செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்:ஜனவரி 24,2012

*தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

போதிய வசதிகளை உள்ளடக்கும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை!
Bookmark and Share
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆண் பெண் நோயாளர் விடுதிகள் மற்றும் மருத்துவர்களுக்கான விடுதி என்பவற்றின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் பார்வையிட்டுள்ளனர்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் விடுதிகளின் பற்றாக் குறையைக் கருத்தில் கொண்டு புதிதாக ஆண் பெண் நோயாளர் விடுதிகளும் வைத்தியர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு புதிதாக மருத்துவர்களுக்கான விடுதியும் அமைக்கப்பட்டு கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றைய தினம் அங்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோர் கட்டிடத் தொகுதிகளைப் பார்வையிட்டனர்.

2000ம் ஆண்டு யுத்தத்தால் முழுமையாகச் சேதமடைந்த சாவகச்சேரி மாவட்ட வைத்தியசாலை மீண்டும் நிக்கொட் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியினதும் சுவீடன் மற்றும் இலங்கை அரசுகளினதும் பங்களிப்புடன் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் 2002ம் ஆண்டு முதல் இயங்க தொடங்கி 2007ம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டு சிறந்த சேவையாற்றி வருகிறது.

இவ்வைத்தியசாலையில் போதுமான ஆண் பெண் நேயாளர்களுக்கான விடுதி மற்றும் மருத்துவர்களுக்கான விடுதி இல்லாததைக் கருத்தில் கொண்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக குறிப்பிட்ட இரண்டு கட்டிடத் தொகுதிகளும் பின்னிஷ் செஞ்சிலுவைச் சங்கம் ஐரிஸ் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கங்களினது நிதியுதவியுடன் நடைபெற்று வந்த கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

இவ்விரு கட்டிடத் தொதிகளும்அடுத்த மாதம் முதல் வாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்
 












 
 

 

 

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!