராக்டர்களை கொல்ல தலிபான்களுக்கு ஐ.எஸ்.எஸ்.ரூ.10முதல் ரூ.15லட்சம் வரை கொடுத்தது.இது தவிர இந்திய தூதர கத்தை தகர்க்கவும் தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ. பணம் கொடுத்தது.

2007-ம் ஆண்டு காபூல், ஜலலாபாத், ஹீரட், கந்த கார், மசர்-இ-செரீப் நகரங்களில் உள்ள இந்திய அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ.ஆயுதங்களையும், பணத்தையும் கொடுத்தது.2008-ம் ஆண்டு காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீது தலிபான்கள் தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள். அதில் 2 தூதரக அதிகாரி கள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.சுமார் ரூ.75.லட்சம் செலவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்தியா இதை ஆதாரத்துடன் நிரூபித்தபோது,உலகில் யாரும் நம்பவில்லை.ஆனால் இன்று அமெரிக்க ராணுவ ஆவணம் இந்த ரகசியத்தை உடைத்துவிட்டது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக மட்டுமின்றி அமெரிக்க உள்ளிட்ட கூட்டுப்படை ராணுவ வீரர்களையும் ஒழிக்க தலிபான்களை ஐ.எஸ்.ஐ.தூண்டிவிடுவது தெரிய வந்துள்ளது.ஒரு புறம் தலிபான்களை ஒழிக்க அமெரிக்காவுக்கு உறுதுணையாக இருப்பது போல காட்டிக்கொண்டு,மறுபுறம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை கொல்வதற்கு தலிபான்களுக்கு உதவியதை ஆவணங்கள் மூலம் விக்கி லீக்ஸ் மேற்கோள் காட்டி உள்ளது.

அதாவது தலிபான்களை ஒழிப்பதாக கூறி ஆயுதங்களை பெற்றுக் கொண்ட பாகிஸ்தான், அந்த ஆயுதங் களை தலிபான்களுக்கு கொடுத்து உதவியது.அமெரிக்கா ஆயுதத்தால், அமெரிக்க வீரர்களையே சுட்டுக்கொல்லும் செயலை பாகிஸ்தான் சாதுரியமாக செய்தது. இதற்காக ஐ.எஸ்.ஐ.க்கு பாகிஸ்தான் அரசு சிறப்பு அதிகாரம் கொடுத்திருந்ததும் ஒரு ஆவணம் மூலம் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் டாக்டர்கள்,என்ஜினீயர்கள்,மற்றும் தொழிலாளர்களை தலி பான்கள் கடத்தி சென்று கொல்லவும் ஐ.எஸ்.ஐ. உதவிகள் செய்தது. இப்படி இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் எதிராக தலிபான்களை ஐ.எஸ்.ஐ.பயன்படுத்திய எல்லா விபரங்களையும் அம்பலத்துக்கு வந்து விட்டன.

அமெரிக்க ராணுவத்தின் போர் ஆவணங்கள் இணையத் தளத்தில் வெளியாகி இருப்பது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது.அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் அந்த இணையத் தளத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டுள்ள ஆவணங்களில் எந்த உண்மையும் இல்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!