செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,25.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன.

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதுபாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன விசனம் தெரிவிக்கின்றார்.இலங்கையில் இதுவரையில் ஆட்சியில் இருந்து வந்த அரசாங்கங்கள் பாலஸ்தீனத்திற்கான தனது ஆதரவை வழங்கிவந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசோ இஸ்ரேலுக்கு ஆதரவாக செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் இது நன்கு தெளிவாவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.பலஸ்தீனத்திற்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்த இஸ்ரேலிய தூதுவரின் கருத்தை அவருடைய தனிப்பட்ட கருத்து என இலங்கை அரசாங்கம் கூறியிருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அப்படி இது அவருடைய தனிப்பட்ட கருத்தாயின் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள அவருடைய கருத்து தவறு என்பதால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு அதற்குரிய தண்டனையும் வழங்கப்பட வேண்டும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அண்மையில் கோல்பேஸ் ஹோட்டலில் இஸ்ரேலின் சுதந்திர தினத்தை நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியதுடன்,அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பல அமைச்சர்களும் இந்த சுதந்திர தின நிகழ்வின் கலந்து கொண்டனர்.இதன் மூலம் இலங்கை அரசு இஸ்ரேலின் நிலைப்பாட்டினல் இரட்டை வேடம் போடுவது நன்கு புலப்படுகின்றது எனவும் அவர் கூறினார்.

இஸ்ரேலிய கொள்கையை இலங்கை பின்பற்றுமாயின் இலங்கையில் பாரிய அழிவுகள் ஏற்படும் என சுட்டிக்காட்டிய அவர்,பலஸ்தீனிய காணிகளை இஸ்ரேல் அபகரித்து சர்வதேச கம்பனிகளுக்கு கொடுத்து வருவதுபோல்,இலங்கையில் தமிழ் முஸ்லிம் காணிகள் அபகரிக்கப்பட்டு சர்வதேச கம்பனிகளுக்கு கொடுக்கப்படும் நிலை எற்படும் எனவும் எச்சரித்தார்.

எனவே இலங்கை அரசு இஸ்ரேல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தூதுவரின் கருத்து தொடர்பில் விளக்கமளிக்கையில் கலாநிதி விக்கரமபாகு கருணாரத்ன மேற்சொன்னவாறு கூறினார்.

இந்த செய்தியாளர் மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஜாப்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!