செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,26.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

வடக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க சீனா அனுசரணை அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் மீள எழுச்சி பெறுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் முறியடிக்கும் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிரந்தர பாதுகாப்புத் தளங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று அதிகாரபூர்வமான அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இராணுவ உயர்மட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பாதுகாப்புப் படைகள் நகர்த்தப்பட்டிருப்பதாக அந்த அதிகாரிகள் தெரிவித்ததாக த ஐலண்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைக்கமைவாக ஏ9வீதியில் புதுக்குடியிருப்புக்கு கிழக்கே சுகந்திபுரத்தில் 68ஆவது பிரிவுத் தலைமையகத்தை இராணுவம்அமைத்துள்ளது.கடந்த வியாழக்கிழமை இந்தப் புதிய தலைமையகத்திற்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய சிரேஷ்ட அதிகாரிகளையும் அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டிருக்கும் படையினரையும் சந்தித்துள்ளார்.

நிரந்தர தளங்கள் அவசியமெனவும் பாதுகாப்புப் படையினர் தனியார் மற்றும் பொது இடங்களிலிருந்தும் நகர்வதற்கு நிரந்தரமான தளங்கள் அவசியமென்றும் இச்சந்திப்பின்போது இராணுவத் தளபதி கூறியுள்ளார்.2006ஆகஸ்டில் 4ஆவது ஈழப்போர் ஆரம்பமாவதற்கு முன்னரேயே பெரும் எண்ணிக்கையான படையினர் யாழ்.குடாநாட்டில் நிலைகொண்டிருந்தனர்.இப்போது வன்னிக்கு பாரியளவு படையணி நகர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை,இந்த மீள்நகர்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த சீனாவிடமிருந்து கிடைத்த உதவியை இராணுவத் தளபதி பாராட்டியுள்ளார். சீனாவிலிருந்து கிடைத்த தொழில்நுட்பம் காரணமாக இந்த மாதிரியான நிரந்தரக் கட்டிடங்களை அமைப்பது சாத்தியமாகவுள்ளது. சகல கட்டிடங்களிலிருந்தும் நாங்கள் வெளியேற வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது. சிவில் பிரிவினர் மற்றும் இந்தக் கட்டிடங்களின் உரிமையாளர்கள் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்வதற்கு உரிமை கோர முடியும்.இதன் மூலம் பகுதிகளில் இயல்புநிலையை ஏற்படுத்த உதவ முடியும்.பகுதிகளில் சிவில் வாழ்வு மீள ஏற்படுத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்திலுள்ளவர்களுக்கு விடுதிகள் வழங்கப்படும்.அவர்கள் தமது குடும்பங்களுடன் இருந்தவாறு பகுதிகளில் சேவையாற்ற முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உபயமடவெல கூறுகையில்;

ஏ9 வீதிக்கு கிழக்கு மற்றும் மேற்குப் புறங்களில் நிரந்தரத் தளங்கள் அமைக்கப்படுமென்று தெரிவித்திருக்கிறார். துணுக்காயில் சில புதிய நிர்மாணங்கள் மேற்கொள்ளப்படுமெனவும் இந்தப் புதிய தளங்கள் அரசாங்க காணிகளிலேயே அமைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான சகாப்தத்தின் காலகட்டத்தில் 53 ஆவது படையணியின் ஒரு பிரிவினர் தெற்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளதாகவும் அத்துடன், அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு உதவியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!