|
எனக்கோ,என்னுடைய
கட்சிக்கோ விடுதலைப்புலிகளுடன் எந்த
காலத்திலும் எந்தவித தொடர்பும்
இருந்ததில்லை என்று மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்டு கட்சி சட்டமன்ற உறுப்பினர்
மகேந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று
வெளியிட்டுள்ள
அறிக்கையில்,விடுதலைப்புலிகளின்
ஆதரவாளர் குமரன் பத்மநாதன் இலங்கையில்
பத்திரிகைக்கு ஒரு
பேட்டியளித்துள்ளார்.அதில்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச்
செயலாளர் நடேசன் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு
சட்டமன்ற உறுப்பினர் கே.மகேந்திரனிடம்
இலங்கை
இராணுவத்திற்கும்,விடுதலைப்புலிகளுக்கும்
இடையில் போர் நிறுத்தம் கொண்டு வரும்
ஆலோசனை சொன்னதாகவும்,இத்தகவலை
கே.மகேந்திரன் ம.திமு.க.தலைவரிடம்
கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தச் செய்தியை நான் முழுமையாக
மறுக்கிறேன்.நான் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு
உறுப்பினராகவும்,சட்ட மன்ற
உறுப்பினராகவும் செயல்பட்டு
வருகிறேன்.எனக்கோ என்னுடைய கட்சிக்கோ
விடுதலைப்புலிகளோடோ,மேற்கூறிய நடேசனோடோ
எந்த காலத்திலும் எந்தவித தொடர்பும்
இருந்ததில்லை.
இலங்கைத் தமிழர்கள் சொல்லோணா
துயரத்திற்கு ஆளான போது
இப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம்
அரசியல் ரீதியான சுமுகத் தீர்வுகாண
வேண்டும் என்ற நிலையைத்தான் நாங்கள்
தொடர்ந்து வலிறுத்தினோம்.மேலும்
இலங்கைத் தமிழர்களுக்கு மாநில சுயாட்சி
அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும்
எங்கள் கட்சி வலியுறுத்தியது.
இப்போதும் எங்கள் கட்சி அதையே
வலியுறுத்துகிறது.
விடுதலைப் புலிகளின் அணுகுமுறை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு
எப்போதுமே ஏற்புடையதல்ல.எனவே
போர்நிறுத்தம் குறித்து என்னிடம்
நடேசன் பேசியதாக குமரன் பத்மநாதன்
அளித்துள்ள பேட்டியில் கூறப்படுவது
உண்மையானது அல்ல என்பதை தெளிவு
படுத்துகிறேன் என்று மகேந்திரன்
கூறியுள்ளார் |