அராலி
வடக்கு குடிநீர்த் திட்டம் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்க ளாள்
ஆரம்பித்து வைக்கப்பட்டது!
அராலி வடக்குப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முகமாக குடிநீர் விநியோகத்திட்டத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார்.
அராலி வடக்கு நாகேந்திரா மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த் தாங்கி விநியோகத் திட்டமே இன்றைய தினம் (24) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நீர்விநியோகத் திட்டம் மூலம் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.
கடந்த 2010.10.13 ம் திகதியன்று இப்புதிய தண்ணீர் தாங்கிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
முன்பதாக நினைவுக்கல் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் நீர் விநியோகத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் உள்ளிட்டோர் தொடக்கி வைத்தனர்.
இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் அவர்களுக்கு மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜெறோ வலிமேற்கு பிரதேச செயலாளர் சோதிநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச் சந்திரன் பிரதேச சபை தலைவர் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் அப்பகுதி மக்களினது கோரிக்கைளும் இதன் போது அமைச்சரிடமும் வடமாகாண ஆளுநரிடமும் அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்டன.