செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,27.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24.மணி நேரத்தில் விபத்துக்களில் ஏழு பேர் மரணம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24.மணி நேரத்தில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.

வெளிமடை,ஹப்புத்தளை வீதியில் தம்பபின்ன பகுதியில் நேற்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் கொல்லப்பட்டனர்.மரக்குற்றிகளை ஏற்றி வந்த லொறியொன்று ஆட்டோவொன்றுடன் மோதியதில் ஆட்டோவில் பயணித்த மூவரும் இறந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.ஆட்டோ முழுமையாக நசுங்கி சேதமடைந்துள்ளது. விபத்தில் மேலும் மூவர் காயமடைந்து வெளிமடை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை,கொரகஹபிடிய விகாரைக் கருகில் வைத்து மோட்டார் சைக்கிளொன்று பாதசாரியொருவர் மீது மோதியதில் பாதசாரி இறந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் மாலை இடம் பெற்றது.கசிகந்தையைச் சேர்ந்த.65 வயதுடைய நபரே விபத்தில் இறந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் ஓட்டி கைதாகியுள்ளார். பாணந்துறை அருக்கொட பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் பெண்மணி ஒருவர் இறந்துள்ளார்.இந்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றது.மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்து பாணந்துறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.71 வயதுடைய பெண்ணே விபத்தில் இறந்துள்ளார்.

நிகவெரட்டிய கஹவெத்தேவ பகுதியில் வைத்து ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகியதில் ஆட்டோ சாரதியின் மகன் வெளியில் வீசி எறியப்பட்டு அதே ஆட்டோவில் சிக்கி இறந்துள்ளார்.

8.வயதுடைய சகோஹர நெத்மாலே இறந்துள்ளதோடு நிகவெரட்டிய பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

கிரிபதவ மயிலாவ சந்தியில் வேனொன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின் இறந்துள்ளார்.விபத்து தொடர்பாக வான் சாரதியும் மோட்டார் சைக்கிள் சாரதியும் கைது செய்யப்பட்டனர்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!