|
சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவருடைய
அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும்
எதிர்க்கட்சியான ஐக்கிய
தேசியக்கட்சியின்(ஐ.தே.க.)தலைவர்களை
வாழ்த்தி வரவேற்றமை பற்றிய ஊடகத்
தகவல்கள் நாட்டிற்கும் உலகிற்கும்
மீண்டும் உறுதிப்படுத்தும் செய்திகளை
அனுப்புவதாக இருத்தல் வேண்டும்.இதன்
மூலம் இதுவரை முரண்பாடுகளுடனும்
மனக்கசப்புடனுமாகக் காணப்பட்ட அரசியல்
ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுடன்,
யுத்தம் முடிந்த பின்னர் நாட்டைக்
கட்டியெழுப்பும் தாராளமயமான
உணர்வுகளும்
முன்னிலைப்படுத்தப்படலாம்.கடந்த ஒரு
வாரத்திற்கு முன்னர் இலங்கையில் மனித
உரிமைகள் நிலைவரம் பற்றி ஐ.நா.சபையின்
பொதுச் செயலாளருக்கு ஆலோசனை வழங்க
நியமிக்கப்பட்ட குழுவிற்கு எதிராகச்
சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக
அரசாங்கத்தின் இன்னுமோர் அமைச்சர்
விமல் வீரவன்ச அறிவித்தமை காரணமான
நெருக்கடியும் கசப்புணர்வும்
ஊடகங்களில் வெளியானமைக்கு முற்றிலும்
மாறானதாக இது காணப்படுகிறது.
அரசாங்கத்திற்கும்
ஐ.தே.கட்சிக்குமிடையேயான
பேச்சுவார்த்தைகள் மூன்று பிரதான
பிரச்சினைகளைச் சூழ்ந்தே
காணப்பட்டன.முதலாவதும் ஆவலைத்
தூண்டுவதுமான பிரச்சினை நிறைவேற்று
அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையினை
நீக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட
பிரதம மந்திரி பதவியினைக் கொண்டுவருவது
பற்றியதாகும். இரண்டாவது பிரச்சினை
சனாதிபதி ராஜபக்ஷ தனது பதவியின்
ஆரம்பம் முதலாகவே அவருக்கு முந்திய
சனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க தனது
இரண்டாவது பதவித் தவணையின்போதும்
யாப்பின் 17ஆவது திருத்தத்தினை
அமுலாக்கம் செய்வது தொடர்பாக மறுத்து
வந்தமை பற்றியதாகும்.ஜனாதிபதி
அரசாங்கத்தின் அதியுயர் பதவிகளுக்குத்
தான் நினைத்தவாறு அலுவலர்களை
நியமிப்பதற்கான அதிகாரத்தை 17 ஆவது
திருத்தம் தடை
செய்வதாகவுள்ளது.மூன்றாவது பிரச்சினை
தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல்
முறையான விகிதாசார
பிரதிநிதித்துவத்தினைச் சீர்திருத்தி
கூடிய வாக்குகளைப் பெறுபவரையே
தேர்ந்தெடுக்கும். முதலில் வெற்றிக்
கம்பத்தை அடைபவரை வெற்றி பெற்றவராகத்
தேர்ந்தெடுக்கும்(பழைய முறை)முறையையும்
விகிதாசாரப் பிரதிநிதித்துவ
முறையினையும் கலப்பாகக் கொண்ட ஒரு
முறையினைக் கொண்டு வருதல்
தொடர்பானதுமாகும்.
இவ்வருடம் அரசாங்கம் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் வெற்றி
பெற்றதனையடுத்து சனாதிபதி ராஜபக்ஷ
இரண்டு தவணைகளுக்கு மட்டுமே
சனாதிபதியாக இருக்கலாம் என வரையறை
செய்யும் நியாயமற்றதும்
பொருத்தமற்றதுமானதென எடுக்கப்பட்டுள்ள
நிலைமைகள் பற்றிப் பல்வேறு அரசாங்கப்
பேச்சாளர்களும் கருத்துத்
தெரிவிக்கலாயினர்.தற்போது
நடைமுறையிலிருக்கும் யாப்பின்படி
தேர்ந்தெடுக்கப்படும் எந்தவொரு
சனாதிபதியும் இரண்டு ஆறு வருடத்
தவணைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம்
என்னும் வரையறை காரணமாகவே இவ்வாதங்கள்
முன்வைக்கப்பட்டன. ஐக்கிய
அமெரிக்காவில் சனாதிபதி இரண்டு தவணைகள்
ஒவ்வொன்றும் நான்கு வருடங்களுக்கே பதவி
வகிக்கலாம்.அமெரிக்காவுடன்
ஒப்பிடுகையில் காலப்பகுதி பொறுத்து
இலங்கை சனாதிபதி மூன்று தவணைகள் பதவி
வகிக்கும் வாய்ப்புக் கொண்டவராக
உள்ளார்.சனாதிபதி ராஜபக்ஷவின்
செல்வாக்கு உச்சநிலைக்குச்
சென்றிருப்பதாக நம்புபவர்கள் அவர் பதவி
வகிக்கக்கூடிய 12வருடங்களும் அவருடைய
தகுதிக்குப் போதாதென்றே நம்புகின்றனர்.
இரண்டு தவணைகள் என சனாதிபதி பதவிக்கு
விதிக்கப்பட்டிருக்கும் வரையறையினை
நீக்குமாறு பிரேரிப்பவர்களுக்கு
அவர்களுடைய சிந்தனையைக் காணக்கூடிய
வகையில் ஆதரிப்பாரோ அல்லது எதிர்ப்பாரோ
இல்லாதிருப்பது அவர்கள் எதிர்நோக்கும்
பிரச்சினையாகவுள்ளது.வெளிப்படையாக ஒரு
பற்றற்ற அபிப்பிராயமே காணப்படுகிறது.
எதிர்க்கட்சியினர் இந்த மாற்றம் என்பது
சர்வாதிகாரத்திற்கு இட்டுச்
செல்லப்படும் ஒன்று எனப் பிரசாரம்
செய்வதால் ஏற்படும் விளைவு என்றும்
கூறலாம்.இத்தோடு எதிர்க்கட்சியினர்
இந்த இரண்டு தவணை சனாதிபதி பதவி
முறையினை நீக்கப்போவதாக சனாதிபதி
ராஜபக்ஷவோ அல்லது அவரது ஆளும் கட்சியோ
ஜனவரி சனாதிபதித் தேர்தலிலும்
சரி,ஏப்ரல் பொதுத் தேர்தலிலும் சரி
மக்களிடம் கூறவில்லை என விமர்சித்து
வருகின்றனர்.அல்லது தேர்தலுக்கு
முன்னர் கூறாது தேர்தல் வெற்றியைப்
பெற்றுக்கொண்ட பின்னர் யாப்புத்
திருத்தத்தினை திடீரெனக் கொண்டு
வருகின்றனர் என்றும் எதிர்க்கட்சியினர்
விமர்சிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரேரணை
அரசாங்கம் சனாபதியின் பதவிக்கான
தற்போதைய நடைமுறையிலுள்ள இரண்டு
தவணைகள் மட்டும் என்னும் நிபந்தனையை
நீக்கும் பிரேரணையைத் தவிர்த்து விட்டு
தனது நிலையினை நிலை நாட்டிக்கொள்ளச்
சிறந்த சமரசமாக ஐ.தே.கட்சியின் தலைவர்
ரணில் விக்கிரமசிங்க கொண்டு
வந்திருக்கும் பிரேரணையான நிறைவேற்று
அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையினை
நீக்கி அதற்குப் பதிலாக நிறைவேற்று
அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி
முறையினைக் கொண்டு வரும் யோசனை
காணப்படுகின்றது. பிரதம மந்திரியாக
ஒருவர் எத்தனை முறை வரலாம் என்பது
பொறுத்து வழக்கமாகவே வரையறை
இருப்பதில்லை.ஐ.தே.கட்சித் தலைவர்
கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட
பிரதம மந்திரி பதவி முறை என்பது இலங்கை
கடந்த காலங்களில் அறிந்திருந்த வெஸ்ட்
மினிஸ்டர் முறையினைப் போலானதல்லாது
கூடிய மேலதிக அதிகாரங்களைக் கொண்ட
ஒருமுறை என்பதனை நாம் இங்கே கவனிக்க
வேண்டும்.இதன் காரணமாக சனாதிபதி
பதவிக்கும் பிரதம மந்திரி
பதவிக்குமிடையே பெரும் வேறுபாடுகள்
இருக்காது.
நிறைவேற்று சனாதிபதிக்கும் நிறைவேற்று
அதிகாரம் கொண்ட பிரதம
மந்திரிக்குமிடையேயான வேறுபாடு
பின்னையவர் பாராளுமன்றக் கூட்டங்களில்
பிரசன்னமாகிப் பாராளுமன்றத்திற்குப்
பதில் கூறக்
கடமைப்பட்டவராயிருப்பதாகும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட
சனாதிபதியைப் போலன்றி நிறைவேற்று
அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி
நீதித்துறைக்குப் பதிலளிக்க
வேண்டியவராகவும் சனாதிபதி தானே
சட்டமாகவும் எதுவித சட்ட
நடவடிக்கைகளுக்குக்
கட்டுப்படாதவராகவும் இருப்பது
போலன்றிச் சட்டங்களுக்குட்பட்டவராக
இருக்க வேண்டி வரும்.மறுபுறத்தில்
இரண்டு பதவிகளும் குறிப்பிடத்தக்க
ஒத்த பண்புகளைக் கொண்டனவாகவும் புதிய
பெயரடையாளங்களே தவிர,பெரிய
மாற்றங்களைக் கொண்டு வரப்போவதில்லை.
இரண்டு பதவிகளுக்குமிடையேயான முக்கிய
ஒத்தபண்பு,அப்பதவிகளுக்குத்
தெரிந்தெடுக்கப்படுபவர்கள் முழு
நாட்டினாலும் நேரடியான தேர்தல்
ஒன்றினால் தேர்ந்தெடுக்கப்பட
விருப்பதேயாகும்.வெஸ்ட் மினிஸ்டர்
முறையின் கீழான பிரதம மந்திரியானவர்
நாட்டின் ஏனைய பாராளுமன்ற
பிரதிநிதிகளைத் தெரிந்து எடுப்பது
போலவே ஒரு தேர்தல் தொகுதியினாலேயே
தெரிந்தெடுக்கப்பட்டிருப்பார்.அம்பாறையில்
நாடு உபதேர்தல்
பிரிவுகளுக்குள்ளாகியிருக்கும்.இதனால்
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய
கருத்து ஒன்றுண்டு. அதாவது நிறைவேற்று
அதிகாரம் கொண்ட பிரதமமந்திரி தேர்தலில்
தெரியப்பட்டதன் பின்னர்
பாராளுமன்றத்திலோ அல்லது தனது
கட்சிக்கோ கட்டுப்படாது சுய அதிகாரம்
கொண்டவராயிருப்பார்.வெஸ்ட்மினிஸ்டர்
முறையில் இருந்து இந்த ஒரு விடயத்தால்
இது வேறுபட்டுள்ளது.அதனால்
நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றினைக்
கொண்டு வந்து பிரதம மந்திரியினை
பதவியிலிருந்து நீக்கிவிடலாம் அல்லது
அண்மையில் அவுஸ்திரேலியாவில்
ஏற்பட்டதனைப் போன்று ஆளும் கட்சியிலேயே
ஒரு கிளர்ச்சி அவருக்கு எதிராக
ஏற்பட்டு அவரை பதவியிலிருந்து
வெளியேற்றி விடமுடியும்.
கலந்தாலோசித்து தீர்மானங்களைச்
செய்யும் பாணியிலான தலைமைத்துவத்தினை
விட தன்முனைப்பாட்சி செய்யும்
தலைமைத்துவத்தினருக்கே நிறைவேற்று
அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி முறை
பாராளுமன்றத்தின் கட்டுப்பாடற்ற
கவர்ச்சிகரமானதாயிருக்கும். ஜனாதிபதி
ஜே.ஆர்.ஜயவர்தனா நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி முறையினைப் பற்றி
கருத்துத்
தெரிவிக்கையில்;தான்“பாராளுமன்றத்தின்
கட்டற்ற தற்போக்கெண்ணங்களிலிருந்து
சுதந்திரமாகச் செயற்படமுடிந்தது எனக்
கூறியுள்ளார். எவ்வாறாயினும் அன்று
தொட்டு நாட்டினைப் பொறுத்த மட்டில்
சில நேரங்களில் பொதுமக்களால்
விளம்பரப்படாத ஆனால் நாட்டில்
நீண்டகால தேவையுடன் பொறுத்து சில
தீர்மானங்கள் செய்ய வேண்டியமைக்கான
வலிமையான தலைமைத்துவ அதிகாரங்கள் தேவை
என்ற கருத்துக்களும் நிலவுகின்றன.
இறுதியல்ல
சனாதிபதி ராஜபக்ஷவுக்கும்
எதிர்க்கட்சித் தலைவர்
விக்கிரமசிங்கவுக்கும் இடையே
நிறைவேற்று அதிகாரம்கொண்ட பிரதமர்
பதவியில் பொதுவான ஒரு ஆர்வம்
காணப்படுகின்றமை அவர்களுக்கிடையிலான
புதிய வரவில் ஒத்துணர்வு
காணப்படுகின்றமையினை விளக்குவதாகக்
கொள்ளலாம்.இவ்வாறான ஒரு புதிய
மாதிரியுருவிற்கான அகத்தூண்டல் இஸ்ரேல்
நாட்டிலிருந்து வந்ததாக நம்பப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டில் கட்சிகளின் கூட்டு
ஆட்சிகள் பெயர்வதும் கட்சிமுறைகள்
முறிவடைவதுமான முறைகள் காரணமாக
அந்நாட்டு நெசட் எனப்படும்
பாராளுமன்றம் (ஓணஞுண்ண்ஞுt) 1990ஆம்
ஆண்டு ஒரு சட்டத்தினைக் கொண்டு
வந்தது.அதன்படி பிரதம மந்திரி நேராகவே
மக்களால்
தேர்ந்தெடுக்கப்படுவார்.இருந்த
போதிலும் பாராளுமன்ற கட்சிகளின் கூட்டு
ஆட்சிமுறைக்கு எதிராக பிரதமமந்திரியின்
நிலைமையினை வலிமையுறச் செய்த இம்
முயற்சி தோல்வியையே
கண்டதுடன்,இச்சட்டத்தினால் கட்சிமுறை
மேலும் பிளவுபட்டதாகவே
கூறப்படுகிறது.பின்னர் அது விரைவில்
நீக்கப்பட்டுவிட்டது.எனவே இலங்கைக்கு
புதிய முறையினை அறிமுகப்படுத்த ஆவன
செய்பவர்கள் இஸ்ரேலின் இந்த அனுபவத்தை
மனதில் வைத்தே செயற்பட வேண்டும்.
அரசாங்கத்திற்கும் ஐ.தே.கட்சிக்கும்
இடையே இன்னும் இன முரண்பாடுகளுடன்
தொடர்புடையதான யாப்பு சீர்திருத்தம்
தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதுவும்
இடம்பெறவில்லை எனத் தெரிய
வருகிறது.இதற்கு,அரசாங்கமும்
ஐ.தே.கட்சி தலைவர்களும் மக்களுடன்
முரண்பாடுகள் ஏற்படுத்தாத துறை
எனக்கருதப்படுபனவற்றில் முதலில்
தீர்மானங்களை எடுத்து விடுவோம் என
எண்ணுவது காரணமாக இருக்கலாம்.
பெரும்பாலான மக்கள் நல்லாட்சி பொறுத்து
பொதுவாக ஆர்வம் இல்லாதவர்களாகவே
தோன்றுகின்றனர்.ஆனால் இன முரண்பாடுகள்
தொடர்பாக அவர்களது உள்ளார்ந்த ஆற்றலை
செயற்படுத்த பெருமளவு
முயற்சிக்கப்படுகிறது.கடந்த காலங்களில்
அரசியல் ரீதியாகச் செயலாற்ற
முயற்சிக்கும் போது அரசாங்கங்கள்
வீழ்ச்சியடைந்தமையினை வரலாற்றுப்
பதிவுகளில் காணமுடிகிறது.2004ஆம் ஆண்டு
ரணில் விக்கிரமசிங்க தலைமைதாங்கிய
அரசாங்கம் அதற்கு சிறந்த உதாரணமாகும்.
ஐ.தே.கட்சியின் தலைவரான விக்கிரமசிங்க
சிறுபான்மை இனத்தவரது உணர்வுகளை
மதிக்கும் ஒரு அரசியல்வாதியாகக்
கருதப்படுகின்றார்.தற்போது அகதி
முகாம்களில் எஞ்சி இருப்பவர்களதும்
முறையாக மீளக்
குடியேற்றப்படாதவர்களதும் துயர்
நிலைகள் பற்றியும் இவர் பல மேடைகளிலும்
எடுத்துக் கூறியிருப்பவர்.அவர்
பெரிதும் காலம் தாழ்த்தாது இன
முரண்பாடுகள் தொடர்பான
பிரச்சினைகளுக்குத் தேவையான
சீர்திருத்த செய்முறைகள் பற்றி
சிந்தித்துச் செயலாற்றுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு
தலைவர்களும் தேவையான மாற்றங்களின்
கோணங்கள் பற்றி இணக்கம் காணலாம்.
ஆனால், எடுக்க வேண்டிய அரசியல் தீர்வு
பற்றியவற்றின் சாராம்சங்களினது
விபரங்களைப் பற்றி கண்டறிவது
பொருத்தமாக இருக்காது.தீர்மானங்கள்
எடுப்பதால் சிறுபான்மையினத்தவர்கள்
கடந்து காலங்களில் ஒதுக்கப்பட்டு
ஓரங்கட்டப்பட்டிருந்தனர் என்பதே இன
முரண்பாடுகள் இந்தளவுக்கு
சீர்கெட்டுள்ளன என்பதற்கான முதற்
காரணமாகும்.எனவே இன முரண்பாடுகளுக்கான
தீர்வினைக் காண்பதற்கு சிறுபான்மை இனக்
கட்சி பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர்.
சனாதிபதி ராஜபக்ஷ அரசியல் தீர்வினை
வழங்குவதற்கு முன்னுரிமை காட்டாது,இன
முரண்பாடுகள் பொருத்து
இராணுவ,பொருளாதார தீர்வுகளையே
முன்னுரிமையுடன்
தெரிந்திருந்தார்.ஆனால்,இப்போது அவர்
தனது வழியினை மாற்றிக்கொள்ள வேண்டியது
முக்கியமாகியுள்ளது.இதற்குக் காரணம்
பாரியளவுக்கு சர்வதேச ரீதியாக
அரசாங்கத்தின் மீது முன்னர் எப்போதும்
இல்லாத அளவுக்கு அழுத்தங்கள்
குவிந்திருப்பதாகும்.இலங்கை அரசாங்கம்
பல்வேறு கிளர்ச்சிகளைச் செய்திருந்த
போதிலும் ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர்
தான் நியமித்த மனித உரிமைகள் தொடர்பான
ஆலோசனைக் குழுவின் நியமனத்தில்
பின்வாங்கவில்லை.அதுமாத்திரமன்றி
ஆலோசனைக் குழுவினருக்கு அவர்களுடைய
கடமைகளுக்கு உதவி வழங்கக் கூடிய
வகையில் இப்போது எட்டு
அங்கத்தினர்களைக் கொண்ட செயலகம்
ஒன்றையும்
நியமித்திருக்கின்றார்.அரசாங்கம் அதன்
மீதான சர்வதேச விமர்சனங்களுக்கு பதில்
கூறுவதானால் அதற்காக ஐ.தே.கட்சியும்
சிறுபான்மை இனக் கட்சிகளும் சம்மதம்
தெரிவிக்கும் ஒரு அரசியல் தீர்வே
ஏற்றதாயிருக்கும். |