செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,24.2010,

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல்; கோழிக்கறியை வீசி அவமதிப்பு.

இந்தியாவை சேர்ந்தவர் ராஜன்குமார் கத்தாம்(24).கிராபிக்ஸ் கல்வி பயில கடந்த 2008-ம் ஆண்டு இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு வந்தார்.சம்பவத்தன்று இவர் ஒரு பஸ்சில்ரி என்ற இடத்தில் இருந்து பிராங்க்டனுக்கு ஒரு பஸ்சில் பயணம் செய்தார்.அப்போது அவருடன்,பயணம் செய்த ஆஸ்திரேலிய மாணவர்கள் 3பேர் மது குடிக்க தொடங்கினர்.

பின்னர்,அவர்களில் ஒருவன் மாணவர் ராஜனை தாக்கினான்.மற்றவர்கள் தாங்கள் சாப்பிட்ட கோழிக்கறியை அவர் மீது வீசி அவமதித்தனர்.

கறுப்பர்கள் எங்களுடன்(வெள்ளைகாரர்களுடன்)சமமாக அமர்ந்து பயணம் செய்வதா?என்று கூறி அவரை அடித்து உதைத்தனர்.இச்சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற வெள்ளைக்கார பயணிகள் யாரும் இதை கண்டு கொள்ளவில்லை.

அப்போது,வெள்ளைக்கார மூதாட்டி மட்டும் தட்டிக்கேட்டார்.மாணவர்களிடம் அன்பாக பேசினார்.அவரையும் அந்த நபர்கள் நீ பேசாமல் வாயை மூடு என்று கூறி மிரட்டினர். இந்த இனவெறி கொடுமையை அவர் பஸ்சில் பயணம் செய்த 45நிமிட நேரம் அனுபவித்தார்.

இதுகுறித்து மெல்போர்ன் போலீசில் அவர் புகார் செய்துள்ளார்.போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இச்சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது.பஸ்சில் வைக்கப்பட்டிருந்த காமிராவில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன.

குற்றவாளிகள் அடையாளம் தெரிந்தும் இது வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடத்திய வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே உடல் நலக்குறைவால் அவதிப்படும் ராஜன் அடுத்த மாதம்(ஆகஸ்டு) இந்தியா திரும்புகிறார்.

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
 

Last update: 20-05-2010. Desigin and Copyright

Welcome. to Visit.Engaltheaasam.com ..!