செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,27.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

மலேசியாவில் இந்து கோயிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்:12 முஸ்லீம்களுக்கு அபராதம்.

மலேசியாவில் இந்து கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12.முஸ்லீம்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.மேலும் அவர்களில் ஒருவருக்கு ஒருவார கால சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இச்சம்பவம் மலேசியாவில் வசிக்கும் இந்திய,சீன சிறுபான்மையினர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இஸ்லாமுக்கு ஆதரவாக தங்கள் மத உரிமைகள் தடுக்கப்படுவதாக கிறிஸ்துவர்கள், இந்துக்கள் புகார் தெரிவித்தனர்.

இந்து கோயில் கட்டும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த 12 முஸ்லீம்களும் மசூதி ஒன்றிலிருந்து மாட்டுத்தலையுடன் மத்திய சிலாங்கூர் மாநில முதல்வரின் அலுவலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட 12 பேருக்கும் சிலாங்கூர் மாவட்ட நீதிமன்றம் தலா 320 டாலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்ததாக அரசு வழக்கறிஞர் அபிபுதீன் ஹஃபிபி தெரிவித்தார்.

மாட்டுத் தலையை காலால் மிதித்ததாக ஒப்புக்கொண்ட இருவருக்கு 960 டாலர்கள் அபராதம் விதித்த நீதிமன்றம், அவர்களில் ஒருவருக்கு ஒருவார சிறைத்தண்டனையும் விதித்ததாக அஃபிபுதீன் தெரிவித்தார்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!