செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 27,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

வேலணை துறையூர் ஐயனார் கோவிலுக்கு 10.இலட்சம் ரூபா நிதியுதவி! அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் அறிவிப்பு

Bookmark and Share
தீவகம் வேலணைத் துறையூர் ஐயனார் கோவிலின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன் அதன் கட்டுமான நடவடிக்கைகளுக்கென கட்சி நிதியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்குவதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வேலணைப் பகுதிக்கு இன்றைய தினம் (27) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் வேலணைத் துறையூரிலுள்ள ஐயனார் கோவிலுக்கென புதிதாக அமையப் பெறவுள்ள இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே இந்த உறுதிமொழியை வங்கினார்.

ஆலய மண்டபத்தில் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வேலணை பிரதேச சபைத் தலைவரும் ஈ.பி.டி.பி.யின் வேலணை பிரதேச இணைப்பாளருமான சிவராசா (போல்) ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் (கமல்) உள்ளிட்டோர் உரையாற்றியதைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றும் போது மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதற்கிணங்கவே நாமும் எமது மக்களுக்கான சேவைகளை ஆற்றி வருகிறோம் என்பதுடன் புதிதாக அமையப்பெறவுள்ள இராஜகோபுர கட்டிட புனரமைப்பிற்காக எமது கட்சி நிதியிலிருந்து 10 இட்சம் ரூபாவை முதற்கட்டமாக வழங்கவுள்ளதாகவும் நீண்டகாலமாக கட்டிடப் பணிகள் பூர்த்தியடையாமல் உள்ள துறையூர் கலாசார மண்டபத்தை விரைவில் முழுமையாகப் புதுப்பொலிவுடன் கட்டி முடிப்பதற்கும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார்.

தீவகத்தில் மக்கள் நலன் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 2012ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு புறம்பாக 1000 கோடி ரூபாவை வடமாகாணத்தின் அபிவிருத்திக்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்நிதியிலிருந்து தீவகத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடு;ககப்படவுள்ளதாகவும் சுட்டிக் காட்டினார்.

அத்துடன் அந்தந்தப் பகுதிகளில் குழுக்களை அமைத்து மக்களது தேவைகள் இனங்காணப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் அவற்றைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கட்சி நிதியினூடாகவும் தீவகத்தின் அபிவிருத்திக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் மக்களது அபிவிருத்தியும் மேம்பாடுமே தமது நோக்கமெனவும் இதன்போது அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

இக்கோவிலின் அபிவிருத்திக்காக 2001ம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் 4 இலட்சத்துக்கும் அதிகமான நிதியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரகுருமூர்த்தி (மோகன்) ஆலய பரிபாலனசபை உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 




















































 

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!