செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 26,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

பீமன் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்?செய்ய உள்ளார் என்ற வினாவே மேலெழுந்துள்ளது?

Bookmark and Share
டக்ளசுக்கு வைப்பாட்டியாக இருந்த சிவகீதா இரு குழந்தைகளையும் பெற்றுக்கொடுத்தாராம் என்ற தலைப்பில் இலங்கைநெற் இணையத்தளத்தில் பீமன் என்ற புனைபெயருக்குள் ஒழிந்து நின்று எழுதிய கட்டுரையை படித்ததில் பீமன் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்? செய்ய உள்ளார் என்ற வினாவே மேலெழுந்துள்ளது?

தனது பெற்றோர் தனக்கிட்ட சொந்தப் பெயரில் கூட எழுதுவதற்கு திராணியற்ற இந்த பீமன் சமூகநலன் கருதி செய்யப்படும் செயற்பாடுகளை கொச்சைப்படுத்துவதற்காகவே இந்த கட்டுரையை வடித்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. டக்ளசுக்கு என்று குறிப்பிட்டு அகிறிணையில் ஆகும் என்று முற்றுப்புள்ளி இட்டுள்ளார். திரு.டக்ளசுக்கு மீதுள்ள வக்கிரத்தை தீர்ப்பதற்காக இவ்வாறு எழுதினாரோ அல்லது அவரது சமூக அக்கறை கொண்ட செயற்பாட்டை குறைகூறுவதற்காக அவரை அகிறிணையில் வரித்துக் கொண்டாரோ தெரியவில்லை.

கடந்து வந்த போராட்ட கால இயக்க வரலாறுகள், புளொட், பரந்தன் ராஜன், கேபி, சங்கரி, கோத்தபாய, கருணா, பிள்ளையான் இவர்கள் தொடர்பான விமர்சனங்கள் இன்று ஈழத்தமிழருக்கு தேவையானவையல்ல. புலம்பெயர் நாடுகளில் இருந்து கொண்டு நீங்கள் விடும் புலுடாக்களையும் பொறுப்பற்ற காழ்ப்புணர்வுகளையும் புனைபெயர்களில் ஒழிந்து கொண்டு தமிழையும் கொச்சைப்படுத்தி கணனியில் பதிவிட்டு நீங்கள் செய்யும்; செயல்கள் ஈழத்தமிழர் இதயங்களை குளிரச் செய்கின்றதாக மார்தட்டிக் கொள்வதையே பழக்கமாக்கிக் கொண்டுள்ளீர்கள்.

இன்றைய ஈழத்தமிழர் இதயங்களுக்கு தேவை அவர்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் ப+ர்த்தி செய்யக்கூடிய வழிவகைகளே அன்றி கடந்த காலத்து சோத்துப் பார்சல் வரலாறோ, ஆயுதப்போராட்ட வரலாறோ அல்ல. ஈழத்தமிழர் இதயங்களுக்காக உங்களைப் போன்ற புலம்பெயர் புலுடாக்காரர்களால் எதுவும் செய்யமுடியாது என்றால் நல்ல நோக்கத்துடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து ஈழத்தமிழர் இதயங்களின் இன்றைய இயல்பு நிலையை புரிந்து கொண்டு பணியாற்றும் நல்ல உள்ளங்களை கொச்சைப்படுத்தாமலாவது இருப்பது ஈழத்தமிழர் இதயங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

திரு.டக்ளசுக்கு முன்னுதாரணமாக கொண்டு இன்னும் பலர் தத்தம் சக்திக்கு ஏற்ற வகையில் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் இழந்து போன இருப்புக்களை மீட்டெடுத்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதற்கு உந்துகோலாக இருக்க பீமன் மனம் இடம் கொடுக்கவில்லை என்பது எமக்குப் புரிகின்றது. ஆனால் உங்கள் காழ்ப்புணர்ச்சிகளை இவ்வாறு பதிவிடுவதன் மூலம் நீங்கள் தான் சமூகத்தில் சிறுமைப்படுத்தப்படுகின்றீர்களே ஒழிய அன்றேல் திரு.டக்ளசுக்கு காருண்யம் மிக்க பணியைப் பாராட்டி கட்டுரை வடித்த சலசலப்பு அல்ல என்பதை பீமன் புரிந்து கொள்வார். இனிமேலாவது இது போன்ற சமூகப்பணிகளில் ஈழத்தமிழர் இதயங்களை தொட்டுவிடும் நபர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிகளை மாற்றி நீங்களும் ஈழத்தமிழர் இதயங்களின் இன்னல்களை தீர்க்க முயலுங்கள்!

- சலசலப்பு ஆசிரிய பீடம்

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!