செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 27,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

இவ்வாண்டின் முடிவுக்குள் கல்விசார் வளப்பற்றாக் குறைகளுக்கு நிறை வான தீர்வு எட்டப்படும்-ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்

Bookmark and Share
எமது பிரதேசத்தின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்பாட்டுக்கே நாம் இவ்வருடம் அதிக  முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அதற்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியை விட இரட்டிப்பான நிதியினை  இவ்வருடம் செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று (26) கண்டாவளை மகாவித்தியாலயத்தில்  21 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கட்டடத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நீண்டகால போரினால் மிகவும் பாதிப்புக்குள்ளான எமது பிதேசங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். மீள்குடியேற்றத்தின் பின்னரான காலப்பகுதி தொடக்கம் இன்று வரை பெருமளவான வளப்பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இவ்வாண்டின் முடிவுக்குள் வளப்பற்றாக் குறைகளுக்கு நிறைவான தீர்வு எட்டப்படும்.

இந்நிலையில் நேற்று (25) நாம் மேற்கொண்ட கல்வி தொடர்பான உயர்மட்ட மகாநாட்டின் போது எமது மாணவர்களின் கல்வி தொடர்பான பல அதிர்ச்சி தரும் தகவல்களை அறிந்துள்ளோம். அதாவது மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. எனவே இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண வேண்டிய பொறுப்பை கல்விச் சமூகத்தினர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

அத்தோடு தரம் 9 மாணவர்களின் கல்வித்தரப் பெறுபேறுகள் பாரிய பின்ணடைவை நோக்கிச் செல்வதனையும் நாம் அறிந்துள்ளோம் இவர்கள் கணிதபாடத்தில்; 13.70 சதவீத சித்தியினையும் விஞ்ஞானமும் தொழிநுட்பமும் எனும் பாடத்தில்; 29.32 விகித சித்தியினையும் மற்றும் வரலாற்றில் 31.0 வகிதத்திலுமே சித்தி அடைந்துள்னர். இவை மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கான அபாய குறிகாட்டியாகவே அமைந்துள்ளன. எனவே வளப்பற்றாக் குறைகளை நிவர்த்தி செய்ய நாம் தயாராக உள்ளோம். ஆனால் கல்வித்தரத்தை உயர்த்தவும் பெறுபேறுகளை உச்சநிலைக்கு கொண்டுவரவும்  மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் கல்விசார் ஆர்வலர்களும் துணைபுரிய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

இப்பாடசாலையில் சைல்பண்ட் கொரிய நிறுவனத்தின் ஆதரவுடன் சைல்பண்ட் சிறீலங்கா நிறுவனத்தினர் சுமார் 21 இலட்சம் ரூபா செலவில் வகுப்பறைக் கட்டடத்தினையும் நீர் விநியோக வசதிகளையும் சிறுவர் விளையாட்டு முற்றத்தினையும் அமைத்துள்ளனர். இதேபோன்று வட்டக்கச்சி இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலைக்கும் குறித்த நிறுவனத்தினர் 27 லட்சம் ரூபா பெறுமதியில் அதே வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இதன் செயற்பாடுகளையும்; இன்று பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் சைல்பண்ட் நிறுவனத்தின்  கொரியநாட்டு பிரதிநிதி சான் மி மூன் வலைப்பின்னல் முகாமையாளர் கீர்த்தி கொஸ்வத்தை ஈ.பி.டி.பி.யின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சைல்பண்ட் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் மதிவண்ணன் மற்றும் கல்விசார் அதிகாரிகளும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
 
























































 
 

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!